சென்ற வாரம் முழுதும் தமிழ் கூறும் பதிவுலகம் பரபரப்பாக இருந்தது. பதிவுலகத்தின் வெளிவட்டத்தை மட்டுமே சார்ந்தவன் என்றாலும், "கூட்டமாக இருந்தால் எட்டிப்பார்க்க வேண்டியது ஒவ்வொரு தமிழனின் கடமையும் உரிமையும் ஆகும்" என்பதால் நானும் கொஞ்சம் எட்டிப்பார்த்தேன். தீர்ப்பு அல்லது தீர்வை விடுங்கள், குறைந்த பட்ச கருத்தை சொல்லும் அளவுக்கு கூட, சம்பந்தப் பட்ட பிரச்சனையைப் பற்றிய அறிதல்களும் புரிதல்களும் எனக்கு மிகக் குறைவாக இருந்ததால், "கோட்டுக்கு அந்த பக்கமே" இருந்து விட்டேன். பெண்ணியம், ஆணாதிக்கம், பார்ப்பனியம் என புரிந்து கொள்ள சிக்கலான பல வார்த்தைகளுக்கு இடையே அடிக்கடி உச்சரிக்கப் பட்ட "மன்னிப்பு" என்ற ஒரு வார்த்தை, என்னுள் வேறு சில நினைவுகளை வரவழைத்தது. அந்த நினைவுகளை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். டாக்டர்.வேனி டபுள்யு டயர் (Dr.Wayne W Dyer) என்ற அமெரிக்க எழுத்தாளரைப் பற்றி கேள்விப் பட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அமெரிக்காவில் மிக அதிகமாக விற்பனை செய்யப் பட்ட "ஆளுமை வளர்ச்சி" தொடர்பான புத்தகங்களில் குறிப்பிடத்தக்கதான "Your Erroneous Zon...
கொஞ்சம் மாத்தி யோசி!