Skip to main content

Posts

Showing posts with the label சமூகம்

நேர்ந்து விடப் பட்டவர்கள் - இவர்களும் இந்தியர்களே!

எனது வங்கியில் புதியதாக கணக்கு துவக்க விண்ணப்பித்த ஒரு நடுத்தர வயது பெண்மணி, தனது விண்ணப்பத்தில் தந்தை/கணவர் பெயரை நிரப்ப வில்லை. ஏன் நிரப்ப வில்லை என்ற என் கேள்விக்கு அந்த பெண்ணிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. பொதுவாகவே கல்வியறிவு மிகவும் குறைந்த வட கர்நாடக பகுதி என்பதால், அவரது விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய உதவி செய்த நபரை அழைத்து, கணவர் பெயரை நிரப்பும் படி அறிவுறுத்தினேன், . அந்த பெண்ணிற்கு இன்னும் திருமணமாக வில்லை என்று அந்த நபர் கூறினார். அதனால் என்ன, அவரது தந்தை பெயரை நிரப்புங்கள் என்று சற்று எரிச்சலுடன் கூறினேன். அவருக்கு தந்தையும் இல்லை என்றார் அவர். மேலும் எரிச்சலான நான் தந்தையை கேட்க வில்லை, தந்தையின் பெயரைத்தான் கேட்கிறேன் என்று கூறினேன். அதற்கு அவர், அந்த பெண்மணியின் பட்டப் பெயரை கவனிக்க வில்லையா என்று கேட்டார். அதற்கென்ன என்று நான் திருப்பிக் கேட்ட போது, அந்த (தேவதாசி) இனத்தை சேர்ந்தவர்கள் கடவுளுக்கு நேர்ந்து விடப் பட்டவர்கள் என்றும் அவர்களுக்கு தந்தையோ கணவரோ கிடையாது என்று கூறினார். இந்த காலத்திலும் இப்படியா என்று ஒரு நிமிடம் திகைப்பின் உச்சிக்கு சென்ற நான் அந்த பெண்ணைப் ப...

இந்தியாவின் வண்ணங்களும் ராகுல் காந்தியின் எண்ணங்களும்!

முகரம் பண்டிகையை முன்னிட்டு கர்நாடகத்தின் வடபகுதியில் உள்ள எனது அலுவலகத்தில் இந்த வாரம் பலரும் விடுப்பு எடுத்துக் கொண்டனர். அங்குள்ள ஒரு தமிழ் நண்பரிடம் இது பற்றி விவாதிக்கும் போது, அவருடைய தொழிற்சாலையில் கூட பலரும் விடுப்பு எடுத்துக் கொண்டதாகவும், இந்த பகுதியில் முகரம் வெகு விசேஷமாக கொண்டாடப் படுவதாகவும் கூறினார். முகரத்தை ஒரு இஸ்லாமிய திருநாளாக மட்டுமே அறிந்திருந்த நான், "முஸ்லிம்கள் மட்டும் விடுப்பு எடுத்திருந்தால் கூட பரவாயில்லை, பல இந்து ஊழியர்களும் கூட முகரத்தை முன்னிட்டு விடுப்பு எடுத்துக் கொண்டது ஆச்சரியமாக உள்ளது" என்று அவரிடம் வினவினேன். அதிலும் ஒரு இந்து பெண் ஊழியர், தீபாவளிக்கு ஊருக்கு போவதை விட முகரத்திற்கு சொந்த ஊருக்கு போவது மிகவும் முக்கியம் என்று என்னிடம் விடுமுறைக்காக மன்றாடியது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்ததாக கூறினேன். அதற்கு அவர், இந்த பகுதியில் முகரம் இந்துக்களால் மிக விசேஷமாக கொண்டாடப் படுகிறதாக கூறினார். முகரத்தின் போது தீமிதிப்பது, பூ தேங்காய் பழங்களுடன் மசூதிக்கு சென்று வழி படுவது போன்ற பழக்கங்கள் உண்டு என்று வேறு சில உள்ளூர் நண்பர்களும் க...

ஊழலின் ஊற்றுக்க்கண்!

ஓய்வு பெற்ற வங்கி உயர் அதிகாரி ஒருவர் சமீபத்தில் தம்முடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். மாநில அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தும், மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்த போதும் கூட, கல்லூரி கட்டணத்தை செலுத்தும் அளவிற்கு வசதி இல்லாததால், அவர் தனது மருத்துவர் கனவை கைவிட்டு வங்கி வேலையில் சேர நேர்ந்ததாம். கல்வியின் மதிப்பை நன்கு உணர்ந்த அவர், வங்கியில் உயர் பதவிக்கு வந்ததும் கல்விக் கடன்களை, குறிப்பாக வசதி குறைந்தவர்களுக்கு, உணர்வோடு வழங்கி வந்தார். ஆனால் அந்த கடன்களை திருப்பி வசூலிக்க முனைந்த போது அவருக்கு கிடைத்த அனுபவம் அவரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. தவணைகளை விடுங்கள்! கடன் தொகையின் மொத்த அளவு சம்பளம் கிடைக்கும் படியாக வாழ்வில் பெருமளவுக்கு உயர்ந்த மாணவர்கள் கூட கல்விக் கடன்களை திருப்பிச் செலுத்த முனையவில்லை. மாறாக அலட்சியப் படுத்தி உள்ளனர். வயதில் மூத்தவரும் "அந்த கால மனிதருமான" அவரால் இதை ஜீரணிக்கவே முடிய வில்லை. யார் வேண்டுமானாலும் எதில் வேண்டுமானாலும் ஏமாற்றலாம்.ஆனால் வாழ்வின் முதல் படியினையே "ஏமாற்றும் படியாக" எப்படி இவர்களால் ஆரம்பிக்க முடிகிற...

எப்போதும் சந்தோசமாக இருக்க எளிமையான ஏழு வழிகள்!

எப்போதும் சந்தோசமாக இருக்க வேண்டுமா? இதோ பிடியுங்கள் ஏழு டிப்சுகளை! 1. யாரையும் வெறுக்காதீர்கள். 2. எதற்கும் கவலைப் படாதீர்கள்! 3. எளிமையாக இருங்கள்! 4. குறைவாக எதிர்பாருங்கள்! 5. நிறைவாக கொடுங்கள்! 6. நிறைய புன்னகையுங்கள்! 7. அப்புறம், அடிக்கடி இந்த பதிவு வலை பக்கம் வாருங்கள்! நன்றி!

தீப ஒளி பரவட்டும்!

நிச்சயமற்ற உலக பொருளாதார சூழல் மற்றும் லாப விற்பனை நம்மூர் சந்தையை சென்ற வாரமும் தளர்ச்சியாகவே வைத்திருந்தன. ரியாலிடி மற்றும் எரிசக்தி துறை பங்குகள் பெரும் வீழ்ச்சியை சந்தித்தன. பண்டிகை கால எதிர்பார்ப்புக்கள் வாகன மற்றும் நுகர் பொருட் துறை பங்குகளை உயரச் செய்தன. அமெரிக்க அரசு மற்றும் அதன் மத்திய வங்கி எதிர்பார்த்த அளவுக்கு அமெரிக்க பொருளாதாரத்தின் மீட்சி கடந்த ஒரு வருடத்தில் சிறப்பாக இல்லாமல் போனது பொருளாதார ரீதியாக ஒரு பாதகமான அம்சமாக இருந்தாலும், அமேரிக்கா மீண்டும் ஒருமுறை பெரிய அளவில் மீட்சி திட்டங்களை அறிவிக்கலாம் என்ற புதிய எதிர்பார்ப்பு சந்தையை வார இறுதியில் சற்று நிமிர செய்துள்ளது. நாம் முன்னரே எதிர்பார்த்தது போலவே நிபிட்டி 5930 அளவில் ஒரு சிறப்பான அரணை அமைத்துக் கொண்டு வலுவாக மீண்டுள்ளது. குறுகிய கால நோக்கில், நிபிட்டி 6130 எனும் இடைக்கால தடையை உடைத்தால், தீபாவளி உற்சாகம் மற்றும் அமெரிக்க புதிய திட்ட எதிர்பார்ப்புக்கள் நிபிட்டியை 6350 வரை கொண்டு செல்ல வாய்ப்புக்கள் உள்ளன. அதே சமயம் சிறிய மற்றும் இடை நிலை பங்குகளை வாங்கும் போது கவனம் அவசியம். ஏற்கனவே சொன்னபடி வர்த்தகர்கள...

பொறுமையின் எல்லை எதுவரை?

ஒரு பந்த் வெற்றி பெற வேண்டுமானால் மக்களின் ஆதரவு கட்டாயம் தேவைப் படும். கடந்த பல வருடங்களாக இந்தியாவில் நடைபெற்ற பல முழு அடைப்பு போராட்டங்கள் (மேற்கு வங்கம் மற்றும் கேரளா நீங்கலாக) தோல்வி பெற்றதற்கு மக்களின் ஆதரவு இல்லாமல் போனது ஒரு முக்கிய காரணமாகும். மேலும், அரசியல் கட்சி இரட்டை நிலைப்பாடும், நீதி மன்றங்களின் தலையீடும் இந்த போராட்டங்கள் நீர்த்துப் போகச் செய்த இதர காரணங்களாக அமைந்தன. நான் மும்பையில் வசிக்கும் ஐந்து வருடங்களில் (எதிர்கட்சிகள் சார்பில்) முழுமையான பந்த் போராட்டத்தை ஒரு தடவை கூட சந்தித்தது இல்லை. ஆனால், முழு அடைப்பு போராட்டத்தை தோற்கடிக்க வேண்டும் என்று மகாராஷ்டிரா அரசாங்கம் செய்த பல முயற்சிகளையும் மீறி இன்றைய போராட்டம் குறிப்பிடத்தக்க அளவிற்கு வெற்றி பெற்றதற்கு காரணம் என்ன என்று சற்று யோசித்தேன். எதிர்கட்சிகளின் செல்வாக்கு, கலவரம் குறித்த மக்களின் அச்சம் ஆகியவற்றையும் மீறி, மத்திய அரசின் மீது பொதுமக்களுக்கு குறிப்பாக தொழிலாளர் சமூகத்திற்கு இருக்கும் அதிருப்தியே இதற்கு முக்கிய காரணமாக தோன்றுகிறது. நிர்பந்தங்கள் இல்லாமலேயே பல தொழிலாளர் மற்றும் சிறு வணிகர் அமைப்புக்கள் இந...

பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்வது எப்படி?

பொதுவாக பங்குகளில் நேரடி முதலீடு செய்வது என்பது சற்று நேரம் பிடிக்கும் வேலை. மேலும் நிறுவனங்களை பற்றிய, பங்குகளைப் பற்றிய சில தொழிற்நுட்ப தகவல்களையும் அறிந்திருக்க வேண்டிய அவசியம் முதலீட்டாளர்களுக்கு உண்டு. நேரடியாக பங்குகளில் முதலீடு செய்ய வாய்ப்பில்லாதவர்களுக்கும், இந்திய பொருளாதார வளர்ச்சியின் பயன்களை அடைய பரஸ்பர நிதி முதலீடுகள் ஒரு நல்வாய்ப்பினை வழங்குகின்றன. அதே சமயம், பங்குகளின் எண்ணிக்கையை விட பரஸ்பர நிதி திட்டங்களின் எண்ணிக்கை அதிகமோ என்று மலைப்புற செய்யுமளவுக்கு இன்று பரஸ்பர நிதி திட்டங்களின் எண்ணிக்கையும் மிக அதிகமாகி விட்டன. நாளுக்கு நாள் புதிய புதிய திட்டங்களைப் பற்றிய ஏராளமான விளம்பரங்களும் வந்த வண்ணம் உள்ளன. ஒரு நல்ல பரஸ்பர நிதி திட்டத்தினை தேர்ந்தெடுக்க உதவும் சில வழிமுறைகளைப் பற்றி இங்கு பார்ப்போம். முதலில் நான் சொல்லிக் கொள்ள விரும்புவது. புதிய திட்டங்களில் முதலீடு செய்வதை தவிருங்கள். காரணங்கள் கீழே. 1. புதிய திட்டங்களில், விளம்பர செலவினம், தரகு போன்ற செலவின தொகைகள் அதிகமாக இருக்கும். அந்த செலவினத்தொகைகள் பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்பவர்களின் மீதுதான் சுமத்தப் படும்....

மொபைலில் மொபைல் பேச்சு வேண்டாமே!

பொருள் பொதிந்த புகைப்படம்! நன்றி!

நாம் மறந்த இந்தியர் : பழங்குடியினர்:

வணிகமயமாகி விட்ட இன்றைய சமூக பொருளாதார சூழலில் நாம் மதிக்க தவறிய, மறந்து போனவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் பழங்குடி மக்கள். மேலும் பல விஷயங்களைப் போலவே ஊடக மயக்கம் இங்கும் உண்டு. பழங்குடி மக்கள் என்றாலே நாகரிகமற்றவர்கள் (சில சமயங்களில் நரமாமிசம் சாப்பிடுபவர்கள்) காட்டு மிராண்டிகள், மூட நம்பிக்கையில் முழுகிப் போனவர்கள் என்ற ஒருவித மூட நம்பிக்கையை நம் மீது திணித்திருப்பது சினிமா உள்ளிட்ட பல்வேறு ஊடகங்கள். உண்மையில் அவர்கள் உலக சமநிலைக்கு அவசியமானவர்கள், இயற்கையை அழிக்காமல் அதனுடன் இயைந்து வாழ்பவர்கள் என்பதெல்லாம் மறக்கடிப்பட்டு, அவர்களை அவர்களது சொந்த பூமியில் இருந்து வணிக நோக்கங்களுக்காக வெளியேற்றும் முயற்சி தீவிரமாக இப்போது நடைப் பெற்று வருகின்றது. இதற்கு அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றும் ஊடகங்கள் அனைவரும் பலவகையில் உடந்தையாக உள்ளனர். இவர்களைப் பற்றிய செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அலட்சியம் செய்யும் நாமும் கூட ஒருவகையில் இவர்கள் படும் இன்னல்களுக்கு காரணமாக அமைந்து விடுகிறோம். மரியாதைக்குரிய நண்பர் திரு.நெற்குப்பை தும்பி அவர்களின் பதிவின் பிரதி இங்கே. நாம் மறந்த இந்தியர் : ...

இந்த பதிவிற்கு ஒரு முப்பது வினாடி ஒதுக்குங்கள்!

வாழ்க்கையைப் பற்றி கோகா கோலா தலைவர் (திரு.பிரையன் டைசன்) நிகழ்த்திய முப்பது வினாடி உரை இங்கே. வாழ்க்கையை ஐந்து பந்துகளுடன் விளையாடும் ஒரு விளையாட்டாக கற்பனை செய்து கொள்ளுங்கள். அந்த பந்துகளாவன: வேலை (தொழில்) , குடும்பம், உடல்நலம், நண்பர்கள் மற்றும் ஆன்மிகம் (அல்லது சுய தேடல்). அனைத்தையும் மாற்றி மாற்றி காற்றில் சுழல வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். வேலை என்பது ரப்பர் பந்து போல. அது தவற விடப் பட்டாலும் துளியும் சேதமடையாமல் திரும்பக் கைக்கு வந்து சேர்ந்து விடும். ஆனால் மற்ற பந்துகள் அப்படியல்ல. குடும்பம், நட்பு, உடல் நலம் மற்றும் ஆன்மிகம் ஆகியவை கண்ணாடி பந்துகள் போன்றவை. ஒரு முறை தவற விட்டாலும், அவற்றை பழைய நிலையில் திரும்பப் பார்க்க முடியாது. சொல்லப் போனால் சமயத்தில் சிதறி சின்னாபின்னமாக ஆகியும் விடலாம். எனவே நண்பர்களே! வேலை நேரத்தில் சுறுசுறுப்பாக வேலையை கவனியுங்கள். வேலை நேரம் முடிந்தவுடன் வீட்டுக்கு கிளம்புங்கள். தேவையான நேரத்தை உங்கள் குடும்பம், நட்பு ஆகியவற்றுக்கு வழங்குங்கள். உடலுக்கு தேவையான ஓய்வை அளியுங்கள்! டிஸ்கி: என்ன! முப்பது வினாடி நேரம் ஆகவில்லையே? நன்றி!

"முதல் உறுதி" நிதிகளில் முதலீடு செய்யலாமா?

பொதுவாக பங்குசந்தையில் முதலீடு செய்வதென்றால் பலருக்கும் வரும் முதல் பயம் "போட்ட முதல் முழுமையாக திரும்பி வருமா?" என்பதுதான். இது நியாயமான பயம்தான் என்பதில் சந்தேகில்லை. அதே சமயம், இந்த பயத்தினை தமக்கு சாதகமாக பயன்படுத்த விரும்பும் சில பரஸ்பர நிதி நிறுவனங்கள் (சில காப்பீட்டு நிறுவனங்கள் கூட) புதிய பங்கு திட்டங்களை (Capital Protection Schemes) அறிமுகப் படுத்தி வருகின்றனர். குறிப்பிட்ட பங்கு நிதி திட்டத்தில் முதலீடு செய்தால் போட்ட பணம் போகாது (நுண்ணிய எழுத்துக்களில் "போட்ட பணம் போகாமலிருக்க முயற்சி செய்வோம்" என்ற டிஸ்கியுடன்) என்றும் விளம்பரம் செய்கின்றனர். இந்த திட்டங்களில் முதலீடு செய்வதினால் என்ன லாபம் அல்லது என்ன நஷ்டம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். ஏற்கனவே சொன்னபடி "பங்கு சந்தையில் பங்கெடுக்க வேண்டும்", அதே சமயம் "முதலுக்கு மோசமாக கூடாது", "கொஞ்சம் குறைவான வருமானம் பங்குசந்தையில் இருந்து வந்தாலும் போதும்" என்றெல்லாம் விரும்புபவர்கள் ஏற்கும் வண்ணம் இந்த பங்கு நிதி திட்டங்கள் வடிவமைக்கப் படுகின்றன. முதலீட்டாளர்களின் பணத்தில் ஒரு குற...

ஏமாறாதே! ஏமாற விடாதே!

இரண்டு நாட்களாக பதிவுலகம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. நித்யானந்தா செய்தது தவறா அல்லது ரஞ்சிதா செய்தது தவறா அல்லது இவர்கள் அந்தரங்கத்தை வெட்ட வெளிச்சமயமாக்கியது தவறா என்றெல்லாம் ஏராளமான பதிவுகள்/பின்னூட்டங்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இந்த பதிவில் இந்த தவறுகளைப் பற்றி அலசும் அளவுக்கு எனக்கு ஆன்மிகம், சாமியார்கள், திரை (நிழல்) உலக வாழ்க்கை போன்றவற்றைப் பற்றி அதிகம் பரிச்சயமில்லை என்றாலும் எனக்கு தோன்றிய சில பொதுவான கருத்துக்களை மட்டும் இங்கு முன்வைக்க விழைகிறேன். எத்தனையோ முறை போலி நிதி நிறுவனங்களிடம் ஏமாந்தாலும் திரும்ப திரும்ப அவற்றில் பணம் போட்டு ஏமாந்து கொண்டுதான் இருக்கின்றனர் நமது இந்திய மக்கள். சொல்லப் போனால் அமெரிக்கா போன்ற நாடுகளில் கூட போன்சி என்ற பெயரில் ஏமாறுபவர் ஏராளம். அதே போலத்தான் ஆன்மீகவாதிகளிடம் ஏமாறும் பொதுமக்களின் தொடர்கதையும். பல சாமியார்களின் மோசடிகளைப் பற்றிய ஊடகங்களில் தகவல்கள் வந்து கொண்டே இருந்தாலும், இந்த சாமியார் அப்படியல்ல என்று ரொம்பவும் அப்பாவித்தனமாக மீண்டும் மீண்டும் ஏமாறும் கதைகள் புதிது புதிதாக வந்த வண்ணமே உள்ளன. இவ்வாறு தொடர்ந்து ஏமாறுவதற...

மதமும் மனிதமும் - வாலுக்கு ஒரு கோரிக்கை!

அன்புள்ள வால்! மதம் முன்னர் வந்ததா அல்லது தீவிரவாதம் முன்னர் வந்ததா என்ற கேள்வி எழுந்தால், தீவிரவாதம் என்பதுதான் உண்மையாக இருக்க முடியும். ஏனென்றால் மனிதர்கள் இயல்பிலேயே வன்முறையாளர்கள்தான். மற்ற விலங்குகளை வேட்டையாடியே தனது வாழ்வைத் தொடங்கியவன்தான் ஆதி மனிதன். சற்று யோசிக்கத் தொடங்கியவுடன், மற்றவர்களை தனது ஆளுமைக்கு உட்படுத்த விளைந்த மனிதனின் ராஜதந்திரங்களில் ஒன்றுதான் மதம். எனவே மதத்திற்கு "ஆளுமை விரும்பி" மனிதனே வேராக இருக்கும் போது, மதத்தினை மட்டும் கடிந்து கொண்டு பிரயோஜனம் இல்லை என்றே நினைக்கிறேன். மதம் இல்லை என்று சொல்லிக் கொண்டு பதவிக்கு வந்தவர்களும் கூட மனிதர்கள் மீது வன்முறை மற்றும் அடக்கு முறையை பிரயோகித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். எனவே மதமே உலகத்தில் இல்லாமல் போய்விடினும் வன்முறைகள், தீவிரவாதங்கள் அழிந்து போய் விடும் என்ற நம்பிக்கை எனக்கில்லை. சட்டங்கள், சமுதாய அமைப்புக்கள், ஜாதிகள், ஒழுக்க முறைகள் (morals) அனைத்துமே ஒருவகையில் தனிப்பட்டவரின் அல்லது குழுக்களின் ஆளுமைக்கான வழிமுறைகள்தான். உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால், அந்நிய நாட்டுடனான போரில் கொலை செய்பவ...

என்னால் என்ன முடியும்?

விப்ரோ தலைவர் அஜீம் பிரேம்ஜி அவர்கள் சொன்ன கதை இது! முன்னொரு காலத்தில் ஸ்காட்லாந்தில் பிளெமிங் என்ற ஒரு ஏழை விவசாயி வாழ்ந்து வந்தார். ஒரு முறை வயலுக்கு சென்று திரும்பும் அவர் ஒரு அலறல் சத்தத்தை கேட்டார். விரைந்து சென்ற பார்த்த போது, அங்கே ஒரு சிறுவன் புதைகுழியில் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை கவனித்தார். நிதானமான, ஆனால் நிச்சயமான அந்த மரண பயங்கரத்தில் இருந்து அந்த சிறுவனை அவர் மீட்டெடுத்தார். அடுத்த நாள் அந்த விவசாயி வீட்டின் முன்னே ஒரு அலங்கார வண்டி வந்து நின்றது. அதில் இருந்து ஒரு கனவான் இறங்கி வந்து, தன்னை அந்த சிறுவனின் தந்தை என்று அறிமுகப் படுத்திக் கொண்டார். தான் நம் விவசாயிக்கு மிகுந்த கடன் பட்டிருப்பதாகவும், அவருக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவ விரும்புவதாகவும் கூறினார். அவருக்கு பிளெமிங் கீழ்க்கண்டவாறு பதில் அளித்தார். "நன்றி ஐயா! நீங்கள் எனக்கு ஏதேனும் உதவி செய்ய விரும்பினால், என் மகனை உங்களுடன் அழைத்து செல்லுங்கள். அவனை படிக்க வையுங்கள். ஒருவேளை அவன் என்னைப் போலவே இருந்தால், ஒருநாள் நிச்சயமாக உங்களை பெருமை அடைய செய்வான்" அந்த சிறுவனை அழைத்துச் சென்ற கனவான், தான் வா...

யானையின் வாலை பிடித்த குருடனின் கதை!

முதல் தடவையாக, சர்தார்ஜி ஜோக்குகளை படிக்கும் போது, பஞ்சாபிகள் உண்மையிலேயே இவ்வளவு பெரிய முட்டாள்களா என்று எண்ணத் தோன்றி இருக்கின்றது. அதுவும், முரட்டுத்தனமான அதே சமயத்தில் மூடத்தனம் சற்றும் குறைவில்லாத பஞ்சாபிகள் சிலருடன் பழக நேர்ந்த போது, சர்தார்ஜி ஜோக்குகள் சரியாகத்தான் எழுதப் பட்டிருக்கின்றது என்று கூட தோன்றி இருக்கின்றது. மன்மோகன் சிங், அலுவாலியா போன்ற பொருளாதார மேதைகள் பஞ்சாபிகள், பஞ்சாபி சமூகத்தினை சேர்ந்த ஒருவர் நோபல் பரிசு வென்று இருக்கின்றார், பலர் மெத்த படித்து மிக உயரத்தில் இருக்கின்றனர் என்றெல்லாம் தெரிய வந்த போது சமூகங்களைப் பற்றிய ஒரு "மாயத்தோற்றம்" மனதிற்குள் ஆழமாக பதிந்து எப்படியெல்லாம் நமது "அறிவுப் பார்வையை" மறைக்கின்றது என்ற உண்மை புரிய வந்தது. எதற்காக சர்தார்ஜிகளை பற்றிய ஒரு தமிழ் பதிவு என்று நினைக்கிறீர்களா? சமீபத்தில் ஒரு சர்தார்ஜி தமிழர்களைப் பற்றி ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார். அதன் பெயர் "2 States: Story of My Marriage" அவர் பெயர் சேத்தன் பகத். பொதுவாக, இந்தியாவின் கலாச்சாரத்தைப் பற்றி ஆங்கிலத்தில் எழுதப் படும் புத்தகங்கள்...

தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

இந்த தீபாவளி அனைவரது வாழ்விலும் தீப ஒளி ஏற்றட்டும்! நம்மைச் சுற்றி உள்ள இருள் விலகட்டும்! உலகெங்கும் ஆனந்த ஒளி பரவட்டும்! அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

தீபாவளியும் தங்க விதியும்!

பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் தீபாவளியை முன்னிட்டு ஒரு பணிவான கோரிக்கை. 80-20 என்ற தங்க விதியை (The Pareto principle , also known as the 80-20 rule , the law of the vital few, and the principle of factor sparsity) பற்றி பலரும் கேள்விபட்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன். கேள்விபடாதவர்களுக்காக இங்கே ஒரு சிறிய விளக்கம். எண்பது சதவீத விளைவுகள் இருபது சதவீத காரணங்களாலேயே வருகின்றது என்ற இந்த வணிக தத்துவம் பரேடோ என்ற பொருளாதார நிபுணர், 1906 இல் இத்தாலியின் மொத்த நிலப் பரப்பில் எண்பது சதவீத நிலம் இருபது சதவீதத்தினரிடம்தான் உள்ளது என்று கணித்ததின் அடிப்படையில் உருவானது. பரேடோ விதி என்று அழைக்கப் படும் இந்த விதி பல கணித முறைகளிலும் வணிக தத்துவங்களிலும் உதவுகிறது. அதாவது ஒரு நிறுவனத்தின் எண்பது சதவீத விற்பனை இருபது சதவீத வாடிக்கையாளர்களிடம் இருந்துதான் வருகின்றது. ஒருவரது முதலீட்டின் எண்பது சதவீத வருமானம் அவரது இருபது சதவீத பங்குகளில் இருந்துதான் வருகின்றது. சமீபத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனம் கூட இருபது சதவீத முக்கிய பிரச்சினைகள்தான் ஒரு கணினியின் செயல் இழப்புக்கான எண்பது சதவீத காரணங்களாக இருக்கி...

தலைவர்கள் ஜாக்கிரதை!

இன்போசிஸ் முன்னாள் தலைவர் நந்தன் நிலகேனி அவர்கள் எழுதிய இமேஜினிங் இந்தியா என்ற புத்தகத்தில் விவரிக்கப் பட்டிருந்த ஒரு உண்மை சம்பவம், தலைவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியதின் முக்கியத்துவத்தை உணர்த்தியது. அந்த சம்பவம் இங்கே. சென்ற நூற்றாண்டின் தொண்ணுறுகளில் பொதுத் துறை வங்கி ஊழியர்கள், கணினி மயமாக்குதலை கடுமையாக எதிர்த்து வந்தது அனைவரும் அறிந்ததே. அந்த காலகட்டத்தில், கணினி மயமாக்குதல் வங்கித் துறைக்கு எந்த அளவுக்கு பயனளிக்கும் என்பதை விளக்கும் பணி நந்தன் அவர்களிடம் ஒருமுறை கொடுக்கப் பட்டிருந்தது. ஏ.டி.எம் சேவை, இணைய தள சேவை மற்றும் கிரெடிட் கார்டு சேவை போன்றவை வங்கித் துறையை இன்னும் மேலே எடுத்துச் செல்லும் என்று விளக்குவதற்காக, தன்னுடைய திறமை அனைத்தையும் செலவழித்து முன்கூட்டியே தயார் படுத்திக் கொண்ட நந்தன் அவர்களுக்கு ஆச்சரியமே காத்திருந்தது. வங்கி ஊழியர்கள் முன்னே அவரளித்த விளக்க உரைக்கு, ஊழியர்களின் தலைவர்களிடம் இருந்து கடுமையான எதிர்ப்பு இருந்தது. கணினிமயமாக்கம், வங்கித் துறைக்கு எவ்வளவு அவசியம் அல்லது லாபகரமானது என்பதை வலியுறுத்த முயன்ற அவரது ஒவ்வொரு கருத்துக்கும், வலுவான மாற்ற...

கம்ப்யூட்டர் கட்சியும் கால்குலேட்டர் கட்சியும்!

மத்திய கல்வி அமைச்சர் கபில் சிபல் இந்தியா முழுவதும் அனைவரும் தாய்மொழியுடன் ஹிந்தியும் படிக்க வேண்டும் என்ற கருத்தை தெரிவித்துள்ளார். இவ்வாறு அனைவரும் ஹிந்தி படிப்பதன் மூலம் நாட்டில் ஒருமைப்பாடு ஏற்படுவதுடன் ஹிந்தியை ஆங்கிலம் போன்று ஒரு "அறிவு மொழியாக (lingua franca)" மாற்ற முடியும் என்றும் கூறியுள்ளார். இந்த கருத்தின் மீது பதிவுலகில் ஏராளமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆங்கிலம் மட்டுமே போதும் என்று ஒரு கட்சியும், ஆங்கிலம் வாசலாக இருக்கும் போது ஹிந்தி ஒரு சன்னலாக இருந்து விட்டு போகட்டுமே என்று இன்னொரு கட்சியும் விவாதித்து வருகின்றன. ஹிந்தி எதிர்ப்பு என்பது எப்போதுமே ஒரு உணர்வு பூர்வமான விஷயமாகவே பலராலும் கருதப் பட்டாலும், அதற்கு அறிவு பூர்வமான, சரித்திர பூர்வமான சில அடிப்படைகள் உண்டு. ஹிந்தி திணிப்பு மற்றும் ஹிந்தி எதிர்ப்பு பற்றி எனக்கு தெரிந்த சில கருத்துக்களை இங்கு ஒரு புனைவு வடிவில் அளிக்க முயற்சிக்கிறேன். இப்போது புனைவு ! ஒரு காலத்தில் பரதம்பட்டி என்ற ஒரு கிராமம் இருந்ததாம். அங்கு பல ஆண்டுகள் வரை ஆட்சி செய்து வந்த துரை மகாராஜா ஒரு காலத்தில், அந்த கிராமத்தை ஜனநாயக ...