The Art of Appraisal
-
Big Boss: This year your performance was good, excellent and outstanding.
So, your rating is "average".
Kumar: What? How come 'average'?
Big Boss: Becau...
பிரிவுகள்
- சமூகம் (121)
- செய்தியும் கோணமும் (104)
- பொருளாதாரம் (101)
- பங்கு சந்தை (98)
- அரசியல் (74)
- பயணங்கள்/அனுபவங்கள் (40)
- மனவியல் (40)
- பங்கு சந்தை வெற்றி பயணம் - ஒரு வழித் துணை (15)
- கதை (9)
- நகைச்சுவை (7)
- அறிவியல் (5)
- திரைவிமர்சனம் (4)
- சட்டம் (3)
- நூலகம் (3)
- கிறுக்கல்கள் (1)
Monday, September 7, 2009
ஆயில் இந்தியா பங்கு வெளியீடு - முதலீடு செய்யலாமா?
மிகவும் எதிர்பார்க்கப் பட்ட அடானி பவர் மற்றும் என்.எச்.பி.சி நிறுவனங்களின் பங்குகள் சந்தையில் ஒரு சிறப்பான துவக்கம் (Listing) பெறாத நிலையில், இந்த வருடத்தின் மூன்றாவது பெரிய பங்கு வெளியீடாக (Initial Public Offer) ஆயில் இந்தியா நிறுவனத்தின் பங்குகள் வரும் வாரத்தில் வெளியிடப் படவுள்ளன. இந்த வெளியீட்டின் சிறப்பியல்புகள் பற்றியும் இந்த பங்கு வெளியீட்டில் முதலீடு செய்யலாமா என்பது பற்றியும் இங்கு விவாதிப்போம்.
முதலில் பங்கு வெளியீட்டைப் பற்றிய சில தகவல்கள்.
பங்கு வெளியீட்டு தேதி - செப்டம்பர் 7 முதல் 10 வரை
பங்கு வெளியீட்டு விலை - Rs.950 முதல் Rs.1050 வரை
குறைந்த பட்ச முதலீடு - 6 பங்குகள்
வெளியிடப் படும் பங்குகளின் எண்ணிக்கை - சுமார் 264 லட்சம்.
ஆயில் இந்தியா நிறுவனம் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு கண்டுபிடிப்பு, உற்பத்தி, எரிவாயுவை சுத்திகரிப்பு செய்து எல்பிஜி வாயுவாக மாற்றுவது, எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்து சேவை போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனம் ஒ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு அடுத்தபடியான பெரிய இந்திய தேசிய எண்ணெய் & எரிவாயு நிறுவனம் என்பது குறிப்பிடத் தக்கது.
ஆயில் இந்தியா ஒரு அரசு நிறுவனம். இந்தியா மற்றும் பல வெளிநாடுகளிலும் இதனுடைய ஆய்வு பணிகள் நடைபெறுகின்றன. இதனுடைய பெரும்பாலான கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு படுகைகள் வடகிழக்கு இந்தியப் பகுதியில் அமைந்துள்ளன.
இந்த பங்கு வெளியீட்டின் சாதகங்கள்
முந்தைய பங்கு வெளியீடுகள் போல அல்லாமல், இந்த பங்கு வெளியீட்டின் விலை நிர்ணயம், முதலீட்டாளர்களுக்கு சற்று சாதகமாக அமைந்திருப்பது குறிப்பிடத் தக்கது. இதனுடைய விலை/பங்கு வருவாய் (Price/EPS) மற்றும் விலை/பங்கு மதிப்பு (Price/Book Value) ஆகிய விகிதங்கள், போட்டி நிறுவனமான ஒ.என்.ஜி.சி. நிறுவனத்தை விட குறைவாகவே நிர்ணயிக்கப் பட்டுள்ளன.
இந்த நிறுவனத்தின் கைவசம் ஏராளமான எரி படுகைகள் இருப்பதும் இந்த நிறுவனத்தின் கண்டுபிடிப்பு விகிதம் (Success Ratio) அதிகமாக இருப்பதும் கூட சாதக அம்சங்கள்.
எண்ணெய் மற்றும் எரிவாயுவை தேவை உலகளவில் குறிப்பாக இந்தியாவில் அதிகரித்து கொண்டே போவது ஒரு நல்ல விஷயம்.
இந்த துறையின் மீதான அரசின் விலை நிர்ணய கட்டுப்பாடுகளும் மான்யங்களும் ஒருவேளை குறைக்கப் பட்டால், இந்த நிறுவனத்திற்கு பெரிய சாதகமாக இருக்கும்.
இப்போது பாதக அம்சங்கள்.
இந்த நிறுவனம் ஒரு அரசு நிறுவனமாக இருப்பதால், அரசின் பிடி எப்போதுமே பலமாக இருக்கும். அரசியல் தேவைகளுக்காக இது போன்ற நிறுவனங்களின் லாபநோக்கம் விட்டுக் கொடுக்கப் படுவதும் ஒரு பாதக அம்சம்.
இதனுடைய முக்கிய உற்பத்திப் பொருட்களான கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவின் விலைகள் அதிக ஏற்றத்தாழ்வுகளுக்கு உள்ளாகி வருவதால், இந்த நிறுவனத்தின் லாப போக்கிலும் ஏற்றத்தாழ்வு உருவாகலாம்.
ஏற்கனவே சொன்னபடி முந்தைய இரண்டு பெரிய பங்கு வெளியீடுகளும் வெற்றிபெறாத நிலையில், இந்த பங்கு வெளியீட்டிற்கான தேவை (Demand for IPO) சற்று குறைவாக இருக்கவும் வாய்ப்புண்டு.
மொத்தத்தில், லிஸ்டிங் லாபத்திற்காக அல்லாமல், நீண்ட கால நோக்கில் ஒரு வலுவான, நிதானமான முன்னேற்றம் அடையக் கூடிய வாய்ப்புள்ள ஒரு நிறுவனத்தின் பங்கிற்கு சொந்தக்காரர்களாக விரும்புவர்கள் இந்த பங்கு வெளியீட்டில் முதலீடு செய்யலாம்.
நன்றி!
டிஸ்கி: பங்கு முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. இங்கு வெளியிடப் படும், பங்குகள், சந்தை மற்றும் பொருளாதாரம் பற்றிய கருத்துகள், தகவல் பரிமாற்றத்திற்கு மட்டுமே. முதலீடுகளுக்கான பரிந்துரைகள் அல்ல. முதலீடுகள் தன் சொந்த பொறுப்பிலேயே இருக்க வேண்டும்.
Labels:
பங்கு சந்தை
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
//அரசியல் தேவைகளுக்காக இது போன்ற நிறுவனங்களின் லாபநோக்கம் விட்டுக் கொடுக்கப் படுவதும் ஒரு பாதக அம்சம். //
இந்தியாவுக்கு இருக்கும் பெரிய சனியனே இது தானே!
அவசரத்தில் எழுதியுள்ளிர்கள் போல இருக்கு.இன்னமும் நிறைய விவரங்களை கொடுத்திர்க்கலாமோ? என நான் நினைக்கிறேன் சார் இருந்தாலும், நன்றாக உள்ளது.
(Face Value Rs. 10/- (2,64,49982 equity shares)தரநிர்நிய CRISIL ஏஜன்சி கிரேட்4(GRADE 4) கொடுத்துள்ளது.Market Lot 6 Equity Shares ஆசியாவிலே பழமையான லாபகரமான நிறுவனம். ONGC க்கு அடுத்து பெரிய நிறுவனம்).
//லிஸ்டிங் லாபத்திற்காக அல்லாமல், நீண்ட கால நோக்கில் ஒரு வலுவான, நிதானமான முன்னேற்றம் அடையக் கூடிய வாய்ப்புள்ள ஒரு நிறுவனத்தின் பங்கிற்கு சொந்தக்காரர்களாக விரும்புவர்கள் இந்த பங்கு வெளியீட்டில் முதலீடு செய்யலாம்.//
சரியாக சொன்னீர்கள் சார்.
பதிவுக்கு நன்றி சார்.
//அவசரத்தில் எழுதியுள்ளிர்கள் போல இருக்கு.இன்னமும் நிறைய விவரங்களை கொடுத்திர்க்கலாமோ? என நான் நினைக்கிறேன் சார் இருந்தாலும், நன்றாக உள்ளது.
(Face Value Rs. 10/- (2,64,49982 equity shares)தரநிர்நிய CRISIL ஏஜன்சி கிரேட்4(GRADE 4) கொடுத்துள்ளது.Market Lot 6 Equity Shares ஆசியாவிலே பழமையான லாபகரமான நிறுவனம். ONGC க்கு அடுத்து பெரிய நிறுவனம்).//
மன்னிக்கவும் தாமஸ் ரூபன்!
நேரக் குறைவு காரணமாக அதிகம் எழுத முடியவில்லை. ஆனால் முக்கிய சாதக பாதகங்களை தெரிந்த வரை எழுதியுள்ளேன்.
அதிகம் விளக்க வில்லையென்றாலும், முடிவான கருத்துரையை மிகுந்த ஆலோசனைக்கு பின்னரே வழங்கியுள்ளேன் என்பது குறிப்பிடத்தக்கது . தனிப்பட்ட முறையில் நானும் கூட இதில் (பன்னிரண்டு பங்குகள்) முதலீடு செய்யலாம் என்ற முடிவும் எடுத்துள்ளேன்.
நன்றி!
//அதிகம் விளக்க வில்லையென்றாலும், முடிவான கருத்துரையை மிகுந்த ஆலோசனைக்கு பின்னரே வழங்கியுள்ளேன் என்பது குறிப்பிடத்தக்கது . தனிப்பட்ட முறையில் நானும் கூட இதில் (பன்னிரண்டு பங்குகள்) முதலீடு செய்யலாம் என்ற முடிவும் எடுத்துள்ளேன்.//
உங்கள் முடிவுக்கு வாழ்த்துகள் சார்.
NHPC பங்குகள்Rs.34/-32/- க்கு வாங்கினால் ஒரு வருடத்தில் 70/- ரூபாய் வரை போகும் என நினைக்கிறேன்.(இது என்னுடைய தனிப்பட்ட கருத்து)
நன்றி சார்.
நன்றிகள். நன்றாக எழுதியுள்ளீர்கள்.
ஏற்கனவே வந்த NHPC Adani Power ஆகிய IPO களில் முதலீட்டு செய்தவர்கள் யாரும் உடனே IPO களில் முதலீட்டு செய்ய வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன்,அதே சமயம் மக்கள் ஏமாறும் சமயத்தில்தானே சந்தையை மேலேற்றி சம்பாதிக்கும் கும்பல் இங்கு இருக்கத்தானே செய்யும்.இனிவரும் காலங்களில் IPO நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு மட்டும் சரிபட்டுவரும்.
//NHPC பங்குகள்Rs.34/-32/- க்கு வாங்கினால் ஒரு வருடத்தில் 70/- ரூபாய் வரை போகும் என நினைக்கிறேன்.(இது என்னுடைய தனிப்பட்ட கருத்து) //
தகவலுக்கு நன்றி தாமஸ் ரூபன்!
நன்றி அகில் பூங்குன்றன்!
//ஏற்கனவே வந்த NHPC Adani Power ஆகிய IPO களில் முதலீட்டு செய்தவர்கள் யாரும் உடனே IPO களில் முதலீட்டு செய்ய வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன்,அதே சமயம் மக்கள் ஏமாறும் சமயத்தில்தானே சந்தையை மேலேற்றி சம்பாதிக்கும் கும்பல் இங்கு இருக்கத்தானே செய்யும்.இனிவரும் காலங்களில் IPO நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு மட்டும் சரிபட்டுவரும்.//
உண்மைதான் ரஹ்மான்!
IPO விலை நிர்ணயங்கள் அதிகமாக இருப்பது ஆரோக்கியமான போக்கு அல்ல. விலை நிர்ணயம் முதலீட்டாளர்களுக்கு சாதகமாக இருந்தால்தான் IPOக்கள் மீது மக்களுக்கு அதிக ஆர்வம் வரும்.
நன்றி ரஹ்மான்!
Post a Comment