Skip to main content

சில கருத்துப் பிழைகள் - சில காரணங்கள்

நம்மில், பலரும், பள்ளிப் பருவம் வரை மட்டுமே, தமிழ்க் கல்வி பயின்றுள்ளோம். பின்னர், மேற்படிப்பு, தொழிற்கல்வி மற்றும் பணியிடங்களில் (சில சமயங்களில் வாழுமிடம் கூட) பெரும்பாலும், ஆங்கிலத்திலேயே வாழ்ந்து வருகிறோம்.

இதனால், பெரும்பாலான சிந்தனைகள் ஆங்கிலத்திலேயே உள்வாங்கும் (Conception) சூழல் ஏற்படுகிறது. அவ்வாறான சிந்தனைகளை தமிழில் மொழிப் பெயர்ப்பு செய்து வெளியிடும் (பதிவு) பட்சத்தில், அதனை தமிழில் படித்து, ஆங்கிலத்தில் புரிந்து கொண்டால் மட்டுமே, சரியான கருத்து பரிமாற்றம் ஏற்படுகிறது.

ஆனால், அக்கருத்துக்களை, தமிழில் படித்து தமிழிலேயே புரிந்து கொள்ள முயற்சிக்கும் போது, குழப்பங்கள் ஏற்பட்டு, சரியான கருத்து பரிமாற்றம் நிகழாமல் போய் விடுகிறது. இதன் காரணமாகவே, தமிழில் சட்டம், கணக்கியல், மருத்துவம், பொருளாதாரம் போன்ற தொழிற் துறைகளில் சிறந்த தமிழ் எழுத்தாளர்கள் அரிதாகவே காணப் படுகின்றனர்.

இதனை தவிர்க்க, தமிழ் எழுத்தாளர்கள் (குறிப்பாக தொழிற் துறை வல்லுனர்கள்) கூடுமானவரை, தமிழிலே சிந்தித்து, கருத்துக்களை உள்வாங்கி, பின்னர் தமிழில் எழுதும் போது சிறந்த படைப்புகள் உருவாகும். பெருமளவு தமிழரையும் தொழிற் கருத்துகள் சரியான முறையில் சென்றடையும்.

சுஜாதா, தாமோதரன் போன்ற எழுத்தாளர்கள் இவ்விஷயத்தில் முன்னோடிகளாவர்.


தமிழில் சிந்திப்போம்!


சிறந்த படைப்புகளை தமிழில் உருவாக்குவோம்!


தமிழரை சென்றடைவோம்!

Comments

Easwar said…
IDHU ORU NALLA MUYARCHI. VAZTHUKKAL.

Popular posts from this blog

இந்தியா தாக்குப் பிடிக்குமா?

இன்றைய உலகப் பொருளாதாரத் தேக்க நிலையில், இந்தியாவால் தாக்குப் பிடிக்க முடியுமா என்பது பற்றி பார்ப்போம். சமீபத்தில் வெளியிடப் பட்ட மத்திய புள்ளியல் (மத்திய அரசு) நிறுவனத்தின் மதிப்பீட்டின் படி இந்தியப் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் 7.1 சதவீதம் வளர்ச்சியுறும் என்று தெரிகிறது. இது சரியாக இருக்கும் பட்சத்தில் உலகிலேயே இரண்டாவதாக வேகமாக வளர்ச்சியுறும் நாடு இந்தியாவாகத்தான் இருக்கும் (சீனா முதலாவது). சென்ற ஆண்டில் ஒன்பது சதவீதம் வளர்ச்சி பெற்றிருந்த இந்தியப் பொருளாதாரம் செப்டம்பர் 2008 வரையிலான முதல் அரையாண்டில் 7.80% வளர்ச்சிப் பெற்றிருந்தது. பொதுவாகவே பண்டிகைக் காலமாக கருதப் படுகிற இரண்டாவது அரையாண்டே தொழிற் துறையில் அதிக வளர்ச்சியைக் காட்டும் என்றாலும் இந்த முறை இந்தியத் தொழில் துறை பெரும் தேக்க நிலையில் இருந்து வந்திருக்கிறது என்பது கவனிக்கத் தக்கது. இந்திய தொழிற் வளர்ச்சி கடந்த இரு மாதங்களாக மிகவும் குறைந்து காணப் படுவதாலும் ஏற்றுமதியோ இறங்குமுகத்தில் இருப்பதாலும் இந்திய அரசாங்கம், மார்ச் 2009 வரையிலான நிதி ஆண்டின் இரண்டாவது அரையாண்டில் நமது பொருளாதாரம் குறைந்த வளர்ச்சியே (6.30%) இரு...

நரேந்திர மோடி நாடாளலாமா?

சமீபத்தில் நடைபெற்ற குஜராத் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கார்பொரட் கனவான்களான அனில் அம்பானி மற்றும் சுனில் மிட்டல் ஆகியோர் நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர். காரியம் ஆக வேண்டும் என்றால் என்ன வேண்டுமானாலும் பேசக் கூடியவர்கள் நமது தொழில் அதிபர்கள் என்பதனால் அவர்களின் பேச்சுக்கு அவ்வளவு மரியாதை கொடுக்க வேண்டியதில்லை. இவர்களைப் போன்றவர்களால் ஏற்கனவே நாடாள தகுதி பெற்றவர் என்று கூறப் பட்ட சந்திர பாபு நாயுடு அடுத்த சட்ட மன்ற தேர்தலில் தனது முதலமைச்சர் பதவியினையே இழந்தது குறிப்பிடத் தக்கது. தொழில் அதிபர்கள் பேச்சினை பா.ஜ.கவே ஏற்றுக் கொள்ளாத பட்சத்திலும் கூட, தீவிரவாதத்தை ஒடுக்கி குஜராத் மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்து சென்றவர் நரேந்திர மோடி என்றும் அவர் இந்தியாவின் பிரதமர் ஆவது நாட்டுக்கு நல்லது என்றும் பலராலும் கருதப் படுவதால், நரேந்திர மோடியின் செயல்பாடு பற்றியும் அவர் பிரதமர் ஆகலாமா என்பது பற்றியும் பிரதமராக அவர் ஏற்றுக் கொள்ளப் படுவாரா என்பதைப் பற்றியும் இங்கு பார்ப்போம். இன்றைய தேதியில் இந்தியாவிலேயே மிகுந்த முன்னேற்றம் அடைந்த ஒரு மாநிலமாக குஜரா...

முத்தான மூன்று பாதைகளில் முதல் பாதை - புத்திசாலிகளின் பாதை

பங்குச்சந்தையில் வெற்றிகரமாக பயணிக்க மூன்று பாதைகள் உண்டு. அந்த மூன்று பாதைகளில் முதல் பாதையை பற்றிய மேலோட்டமான விபரங்கள் இங்கே வழங்கப் படுகின்றன. வாரன் பபெட், டெம்ப்லெட்டான் போன்ற, மிகப் பெரிய சாதனை படைத்த புத்திசாலிகள் தேர்ந்தெடுத்த பாதை இது. இந்த பாதையில் பயணம் செய்ய வேண்டுமானால், பங்குசந்தைகள் பற்றி மட்டுமல்ல பங்கினை சார்ந்த நிறுவனத்தைப் பற்றியும் அதன் துறையைப் பற்றியும் ஓரளவுக்கு நல்ல ஞானம் இருக்க வேண்டும். வாரன் பபெட் ஒரு முறை தனது பங்கு தேர்வைப் பற்றி சொல்லும் போது, தான் ஒரு பங்கில் முதலீடு செய்யும் போது, அந்த நிறுவனத்தின் தொழிலில் முதலீடு செய்வது போல உணர்வதாக கூறினார். உதாரணத்திற்கு நீங்கள் ஒரு இரண்டு சக்கர வாகன நிறுவன பங்கில் (உதாரணமாக ஹீரோ ஹோண்டா) முதலீடு செய்ய விரும்புகிறீர்கள் என்றால், அந்த நிறுவனத்தின் செயல்பாட்டில், லாப நஷ்டங்களில் நீங்களும் பங்கு பெறுகிறீர்கள் என்று பொருள். ஒரு நிறுவனத்தின் உரிமைதாரர் நீங்கள் ஆக வேண்டுமானால், அந்த நிறுவனத்தின் பலங்கள் மற்றும் பலவீனங்கள், வாகனத்துறையில் தற்போது உள்ள சாதக பாதகங்கள், அந்த நிறுவனத்திற்கான தனித்துவ மகிமைகள் ஆகியவற்றை பற்றிய...