நாகரிக வளர்ச்சியின் காரணமாக பண்டமாற்று வணிக முறை வழக்கொழிந்த பின்னர், பல நூறாண்டு காலமாக தங்கம்தான் பன்னாட்டு வணிகத்தின் அதிமுக்கிய நாணயமாக திகழ்ந்து வந்தது. ஆனால், கடந்த நூற்றாண்டில் தனிப்பெரும் பொருளாதார வல்லரசாக அமெரிக்கா உருவெடுத்த பின்னர், டாலர் பன்னாட்டு வணிகத்தின் முக்கிய நாணயமாக தலையெடுத்தது. நிக்சன் அதிர்ச்சிக்குப் பின்னரும், டாலருக்கு மாற்றான உலக நாணயமாக யூரோ நாணயம் முன்னிறுத்தப் பட்ட பின்னரும் கூட டாலர் தனது முக்கியத்துவத்தை தக்க வைத்துக் கொண்டதுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். ரஷ்யாவின் அரசியல் செல்வாக்கு குறைந்த பின்னர், தனிப்பெரும் ஏகாதிபத்தியமாக அமெரிக்கா உருவெடுத்ததும், இந்தியா, சீனா போன்ற உற்பத்தி நாடுகள் அமெரிக்காவின் நுகர்வோர் கலாச்சாரத்தை பெருமளவில் சார்ந்திருந்ததும், டாலரின் மதிப்பு பெருமளவில் வீழாமல் காப்பாற்றின. சமீபத்திய பொருளாதார வீழ்ச்சிக்கு அதிமுக்கிய காரணம், அளவுக்கதிகமான கடன் பொருளாதாரத்தின் வளர்ச்சி என்றாலும், பொருளாதார மீட்சிக்கு உலக நாடுகள் தேர்ந்தெடுத்த பாதை அதே வீழ்ச்சி பாதையானது துரதிர்ஷ்டவசமான ஒன்றாகும். அரசின் செலவினங்களை குறைத்து கடன் அளவை குறைப்பதற்கு...
கொஞ்சம் மாத்தி யோசி!