Skip to main content

எடை குறைய வேண்டுமா?

உடற்பயிற்சி செய்யாமல், சாப்பாடு அளவை குறைக்காமல், கண்ட கண்ட மருந்துகளை சாப்பிடாமல், சிறப்பு வைத்தியம் என்று காசைக் கரைக்காமலேயே மிகப் பெரிய அளவில் எடையை குறைக்க ஒரு அருமையான யோசனை இங்கே!



மேலே உள்ள படி தலைகீழாக எடை பாருங்கள் போதும். எடை கன்னாபின்னாவென்று குறைந்து காணப் படும்.

இந்த யோசனை இத்தனை நாளாக தெரியாமல் போயிற்றே என்கிறீர்களா?

நன்றி!

Comments

ஹா ஹா ஹா

வாங்க தல!
முதல் மொக்கை பதிவுடம் எங்கள் மொக்கை குருப்பில் ஐக்கியமாகுங்க!
Maximum India said…
நன்றி வால்பையன்

//வாங்க தல!
முதல் மொக்கை பதிவுடம் எங்கள் மொக்கை குருப்பில் ஐக்கியமாகுங்க!//

இதுக்குப் பேருதான் மொக்கையா?

இனிமேல கலக்கிடலாம் குருவே!

:-)
ஏப்ரல் மாதம் உங்களுக்கு இன்னும் முடியவில்லையா?

நன்றாக ஏமாந்தேன்.

வாழ்க வளமுடன்,
வேலன்.
Maximum India said…
அன்புள்ள வேலன்

//ஏப்ரல் மாதம் உங்களுக்கு இன்னும் முடியவில்லையா?

நன்றாக ஏமாந்தேன்.//

இந்த பதிவு யாரையும் ஏமாற்றுவதற்காக அல்ல. நான் மிகவும் ரசித்த ஒரு நகைச்சுவையை நமது பதிவுலக நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள மட்டுமே. :-)

//வாழ்க வளமுடன்,
வேலன்.//

நன்றி வேலன்! மீண்டும் சந்திப்போம். :-)
இப்படி பார்த்தாலும் எடை பார்க்கும் மிஷினின் எடை அதிகமாக இருந்தால் என்ன செய்வது?? :-)
Joe said…
அடடடா, தாங்க முடியலேடா சாமி!
Maximum India said…
நன்றி வடுவூர் குமார்

//இப்படி பார்த்தாலும் எடை பார்க்கும் மிஷினின் எடை அதிகமாக இருந்தால் என்ன செய்வது?? :-)//

கவலைப் படாதீர்கள்! ஒரு ரூம் போட்டு யோசிப்போம்!

:-)
Maximum India said…
நன்றி ஜோ!
Maximum India said…
நன்றி கார்த்திக்!
ஹா! ஹா!
ஒவ்வொரு மருத்துவமனையிலும் இப்படத்தை போட வேண்டும் எனச்சட்டம் இயற்றலாமா?
Maximum India said…
நன்றி டாக்டர். முருகானந்தம்!

//ஒவ்வொரு மருத்துவமனையிலும் இப்படத்தை போட வேண்டும் எனச்சட்டம் இயற்றலாமா?//

இது கூட நல்லாத்தான் இருக்கு!
பிளஸ் டூ மாணவி நேரமில்லாமல் பாத்ரூமில் படிப்பது போல் தோன்றியது எனக்கு. இருந்தாலும் புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

Popular posts from this blog

NHPC நிறுவன பங்கு வெளியீடு (IPO) - முதலீடு செய்யலாமா?

வெகு நாட்களுக்கு பிறகு ஒரு அரசு நிறுவனத்தின் அதுவும் ஒரு மினி-ரத்னா தகுதி கொண்ட ஒரு பெரிய நிறுவனத்தின் பங்குகள் சந்தையில் புதிதாக வெளியிடப் பட உள்ளன. இந்த நிறுவனத்தைப் பற்றியும் ]பங்கின் விலை நிர்ணயம் பற்றியும் சில தகவல்கள் பகிர்தலுக்காக இங்கே. NHPC அதாவது தேசிய நீர்மின் உற்பத்தி நிறுவனம் 1975 ஆம் ஆண்டு நாட்டின் நீர்சக்தியை திறம்பட உபயோகிப்பதற்கான நோக்கத்துடன் உருவாக்கப் பட்டது. இந்த நிறுவனம் இது வரை 13 மின் உற்பத்தி நிலையங்களை அமைத்து சுமார் 5100 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி திறன் பெற்றுள்ளது. தற்போது 11 மின் உற்பத்தி நிலையங்களை புதிதாக அமைத்து வருவதன் மூலம் இந்த நிறுவனம் இன்னும் சில ஆண்டுகளில் சுமார் 4600 மெகாவாட் அளவுக்கு கூடுதலாக மின் உற்பத்தி திறனை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்க படுகிறது. இந்த பதினொரு மின் நிலையங்களில் ஏழு நிலையங்களின் மூலம் மட்டும் சுமார் 3240 மெகாவாட் அளவுக்கான மின்சாரம் பெப்ரவரி 2011 ஆம் ஆண்டுக்குள் உற்பத்தி செய்ய முடியும் என்றும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிறுவனம் இப்போது சுமார் 168 கோடி பங்குகளை ஏலக்கணக்கில் (BOOK BUILDING) சந்தையில் வெளியிடுகி...

இங்கும் அங்கும் பாதை உண்டு. இதில் நீ எந்த பக்கம்?

சென்ற வாரம் 8350 என்ற எதிர்ப்பு நிலையை தாண்டிய போதும், நிப்டியால் முழுமையான வெற்றியை பெற முடிய வில்லை. 8350 என்ற நிலையின் அருகிலேயே இன்னும் நிலை பெற்றுள்ளது. உலக சந்தைகளின் போக்கினையொட்டி இந்த வாரம் 8350 என்ற எதிர்ப்பு நிலையை முழுமையாக முறியடிக்கின்றதா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும். வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். நன்றி.

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...