Skip to main content

Posts

Showing posts with the label அறிவியல்

கதையல்ல நிஜம்!

அந்த குழந்தையின் வயது இரண்டு. ஆகஸ்ட் இரண்டாம் தேதி லேசான காய்ச்சல் வந்தது. இரண்டு நாட்கள் கழித்து உடலில் தடிப்புக்கள் தோன்றின. அந்த குழந்தையின் பெற்றோர் முதலில் உள்ளூர் மருத்துவமனையை தொடர்பு கொண்டனர். இது பன்றி காய்ச்சலின் அறிகுறியாக இருக்கலாம் என்று அந்த மருத்துவமனையினர் குறிப்பிட்ட சேவை மையத்தின் தொலைபேசி எண்ணை கொடுத்தனர். அந்த சேவை மையத்தை தொடர்பு கொண்ட போது குழந்தைக்கு பன்றி காய்ச்சலின் ஒரே ஒரு அறிகுறி மட்டுமே இருக்கின்றது என்று வேறொரு தொலைபேசி எண்ணை அந்த மையத்தினர் கொடுத்தனர். அந்த எண்ணில் தொடர்பு கொண்ட போது, குழந்தையின் உடல் வெட்ப நிலை நாற்பது டிகிரி சென்டி கிரேடை தாண்டினால் மீண்டும் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொண்டனர். அப்படியே நாற்பது டிகிரி சென்டி கிரேடை தாண்டியது குழந்தையின் பெற்றோர் அந்த மையத்தை மீண்டும் தொடர்பு கொண்டனர். உடனடியாக அங்கு வந்த மருத்துவக் குழுவினர் அந்த குழந்தையை பரிசோதித்த பிறகு தமி ப்ளு மருந்தினை கொடுத்த பிறகு திரும்பி சென்று விட்டனர். ஒரு மணி நேரம் கழித்த பிறகு அந்த குழந்தையின் கண்கள் வெளிர்ந்து விட பயந்து போன பெற்றோர் அந்த மையத்திடம் மறுபடியும் தொடர்பு கொ...

பன்றி காயச்சல் பற்றிய சில தகவல்கள்!

பன்றி காய்ச்சல் என்றால் என்ன? இந்த காய்ச்சலுக்கும் மற்ற காய்ச்ச்சல்களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? பன்றி காய்ச்சல் உயிருக்கு ஆபத்தானதா என்ற பல கேள்விகள் என்னுள்ளும் ஓடி கொண்டிருந்தன. அவற்றுக்கு விடை தேடிய போது அறிந்து கொண்ட சில விபரங்கள் பகிர்தலுக்காக கீழே. பன்றி காய்ச்சல் என்பது H1N1 என்ற ஒருவகை இன்ஃபுளுயென்ஸா வைரஸ் A கிருமியினால் உருவாகக் கூடிய காய்ச்சல் ஆகும். இந்த வியாதி சமீபத்தில் முதன் முதலாக மெக்சிகோ நாட்டில் கண்டறியப் பட்டது. பொதுவாக இந்த வகை கிருமிகள் பன்றிகளையும் பன்றிகளுடன் நேரடி தொடர்புள்ள மனிதர்களையும் மட்டுமே தாக்கக் கூடியவை. ஆனால் இந்த முறை, மனிதர்கள் மூலமாகவும் மற்றவர்களுக்கு இந்த கிருமிகள் பரவ ஆரம்பித்திருப்பது மனித குலத்திற்கு புதிய சவாலாக அமைந்துள்ளது. பொதுவாக இந்த காய்ச்சல் அறிகுறிகள் மற்ற சாதாரண ஃப்ளு காய்ச்சல் அறிகுறிகள் போன்றவைதான். கடுமையான காய்ச்சல் (100 டிகிரிக்கு மேல்), இருமல் மற்றும் தொண்டையில் கரகர. சில சிமயங்களில் மூக்கடைப்பு, ஒழுகும் சளி போன்ற மூச்சு சம்பந்தப் பட்ட லேசான வியாதிகளும் கூட பன்றி காய்ச்சல் அறிகுறியாக இருக்கலாம். இன்னும் சில சமயங்களில் மேற்சொ...

உயிர் காக்கும் இறப்பு நிலை.

எங்களுக்காகவும் சில பதிவுகள் இடுங்கள் என்று கோரிக்கை வைத்த செல்வன்.தீபக் சூர்யா, செல்வன்.ஜெய சூர்யா போன்ற சில இளம் அறிவியல் சிந்தனையாளர்களுக்கான ஒரு பதிவு இது. இளைஞர்கள் போல அறிவியல் தாகம் கொண்ட பெரியவர்கள் கூட இதை படிக்கலாம். துருவப் பகுதி போன்ற அசாதாரண தட்பவெட்ப நிலைகளைக் கொண்ட உலகின் சில பகுதிகளில் (சில சமயங்களில் சாதாரண பகுதிகளில் கூட)வாழும் சில உயிரினங்கள் வருடந்தோறும் குறிப்பிட்ட சில மாதங்களில் நடைபெறும் கடுமையான பருவநிலை மாற்றத்தின் போது தம்மைத் தாமே பாதுகாத்துக் கொள்ள ஒரு வித கோமா போன்ற நிச்சலன அல்லது ஜட நிலைக்கு சென்று விடுவது உண்டு. பருவ நிலை சீர்பெற்றவுடன் தம்மை தாமே மீண்டும் உயிர்ப்பித்து எழுவதும் உண்டு. இந்த அதிசய நிகழ்வுகள் பற்றியும் இந்த நிலையை மனிதன் எப்படி உபயோகித்துக் கொள்வது என்பது பற்றியும் இங்கு பார்ப்போம். இத்தகைய நிச்சலன நிலைக்கு அறிவியல் ரீதியான பெயர் HIBERNATION என்பதாகும். கடுமையான பருவநிலைகளில் உணவு தேடுவது (உணவு கிடைப்பது அரிது) உயிரினங்களுக்கு ஒரு சிரமமான செயலாகும். எனவே உணவு கிடைக்காத நிலையில் கூட உடல்ரீதியான தனது செயல்பாடுகளை ஒரே மாதிரி தொடர்ந்து கொண்டிரு...

கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க!

உங்களுக்கு தெரியுமா? உலகம் எப்போதும் ஒரே சீரான வேகத்தில் சுற்றி வருவதில்லை. காரணம், பூமிக்கும் சூரிய சந்திரருக்கும் இடையே உள்ள ஈர்ப்பு விசை மாற்றங்கள் பூமியின் சுழற்சி வேகத்தைப் பெருமளவு பாதிக்கின்றன. மேலும், பூமி முழுக்க முழுக்க திடப் பொருளாக இல்லாமல் உள்ளே ஆழ்மட்டத்தில் குழம்பு வடிவம் கொண்டு அமைந்திருப்பதால் அதன் சுழற்சி வேகம் ஒரே சீராக இருப்பதில்லை. இவற்றின் காரணமாக பூமி தன்னைத் தானே சுற்றிக் கொள்ள எடுத்துக் கொள்ளும் நேரம் காலப் போக்கில் மாறிக் கொண்டே (பெரும்பாலும் அதிகரித்துக் கொண்டே) வருகிறது. சுமார் 450 கோடி ஆண்டுகளுக்கு முன்னே ஒரு முறை தன்னைத் தானே சுற்றிக் கொள்ள ஆறு மணி நேரம் மட்டுமே எடுத்துக் கொண்டதாக சொல்லப் படும் நம் பூமி தற்போது இருபத்து நான்கு மணி நேரத்தை விட சற்று கூடுதலான மில்லி செகண்ட் எடுத்துக் கொள்கிறது. (ரொம்ப வயதாகி விட்டதால் தளர்ந்து போய் விட்டதோ?) ஒரு நாள் பொழுதை தனியாகப் பார்க்கும் போது இந்த வித்தியாசம் அதிக கவனம் செலுத்த வேண்டிய ஒன்றாக இல்லாதது போல தோன்றினாலும், தொடர்ந்து பல நாள்களுக்கு இந்த வித்தியாசம் கூட்டப் படும் போது (நம்மூர் கந்து வட்டி போல) இத்தகைய சுழற...

இந்தியாவின் தேன்நிலவு

இந்திய படைப்பான சந்திராயன் 1 வெற்றிகரமாக சந்திரனின் 100 கி.மீ உள்வட்ட பாதையில் (Polar Range) இன்று நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது. இனி இந்த துணைக்கோள் சந்திரனை இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை சுற்றி வந்து தொலைப்படங்கள் (Mapping) எடுத்து அனுப்பும். இதன் மூலம் சந்திராயன் 1 ப்ராஜெக்ட் வெற்றிகரமாக நிறைவேற்றப் பட்டிருக்கிறது. (வீடியோ படம் பார்க்க) சந்திராயன் 1 பயணத்தின் குறிப்படத் தக்க சிறப்பம்சங்கள் கீழே. 1. இதன் மூலம் சந்திரனுக்கு ராக்கெட் அனுப்பிய ஐந்தாவது நாடு என்ற பெருமை இந்தியாவிற்கு. 2.இது வரை அனுப்பப்பட்ட ராக்கெட்டுகளிலேயே குறைந்த செலவில் அனுப்பப் பட்ட ராக்கெட் சந்திராயன்தான். 3. இது வரை உலகிலேயே இல்லாத அளவுக்கு மிக அதிக சாதனங்கள் இந்த ஒரே ராக்கெட்டின் வழியே அனுப்பப் பட்டுள்ளன. 4. முதல் முயற்சிலேயே சந்திரனுக்கான பயணத்தினை வெற்றிகரமாக முடித்த நாடு என்ற நாடு என்ற பெருமையும் இந்தியாவிற்கு கிடைத்திருக்கிறது. 5. நேரடியாக நிலவுக்கு ராக்கெட்டை அனுப்பாமல் பூமி மற்றும் சந்திரனின் நீள்வட்ட பாதைகளில் சந்திராயனை சுற்ற வைத்து இறுதியாக நிலவின் உள்வட்ட பாதையில் நிலை நிறுத்த மிக நுணுக்கமான தொழில் நு...