The Art of Appraisal
-
Big Boss: This year your performance was good, excellent and outstanding.
So, your rating is "average".
Kumar: What? How come 'average'?
Big Boss: Becau...
பிரிவுகள்
- சமூகம் (121)
- செய்தியும் கோணமும் (105)
- பொருளாதாரம் (101)
- பங்கு சந்தை (98)
- அரசியல் (74)
- பயணங்கள்/அனுபவங்கள் (40)
- மனவியல் (40)
- பங்கு சந்தை வெற்றி பயணம் - ஒரு வழித் துணை (15)
- கதை (10)
- நகைச்சுவை (7)
- அறிவியல் (5)
- திரைவிமர்சனம் (4)
- சட்டம் (3)
- நூலகம் (3)
- கிறுக்கல்கள் (1)
Sunday, May 8, 2011
இந்தியாவுல இதெல்லாம் சகஜமப்பா!
'ஐயா! அந்த காண்ட்ராக்ட் விஷயத்தில் என்ன செய்வது?" என்று கேட்டார் துறைச் செயலாளர்.
'தமிழுல எனக்கு பிடிச்ச ஒரே வார்த்தை லஞ்சம்தாம்ப்பா!' என்று திரைப்பட பாணியில் சொன்ன அமைச்சரை குஷி படுத்தும் வகையாக அவரது கைத்தடி , "ஆமா தலைவரே, லஞ்சத்தை கண்டுபிடித்தவனுக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும். லஞ்சம் இல்லையென்றால் அரசியல் ஏது? அரசாங்கம்தான் ஏது? அரசாங்கம் இல்லையென்றால் மக்கள்தான் ஏது? இது தெரியாமல் கூவி கொண்டிருங்காங்க கொஞ்சம் பேரு." என்றார்.
"அது இல்லை சார்! தொழிற்நுட்ப காரணங்களின் அடிப்படையில் இந்த ஒப்பந்தத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று பிரதமர் கடிதம் எழுதி இருக்கிறாரே சார்?'
'நல்லா படிச்சுப் பாருய்யா! அவரது கடித்தத்தில் மறுபரிசீலனை என்ற வார்த்தைக்கு முன்னர் தயவு செய்து என்ற வார்த்தைகளும் இருக்கும். அதெல்லாம் அப்படித்தான் என்று பதில் கடிதம் அனுப்பி விடு. அதற்கு மேல் மரியாதையை அவரே எதிர்பார்க்க மாட்டார்.'
'இருந்தாலும் கூட சார்!!!!!!' என்று இழுத்தார் துறை செயலாளர். 'ஏற்கனவே கணக்கு தணிக்கை அதிகாரி நம் துறை முடிவுகளுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார் சார்!'' என்றவரை இடைமறித்த அமைச்சர், 'சும்மா இருய்யா!!! ஒரு தடவை லஞ்சம் வாங்கனும்னு நான் முடிவு பண்ணா அந்த முடிவை நானே சொன்னாக் கூட மாத்தமாட்டேன்' என்று மீண்டும் ஒருமுறை சினிமா பஞ்ச் அடிக்க அவரது அல்லக்கைகள் குலுங்கி குலுங்கி சிரித்தனர்.
அப்போது, அவர்கள் சென்ற ஹெலிகாப்டரும் சற்று குலுங்கியது. உரையாடலை நிறுத்தி விட்டு அனைவரும் விமானியை பார்த்தனர். "தொழிற் நுட்ப காரணங்கள் எதிராக இருந்தும் லஞ்சத்தின் உதவியுடன் வாங்கப் பட்ட ஹெலிகாப்டர்தான் சார் இது. அப்போதும் இதே சினிமா பஞ்சைத்தான் அந்த மந்திரியும் அடித்தார்" என்று விமானி சொல்லி முடிப்பதற்குள் 'டமார்' என்று ஒரு பலத்த சப்தம். மீண்டும் ஒரு முறை, ஒரு அமைச்சர் ஹெலிகாப்டரில் பயணம் செய்யும் போது காணாமல் போனார் என்று அனைத்து ஊடகங்களும் செய்தி வெளியிட்டன.
நன்றி!
பின்குறிப்பு: தன்னுடைய கல்லறை அமைப்பதற்க்கான காண்ட்ராக்டாகவே இருந்தாலும் சரி, கவலைப் படாமல் கையூட்டுக்காக கை நீட்டும் அரசியல்வாதிகளுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்.
Labels:
கதை,
செய்தியும் கோணமும்
Subscribe to:
Post Comments (Atom)





6 comments:
Hats off செய்து நானும் மரியாதை தெரிவித்துக் கொள்கிறேன்!
நீண்ட இடைவேளைக்குப் பின் வந்த பதிவுக்கு பாராட்டுக்கள்.
நன்றி middleclassmadhavi !
நன்றி நெற்குப்பை தும்பி ஐயா!
நீண்ட இடைவேளைக்குப் பின் வந்தdirku nandi thala
அமைச்சர் ஹெலிகாப்டரில் பயணம் செய்யும் போது காணாமல் போனதுபற்றி விசாரிக்க அமைக்கப்பட்ட குழுவின் விசாரணையில், விமானி முறையாக பயிற்சி பெறாமல் லஞ்சம் கொடுத்து விமானியானார் என்பது கண்டுபடிக்கப்பட்டுள்ளது. நங்களும் அமைப்போம்ல விசாரணைகுழு. இந்தியாவுல இதெல்லாம் சகஜமப்பா.
பதிவுக்கு நன்றி சார்.
நன்றி DG !
நன்றி பெரியண்ணன்!
Post a Comment