ஏற்கனவே நமது பதிவுகளில் விவாதித்தபடி ஒரு பங்கின் ஏற்றத்தாழ்வுகள் பொதுவாக இருவகையாக ஆராயப் படுகின்றன. ஒரு நிறுவனத்தின் அடிப்படை நிதி நிலைமைகளை வைத்து பங்கின் விலையை கணிக்க முயல்வது அடிப்படை ஆராய்ச்சி அல்லது Fundamental Analysis. இன்னொரு வகையான ஆராய்ச்சின் பங்கின் விலைகளின் போக்கினை (Trends) அடிப்படையாக வைத்துக் கொண்டே அந்த பங்கின் வருங்கால போக்கினை அறிய உதவும் தொழிற்நுட்ப வரைபட ஆராய்ச்சி அல்லது Technical Analysis. சென்ற பதிவில் நண்பர்கள் பார்வைக்காக ஒரு வரைபடம் வழங்கப் பட்டிருந்தது. அந்த வரைபடத்தை பற்றிய விரிவான குறிப்புக்கள் ஏதும் வழங்கப் படவில்லை என்று திரு.நெற்குப்பை தும்பி ஐயா குறிப்பிட்டிருந்தார். எனவே அந்த பங்கினை பற்றி விவரிக்கும் போதே டெக்னிகல் அனலிசிஸ் பற்றிய சில விளக்கங்களை இந்த பதிவில் அளிக்கலாம் என்று நினைக்கிறேன். ஏற்கனவே சொன்னபடி ஒரு பங்கின் விலையின் போக்கை வைத்துக் கொண்டே, அந்த நிறுவனத்தில் நிகழும் சில முக்கிய மாற்றங்களை புரிந்து கொள்ள முடியும் என்பதுதான் டெக்னிகல் அனாலிசிசின் அடிப்படை. உதாரணமாக, ஒரு நிறுவனத்தில் நிகழும் முக்கிய மாற்றங்கள் வெளியுலகத்திற்கு அறியவருவதற்கு ...
கொஞ்சம் மாத்தி யோசி!