பங்கு சந்தையில் பல வாரங்களுக்குப் பிறகு ஒரு பெரியதொரு வீழ்ச்சி ஏற்பட்டு உள்ளது. சந்தைகளில் ஏராளமான கரன்சிகளை வாரி இறைத்து உலக நாடுகளின் அரசாங்கங்கள் கொண்டு வர விரும்பும் பொருளாதார மீட்சிப் பாதையில் ஏராளமான மேடுபள்ளங்களை சந்திக்க வேண்டியும் இருக்கலாம் என்ற கசப்பான உண்மையை சந்தைகள் புரிந்து கொண்டதே இந்த வீழ்ச்சிக்கான முக்கிய காரணம் என்று நினைக்கிறேன். இன்னும் சற்று விரிவாக இங்கே பார்ப்போம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவில் தொடங்கிய "நிதிச் சிக்கல்" பூகம்பம் பொருளாதார சுனாமியாக மாறி உலகெங்கும் ஆட்டிப் படைத்தது. இந்த சிக்கலில் இருந்து மீள "Keynes" முறையை பின்பற்றலாம் உலக நாடுகளின் அரசாங்கங்கள் முடிவெடுத்தன. அதாவது தனிநபர்கள் செலவு செய்ய தயங்கும் போது, அரசாங்கம் அதிகமாக செலவு செய்து பொருளாதாரத்தில் ஒரு கிளர்ச்சியை உருவாக்குவது. அரசாங்கம் செலவு செய்ய வேண்டுமென்றால், ஒன்று கடன் வாங்க வேண்டும் அல்லது புதியதாக நோட்டுக்களை அச்சடிக்க வேண்டும். இரண்டு வேலைகளையும் அழகாக செய்த அரசாங்கங்கள் அந்த பணத்தை கொண்டு ஏராளமான வரி மற்றும் மான்ய சலூகைகளை வழங்கின. உதாரணத்திற்கு ...
கொஞ்சம் மாத்தி யோசி!