Skip to main content

Posts

தொங்கும் மனிதன்

இந்த வாரம் பங்கு சந்தையில் ஒரு சிறப்பான முன்னேற்றத்தை காண முடிந்தது. பணவீக்கம் முன்னெப்போதும் இல்லாத அளவில் வீழ்ந்ததும், உற்பத்தி குறியீட்டில் ஏற்பட்ட தாழ்ச்சியும் இந்திய மைய வங்கி வட்டி வீதத்தை மேலும் குறைக்கலாம் என்ற நம்பிக்கையை சந்தையில் ஏற்படுத்தியது இந்த முன்னேற்றத்திற்கான முக்கிய காரணமாகும். மேலும் நம்பிக்கை தரும் விதத்திலான அமெரிக்க பொருளாதார தகவல் வெளியீடுகளும் அதன் தொடர்ச்சியாக சர்வதேச சந்தைகளில் காணப்பட்ட ஏற்றமும் இந்திய பங்கு சந்தைகளை புதிய உச்சத்திற்கு இட்டு சென்றன.   பங்கு வணிகர்களின் தற்போதைய மனநிலையின் அடிப்படையில் சந்தையில் காளையின் ஆதிக்கமே தொடர அதிக வாய்ப்பு இருந்தாலும், கடைசி வெள்ளிக்கிழமை நிப்டி வரைபடத்தில் உருவான "தொங்கும் மனிதன்" (HANGING MAN) அமைப்பு ஒரு எச்சரிக்கை மணியை அடித்துள்ளது. வரும் வாரத்தில் நிப்டி ஒரு புதிய உச்சத்தை அடைய முடியாத பட்சத்தில் பங்கு சந்தை அதிக விற்பனையை சந்திக்க வாய்ப்புள்ளது. நன்றி.

இங்கும் அங்கும் பாதை உண்டு. இதில் நீ எந்த பக்கம்?

சென்ற வாரம் 8350 என்ற எதிர்ப்பு நிலையை தாண்டிய போதும், நிப்டியால் முழுமையான வெற்றியை பெற முடிய வில்லை. 8350 என்ற நிலையின் அருகிலேயே இன்னும் நிலை பெற்றுள்ளது. உலக சந்தைகளின் போக்கினையொட்டி இந்த வாரம் 8350 என்ற எதிர்ப்பு நிலையை முழுமையாக முறியடிக்கின்றதா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும். வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். நன்றி.

வரும் வாரம் பங்கு சந்தை எப்படி இருக்கும்?

வரும் வாரம் நிஃப்டி 8350 என்ற நிலையில் ஒரு முக்கியமான எதிர்ப்பு நிலையை (Resistance ) எதிர் கொள்ள வேண்டியிருக்கும். அதை எளிதாக கடக்கும் பட்சத்தில் வரும் வாரத்தில் பங்கு சந்தை ஏற்றமான நிலையை காண வாய்ப்புக்கள் உள்ளன. வரும் வாரம் சிறக்க வாழ்த்துக்கள். 

கடன். கவனம் தேவை!

இது கலியுகம் இல்லை. ஒரு கடன் யுகம். சாமான்யன் முதல் சகல வசதி கொண்டவர் வரை கடனாக வாங்கித் தள்ளி கொண்டுள்ளனர். அரசாங்கங்கள் கூட இன்று கடன் சுமையில் தத்தளித்துக் கொண்டுள்ளன. இன்றைய நிலையில் பெரும்பாலான அரசாங்கங்கள் (இந்தியா உட்பட) புதிது புதிதாக கடன் வாங்கித்தான் வட்டியை கட்டிக் கொண்டிருக்கின்றன. சமீபத்தில் கடன் படுத்தும் பாடு பற்றிய ஒரு சுவாரஸ்யமான கட்டுரை படித்தேன். அதன் இணைப்பு கீழே! http://www.streettalklive.com/daily-x-change/1279-debt-driving-the-economy-since-1980.html இந்த கலியுகம் மன்னிக்கவும் கடன் யுகத்திலிருந்து நம்மைக் காப்பாற்ற எம்பெருமான்தான் இன்னுமொருமுறை அவதாரம் எடுக்க வேண்டும். நன்றி!

வேண்டாமே ஹீரோயிசம்!

சட்டிஸ்கர் மாநிலத்தில் மாவட்ட ஆட்சியர் கடத்தப் பட்டதை பற்றிய சில தகவல்களை பத்திரிக்கைகளில் படித்தேன். தகுந்த பாதுகாப்பின்றி மாவட்டத்தின் கிராமப் பகுதிகளுக்கு செல்வது ஆபத்தானது என்று காவல் துறை அறிவுறுத்திய பின்னரும், மாவட்ட ஆட்சியர் மாவோயிஸ்ட் பகுதிகளுக்கு முறையான பாதுகாப்பின்றி சென்றததால்தான் இந்த விபரிதம் ஏற்பட்டதாக குறிப்பிடப் பட்டிருந்தது. இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் உண்மையாக இருக்கும் பட்சத்தில், அந்த மாவட்ட ஆட்சியர் கண்டனத்திற்கு உரியவரே. அவர் துணிச்சல் மிகுந்தவராக இருக்கலாம் மேலும் அவருக்கு அவரது உயிர் பெரியதாக இல்லாமல் இருக்கலாம். அரசாங்கம் மாவோயிஸ்ட்டுகளின் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில், அவர் எந்த பாதிப்புமின்றி வெளியே வந்து ஒரு ஹீரோவைப் போல பேட்டியும் கொடுக்கலாம். ஆனால் அவர் கடத்தப் பட்டதன் விலையை அரசாங்கமும் அதன் மூலம் நாடும்தான் கொடுக்க வேண்டும். சட்டத்தின் பிடியில் இருக்கும் மாவோயிஸ்டுகள் விடுதலை மற்றும் திரைக்கு பின்னே கொடுக்கப் படும் பணத்திற்கு யார் பொறுப்பேற்றுக் கொள்ளப் போகிறார்கள்? இதற்கு முந்தைய எல்லா கடத்தல் மற்றும் பிந்தை...

நேர்ந்து விடப் பட்டவர்கள் - இவர்களும் இந்தியர்களே!

எனது வங்கியில் புதியதாக கணக்கு துவக்க விண்ணப்பித்த ஒரு நடுத்தர வயது பெண்மணி, தனது விண்ணப்பத்தில் தந்தை/கணவர் பெயரை நிரப்ப வில்லை. ஏன் நிரப்ப வில்லை என்ற என் கேள்விக்கு அந்த பெண்ணிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. பொதுவாகவே கல்வியறிவு மிகவும் குறைந்த வட கர்நாடக பகுதி என்பதால், அவரது விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய உதவி செய்த நபரை அழைத்து, கணவர் பெயரை நிரப்பும் படி அறிவுறுத்தினேன், . அந்த பெண்ணிற்கு இன்னும் திருமணமாக வில்லை என்று அந்த நபர் கூறினார். அதனால் என்ன, அவரது தந்தை பெயரை நிரப்புங்கள் என்று சற்று எரிச்சலுடன் கூறினேன். அவருக்கு தந்தையும் இல்லை என்றார் அவர். மேலும் எரிச்சலான நான் தந்தையை கேட்க வில்லை, தந்தையின் பெயரைத்தான் கேட்கிறேன் என்று கூறினேன். அதற்கு அவர், அந்த பெண்மணியின் பட்டப் பெயரை கவனிக்க வில்லையா என்று கேட்டார். அதற்கென்ன என்று நான் திருப்பிக் கேட்ட போது, அந்த (தேவதாசி) இனத்தை சேர்ந்தவர்கள் கடவுளுக்கு நேர்ந்து விடப் பட்டவர்கள் என்றும் அவர்களுக்கு தந்தையோ கணவரோ கிடையாது என்று கூறினார். இந்த காலத்திலும் இப்படியா என்று ஒரு நிமிடம் திகைப்பின் உச்சிக்கு சென்ற நான் அந்த பெண்ணைப் ப...

டாலர் செல்லா காசாகுமா?

நாகரிக வளர்ச்சியின் காரணமாக பண்டமாற்று வணிக முறை வழக்கொழிந்த பின்னர், பல நூறாண்டு காலமாக தங்கம்தான் பன்னாட்டு வணிகத்தின் அதிமுக்கிய நாணயமாக திகழ்ந்து வந்தது. ஆனால், கடந்த நூற்றாண்டில் தனிப்பெரும் பொருளாதார வல்லரசாக அமெரிக்கா உருவெடுத்த பின்னர், டாலர் பன்னாட்டு வணிகத்தின் முக்கிய நாணயமாக தலையெடுத்தது. நிக்சன் அதிர்ச்சிக்குப் பின்னரும், டாலருக்கு மாற்றான உலக நாணயமாக யூரோ நாணயம் முன்னிறுத்தப் பட்ட பின்னரும் கூட டாலர் தனது முக்கியத்துவத்தை தக்க வைத்துக் கொண்டதுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். ரஷ்யாவின் அரசியல் செல்வாக்கு குறைந்த பின்னர், தனிப்பெரும் ஏகாதிபத்தியமாக அமெரிக்கா உருவெடுத்ததும், இந்தியா, சீனா போன்ற உற்பத்தி நாடுகள் அமெரிக்காவின் நுகர்வோர் கலாச்சாரத்தை பெருமளவில் சார்ந்திருந்ததும், டாலரின் மதிப்பு பெருமளவில் வீழாமல் காப்பாற்றின. சமீபத்திய பொருளாதார வீழ்ச்சிக்கு அதிமுக்கிய காரணம், அளவுக்கதிகமான கடன் பொருளாதாரத்தின் வளர்ச்சி என்றாலும், பொருளாதார மீட்சிக்கு உலக நாடுகள் தேர்ந்தெடுத்த பாதை அதே வீழ்ச்சி பாதையானது துரதிர்ஷ்டவசமான ஒன்றாகும். அரசின் செலவினங்களை குறைத்து கடன் அளவை குறைப்பதற்கு...

பணவீக்க சுழற்சியின் இரண்டாம் பாதி ஆரம்பம்?

ஒரு பொருளாதார வீழ்ச்சிக்கு பின்னே உருவாகும் பணவீக்க சுழற்சியின் முதல் பகுதி எப்பொழுதுமே விரும்பக் கூடியதாகத்தான் இருக்கும். பொருளாதார மந்த நிலையில் இருந்து விடுதலை, அதிகப் படியான பண புழக்கம், அதிக வேலை வாய்ப்புக்கள், ரியல் எஸ்டேட் உயர்வு, தொழிற் வளர்ச்சியில் முன்னேற்றம் என பல வகையிலும் மகிழ்ச்சி தரக்கூடியதாக இருக்கும். அதிகப் படியான விலை அளவுகள் உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகளின் லாபத்தை உயர்த்தும். அரசாங்கத்தின் வரி வசூலும் அதிகமாகும். மக்களிடையே உருவாகும் அதிகப் படியான பணபுழக்கம் ஆட்சியில் இருக்கும் அரசியல்வாதிகளையும் குஷிப் படுத்தும். அதிகப்படியான வேலை வாய்ப்புக்கள் மற்றும் சம்பள உயர்வு நடுத்தர வர்க்கத்தினையும் மகிழ்ச்சிப் படுத்தும். அதே சமயத்தின் பணவீக்க சுழற்சியின் இரண்டாம் பகுதி சற்று கசப்பாகத்தான் இருக்கும். விலைவாசிகள் விண்ணை முட்டும் பட்சத்தில் நடுத்தர வர்க்கத்தின் பட்ஜெட் வெகுவாக பாதிக்க படும். அதிகப் படியான கடன் வட்டி வீதங்கள் உற்பத்தியாளர்களை நஷ்டத்தில் தள்ளும். புதிய முதலீடுகள் குறையும். நாட்டின் பொருளாதாரத்தில் ஒரு மந்த நிலை உருவாகும். இப்போதைய சூழ்நிலையில், மேலோட்டமா...

சந்தை இப்போது ஒரு முக்கிய தருணத்தில்!

தமிழக வாக்காளர்களுக்கு வாழ்த்துக்கள்!

காசுக்கும் இலவசத்துக்கும் தமிtழக வாக்காளர்கள் விலை போவார்கள் என்ற பரவலான ஊடக கணிப்புக்களுக்கு முற்று புள்ளி வைத்து, தமது கண்ணியத்துக்கு முக்கியத்துவம் குடுத்த தமிழக வாக்காளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்! ஜாதி கணக்குகளையும் கூட்டணி கணக்குகளையும் மனதில் நிறுத்தி தேர்தலை சந்தித்தவர்களின் கணக்குகளை முடித்து வைத்ததற்கு இன்னுமொரு வாழ்த்துக்கள்! குடும்ப ஆட்சியை முடித்து வைத்ததற்கும் குறுநில மன்னர்களை வீட்டிற்கு அனுப்பியதற்கும் மீண்டுமொரு வாழ்த்துக்கள்! ஒரு தேர்தலுக்கு ஒரு கூட்டணி என ஜாதி பெயரை சொல்லி வோட்டு கேட்டவர்களுக்கும், தமிழீழ பிரச்சனையில் பஞ்சோந்தியாக நாட்கமாடியவர்களையும் சரியாக இனம் கண்டதற்கும் நல்வாழ்த்துக்கள்! அறுபது சீட்டு கேட்டு அடம் பிடித்தவர்களை ஐந்து சீட்டுடன் அடக்கி வைத்ததற்கும் வாழ்த்துக்கள்! கவர்ச்சியும் காமெடியும் திரையில் (சில சமயங்களில் நேரில்) ரசிப்பதற்கு மட்டுமே. திரை மயக்கம் தேர்தலில் செல்லாது என்று மீண்டுமொரு முறை நிருபித்ததற்கும் வாழ்த்துக்கள்! பண பலம், அதிகார பலம், ரௌடி பலம் அனைத்தையும் அடக்கி அஞ்சா நெஞ்சர்களை அஞ்சா நோஞ்சான்களாக ஆக்கிய தேர்தல்...

ஒழியட்டும் ஊழல் எனும் பயங்கரவாதம்!

உலகின் பல்வேறு பகுதிகளில் காலம் காலமாக பல பயங்கரவாத தாக்குதல்கள் நடந்திருந்தாலும், பயங்கரவாதத்தின் உச்சக்கட்ட தாக்குதலாக கருதப் படுவது, அமெரிக்க இரட்டை கோபுரங்களின் மீது நடந்த விமான தாக்குதல்தான். ஏனென்றால், அதுவரையில் இந்தியா போன்ற வலு குறைந்த நாடுகளை குறி வைத்தே பழக்கப் பட்ட பயங்கரவாதிகள், உலக வல்லரசான அமேரிக்கா மீது குறிவைத்தது பலரையும் வியப்பில் உள்ளாக்கியதுடன், பயங்கரவாதிகளின் வெளிப்படையான தைரியத்தையும் பறை சாற்றியது. இந்தியாவில் ஊழல் புரையோடிப் போனது அனைவரும் ஒப்புக் கொண்ட ஒன்றுதான் என்றாலும், இன்னும் சொல்லப் போனால் இந்திய மக்கள் ஊழலுடன் ஒத்துப் போய் வாழப் பழகி பல ஆண்டுகள் ஆகி விட்டாலும், இரண்டு அலைக்கற்றை ஊழலின் பரிமாணம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சொல்லப் போனால் பல ஊழல் பெருச்சாளிகளையும் கூட அந்த ஊழல் திகைப்பில் ஆழ்த்தியது. ஊழல் பணம் வெளிப்படையாக கைமாறியது, தம்மை யாரும் எதுவும் செய்ய முடியாது என்ற ஊழல்வாதிகளின் அதி தைரியத்தையும் காட்டியது. பயங்கரவாதத்தின் தீமைகளுக்கு சற்றும் குறைவில்லாதது ஊழல் தரும் தேசிய இழப்புக்கள். ஊழல்வாதிகளும் பயங்கரவாதிகளைப் போலவே தண்டிக்கப்...

பணவீக்கமும் விஷக் காய்ச்சலும்!

பரதப்பட்டி ஜனங்களெல்லாம் பாவப் பட்ட ஜனங்களாம். பலதரப் பட்ட வியாதிகளால் அடிக்கடி பாதிக்கப் படுவார்களாம். ஒரு முறை எல்லாரும் ஒண்ணா கூடி இந்த பிரச்சினைக்கு வழி என்னன்னு யோசிச்சாங்களாம். அப்ப வந்த யோசனைப்படி ஒரு டாக்டரை அதுவும் வெளிநாட்டில் படிச்ச டாக்டரை ஊர் தலைவரா போட்டாங்களாம். அவருக்கு துணையா நிறையா படிச்ச டாக்டர்களாக வச்சுகிட்டாங்கலாம். நம்மூரு தலைவரா ஒரு டாக்டர் இருக்காருன்னு, இனிமேல நமக்கு வியாதி தொல்லை இருக்காது நினைச்ச பரதப்பட்டி ஜனங்களோட சந்தோஷம் ரொம்ப நாளைக்கு நீடிக்கலையாம். திடீரென்னு ஒரு விஷக் காய்ச்சல் ஊரெல்லாம் பரவுச்சாம். பரத் பவார் என்கிற ஒரு டாக்டர் சொன்னாராம், காசு அதிகமாக சம்பாதிக்கிறதால ஊரு ஜனங்க எல்லாரும் நிறைய சாப்பிடறாங்க. அதனாலதான் காய்ச்சல் வருதுன்னு. பாரினில படிச்ச இன்னொரு டாக்டர் பதம்பரம் சொன்னாராம், "இது ஒலக பிரச்சினை. எல்லா இடத்திலும்தான் காய்ச்சல் இருக்கு. அங்க எல்லாருக்கும் சரியாப் போனா, நம்மூரிலும் சரியாப் போயிடும்'னு". திட்டம் போடுற படா டாக்டர் பளுவாலியா சொன்னாராம். "நேத்திக்கு நூறு டிகிரி இருந்த காய்ச்சல், இன்னைக்கு ஒரு டிகிரிதான் ...

தந்தியடிக்கும் கலைஞர்!

விலைவாசி ஏற்றம் முதல் ஈழத்தமிழர் இனப்படுகொலை வரை பிரச்சனைகளை கடிதங்கள் மூலமாக கையாண்டு கொண்டிருந்த கலைஞர் ஐயா, இன்று இந்திய மீனவர்கள் இலங்கை படையினரால் படுகொலை செய்யப் படுவதை தடுக்க "தந்தியை " ஆயுதமாக கையில் எடுத்துக் கொண்டிருக்கிறார். எதிரி நாடாக கருதப் படும் பாகிஸ்தான் கூட எல்லை தாண்டி மீன் பிடிக்கும் இந்திய மீனவர்களை சுட்டுத் தள்ளுவதில்லை. நேச நாடாக நேசிக்கப் படும் இலங்கையோ எல்லைக்கு அருகே வரும் இந்திய மீனவர்களைக் கூட விட்டு வைப்பதில்லை. சிறிது காலம் முன்னர் வரை விடுதலை புலிகளுக்கு உதவ வரும் மீனவர்களைத்தான் சுடுகிறார்கள் என்று சப்பைக் கட்டு கட்டியவர்கள் இப்போது என்ன சொல்லப் போகிராரர்கள் என்று தெரிய வில்லை. கலைஞர் ஐயாவிற்கு வருவோம். மொபைல், ஈ மெயில், பாக்ஸ் போன்ற பல நவீன தகவல் தொடர்பு சாதனங்களின் வருகைக்குப் பின்னர், நலிவடைந்து போன தந்தித் துறைக்கு மறு வாழ்வளிக்க இப்போது கலைஞர் ஐயா முடிவு செய்திருக்கிறார் போல தெரிகிறது. மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதி எழுதியே மன்மோகன் சிங் விலைவாசியை கட்டுப் படுத்துவதை போல, கலைஞரும் இனிமேல் தந்தி அடித்தே தமிழினத்தை வாழ வைக்கப் போகிறா...

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

நண்பர்களே! வரும் வருடம் அனைவருக்கும் மிகச்சிறந்த ஆண்டாக அமையட்டும்! அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! நன்றி!

ஒரு அரசியல்வாதியின் புலம்பல் !

இது கலிகாலம். பலரும் பார்த்து பெருமூச்சு விடும் அரசியல்வாதிகளையும் இந்த கலிகாலம் விட்டு வைப்பதில்லை. கர்நாடகத்தில் இப்போது உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த தேர்தலில், ஒரு பெரிய கட்சியின் சார்பில் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் போட்டியிட முனைந்து, பின்னர் போட்டியில் இருந்து விலகி கொண்ட ஒரு உள்ளூர் அரசியல் தலையுடன் பேச இன்று ஒரு வாய்ப்பு கிடைத்தது. வெற்றி பெற அதிக வாய்ப்புள்ள வலிமையான கட்சியில் கிடைத்த வாய்ப்பிலிருந்து ஏன் விலகி கொண்டீர்கள் என்று நான் அவரிடம் வினவினேன். அதற்கு அவர் ஒரு பெரிய புலம்பலை பதிலாக தந்தார். "எங்கே சார்! நாற்பது நாற்பத்தைந்து லட்சங்களை இந்த தேர்தலுக்காக விட வேண்டியிருக்கும். ஆனால் போட்ட முதலை திருப்பி எடுப்பது இப்போதெல்லாம் ரொம்பவே கஷ்டமாகி விட்டது. நூறு நாள் வேலை திட்டத்தில் இப்போதெல்லாம் ஆன்லைன் கிரெடிட் செய்து விடுகிறார்கள். மாவட்ட அளவிலான சிறிய பணிகளுக்காக இப்போதெல்லாம் அதிக பணத்தை ஒதுக்குவதில்லை. பெரிய தொழிலதிபர்கள் பெரிய இடத்தில் நேரடியாக காண்டக்ட் வைத்துக் கொண்டு மொத்த காண்டிராக்ட்களை பெற்றுக் கொள்கிறார்கள். இப்போதெல்லாம் அரசியல் செய்வத...

இந்தியாவின் வண்ணங்களும் ராகுல் காந்தியின் எண்ணங்களும்!

முகரம் பண்டிகையை முன்னிட்டு கர்நாடகத்தின் வடபகுதியில் உள்ள எனது அலுவலகத்தில் இந்த வாரம் பலரும் விடுப்பு எடுத்துக் கொண்டனர். அங்குள்ள ஒரு தமிழ் நண்பரிடம் இது பற்றி விவாதிக்கும் போது, அவருடைய தொழிற்சாலையில் கூட பலரும் விடுப்பு எடுத்துக் கொண்டதாகவும், இந்த பகுதியில் முகரம் வெகு விசேஷமாக கொண்டாடப் படுவதாகவும் கூறினார். முகரத்தை ஒரு இஸ்லாமிய திருநாளாக மட்டுமே அறிந்திருந்த நான், "முஸ்லிம்கள் மட்டும் விடுப்பு எடுத்திருந்தால் கூட பரவாயில்லை, பல இந்து ஊழியர்களும் கூட முகரத்தை முன்னிட்டு விடுப்பு எடுத்துக் கொண்டது ஆச்சரியமாக உள்ளது" என்று அவரிடம் வினவினேன். அதிலும் ஒரு இந்து பெண் ஊழியர், தீபாவளிக்கு ஊருக்கு போவதை விட முகரத்திற்கு சொந்த ஊருக்கு போவது மிகவும் முக்கியம் என்று என்னிடம் விடுமுறைக்காக மன்றாடியது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்ததாக கூறினேன். அதற்கு அவர், இந்த பகுதியில் முகரம் இந்துக்களால் மிக விசேஷமாக கொண்டாடப் படுகிறதாக கூறினார். முகரத்தின் போது தீமிதிப்பது, பூ தேங்காய் பழங்களுடன் மசூதிக்கு சென்று வழி படுவது போன்ற பழக்கங்கள் உண்டு என்று வேறு சில உள்ளூர் நண்பர்களும் க...

பயமா? லாப விற்பனையா?

நீண்ட காலத்திற்கு பின்னர் அந்நிய முதலீட்டாளர்கள் இந்திய பங்கு சந்தையில் சென்ற வாரம் பெருமளவு விற்பனை செய்துள்ளனர். இந்த அதிரடி விற்பனை காரணமாக சென்செக்ஸ் சுமார் 600 புள்ளிகள் வரை சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. உலக அளவில் மிகப் பெரிய ஊழலான 2G விவகாரம் இந்தியாவின் நம்பகத்தன்மையை பெருமளவில் பாதித்துள்ளததால் அந்நிய முதலீட்டாளர்கள் இவ்வாறு விற்பனை செய்கின்றனர் என்று சில பங்கு சந்தை வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் இந்தியா ஒரு ஊழல் தேசம் என்பதையும் அதனால்தான் இங்கு குறுகிய கால லாப வாய்ப்புக்கள் அதிகம் என்பதையும் நன்கு உணர்ந்தே இந்தியாவிற்குள் அந்நிய முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதால், 2G ஊழல் அவர்களுக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்திருக்காது என்பது எனது தனிப்பட்ட கருத்து. அதே சமயத்தில் சிறு நிதி துறையை கட்டுப் படுத்த ஆந்திர அரசு எடுத்த முயற்சியும் தொலை தொடர்பு நிறுவனங்களிடம் இருந்து ஸ்பெக்ட்ரத்தை திரும்பி பெற வேண்டும் என்று எழும்பும் சில கருத்துக்களும் அந்நிய முதலீட்டாளர்கள் மத்தியில் லேசான அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. சீனா தனது வங்கி கையிருப்பு விக...

ஊழலின் ஊற்றுக்க்கண்!

ஓய்வு பெற்ற வங்கி உயர் அதிகாரி ஒருவர் சமீபத்தில் தம்முடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். மாநில அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தும், மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்த போதும் கூட, கல்லூரி கட்டணத்தை செலுத்தும் அளவிற்கு வசதி இல்லாததால், அவர் தனது மருத்துவர் கனவை கைவிட்டு வங்கி வேலையில் சேர நேர்ந்ததாம். கல்வியின் மதிப்பை நன்கு உணர்ந்த அவர், வங்கியில் உயர் பதவிக்கு வந்ததும் கல்விக் கடன்களை, குறிப்பாக வசதி குறைந்தவர்களுக்கு, உணர்வோடு வழங்கி வந்தார். ஆனால் அந்த கடன்களை திருப்பி வசூலிக்க முனைந்த போது அவருக்கு கிடைத்த அனுபவம் அவரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. தவணைகளை விடுங்கள்! கடன் தொகையின் மொத்த அளவு சம்பளம் கிடைக்கும் படியாக வாழ்வில் பெருமளவுக்கு உயர்ந்த மாணவர்கள் கூட கல்விக் கடன்களை திருப்பிச் செலுத்த முனையவில்லை. மாறாக அலட்சியப் படுத்தி உள்ளனர். வயதில் மூத்தவரும் "அந்த கால மனிதருமான" அவரால் இதை ஜீரணிக்கவே முடிய வில்லை. யார் வேண்டுமானாலும் எதில் வேண்டுமானாலும் ஏமாற்றலாம்.ஆனால் வாழ்வின் முதல் படியினையே "ஏமாற்றும் படியாக" எப்படி இவர்களால் ஆரம்பிக்க முடிகிற...

எப்போதும் சந்தோசமாக இருக்க எளிமையான ஏழு வழிகள்!

எப்போதும் சந்தோசமாக இருக்க வேண்டுமா? இதோ பிடியுங்கள் ஏழு டிப்சுகளை! 1. யாரையும் வெறுக்காதீர்கள். 2. எதற்கும் கவலைப் படாதீர்கள்! 3. எளிமையாக இருங்கள்! 4. குறைவாக எதிர்பாருங்கள்! 5. நிறைவாக கொடுங்கள்! 6. நிறைய புன்னகையுங்கள்! 7. அப்புறம், அடிக்கடி இந்த பதிவு வலை பக்கம் வாருங்கள்! நன்றி!