
சமீபத்தில் வெளியிடப் பட்ட மத்திய புள்ளியல் (மத்திய அரசு) நிறுவனத்தின் மதிப்பீட்டின் படி இந்தியப் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் 7.1 சதவீதம் வளர்ச்சியுறும் என்று தெரிகிறது. இது சரியாக இருக்கும் பட்சத்தில் உலகிலேயே இரண்டாவதாக வேகமாக வளர்ச்சியுறும் நாடு இந்தியாவாகத்தான் இருக்கும் (சீனா முதலாவது).
சென்ற ஆண்டில் ஒன்பது சதவீதம் வளர்ச்சி பெற்றிருந்த இந்தியப் பொருளாதாரம் செப்டம்பர் 2008 வரையிலான முதல் அரையாண்டில் 7.80% வளர்ச்சிப் பெற்றிருந்தது. பொதுவாகவே பண்டிகைக் காலமாக கருதப் படுகிற இரண்டாவது அரையாண்டே தொழிற் துறையில் அதிக வளர்ச்சியைக் காட்டும் என்றாலும் இந்த முறை இந்தியத் தொழில் துறை பெரும் தேக்க நிலையில் இருந்து வந்திருக்கிறது என்பது கவனிக்கத் தக்கது.
இந்திய தொழிற் வளர்ச்சி கடந்த இரு மாதங்களாக மிகவும் குறைந்து காணப் படுவதாலும் ஏற்றுமதியோ இறங்குமுகத்தில் இருப்பதாலும் இந்திய அரசாங்கம், மார்ச் 2009 வரையிலான நிதி ஆண்டின் இரண்டாவது அரையாண்டில் நமது பொருளாதாரம் குறைந்த வளர்ச்சியே (6.30%) இருக்கும் என்று எதிர்பார்க்கிறது. அதே சமயம், பல தனியார் அமைப்புக்கள், இந்தியா இன்னும் கூட குறைந்த அளவே வளர்ச்சிப் பெறும் என்று கணிக்கின்றன. இந்த நிதி ஆண்டு முடிய இன்னும் இரண்டு மாதங்களே இருக்கும் போது இந்த வளர்ச்சி சாத்தியமான ஒன்றா என்றும் அடுத்த ஆண்டும் இதே போன்ற ஒரு மிதமான வளர்ச்சி சாத்தியமா என்றும் பார்ப்போம்.
ஒரு நாட்டின் "மொத்த உள்நாட்டு உற்பத்தி" (GDP) பொதுவாக கீழ்க்கண்ட முறையில் கணக்கிடப் படுகிறது.
GDP = தனியார் (மக்கள்) செலவிடும் தொகை + அரசு செலவிடும் தொகை + முதலீடுகள் + நிகர ஏற்றுமதி
இந்தியா ஒரு இறக்குமதி சார்ந்த நாடு என்பதால், அதை விடுத்து மீதமுள்ள முக்கிய மூன்று காரணிகள் வருங்காலத்தில் எப்படி மாற்றம் பெறும் என்று பார்ப்போம்.
தனியார் (மக்கள்) செலவிடும் தொகை:
வேலையிழப்பு, வருமான பாதிப்பு, தொழிற்துறையில் குறைந்த லாபம் அல்லது நட்டம் போன்ற காரணங்களால், நடப்பு மற்றும் நிதியாண்டுகளில் பொருளாதார வளர்ச்சியில் தனியாரின் பங்கு குறைவாகவே காணப் படும் என்று தெரிகிறது. அதே சமயம், மெல்ல மெல்ல நுகர்வோர் கலாச்சாரத்திற்கு மாறி வரும் இந்தியரின் மனப்போக்கும், ஜனத்தொகையில் பெரும்பங்கு இளையவர்களாகவே இருப்பதும் தனியார் செலவினங்கள் பெருமளவு குறைந்து போவதிலிருந்து காப்பாற்றும் என்று நம்பலாம். தனி மனிதருக்கான பெரும்பாலான தேவைகள் (குடியிருப்பு, தொலைத் தொடர்பு, கல்வி, வாகனங்கள் போன்றவை) இன்னமும் கூட இந்தியாவில் பூர்த்தி ஆகாமல் இருப்பதும், தனியார் செலவினத்தை சற்று அதிகமாகவே வைக்கும் என்று நம்பலாம்.
அரசு செலவிடும் தொகை
இந்தியா ஏழை நாடாக இருந்தாலும், இந்திய அரசாங்கங்கள் எப்போதுமே தாராள செலவுக்கு பேர் போனவை. கடந்த பதினெட்டு ஆண்டுகளாக, பொருளாதார வளர்ச்சியில் அரசின் நேரடி பங்கு குறைந்து போய் விட்ட நிலையில், பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்து செலுத்த அதிகப் படியான அரசு செலவினம் இப்போது அவசியமான ஒன்றாகி விட்டது. நடப்பு நிதியாண்டில் மட்டும் இந்திய மைய அரசு சுமார் 70,000 கோடி ரூபாய் அதிகப் படியான செலவு செய்யும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இது போக மாநில அரசுகளும் அதிக செலவு செய்ய மத்திய அரசு கேட்டுக் கொண்டிருக்கிறது. அரசு நல திட்டங்கள், ஊதியக் குழு பரிந்துரையின் படி அரசு ஊழியர்க்கு அதிக சம்பளம், சில அடிப்படை கட்டமைப்பு திட்டங்கள் போன்றவற்றுக்கு இந்த பணம் செலவு செய்யப் படும் என்று தெரிகிறது. இத்தகைய அதிகப் படியான அரசு செலவினங்கள், மேலே சொன்னபடி, தனியார் செலவினம் குறைந்து போவதினால் ஏற்படும் பொருளாதார பாதிப்பை ஓரளவுக்கு ஈடுகட்ட முடியும்.
முதலீடுகள்:
தற்போதைய ஏற்றுமதி வீழ்ச்சி மற்றும் நிச்சயமற்ற வருங்காலம் ஆகியவற்றின் காரணமாக, புதிய முதலீடுகள் செய்ய தனியார் துறையினர் முன்வருவார்களா என்பது சந்தேகமான ஒன்று. மேலும், வெளியேறும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள், வீழ்ச்சி பெற்றுள்ள பங்கு சந்தை மற்றும் கடன் கொடுக்க தயங்கும் வங்கிகள் காரணமாக "மூலதனம் திரட்டல்" என்பது ஒரு சிரமமான காரியமாகவே தெரிகிறது. அதே சமயம், அதிக அளவு கடன் கொடுக்க பொதுத் துறை வங்கிகளை மத்திய அரசு வலியுறுத்தி வருவதும், மத்திய நிதி நிறுவனங்கள் வாயிலாக (IIFCL போன்றவை) நீண்ட கால (அடிப்படை கட்டமைப்புக்கான) கடன் வசதிகள் செய்து தருவதும் கவனிக்கத் தக்கது.
பல மேற்கத்திய நாடுகள் வளர்ச்சியில் தன்னிறைவு பெற்று விட்டிருப்பதால், அந்த நாடுகளின் அரசாங்கங்கள் அதிக அளவில் புதிய முதலீடு செய்ய வாய்ப்பு குறைவு. அதே சமயம், இந்தியாவிலோ நிறைவேற்ற வேண்டிய பணிகள் (உதாரணம்: குடிநீர் வசதி, கல்வி வசதி,சாலை வசதி, துறைமுக வசதி, சுகாதார வசதி, மின்சார வசதி என்று சொல்லிக் கொண்டே போகலாம்). இவற்றுக்கெல்லாம் அரசு சரியான முதலீட்டு செலவுகள் செய்யுமானால் இந்தியாவின் பொருளாதாரம் இன்னும் பல வருடங்களுக்கு நல்ல வளர்ச்சிப் பாதையில் செல்லும் வாய்ப்பு உள்ளது.
இப்போது, எந்தெந்த துறைகளில் வளர்ச்சி எதிர்பார்க்கப் படுகிறது என்று பார்ப்போம்.
ஒரு காலத்தில் இந்தியாவின் முதுகெலும்பாக கருதப் பட்டு இப்போது கவனிப்பாரற்று கிடக்கும் விவசாயத் துறை 2.60% சதவீதம் வளர்ச்சி பெறும் என்று எதிர்பார்க்க படுகிறது. கடந்த சில வருடங்களாகவே ஓரளவுக்கு பருவ மழை தவறாமல் பெய்து வருவதால், இந்த வளர்ச்சி சாத்தியமே என்று தோன்றுகிறது. மேலும், ஏற்றுமதியையும் உலக பொருளாதாரத்தையும் சார்ந்திராத இந்த துறை மிதமான வேகத்தில் (பருவ மழை சரியாக இருக்கும் பட்சத்தில்) இன்னும் சில ஆண்டுகள் வளரும் என்று கருதப் படுகிறது.
தொழிற்துறை இந்த பொருளாதார வீழ்ச்சியினால் பெருமளவு பாதிக்கப் பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ள போதிலும், மோசமான காலம் முடிந்து விட்டதாகவே சில விற்பன்னர்கள் கருதுகின்றனர். சாலை திட்டங்கள், மின்சார உற்பத்தித் திட்டங்கள் போன்றவை இந்த துறைக்கு கை கொடுக்கும் என்று நம்பலாம்.
வெளிநாட்டு ஏற்றுமதியைச் சார்ந்த சேவை நிறுவனங்கள் ஓரளவுக்கு பாதிப்பைச் சந்திக்கும் என்று தோன்றினாலும், உள்நாட்டை சார்ந்த சேவை நிறுவனங்கள் (கல்வி, மருத்துவம், தொலைத் தொடர்பு போன்றவை) மிதமான வளர்ச்சிப் பாதையில் செல்லும் என்றே எதிர்பார்க்கப் படுகிறது. அதே சமயம், அகலக் கால் வைத்த நிறுவனங்கள் தடுமாறவும் வாய்ப்பு உள்ளது. அரசு ஊழியர்களுக்கு வழங்கப் படவுள்ள மிக அதிகமான ஊதியக் குழு நிலுவை பணம் விரைவில் புழக்கத்திற்கு வரவிருப்பது உள்ளூர் சேவைத் துறைக்கு நல்ல விஷயமாக இருக்கும். ஏற்றுமதியை ஊக்குவிக்கக் கூடிய வகையில், மத்திய அரசின் புதிய திட்டங்கள் கூடிய விரைவில் அறிவிக்கப் படும் என்று எதிர்பார்க்க படுகிறது.
ஆக மொத்தத்தில், கடந்த ஐந்து வருடங்களில் இந்தியாவில் காணப் பட்ட அசுர வளர்ச்சியினை இன்னும் சில காலத்திற்கு எதிர்பார்க்க முடியாதென்றே தோன்றுகிறது. அதே சமயத்தில், உலகின் பல நாடுகள் (அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உட்பட) பொருளாதார பின்னடைவை சந்திக்கின்ற வேளையில், இந்தியா ஒரு மிதமான வளர்ச்சியை சந்திக்கவிருப்பது, ஆறுதலளிக்கும் ஒரு விஷயம்தானே?
நன்றி.
39 comments:
//மெல்ல மெல்ல நுகர்வோர் கலாச்சாரத்திற்கு மாறி வரும் இந்தியரின் மனப்போக்கும், ஜனத்தொகையில் பெரும்பங்கு இளையவர்களாகவே இருப்பதும் தனியார் செலவினங்கள் பெருமளவு குறைந்து போவதிலிருந்து காப்பாற்றும் என்று நம்பலாம்.//
இந்த கால்த்து பசங்க ரொம்ப உஷாரு.
பைக்க விட்டுட்டு பஸ்ஸுல போறோமாக்கும்!
சிக்கனனும் ஆச்சு, பிகர் பார்த்தா மாதிரியும் ஆச்சு.
ஒரு கல்லுல ரெண்டு மாங்கா
//நடப்பு நிதியாண்டில் மட்டும் இந்திய மைய அரசு சுமார் 70,000 கோடி ரூபாய் அதிகப் படியான செலவு செய்யும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.//
இதுல மக்களுக்கு எவ்வளவு?
அரசியல்வாதிகளுக்கு எவ்வளவு?
//ஒரு காலத்தில் இந்தியாவின் முதுகெலும்பாக கருதப் பட்டு இப்போது கவனிப்பாரற்று கிடக்கும் விவசாயத் துறை 2.60% சதவீதம் வளர்ச்சி பெறும் என்று எதிர்பார்க்க படுகிறது.//
தற்போதய நகரமயமாக்கலில் இது சாத்தியம்னு நம்புறிங்களா?
எனகென்னவோ சாப்பாட்டுக்கு பதில் மாத்திரை வந்துரும்னு தோணுது
//(அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உட்பட) பொருளாதார பின்னடைவை சந்திக்கின்ற வேளையில், இந்தியா ஒரு மிதமான வளர்ச்சியை சந்திக்கவிருப்பது, ஆறுதலளிக்கும் ஒரு விஷயம்தானே?//
காரணம் இந்தியா உற்பத்தியை நம்பி இருக்கிறது, தனிமனித பொருளாதார சீரமைப்பு விழிப்புணர்வும் அரசு ஏற்படுத்தினால் இந்தியா தான் நம்பர் ஒன்
தாக்குப்பிடித்தால் சந்தோஷமே...
//ஒரு காலத்தில் இந்தியாவின் முதுகெலும்பாக கருதப் பட்டு இப்போது கவனிப்பாரற்று கிடக்கும் விவசாயத் துறை 2.60% சதவீதம் வளர்ச்சி பெறும் என்று எதிர்பார்க்க படுகிறது//
நல்ல செய்தி என்ன மாதிரி விவசாயிங்களுக்கு
அன்புள்ள வால்பையன்
பின்னூட்டங்களுக்கு நன்றி
//இந்த கால்த்து பசங்க ரொம்ப உஷாரு.
பைக்க விட்டுட்டு பஸ்ஸுல போறோமாக்கும்!
சிக்கனனும் ஆச்சு, பிகர் பார்த்தா மாதிரியும் ஆச்சு.
ஒரு கல்லுல ரெண்டு மாங்கா//
ரொம்ப உஷாருதான். :)
ஒரு பொருளாதாரவாதியாக எனது கருத்து " பைக்கிலிருந்து பஸ்சுக்குத்தானே மாறுகிறீர்கள்? முந்தைய காலத்தைப் போல சைக்கிளுக்கு (நடை பயணத்திற்கு) அல்லவே? எனவே தனியார் செலவினங்கள் (சற்று குறைந்தாலும்) தொடரும்."
அன்புள்ள வால்பையன்
//இதுல மக்களுக்கு எவ்வளவு?
அரசியல்வாதிகளுக்கு எவ்வளவு?//
இந்திய நடைமுறை ஓரளவுக்கு அறிந்தவனாக ஒரு கணிப்பு: சுமார் 35 சதவீதம் அரசியல்வாதிகளுக்கு, 30 சதவீதம் அரசு அதிகாரிகள் மற்றும் கீழ்நிலை ஊழியர்களுக்கு, 30 சதவீதம் காண்ட்ராக்ட் பெறும் தொழில் அதிபர்களுக்கு, கடைசி ஐந்து சதவீதம் மக்களுக்கு (ஏதோ போனா போகுதுன்னு)
பொருளாதாரவாதியாக ஓர் கருத்து: பணம் சுவிஸ் வங்கிக்குள் முடங்காமல், இந்தியாவிலேயே சுழன்று கொண்டிருந்தால், பொருளாதார வளர்ச்சிக்கு மறைமுகமாகவாவது உதவும்.
அன்புள்ள வால்பையன்
//தற்போதய நகரமயமாக்கலில் இது சாத்தியம்னு நம்புறிங்களா?//
2.6 சதவீதம் என்பது மிகக் குறைந்த வளர்ச்சியே. பருவமழை ஓரளவுக்கு சரியாக இருக்கும் பட்சத்தில் இது சாத்தியமே.
//எனகென்னவோ சாப்பாட்டுக்கு பதில் மாத்திரை வந்துரும்னு தோணுது//
இதற்கு பல வருடங்கள் ஆகலாம்.
அன்புள்ள வால்பையன்
//தனிமனித பொருளாதார சீரமைப்பு விழிப்புணர்வும் அரசு ஏற்படுத்தினால் இந்தியா தான் நம்பர் ஒன்//
கண்டிப்பாக. சகலரும் பயன் பெறும் வகையில் ஏற்படுகின்ற பொருளாதார சீர்திருத்தங்கள், வளர்ச்சியை பல ஆண்டுகளுக்கு தக்க வைத்துக் கொள்ள உதவும்.
நன்றி
அன்புள்ள அர்னோல்ட் எட்வின்
பின்னூட்டத்திற்கு நன்றி
//தாக்குப்பிடித்தால் சந்தோஷமே...//
நிச்சயமாக. நம்புவோம்.
அன்புள்ள கபீஷ்
பின்னூட்டத்திற்கு நன்றி
//நல்ல செய்தி என்ன மாதிரி விவசாயிங்களுக்கு//
எங்க என்ன விட்டுட்டீங்களே? நம்ம மாதிரி விவசாயிகளுக்கு என்று சொல்லுங்க. (சொம்பு ஞாபகம் போகலியா?) :-))))).
அப்புறம் சீரியஸா ஒரு விஷயம். என்னோட ஒரு அறிவாளி நண்பர் இரண்டு வருடங்களுக்கு முன்பே சொன்ன ஆருடம் இது. "இன்று கம்ப்யுட்டரை நம்பி இருப்பவர்கள் கலப்பையை நம்பும் காலம் விரைவில் வரும்" அவர் சொன்னதில் பாதி பலித்து விட்டது.
நன்றி
//என்னோட ஒரு அறிவாளி நண்பர் இரண்டு வருடங்களுக்கு முன்பே சொன்ன ஆருடம் இது. "இன்று கம்ப்யுட்டரை நம்பி இருப்பவர்கள் கலப்பையை நம்பும் காலம் விரைவில் வரும்" அவர் சொன்னதில் பாதி பலித்து விட்டது//
அப்போ இது நான் சொன்னது இல்ல நான் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப முன்னாடியே சொல்லிட்டேன்
அன்புள்ள கபீஷ்
//அப்போ இது நான் சொன்னது இல்ல நான் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப முன்னாடியே சொல்லிட்டேன்//
எப்ப சொன்னீங்க? கம்ப்யுட்டர் கண்டு பிடிக்கறதுக்கு முன்னாடியேவா? நீங்கதான் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப புத்திசாலியாச்சே? :)
//எங்க என்ன விட்டுட்டீங்களே? நம்ம மாதிரி விவசாயிகளுக்கு என்று சொல்லுங்க. (சொம்பு ஞாபகம் போகலியா?) :-))))).
//
எனக்குத் தெரியாதே நீங்களும் விவசாயின்னு. சொம்பு இப்போ நம்ம கைவசந்தான் :-)
இதோ இப்போ சொல்றேன் தீர்ப்பு இந்தியா தாக்குப் பிடிக்கும் எவ்வளவோ பண்ணிட்டோம் இதப் பண்ண மாட்டோமா ?
(வெங்கட் பிரபு மாதிரி படிங்க (வேற பிரபு குரல்ல படிக்காதீங்க :-):-) ஏன்னு சொல்லனுமா?)
//எப்ப சொன்னீங்க? கம்ப்யுட்டர் கண்டு பிடிக்கறதுக்கு முன்னாடியேவா?
//
நான் கணினி துறையில் வேலையில் சேர்ந்த போதே நம்பலேன்னா உங்க கையில கற்பூரத்த ஏத்தி அதாவது கொளுத்தி சத்தியம் பண்றேன்
//நீங்கதான் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப புத்திசாலியாச்சே? :)
//
ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப புகழாதீங்க வெக்க வெக்கமா வருது :-)
அன்புள்ள கபீஷ்
//இதோ இப்போ சொல்றேன் தீர்ப்பு இந்தியா தாக்குப் பிடிக்கும் எவ்வளவோ பண்ணிட்டோம் இதப் பண்ண மாட்டோமா ?//
உண்மையிலேயே நல்ல தீர்ப்புதான் (இதுக்குத்தான் சொம்ப எப்பயும் கையிலேயே வச்சுருக்கனும்னு சொல்றது :))
அப்புறம் சரித்திரம் சொல்லும் பாடம்: இந்தியா இதுவரை எல்லாவற்றையும் சமாளித்து வெற்றிகரமாக கடந்தும் வந்துள்ளது. கடைசி உதாரணம்: உணவு தட்டுப்பாடு நீங்கி பசுமைப் புரட்சியின் மூலம் தன்னிறைவு பெற்றது. அனைவரும் மனம் வைத்தால், இந்தியா நிச்சயமாக தாக்குப் பிடிக்கும்.
//(வெங்கட் பிரபு மாதிரி படிங்க (வேற பிரபு குரல்ல படிக்காதீங்க :-):-) ஏன்னு சொல்லனுமா?)//
எனக்கு தெரிஞ்சதெல்லாம் திருப்பதியில் வாழும் வெங்கடேசப் பிரபுதான். நீங்க பாட்டுக்கு எதையாவது சொல்லிட்டு அப்புறம் பதிவுக்கு சம்பந்தம் இல்லைன்னு சொல்லிடாதீங்க.
நன்றி.
//எப்ப சொன்னீங்க? கம்ப்யுட்டர் கண்டு பிடிக்கறதுக்கு முன்னாடியேவா?//
நான் இயற்கை விவசாயத்துல ஒரு பல்கலைகழகத்துல பயிற்சி எடுத்தே மூணு வருசத்துக்கு மேல ஆகுது :-)
அன்புள்ள கபீஷ்
//நான் கணினி துறையில் வேலையில் சேர்ந்த போதே நம்பலேன்னா உங்க கையில கற்பூரத்த ஏத்தி அதாவது கொளுத்தி சத்தியம் பண்றேன்//
எங்கையில வேணாம். கணினி மேல கொளுத்தி சத்தியம் பண்ணிக்கோங்க. (எப்படியும் கணினித் துறைக்கு கஷ்டம்னு ஆயிப் போச்சு) :)
//எனக்கு தெரிஞ்சதெல்லாம் திருப்பதியில் வாழும் வெங்கடேசப் பிரபுதான்//
யு மீன் வெங்கி? அவர் குரல் இல்லைங்க சரோஜா படத்துல வர்ற வெங்கட் பிரபு
அன்புள்ள கபீஷ்
//ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப புகழாதீங்க வெக்க வெக்கமா வருது :-)//
இப்பயே எல்லா வெட்கத்தையும் பட்டுடாதீங்க. இன்னும் உங்கள நாடே புகழ்ற காலம் கூட வரலாம். ஏன் அடுத்த உதயமுர்த்தியாகக் கூட நீங்கள் இருக்கலாம். இயற்கை விவசாயம் படித்த கணினி நிபுணர் நீங்கள் அல்லவா?
//யு மீன் வெங்கி? அவர் குரல் இல்லைங்க சரோஜா படத்துல வர்ற வெங்கட் பிரபு//
சாரி. எனக்கு சினிமா GK கொஞ்சம் கம்மி.
//இயற்கை விவசாயம் படித்த கணினி நிபுணர் நீங்கள் அல்லவா?//
ஐயோ இந்த குண்டூசி விக்கறவங்கல்லாம் தொழிலதிபருங்க மாதிரி. கணிணி துறையில் வேலை பாக்கரவங்ககளை எல்லாம் கணிணி நிபுணர்னு ஹா ஹா
உதயமூர்த்தியை என்கூட ஒப்பிட்டு அவமானப் படுத்திட்டிங்க (எனி கோபம் அவர் மேல?)
Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் சேர்த்துள்ளோம்.
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.
நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்
இந்தியாவை விட சின்ன நாடுகலான பங்ளாதேசும்,வியட்னாமும் ஆயத்த ஆடை தயாரிப்பில் முன்ன போயிட்டாங்க.
அதுக்கு முன்னாடியே சீனாவும் பாக்கும் இருக்காங்க.
இதுல ஒரே நல்ல விசையம் என்னான்னா
நம் நட்டுல இருக்க பல ஆறுகள் தப்பிக்கும் அவ்வளவே.
வால்,கபீஷ்,நீங்க மூனு பேரும் சேந்து நல்ல பதிவ இப்படி கும்மி பதிவாக்கிட்டீங்களே.
அன்புள்ள கார்த்திக்
பின்னூட்டத்திற்கு நன்றி
//இந்தியாவை விட சின்ன நாடுகலான பங்ளாதேசும்,வியட்னாமும் ஆயத்த ஆடை தயாரிப்பில் முன்ன போயிட்டாங்க.
அதுக்கு முன்னாடியே சீனாவும் பாக்கும் இருக்காங்க.
இதுல ஒரே நல்ல விசையம் என்னான்னா
நம் நட்டுல இருக்க பல ஆறுகள் தப்பிக்கும் அவ்வளவே.//
உண்மைதான். இந்தியாவில் ஆயத்த ஆடை தயாரிப்பதில் உள்ள சட்டச் சிக்கல்களால் நாம் பின்தங்கி விட்டோம். அதே சமயம் நமது நாட்டின் ஆறுகள் மாசுபடுவதில் இருந்து தப்பிக்கின்றன. இப்போது ரூபாய் மதிப்பு குறைந்திருப்பதால், இந்த துறை வருவாய் ஈட்ட கொஞ்சம் வாய்ப்பு உள்ளது.
//வால்,கபீஷ்,நீங்க மூனு பேரும் சேந்து நல்ல பதிவ இப்படி கும்மி பதிவாக்கிட்டீங்களே.//
மன்னிக்கவும். சுட்டி காட்டியதற்கு நன்றி. அதே சமயத்தில், நகைச்சுவையான சில பின்னூட்டங்கள் இது போன்ற சீரியசான பதிவுகள் இடும் போது ஏற்படுகிற இறுக்கமான மனநிலையை சற்று தளர்த்தி புத்துணர்வு அளிக்கின்றன என்பதே என் கருத்து. இருந்தாலும், இனி வரும் காலங்களில் பதிவின் பொருள் விட்டு முற்றிலும் விலகாமல் பின்னூட்டங்கள் இட முயற்சி செய்வோம்.
நன்றி.
மோடி நிச்சயம் ஏதோ நல்ல காரியங்களை செய்து கொண்டிருக்க வேண்டும். குஜராத்தில், புதிய வேலைவாய்ப்புகள் 1.7 லட்சம் , கோடிக்கணக்கில் புதிய முதலீடுகள், ஒரு தடவை சிதம்பரமும், மன்மோகன் சிங்கும் சென்று பார்த்து விட்டு வந்து, நாட்டு நலனுக்காக ஒரு அறிக்கை விட வேண்டும். செய்வார்களா?
உங்கள் மின்னஞ்சல் முகவரியை என் மின்னஞ்சல் முகவரி (samaruna at gmail dot com) என்ற முகவரிக்கு அனுப்பவும். நன்றி.
போதும்யா போதும் .. வேணாம்.. வலிக்குது.. அழுதுடுவேன்..
அன்புள்ள itsdifferent
பின்னூட்டத்திற்கு நன்றி
//மோடி நிச்சயம் ஏதோ நல்ல காரியங்களை செய்து கொண்டிருக்க வேண்டும். குஜராத்தில், புதிய வேலைவாய்ப்புகள் 1.7 லட்சம் , கோடிக்கணக்கில் புதிய முதலீடுகள், ஒரு தடவை சிதம்பரமும், மன்மோகன் சிங்கும் சென்று பார்த்து விட்டு வந்து, நாட்டு நலனுக்காக ஒரு அறிக்கை விட வேண்டும். செய்வார்களா?//
குஜராத் மாடல் இந்தியா முழுக்க சரி வருமா என்று தெரியவில்லை. இருந்தாலும், குஜராத்தைப் போல விரைவான முடிவு எடுக்கும் ஒரு மத்திய அரசாங்கம் இப்போது இந்தியாவிற்கு தேவை. அமெரிக்காவைப் போல கட்சி வேறுபாடுகளை கொஞ்ச நாளைக்கு மூட்டை கட்டி வைத்து, அனைவரும் பொருளாதார வளர்ச்சிக்கு பாடுபட்டால் தேவலை.
நன்றி.
அன்புள்ள சாம்
பின்னூட்டத்திற்கு நன்றி.
//உங்கள் மின்னஞ்சல் முகவரியை என் மின்னஞ்சல் முகவரி (samaruna at gmail dot com) என்ற முகவரிக்கு அனுப்பவும். நன்றி.//
என்னுடைய இ-மெயில் maximumindia@gmail.com உங்களுக்கு அனுப்பியுள்ளேன். நன்றி.
// மன்னிக்கவும். சுட்டி காட்டியதற்கு நன்றி. //
அண்ணா மன்னிக்கவும் நீங்க என்ன தப்பா புரிஞ்சுகிட்டீங்க.நான் இதை தப்புன்னு சொல்லலை.
உண்மைய சொல்லனும்னா எனக்கு இந்தமாதிரி பின்னூட்டம் போட வராது.
// இது போன்ற சீரியசான பதிவுகள் இடும் போது ஏற்படுகிற இறுக்கமான மனநிலையை சற்று தளர்த்தி புத்துணர்வு அளிக்கின்றன என்பதே என் கருத்து //
என்னோட கருத்தும் இதுதான்.
அதிலும் நம்ம பொதுஜனம் பின்னூடம்னா ரொம்ப ரசிச்சு படிப்பேன்.
இந்த சொம்பு மேட்டர் கூட நல்லாதான் இருக்கு.
அதனால இது தொடரனும்னு வேண்டிக்குரேனுங்க சாம்யோவ்
அன்புள்ள கார்த்திக்
விளக்கத்திற்கு நன்றி
//உண்மைய சொல்லனும்னா எனக்கு இந்தமாதிரி பின்னூட்டம் போட வராது.//
எனக்கும் கூட.
//அதிலும் நம்ம பொதுஜனம் பின்னூடம்னா ரொம்ப ரசிச்சு படிப்பேன்.//
பொதுஜனம் மட்டுமல்ல, கபீஷ் மற்றும் வால் பின்னூட்டங்களுக்கும் நான் ரசிகன். காரணம் இவர்களது பின்னூட்டங்களில் ஒரு வித "தீ" இருக்கும். புத்திசாலித் தனம் இருக்கும். பிரச்சினைகள் வித்தியாசமான கோணத்தில் அணுகப் படும். பொதுவாக நம்மைப் போன்ற சற்று நிதானமானவர்களுக்கு இவர்களது "வேகம்" பிடிக்கும்.
//இந்த சொம்பு மேட்டர் கூட நல்லாதான் இருக்கு.
அதனால இது தொடரனும்னு வேண்டிக்குரேனுங்க சாம்யோவ்//
நீங்கள் பாராட்ட வேண்டியது மற்றும் கேட்டுக் கொள்ள வேண்டியது வால் மற்றும் கபீஷிடம்தான்.
நன்றி
எல்லோரும் படிக்க வேண்டிய பதிவு. கும்முறதுதான் படத்தோட...இல்ல பதிவோட ஒட்டலை.
அன்புள்ள ராஜநடராஜன்
தங்கள் கருத்து கவனத்தில் கொள்ளப் படும்.
மிக்க நன்றி.
Sorry, MI and readers of this post,I really feel that i spoiled the intention of comments! Will try(?!) to avoid in good posts unfortnuately i read only good posts or good persons' posts :-(
அன்புள்ள கபீஷ்
//Sorry, MI and readers of this post,I really feel that i spoiled the intention of comments! //
யாருமே வருத்தப் படுவதற்காக நான் இங்கே பதிவுகளை இடுவதில்லை. அறிந்த சில விஷயங்களை பகிர்ந்து கொள்வதற்காகவும், சில மகிழ்வான தருணங்களை பகிர்ந்து கொள்வதற்காக மட்டுமே இந்த பதிவு வலை. இந்த குறிப்பிட்ட பதிவில் ஏதேனும் தவறு நடந்திருந்தால், அதற்கு நான், நான் மட்டுமே பொறுப்பு. எனவே, யாரும், குறிப்பாக கபீஷும் கார்த்திக்கும் எனக்காகவாவது தயவு செய்து வருத்தப் பட வேண்டாம்.
"பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டாம், தீர்வுகளில் கவனம் செலுத்துவோம் என்று இன்றுதானே பதிவிட்டிருக்கிறேன்."
எனவே அடுத்த பதிவில் இன்னும் நல்ல பின்னூட்டங்களை வழங்க முயற்சி செய்வோம் என்று மட்டுமே கூறி பழையதை முழுமையாக மறப்போம்.
//Will try(?!) to avoid in good posts unfortnuately i read only good posts or good persons' posts :-(//
கண்டிப்பாக நீங்கள் எனது பதிவுகளை தொடர்ந்து பார்க்க வேண்டும். பின்னூட்டங்களை இட வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.
நன்றி :-) :-)
//i read only good posts or good persons' posts :-(//
புரியுது, புரியுது
என் கடை ஏன் காத்து வாங்குதுன்னு புரியுது!
Post a Comment