
அமெரிக்காவில் வார இறுதி நாளான வெள்ளிக் கிழமை வங்கிகள் மூடப் பட்டால், திங்கட் கிழமை மீண்டும் திறக்கப் படும் என்ற உத்தரவாதம் இல்லாத நிலை இப்போது காணப் படுகிறது. கடந்த ஆறு வாரங்களாக, தொடர்ச்சியாக ஒவ்வொரு வாரமும் வெள்ளிக் கிழமையானால், அலுவலக நேரம் முடிந்தவுடன், பல அமெரிக்க வங்கிகள் அதிகாரிகளால் கையகப் படுத்தப் பட்டுள்ளன.
கடந்த ஆண்டு (2008) முழுதும் அமெரிக்காவில் மூடப் பட்ட வங்கிகளின் எண்ணிக்கை 25. இந்த ஆண்டில் இன்னும் இரண்டு மாதங்கள் கூட முடிவடையாத நிலையில் மூடப் பட்டுள்ள வங்கிகளின் எண்ணிக்கை 14. இதே வேகத்தில் சென்றால் இந்த ஆண்டு மூடப் படும் அமெரிக்க வங்கிகளின் எண்ணிக்கை செஞ்சுரி அடித்து விடும் என்று பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். சென்ற ஆண்டு 25 வங்கிகள் மூடப் பட்டாலும். அவற்றில் பெரிய வங்கிகள் இரண்டு மட்டுமே.ஆனால் இந்த வருடம் பல பெரிய வங்கிகளே மூடப் படலாம் என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர். ஆக மொத்தத்தில் இந்த வருடம் (பல) வங்கிகளின் (இறுதி) வருடமாகவே இருக்கும் என்று தெரிகிறது.
இவ்வாறு வங்கிகள் மூடப் படுவதின் எதிரொலியை சென்ற வாரம் உலக சந்தைகளில் காண முடிந்தது. அமெரிக்க மற்றும் ஜப்பான் சந்தைகள் பல வருடங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ந்தன. இந்திய சந்தைகள் கூட பெருமளவுக்கு வீழ்ந்தன. குழப்பமான இந்த சூழ்நிலை காரணமாக வரலாறு காணாத அளவிற்கு தங்க விலை உயர்ந்தது.
இது போன்ற வங்கி வீழ்ச்சிகள் அமெரிக்க அரசின் நிதி நிலையில் கடும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. காரணம், ஒரு குறிப்பிட்ட அளவு வரை வைப்பு தொகைகள் அரசு நிறுவனங்களால் உறுதி அளிக்கப் படுகின்றன.இதன் காரணமாக, மூடப் பட்ட வங்கிகளின் வாடிக்கையாளர்களுக்கு அரசு நிறுவனங்களே வைப்புத் தொகையை திருப்பி தர வேண்டியிருக்கிறது. இதனால், டாலர் கரன்சி அச்சடிப்பு அதிகமாகி, உலகம் முழுக்க ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
மொத்தத்தில் உலக பொருளாதார நிலை இப்போதைக்கு திருப்திகரமாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
நன்றி.
6 comments:
நம் ஊரில் பல அடமான கம்பனிகளும், பைனான்ஸ் கம்பனிகளும் மூடி மூடி மக்களுக்கு பழகி விட்டதால் பிரச்னை இல்லை. அங்கே இது புதுசு. ஐயோ பாவம்.
அன்புள்ள பொதுஜனம்
பின்னூட்டத்திற்கு நன்றி
//நம் ஊரில் பல அடமான கம்பனிகளும், பைனான்ஸ் கம்பனிகளும் மூடி மூடி மக்களுக்கு பழகி விட்டதால் பிரச்னை இல்லை. அங்கே இது புதுசு. ஐயோ பாவம்.//
நம்மூர் கோமணாண்டிகளுக்கும் அமெரிக்க "கோட்"டான்களுக்கும் பண விஷயத்தில் அதிக வித்தியாசம் இல்லை என்று இப்போது நிருபனமாகி உள்ளது. :)
நன்றி
மூர்
// இதே வேகத்தில் சென்றால் இந்த ஆண்டு மூடப் படும் அமெரிக்க வங்கிகளின் எண்ணிக்கை செஞ்சுரி அடித்து விடும் என்று பொருளாதார வல்லுனர்கள்.//
அப்போ இதுக்கு முடிவே கிடையாதா.
இவனுங்க இழுத்து சாத்த சாத்த தங்கம் விலை வேற மேல போயிகிட்டே இருக்குமே.டாலர் வேற சகட்டு மேனிக்கு அடிச்சுத்தல்லுவானுங்க.
என்னமோ நடக்குரது நடக்கட்டும்.
அன்புள்ள கார்த்திக்
பின்னூட்டத்திற்கு நன்றி
//இவனுங்க இழுத்து சாத்த சாத்த தங்கம் விலை வேற மேல போயிகிட்டே இருக்குமே.டாலர் வேற சகட்டு மேனிக்கு அடிச்சுத்தல்லுவானுங்க.//
நீங்கள் சொல்வது உண்மைதான். இந்த நிலை தொடர்ந்தால் இதுவரை கொஞ்சம் தாக்குப்பிடித்த இதர உலக பொருளாதாரங்களும் (இந்தியா உட்பட) இனிமேல் கடுமையாக பாதிக்கப் படும்.
//என்னமோ நடக்குரது நடக்கட்டும்//
ஆம். இந்த மனநிலை இப்போதைக்கு எல்லாருக்கும் தேவைப் படுகிறது.
அத்ற்குள் கொஞ்சம்தங்கம் விலை இறங்கி எனக்கு கை கொடுத்தால் பரவாயில்லை, அதன் பிறகு அமெரிக்கா எப்படி நாசமாய் போனாலும் பரவாயில்லை, இல்லையேல் என் டவுசர் அவ்வளவு தான்.
அன்புள்ள வால்பையன்
பின்னூட்டத்திற்கு நன்றி
//அத்ற்குள் கொஞ்சம்தங்கம் விலை இறங்கி எனக்கு கை கொடுத்தால் பரவாயில்லை, அதன் பிறகு அமெரிக்கா எப்படி நாசமாய் போனாலும் பரவாயில்லை, இல்லையேல் என் டவுசர் அவ்வளவு தான்//
அமெரிக்க பொருளாதாரத்தில் கொஞ்சம் தெளிவு ஏற்பட்டால், கச்சா எண்ணெய்க்கு ஏற்பட்ட கதிதான் தங்கத்திற்கும்.ஆனால், அமெரிக்காதான் சாண் ஏறினால் முழ சறுக்கம் என்ற நிலையில் உள்ளதே? :)
Post a Comment