Wednesday, February 18, 2009

அஜ்மல் கசாப் மீதான பாகிஸ்தானின் குற்றப்பத்திரிக்கை எப்படி இருக்கும்?


மும்பை தாக்குதலின் போது பிடிபட்ட பயங்கரவாதி அஜ்மல் கசாப் மீது குற்றப் பத்திரிக்கை பாகிஸ்தானிய நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் படும் என்று சமீபத்தில் அந்நாட்டு அரசு அறிவித்தது. அந்த குற்றப் பத்திரிக்கை மற்றும் அஜ்மலை பாகிஸ்தானிடம் ஒப்படைக்க இந்திய அரசிடம் கோரும் விண்ணப்பம் எப்படி இருக்கும் என்பது பற்றிய ஒரு கற்பனை.

"அஜ்மல் கசாப் ஆகிய உங்கள் மீது சாட்டப் பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்கள் கீழே.


குற்றச்சாட்டு எண் 1


தலிபான் தீவிரவாத சட்டம், இந்தியத் தாக்குதல் பிரிவின் கீழ் ,

சம்பவம் நடந்த அன்று, கடமையை சரிவரச் செய்யத் தவறியது,

கொலை கணக்கு குறைந்து போனது,

கொடுத்த வேலையை சரியாக செய்யாமல், குண்டுக் காயம் பட்டுக் கொண்டு, அதன் காரணமாக கூட்டாளி தாக்கப் பட்ட போது உதவி செய்ய முடியாமல் போனது,

இந்திய போலீசிடம் மாட்டிக் கொண்டது போன்ற குற்றங்களுக்காக உங்கள் மீது கடமை தவறியவர் என்ற கடுமையான குற்றச் சாட்டு பதிவு செய்யப் பட்டுள்ளது.


குற்றச்சாட்டு எண் 2


லஸ்கர்-தோய்பா பயங்கரவாத சட்டம், ஐ.எஸ்.ஐ, திட்டம் தீட்டும் பிரிவின் கீழ் ,

இந்தியப் போலீசிடம் மற்றும் மேலை நாட்டு புலனாய்வு அதிகாரிகளிடம் தான் ஒரு பாகிஸ்தானியன் என்று ஒப்புக் கொண்டது,

பாகிஸ்தானில்தான், இந்த தாக்குதலுக்கான திட்டங்கள் தீட்டப் பட்டன என்று விளக்கம் கொடுத்தது,

தான் ஒரு பங்களாதேசத்தையோ அல்லது வேறு ஒரு நாட்டையோ சேர்ந்தவன் என்று பொய் விளக்கம் கொடுக்கத் தவறியது போன்ற குற்றங்களுக்காக உங்கள் மீது தேச விரோத மற்றும் காட்டி கொடுத்த குற்றச் சாட்டுகள் பதிவு செய்யப் பட்டுள்ளன.


குற்றச்சாட்டு எண் 3


அல்கொய்தா சட்டம், தீவிரவாத பயிற்சி பிரிவின் கீழ் ,

தந்தை தாய் மற்றும் இருப்பிடம்,

சாச்சா, போச்சா என்று திட்டம் தீட்டியவர் பெயர்,

தீவிரவாதப் பயிற்சி கொடுக்கப் பட்ட இடம்

என அனைத்து விஷயங்களைப் பற்றியும் (மறந்து போகாமல்) துல்லியமாக தகவல் அளித்ததன் மூலம், நீங்கள் எங்கள் நாட்டவர் அல்ல என்று நிரூபிப்பதற்காக நாங்கள் போட்ட நாடகங்களை தவிடு பொடியாக்கியது போன்ற குற்றங்களுக்காக உங்கள் மீது தேச அவமதிப்பு குற்றம் சாட்டப் படுகிறது."


இந்திய அரசுக்கு ஒரு விண்ணப்பம்


இந்த குற்றச் சாட்டுகள் பற்றி தெளிவான ஒரு நீதி விசாரணை நடத்தப் பட வேண்டியிருப்பதால், இவனை ஒப்படைக்குமாறு இந்திய அரசிடம் வலியிருத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

பின்குறிப்பு 1: எங்கள் நீதிமன்றங்களின் நியாயமான போக்கு பற்றி யாரும் சந்தேகப் பட வேண்டியதில்லை. ஆனானப் பட்ட அணு விஞ்ஞானி அப்துல் காதிர் கானையே குற்றமற்றவர் என்று கூறி விடுதலை செய்தது எங்கள் நீதிமன்றம்.

பின்குறிப்பு 2 : ஏன் தலிபான், லஸ்கர் தோய்பா, அல்கொய்தா சட்டங்களை உபயோகப் படுத்துகிறீர்கள், ஏன் பாகிஸ்தானிய சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வில்லை என்று கேட்பவர்களுக்கு ஒரு பதில்.

"எங்கள் நாட்டில் பின்பற்றப்படும் வெவ்வேறு சட்டங்களிலேயே மிகவும் வலுவான சட்டங்களின் படியே நாங்கள் குற்றவாளியை தண்டிக்க விரும்புகிறோம்."

நன்றி.

5 comments:

பொதுஜனம் said...

இந்திய பதில்
கசாபை உங்களிடம் கொடுத்தல் உடனே சுட்டு கொன்று விடுவீர்கள். அப்புறம் எப்படி நியாயம் கிடைக்கும்.நாங்களே அவனுக்கு தண்டனை கொடுக்க முயற்சிப்போம். என்ன... கேஸ் முடிய பல வருடம் ஆகலாம். ஒரு வழியாக அப்சல் குருவை தூக்கில் போடுவதா வேண்டாமா என்று முடிவு செய்து பின் இவரது மனுவும் பரிசீலிக்கப்படும். அதற்குள் ராகுல் காந்தி பேரன் பிரதமர் ஆனாலும் ஆகி விடுவர். அதனால் கசப் இங்கேயே சௌக்கியமாக இருக்கட்டும்.சாரி

Maximum India said...

அன்புள்ள பொதுஜனம்

பின்னூட்டத்திற்கு நன்றி

//இந்திய பதில் //

சில பின் குறிப்புக்கள்

//கசாபை உங்களிடம் கொடுத்தல் உடனே சுட்டு கொன்று விடுவீர்கள். அப்புறம் எப்படி நியாயம் கிடைக்கும்.//

அப்புறம் நாங்கள் வேறு எதை வைத்து பொலிடிக்ஸ் செய்ய முடியும்?

//நாங்களே அவனுக்கு தண்டனை கொடுக்க முயற்சிப்போம். என்ன... கேஸ் முடிய பல வருடம் ஆகலாம். ஒரு வழியாக அப்சல் குருவை தூக்கில் போடுவதா வேண்டாமா என்று முடிவு செய்து பின் இவரது மனுவும் பரிசீலிக்கப்படும். . //

அப்போது நிறைய பேர் இங்கே கசாப் என்றால் யார் என்று கேட்பார்கள்? (ஆமாம், அது யாரு அப்சல் குரு? )

//அதற்குள் ராகுல் காந்தி பேரன் பிரதமர் ஆனாலும் ஆகி விடுவர்//

அவரோட பசங்களோட போயி கசாப்ப மீட் பண்ணலாம். என்ன இந்த தாராள குணம்னு நாம்ப ஒரு ப்ளாக் போஸ்ட் போடலாம்.

//அதனால் கசப் இங்கேயே சௌக்கியமாக இருக்கட்டும்.சாரி//

எப்படியும் வயசானா சாகத்தான் போறான்? நாம்ப ஏன் அவசரப் படுத்தனும்?

அப்புறம் நாங்க சினிமா, தொல்லைக் காட்சி ரியாலிட்டி ஷோ எல்லாத்திலும் அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுப்போம். அதுவே ஒரு பெரிய தண்டனைதானே?

வால்பையன் said...

தல
உங்க பதிவு சிரிப்புன்னா
பெரிய தல பொது ஜனத்தோட பின்னூட்டம்
சிரிப்போ சிரிப்பு

சில ஆண்டுகளுக்கு முன் இதே போல் பயங்கரவாதி என்று கைது செய்து வைக்கப்படிருந்த ஒரு குற்றவாளியை தீவிரவாதிகள் விமானம் கடத்தி மீட்டு சென்றார்கள், திரும்பவும் அது நடக்க போகிறது

Maximum India said...

அன்புள்ள வால்பையன்

பின்னூட்டத்திற்கு நன்றி

//சில ஆண்டுகளுக்கு முன் இதே போல் பயங்கரவாதி என்று கைது செய்து வைக்கப்படிருந்த ஒரு குற்றவாளியை தீவிரவாதிகள் விமானம் கடத்தி மீட்டு சென்றார்கள், திரும்பவும் அது நடக்க போகிறது//

நீங்கள் சொல்வது சரிதான். பாதுகாப்பற்ற நிலையில் மக்கள் மட்டும் அல்ல இந்திய அரசும் கூட இருக்கிறது.

நன்றி

Maximum India said...

வலைப்பூக்கள் குழுவினருக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள்

Blog Widget by LinkWithin