Skip to main content

Posts

Showing posts from September, 2009

பங்குச்சந்தை வெற்றிப்பயணம் - காளை-கரடி மனநிலைகள்

ஒரு பங்கினை ஒருவர் வாங்க அல்லது விற்க விரும்புவதற்கான காரணங்களின் அடிப்படையிலேயே சந்தையின் போக்கினை அறிந்து கொள்ள முடியும். காளை ஓட்டத்திற்கு (Bull Run) ஐந்து நிலைகளும், கரடி ஓட்டத்திற்கு (Bear Run) மூன்று நிலைகளும் (Phases) உண்டு. இந்த ஓட்டங்களை துவக்கத்திலேயே சரியாக புரிந்து கொண்டால் சந்தையில் பெரிய அளவில் வெற்றி பெற முடியும். இந்த வெற்றி ரகசியத்தை பற்றி இங்கு விவாதிப்போம். முதல் மனநிலை நிறுவனம் சிறந்த அடிப்படைகளை கொண்டுள்ளது. பங்கின் விலை அதன் உள்மதிப்பை விட மிகவும் குறைவாக உள்ளது. ஆனால் பங்கோ தொடர்ந்து வீழ்ந்து கொண்டே இருக்கிறது அல்லது உயராமலேயே உள்ளது. இந்த பங்கினை நாம் வாங்கின பின்னரும் கூட தொடர்ந்து விலை வீழ்ச்சி ஏற்படலாம். இருந்தாலும் பரவாயில்லை, இது போன்ற ஒரு பங்கு நம்மிடம் இருக்க வேண்டும், என்றாவது ஒருநாள் இந்த பங்கு விலையேறும் என்று ஒருவர் பங்கினை வாங்க ஆசைப்பட்டால், அந்த பங்கின் அல்லது பங்கு சந்தையின் காளை ஓட்ட ஆரம்பத்திற்கு அதிக காலம் பிடிக்காது என்று அர்த்தம். இரண்டாவது மனநிலை நிறுவனம் சிறந்த அடிப்படைகளை கொண்டுள்ளது. விலையும் உயர ஆரம்பித்து விட்டது. உள்மதிப்புக்கும் விலைக...

தலைவர்கள் ஜாக்கிரதை!

இன்போசிஸ் முன்னாள் தலைவர் நந்தன் நிலகேனி அவர்கள் எழுதிய இமேஜினிங் இந்தியா என்ற புத்தகத்தில் விவரிக்கப் பட்டிருந்த ஒரு உண்மை சம்பவம், தலைவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியதின் முக்கியத்துவத்தை உணர்த்தியது. அந்த சம்பவம் இங்கே. சென்ற நூற்றாண்டின் தொண்ணுறுகளில் பொதுத் துறை வங்கி ஊழியர்கள், கணினி மயமாக்குதலை கடுமையாக எதிர்த்து வந்தது அனைவரும் அறிந்ததே. அந்த காலகட்டத்தில், கணினி மயமாக்குதல் வங்கித் துறைக்கு எந்த அளவுக்கு பயனளிக்கும் என்பதை விளக்கும் பணி நந்தன் அவர்களிடம் ஒருமுறை கொடுக்கப் பட்டிருந்தது. ஏ.டி.எம் சேவை, இணைய தள சேவை மற்றும் கிரெடிட் கார்டு சேவை போன்றவை வங்கித் துறையை இன்னும் மேலே எடுத்துச் செல்லும் என்று விளக்குவதற்காக, தன்னுடைய திறமை அனைத்தையும் செலவழித்து முன்கூட்டியே தயார் படுத்திக் கொண்ட நந்தன் அவர்களுக்கு ஆச்சரியமே காத்திருந்தது. வங்கி ஊழியர்கள் முன்னே அவரளித்த விளக்க உரைக்கு, ஊழியர்களின் தலைவர்களிடம் இருந்து கடுமையான எதிர்ப்பு இருந்தது. கணினிமயமாக்கம், வங்கித் துறைக்கு எவ்வளவு அவசியம் அல்லது லாபகரமானது என்பதை வலியுறுத்த முயன்ற அவரது ஒவ்வொரு கருத்துக்கும், வலுவான மாற்ற...

பங்குச்சந்தை வெற்றிப்பயணம் - என்னுடைய வழி எளிய வழி

இப்போது உச்ச வேகத்தில் பயணம் செய்யும் பங்குச்சந்தையில் எப்படி முதலீடு செய்வது, முதலீடு செய்த பிறகு, முன்போல அதல பாதாளத்தில் விழுந்து விட்டால் என்ன செய்வது, அதே சமயம் தாமதிக்கும் ஒவ்வொரு நாளும் சந்தை புதிய உயரத்திற்கு சென்று விடுகிறதே என்றெல்லாம் பலருக்கும் குழப்பங்கள் இருக்கும். இது போன்ற ஒரு சிக்கலான நிலையில் என்னுடய பாணி என்னவென்று இங்கு உரைப்பது சிலருக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன். சென்ற பதிவில் அருமை நண்பர்கள் கேட்ட கேள்விகளுக்கு நான் அளித்த பதிலையே இந்த பதிவாக வழங்குகிறேன். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் தயங்காமல் கேளுங்கள். நன்றி. //எனவே பங்குகள் வாங்குபவர்கள் இன்னும் சிறிது காலம் தாழ்த்தலாம் என் நினைக்கின்றேன், தங்கள் பதில் என்ன குரு?// ( கேட்டவர் திரு.ரஹ்மான்) இது போன்று, தவறினால் பறந்து விடும். ஆனால் மாட்டிக் கொண்டால் அதல பாதாளத்திற்கு வீழ்ந்து விடும் என்ற நிலையில் வர்த்தகம் செய்வது மிகவும் கடினமான காரியமே. எனக்கு தெரிந்த வரை இப்போதைய காளை ஓட்டம் நிற்க வேண்டுமென்றால் ஒரு மிகப் பெரிய கெட்ட செய்தி வர வேண்டும். ஒருவேளை அப்படி ஒரு செய்தி வந்து விட்டால் எந்த ஒரு ஸ்டாப்...

பங்குச்சந்தை வெற்றிபயணம் - ஒரு விளையும் பயிர்!

சென்ற வருடம் வங்கிகளுக்கெல்லாம் குறிப்பாக தனியார் வங்கிகளுக்கெல்லாம் போதாத காலமாக இருந்தது அனைவருக்கும் தெரிந்திருக்கும். கடினமான சூழ்நிலையிலும் தனது சிறப்பான செயல்பாட்டை தக்க வைத்துக் கொண்ட ஒரு வங்கியைப் பற்றி இங்கு பார்ப்போம். ஏற்கனவே சொன்னபடி ஒரு பங்கினை ஆராய்வது எப்படி என்பதை ஒரு நடைமுறை பயிற்சி மூலம் நேரடியாக புரிந்து கொள்வது, எளிமையாகவும் அதே சமயத்தில் மனதில் ஆழமாக பதியும் படி இருக்கவும் வாய்ப்புண்டு. அந்த வகையில் இந்த தொடர்பதிவில் இரண்டாவது முறையாக ( முதல் பதிவு இங்கே ) ஒரு நிறுவனத்தைப் பற்றி இங்கு ஆராய்வோம். நாம் பயிற்சிக்கு எடுத்துக் கொள்ளவிருக்கும் இந்த நிறுவனம் ஒரு வங்கி. பெயர் யெஸ் பேங்க் (Yes Bank Ltd) ஒரு நிறுவனத்தைப் பற்றி ஆராய்வதற்கு முன்னர், அந்த நிறுவனம் புவியியல் ரீதியாக அமைந்துள்ள நாட்டை (இங்கே இந்தியா) பற்றியும், சார்ந்துள்ள துறையைப் (இங்கே வங்கித்துறை) பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும். வாய்ப்புக்களையும் அபாயங்களையும் (opportunities and threats), ஆழமாக தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் என்றாலும் நேரமின்மை காரணமாக இங்கு சில மேலோட்டமான தகவல்களைப் பற்றி மட்டும் பார்ப்...

கொலம்பஸ்! கொலம்பஸ்!

கொலம்பஸ் ஒருவேளை நம்மூர் பெண்ணை திருமணம் செய்த பின்னர், அமெரிக்காவை கண்டுபிடிக்க கிளம்பியிருந்தால் அமெரிக்காவை கண்டுபிடித்திருக்கவே முடியாது. ஏனென்று கேட்கிறீர்களா? கிளம்புவதற்கு முன்னர் அவர் கீழ்க்கண்ட கேள்விகளுக்கு பதில் அளித்திருக்க வேண்டும். எங்கே போகிறீர்கள்? எதற்காக போகிறீர்கள்? போய்த்தான் ஆக வேண்டுமா? அப்படி என்ன அவசியம்? இரவு சாப்பிட வருவீர்களா? போய் வர எத்தனை நாளாகும்? யாருடன் போகிறீர்கள்? எதற்காக அவர்களுடன் போகிறீர்கள்? இவற்றுக்கெல்லாம் கூட பதில் அளித்து விடலாம். ஆனால் கடைசி இரண்டு கேள்விகள்; என்னையும் கூட்டிச் செல்வீர்களா? ஏன் முடியாது? இதற்கு பதில் அளித்து விட்டு செல்வதற்கு பதிலாக வீட்டிலேயே இருந்து விடலாம் என்று யோசித்திருப்பார் என்று மின்னஞ்சலில் வந்த ஒரு நகைச்சுவையை என் நண்பருடன் பகிர்ந்து கொண்டேன். அதற்கு கூறினார். "கொலம்பஸ் ஒருவேளை நம்மூராக இருந்திருந்தால் அமெரிக்காவை கண்டுபிடித்ததை யாரிடமும் சொல்லியிருக்க மாட்டார்" ஏன் என்று கேட்டேன். "யாரிடமும் சொல்லாமல் மனைவியை அமெரிக்காவிற்கு கொண்டு சென்று விட்டு விட்டு வந்திருப்பார்.அமெரிக்காவின் கண்டுபிடிப்பு சாத...

ஒரு இளம் படைப்பாளியின் கம்ப்யூட்டர் ஓவியங்கள்!

எனது ஐந்து வயது மகளின் கை வண்ணங்கள் இங்கே! வரைந்தவர் இவர்தான்! நன்றி!

யானை வரும் பின்னே! மணியோசை வரும் முன்னே!

வெளிப்பார்வைக்கு சாதாரணமாக தெரியக் கூடிய, நாம் அனைவரும் அறிந்த இந்த சொல்வழக்கில் ஒரு முக்கிய பொருளாதார தத்துவம் அடங்கியிருக்கிறது. பொதுவாக, பொருளாதாரத்தில் நடைபெறவுள்ள மாறுதல்களை முன்கூட்டியே அறிந்து கொள்ள உதவும் கருவியாகவே பங்குசந்தை இருந்து வருகிறது. உதாரணமாக, பொருளாதார வீழ்ச்சியின் தாக்கத்தை பொதுமக்கள் புரிந்து கொண்டது கடந்த செப்டம்பர் மாதம்தான். ஆனால் பங்கு சந்தைகள், சென்ற ஜனவரி மாதத்தில் இருந்தே தமது வீழ்ச்சியை ஆரம்பித்து விட்டன. பொருளாதார வீழ்ச்சியின் முழு வீச்சும் உணரப் பட்ட (நடப்பு ஆண்டு) மார்ச் மாதத்திலோ பங்கு சந்தைகள் மெல்ல மெல்ல மீண்டு எழ ஆரம்பித்து விட்டன. பொருளாதார மீட்சிக்கான அறிகுறிகள் இப்போதுதான் அங்கங்கே தெரிய ஆரம்பித்துள்ளன என்றாலும், பங்கு சந்தைகளின் பொற்காலமான 2007 அளவுகளுக்கு அருகேயே பங்குசந்தைகள் இப்போது சென்று விட்டன. பல பங்குகள் தமது பழைய உயர்வு நிலையை எட்டிவிட, சில பங்குகளோ பழைய நிலைக்கும் மேலேயே சென்று விட்டன. இப்போதைய பங்குசந்தையின் கணிப்பு சரியாக இருக்கும் பட்சத்தில், உலகின் பொருளாதார நிலையும் கிட்டத்தட்ட பொருளாதார உச்ச காலமான 2007 நிலைக்கு வெகு சீக்கிரமே வ...

இன்றைய உலகின் அசாதாரண நிலை!

அமெரிக்க வங்கியான லெமென் பிரதர்ஸ் வங்கி மூழ்கி ஒரு வருடம் முடிவடைந்த நிலையில், தற்போதும் உலகம் பொருளாதார ரீதியாக ஒரு அசாதாரண நிலையில்தான் உள்ளது. அதிகப் படியான பணபுழக்கம், கடனைத் திருப்பித் தரமுடியாதவர்களுக்கு ஏராளமான கடன் வழங்குதல், மீளாக் கடன்களை கொண்டு கட்டி வந்த ஒரு தலைகீழ் மணல் கோட்டை, ஊதி பெருத்து வந்த அமெரிக்காவிற்கு பலவகையிலும் சேவை செய்து பிழைத்து வந்த ஆசிய நாடுகள், இதனால் விளைந்த டாலர் சுழற்சி முறை என பல ஆண்டுகளாக தொடர்ந்து நடந்த தவறுகளின் அடிப்படையில், ஒரு பயங்கர பொருளாதார பூகம்பம் சென்ற ஆண்டு ஏற்பட்டது. அந்த பூகம்பத்தின் ஒரு முக்கிய மையமாக லெமென் பிரதர்ஸ் வங்கியின் வீழ்ச்சி இருந்தாலும் அதன் தாக்கம் பல ஆயிரம் கிலோ மீட்டர் வரை இருந்தது.. இந்த பொருளாதார பூகம்பத்தை சரிகட்டுவதற்காக, சரிந்த மணல் கோட்டையின் மீதே இன்னும் ஒரு பெரிய மணல் கோட்டை கட்டும் விதமாக, அமெரிக்கா மற்றும் இன்னும் பல நாடுகளின் அரசுகள், சந்தைக்குள் ஏராளமான பணத்தை இறக்கி விட்டன. (நோட்டு அச்சடிப்பதில் இந்தியாவும் விதி விலக்கல்ல. இருந்தாலும் அமெரிக்கா வெளியிடும் நோட்டுக்களை ஒப்பிடுகையில் நமது அளவு அவல் பொரி மட்ட...

பங்குச்சந்தை வெற்றிப்பயணம் - முடிவெடுக்க உதவும் மூன்று வழிமுறைகள்

ஒரு பங்கினை வாங்கவும் விற்கவும், பொதுவாக மூன்று விதமான வழிமுறைகள் பின்பற்றப் படுகின்றன. அந்த அணுகுமுறைகளைப் பற்றிய சுருக்கமான விபரங்களை இங்கு பார்ப்போம். ஒரு பங்கின் ஏற்றத்தாழ்வுகள் அதை வெளியிட்டுள்ள நிறுவனத்தின் செயல்பாடுகளைப் பொறுத்தே அமைகின்றது என்ற கண்ணோட்டத்துடன் முடிவுகளை மேற்கொள்வது முதல் அணுகுமுறையாகும். ஒரு பங்கில் நாம் முதலீடு செய்யும் போதே அந்த நிறுவனத்தின் சுக துக்கங்களில் பங்கெடுக்கும் ஒரு பங்குதாரர் நாம் ஆகி விடுகிறோம். எனவே, ஒரு பங்கில் முதலீடு செய்வதற்கு முன்னரே, அந்த நிறுவனத்தின் தற்போதைய நிலை மற்றும் வருங்கால செயல்பாடுகள் பற்றிய நமக்கு ஒரு தெளிவான கண்ணோட்டம் அவசியமாகிறது என்பது இந்த அணுகுமுறை. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால், குடியிருப்பதற்காக ஒரு வீட்டை வாங்கச் செல்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது, அந்த வீட்டின் விலையை தெரிந்து கொள்வதற்கு முன்னரே, அந்த வீடு நாம் வாழ்வதற்கு ஏற்றதாக உள்ளதா, அந்த பகுதியில் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வசதிகள் போதுமான அளவு உள்ளதா என்பதையே முதலில் நாம் பார்க்கிறோம். அதற்கு பின்னரே விலை பற்றி யோசிக்கிறோம். எல்லா வசதிகளும் ...

ஆயில் இந்தியா பங்கு வெளியீடு - முதலீடு செய்யலாமா?

மிகவும் எதிர்பார்க்கப் பட்ட அடானி பவர் மற்றும் என்.எச்.பி.சி நிறுவனங்களின் பங்குகள் சந்தையில் ஒரு சிறப்பான துவக்கம் (Listing) பெறாத நிலையில், இந்த வருடத்தின் மூன்றாவது பெரிய பங்கு வெளியீடாக (Initial Public Offer) ஆயில் இந்தியா நிறுவனத்தின் பங்குகள் வரும் வாரத்தில் வெளியிடப் படவுள்ளன. இந்த வெளியீட்டின் சிறப்பியல்புகள் பற்றியும் இந்த பங்கு வெளியீட்டில் முதலீடு செய்யலாமா என்பது பற்றியும் இங்கு விவாதிப்போம். முதலில் பங்கு வெளியீட்டைப் பற்றிய சில தகவல்கள். பங்கு வெளியீட்டு தேதி - செப்டம்பர் 7 முதல் 10 வரை பங்கு வெளியீட்டு விலை - Rs.950 முதல் Rs.1050 வரை குறைந்த பட்ச முதலீடு - 6 பங்குகள் வெளியிடப் படும் பங்குகளின் எண்ணிக்கை - சுமார் 264 லட்சம். ஆயில் இந்தியா நிறுவனம் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு கண்டுபிடிப்பு, உற்பத்தி, எரிவாயுவை சுத்திகரிப்பு செய்து எல்பிஜி வாயுவாக மாற்றுவது, எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்து சேவை போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனம் ஒ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு அடுத்தபடியான பெரிய இந்திய தேசிய எண்ணெய் & எரிவாயு நிறுவனம் என்பது குறிப்பிடத் தக்கது. ஆயில் இந...

பூனைக்கு யார் மணி கட்டுவது?

சென்ற வாரத்தில் வெளியிடப் பட்ட இந்திய பொருளாதார வளர்ச்சி அளவு கிட்டத்தட்ட எதிர்பார்த்த அளவிலேயே அமைந்து விட சந்தைக்கு பெரிய அளவில் சந்தோஷ ஆச்சரியங்கள் கிடைக்காமல் போனது. உலக சந்தைகளும் குறிப்பாக அமெரிக்க சந்தைகள் அதிக அளவில் முன்னேறாமல் போகவே , 4750 என்ற நிபிட்டி நிலையை முறியடிக்க நமது சந்தைக்கு வலுவில்லாமல் போய் விட்டது. நிபிட்டி 4750 என்ற நிலையை முழுமையாக முறியடிக்க வேண்டுமென்றால், சந்தையின் முக்கிய பங்கான ரிலையன்ஸ் பெருமளவு முன்னேற வேண்டியிருக்கும் . ஆனால் கிருஷ்ணா-கோதாவரி எரிவாயு பங்கீட்டு விஷயத்தில் முன்னுக்குப்பின் முரணான மத்திய அரசின் நடவடிக்கைகள் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சி ஆகியவை ரிலையன்ஸ் பங்கினை அதிகம் முன்னேற விடாமல் செய்து விட்டன. எனவே நிபிட்டி சென்ற வாரத்தின் பெரும்பாலான நாட்களில் வலுவிழந்தே காணப் பட்டது. வாரத்தின் கடைசி நாளன்று வெளியாகவிருந்த அமெரிக்க வேலை இழப்பு விகிதம் எதிர்பார்ப்பை விட குறைவாக இருக்கும் என்ற யூகம் சந்தையை வீறு கொண்டு எழ உதவியது. இருந்தாலும் கூட, சந்தையால் சென்ற வாரத்தின் முழு இழப்பையும் ஈடு கட்ட முடியாமல் போனது. நமது சந்தை ...

கம்ப்யூட்டர் கட்சியும் கால்குலேட்டர் கட்சியும்!

மத்திய கல்வி அமைச்சர் கபில் சிபல் இந்தியா முழுவதும் அனைவரும் தாய்மொழியுடன் ஹிந்தியும் படிக்க வேண்டும் என்ற கருத்தை தெரிவித்துள்ளார். இவ்வாறு அனைவரும் ஹிந்தி படிப்பதன் மூலம் நாட்டில் ஒருமைப்பாடு ஏற்படுவதுடன் ஹிந்தியை ஆங்கிலம் போன்று ஒரு "அறிவு மொழியாக (lingua franca)" மாற்ற முடியும் என்றும் கூறியுள்ளார். இந்த கருத்தின் மீது பதிவுலகில் ஏராளமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆங்கிலம் மட்டுமே போதும் என்று ஒரு கட்சியும், ஆங்கிலம் வாசலாக இருக்கும் போது ஹிந்தி ஒரு சன்னலாக இருந்து விட்டு போகட்டுமே என்று இன்னொரு கட்சியும் விவாதித்து வருகின்றன. ஹிந்தி எதிர்ப்பு என்பது எப்போதுமே ஒரு உணர்வு பூர்வமான விஷயமாகவே பலராலும் கருதப் பட்டாலும், அதற்கு அறிவு பூர்வமான, சரித்திர பூர்வமான சில அடிப்படைகள் உண்டு. ஹிந்தி திணிப்பு மற்றும் ஹிந்தி எதிர்ப்பு பற்றி எனக்கு தெரிந்த சில கருத்துக்களை இங்கு ஒரு புனைவு வடிவில் அளிக்க முயற்சிக்கிறேன். இப்போது புனைவு ! ஒரு காலத்தில் பரதம்பட்டி என்ற ஒரு கிராமம் இருந்ததாம். அங்கு பல ஆண்டுகள் வரை ஆட்சி செய்து வந்த துரை மகாராஜா ஒரு காலத்தில், அந்த கிராமத்தை ஜனநாயக ...

பங்குச்சந்தை வெற்றிப்பயணம் - எந்த பாதை உங்கள் பாதை?

பங்குசந்தை வெற்றிப் பயணத்திற்கு உதவக் கூடிய மூன்று பாதைகளை இது வரை பார்த்தோம். வாரன் பபெட் போல தொலை நோக்குடன் வருங்காலத்தை கணித்து பங்குகளை தேர்வு செய்யும் அறிவுபூர்வமான வழி, அதிரடியாக சந்தையின் அன்றாட நிகழ்வுகளை முன்கூட்டியே அறிந்து கொண்டு அல்லது அதற்கேற்றார் போல வேகமாக காய்களை நகர்த்தும் சாமர்த்திய வழி, பங்குகளை சேமிப்பின் ஒரு பகுதியாக, நீண்டகால முதலீட்டாக மட்டுமே பார்க்கும் பொறுமை வழி என்று மூன்று வழிகளை பற்றிய மேலோட்டமான விளக்கங்களைப் பார்த்தோம். இவை மட்டுமல்லாமல் பங்கு சந்தை ஜாம்பவான்கள் தனது திறமையை முழுமையாக வெளிப்படுத்தும் அதிபுத்திசாலி (துணை) பாதை ஒன்றையும் பார்த்தோம். இந்த மூன்று பாதைகளில் ஒன்றை மட்டுமே விடாப்பிடியாக பிடித்துக் கொண்டு அதிலேயே பயணம் செய்ய வேண்டியதில்லை. ஒருவரால் மூன்று பாதைகளிலும் கூட மாறி மாறி பயணிக்க முடியும். இந்த பாதைகள் பங்குசந்தைக்கான மூன்று வித அணுகுமுறைகளை பிரித்துக் காட்டவே தவிர ஒன்றுடன் ஒன்று முற்றிலும் வேறுபட்டவை அல்ல. பல ஜாம்பவான்கள் துவக்கத்தில் எந்த வழியில் பயணித்தாலும் காலம் செல்ல செல்ல முதலாவது பாதைக்கும் அதிபுத்திசாலி துணைப் பாதைக்கும் மாறி...