Skip to main content

எனது மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய அரசியல் பெருந்தலைவர்களே! உங்களுக்கு ஓர் கடிதம்.

வணக்கம். உங்களில் சிலருக்கு வழங்கப் படும் உயர்மட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை (Z+ வகை) , தனது சாலையோர பயணங்களின் போது, கூர்ந்து கவனித்த ஒரு பொது ஜனம் நான்.

உங்கள் வீடுகளை சுற்றி திரும்பிய திசையெல்லாம் உள்ள பாதுகாப்பு வளையங்கள் எத்தனை?. அங்கே நவீன ஆயுதங்களைத் தாங்கிய உடல் துடிப்பான போலீஸ் வீரர்கள் எத்தனை பேர்? இது நாடா அல்லது போர்க்களமா என்று சந்தேகப் பட வைக்கிற பல மணல்மூட்டை மேடுகள் கூட உங்கள் வீட்டை ஒட்டிய சாலைகளில் வைக்கப் பட்டுள்ளது அல்லவா? போலீஸ் கவச வாகனங்கள் சுற்றிலும் நிறுத்தப் பட்டு , அதில் ஏராளமான போலீசார்கள் 24 மணி நேரமும் உங்களை பாதுகாக்கிறார்கள்.

அது மட்டுமல்ல, உங்கள் பிள்ளைகள் சினிமா நட்சத்திரங்களை அருகே அமர்த்திக் கொண்டு, மாலை நேர விருந்துகளுக்கு (சுயமாக ஒட்டி) செல்லும் செல்லும் போது கூட, முன்னேயும் பின்னேயும் எத்தனை போலீஸ் வாகனங்கள்? இத்தனை பாதுகாப்பு போதாதென்று, பல வண்டிகளில் கூடவே செல்லும் தொண்டர் படை ஊர்வலம் அதுவும் சாலையில் செல்லும் என்னை போன்ற மற்ற வாகன ஓட்டிகளை மிரட்டிக் கொண்டு செல்வது கூட உண்டு.

அதே சமயம் பொதுமக்கள் லட்சக் கணக்கில் தினந்தோறும் வந்து செல்லும் மும்பை சி.எஸ்.டி ரயில் நிலையம் போன்ற பகுதிகளில் ஒன்றிரண்டு போலீஸ்காரர்கள் (அதுவும் லத்தி மட்டுமே துணை கொண்டு) எங்களின் பாதுகாப்பிற்கு துணை சேர்க்கிறார்கள். கடைசியாக மும்பையில் தாக்குதல் ஏற்பட்ட போது, இந்த பரிதாபத்திற்குரிய போலீஸ்காரர்கள் தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ளவே மிகவும் தடுமாறி விட்டனர். ஏன் இந்த வேறுபாடு? எல்லா உயிருமே போனால் திரும்பி வராததுதானே?

என்னை போன்று, எளிமையாக சுதந்திரமாக வாழ ஆசைப்பட்டு தன்னிச்சையாக வாழும் பொது மக்களுக்கு மத்தியில், வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற தீராத வேட்கை கொண்டு இவ்வளவு உயரத்திற்கு வந்துள்ள உங்களது உயிருக்கு அதிக விலை உண்டு என்பதை நான் மறுக்க வில்லை. நீங்கள் இன்னும் பலகாலம் வாழ்ந்து இந்த நாட்டு மக்களுக்கு பல சேவைகள் புரிய வேண்டும் என்பது கூட என் ஆசைதான். மேலும் உங்கள் உயிருக்கு பல தீவிரவாத அச்சுறுத்தல்களும் உண்டுதான். எனவே, உங்கள் பாதுகாப்பைக் குறைத்துக் கொண்டு எங்களுக்கு அதிக பாதுகாப்பு கொடுங்கள் என்று நான் கேட்க வில்லை.

ஆனால், உங்களை விட்டால் நாங்கள் யாரிடம் இது குறித்து முறையிட முடியும்? பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், உங்கள் பேச்சை மட்டுமே அரசு இயந்திரம் கேட்கிறது. என்னை போன்றவர்களிடம் வாக்கினை மட்டுமே விரும்பிக் கேட்கும் நீங்கள் எங்கள் கருத்துகளையும் கவலைகளையும் ஏன் கொஞ்சமாவது அக்கறையுடன் கேட்கக் கூடாது? எங்களுக்காக நீங்கள் ஏன் அரசு இயந்திரத்திற்கு அனைத்து மக்களுக்கும் உரிய சிறந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தரச சொல்லி உத்தரவிடக் கூடாது? இதற்கு தேவையான பண வசதி, மனித வளங்கள் மற்றும் அறிவியல் தொழிற் நுட்பம் அனைத்தும் இந்தியாவில் உண்டு என்பதை நீங்களும் அறிவீர்கள். இல்லாதது "செய்து முடிப்போம்" என்ற மனம் மட்டும்தான்.

பாதுகாப்பு விஷயத்தில் நீங்கள் உடனடியாக செயல்பட தவறினால், நீங்கள் மீண்டும் மீண்டும் ஆட்சிக்கு வர உதவும் தேர்தலுக்கு அடிப்படையான ஜனநாயகம் எங்களோடு சேர்ந்து மடிந்து போய் விடும். சொல்லப் போனால், இதே போல தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்துக் கொண்டே போய் வாக்கு அளிக்க இந்தியர் ஒருவர் கூட உயிரோடு இல்லாத அவல நிலை கூட ஏற்பட்டு விடும் ஆபத்து உள்ளது. அப்போது நீங்கள் பிணங்களுக்கு மத்தியில் பேயாட்சிதான் செய்ய முடியும் (இப்போது மட்டும் வேறு ஆட்சி நடக்கிறதா என்று கேட்டு விடாதீர்கள்?) எங்களுக்காக இல்லாவிடிலும் உங்களுக்காகவாவது பொது மக்களுக்கான பாதுகாப்பை அதிகரியுங்கள்.

நன்றி

மீண்டும் வணக்கத்துடன்

Comments

கபீஷ் said…
ஐ! ரொம்ப நல்லாருக்கு!
Maximum India said…
அன்புள்ள கபீஷ்

பின்னூட்டத்திற்கு நன்றி
Maximum India said…
viswanarayan commented on your story 'அரசியல் பெருந்தலைவர்களே! உங்களுக்கு ஓர் கடிதம்'

'நல்லா கேட்டீங்க‌'

Here is the link to the story: http://www.tamilish.com/story/16492

Thank your for using Tamilish!

- The Tamilish Team
Maximum India said…
viswanarayan commented on your story 'அரசியல் பெருந்தலைவர்களே! உங்களுக்கு ஓர் கடிதம்'

'நல்லா கேட்டீங்க‌'

Here is the link to the story: http://www.tamilish.com/story/16492

Thank your for using Tamilish!

- The Tamilish Team
Maximum India said…
அன்புள்ள vishwanarayan

கருத்துக்கு நன்றி
Anonymous said…
அட நல்லா இருக்கே ! இந்த சங்கு எங்கே கிடைத்தது? பரவால்லே நல்லாவே ஊதறீங்க.அதாவது... நாங்க என்னையா பண்றது இதுக்கெல்லாம் ? ஒரு பதவிய புடிககிறது எவ்ளோ கஷ்டம் தெரியுமா .எத்தன பேர அடிச்சு .. பொய் சொல்லி.. ஊர ஏமாத்தி..காச காப்பாத்தி..இந்த பதவிய வாங்கறது ஐ எ எஸ் விட கஷ்டம்பா . என்ன எந்த தீவிரவாதியும் சுடமாட்டான் . நாங்க பண்ற பிரச்னைல பொது மக்கள் எங்கள போட்டு தள்ளாம இருந்த சர்தான். எப்பயாவது ஒரு எலெக்ஷன் ல ஓட்டு .போட்டுட்டு கேக்கேறது பார் கேள்விய ? ஆட்சி நா சும்மாவா ? தம்பி ஒன்னு நல்லா புரிஞ்சுகோ.அப்போல்லாம் Govt of the people..for the people.. by the people.. இப்போ govt "off the people". "buy the people". "far from the people". புரியுதா ?
Maximum India said…
அன்புள்ள பொதுஜனம்

யாருங்க நீங்க? புதுசா போட்டியா முளச்சிரிங்கீங்க?

கமெண்ட் சூப்பர் போங்க. அதுவும்

//தம்பி ஒன்னு நல்லா புரிஞ்சுகோ.அப்போல்லாம் Govt of the people..for the people.. by the people.. இப்போ govt "off the people". "buy the people". "far from the people". புரியுதா ?//

இது அருமையிலும் அருமை.

நன்றி
எல்லாம் அவுங்க வீட்டு பொண்டுகளுக்கு வேலைக்கு. எந்த வேலை எண்டு கேக்கப் படாது.
Maximum India said…
அன்புள்ள ஆட்காட்டி

//எந்த வேலை எண்டு கேக்கப் படாது.//

கண்டிப்பா கேட்க மாட்டேன்.

பின்னூட்டத்திற்கு நன்றி
Maximum India said…
அன்புள்ள டோண்டு ராகவன் ஐயா!

உங்களது பின்னூட்டத்திற்கும் அருமையான விளக்கத்திற்கும் நன்றி.
KARTHIK said…
// அப்போது நீங்கள் பிணங்களுக்கு மத்தியில் பேயாட்சிதான் செய்ய முடியும்.//

இப்பையும் அதுதான் நடக்குது

//அப்போல்லாம் Govt of the people..for the people.. by the people.. இப்போ govt "off the people". "buy the people". "far from the people". புரியுதா ? //

Mr.பொதுஜனம் கலகிட்டீங்கபோங்க
Maximum India said…
அன்புள்ள கார்த்திக்

பின்னூட்டத்திற்கு நன்றி

//இப்பையும் அதுதான் நடக்குது //

//Mr.பொதுஜனம் கலகிட்டீங்கபோங்க //

நானும் வழி மொழிகிறேன்