
நிர்வாக மேலாண்மை படித்த ஒரு புத்திசாலியின் யோசனையின் படி காவலர்கள் எந்தெந்த பகுதிகளில் எந்தெந்த நேரங்களில் காவல் காக்க வேண்டும் என்று அறிவுரை செய்வதற்காக ஒரு திட்டப் பிரிவு (Planning Department) அமைக்கப் பட்டது. அந்த குழுவில் பணி செய்வதற்காக இரண்டு பேர் (Developers) அமர்த்தப் பட்டனர். மேலும் சில நாள் கழிந்தது. இந்த காவலாளிகள் சரியான நேரத்தில் பணிக்கு வருகிறார்களா என்றும் சரியான நேரத்தில் பணியை முடிக்கிறார்களா என்று கவனிப்பதற்காக ஒரு டைம் கீப்பர் பணியமர்த்தப் பட்டார்.
உள்ளூர் காவலர்களுக்கு காவல் பணியில் பயிற்சி அளிக்க ஒரு ஓய்வு பெற்ற போலீஸ் (Domain Expert) நியமிக்கப் பட்டார். பின்னர், இவர்களின் பணிகளைப் பற்றி உள்ளூர் தலைகளுக்கும் மாவட்ட போலீசுக்கும் தகவல் தெரிவிக்க ஒரு ரிலேசன்ஷிப் மேனேஜர் நியமிக்கப் பட்டார்.
இவர்களுக்கு மாதாமாதம் சம்பளம் தரவேண்டுமே? எனவே ஒரு சம்பள குமாஸ்தா, கணக்குகளை சரிபார்க்க ஒரு தணிக்கையாளர், அலுவலகத்தை மேற்பார்வை இட ஒரு உதவி நிர்வாக அலுவலர் இவர்கள் எல்லாரையும் மேய்க்க ஒரு ப்ராஜெக்ட் ஹெட் ஆகியோரும் நியமிக்கப் பட்டனர்.
இப்படியே கொஞ்ச நாள் போனது. எல்லாருக்கும் சம்பளம் கொடுத்து பஞ்சாயத்திற்கு கட்டுப் படியாக வில்லை. செலவுகளை கட்டுப் படுத்த பக்கத்திலிருக்கும் ஒரு கன்சல்டன்சியின் உதவி கோரப் பட்டது. அவர்கள் "ஊரைக் காவல் காக்கும் இந்த ப்ரொஜெக்ட்டை" ஆய்வு செய்து சில பரிந்துரைகளை அளித்தனர். அதன் படி ஊரைக் காவல் காக்க முதன் முதலாக நியமிக்கப் பட்ட ஐந்து ஊர்காவலர்களும் பணி நீக்கம் செய்யப் பட்டனர்.
இந்த கதையின் நீதி - விளக்க வேண்டியதில்லை என்று நினைக்கிறேன்.
நன்றி.
பின்குறிப்பு: இந்த கதை கடந்த சில வருடங்களில் வெகுவாக ஆட்களை வேலைக்குச் சேர்த்து இப்போது அதே வேகத்தில் நீக்கும் (கிட்டத் தட்ட) அனைத்து வணிக நிறுவனங்களுக்கும் பொருந்தும்.
7 comments:
இதைவிட புரியறாப்புல வேற எப்படியும் சொல்ல முடியாது. சூப்பர்
அன்புள்ள நந்து f/o நிலா
முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.
எனக்கு ஒண்ணு மட்டும் புரியல
ஒருவர் வேலை செய்கிறாரா என்று கவனிக்க இன்னொருவர், அவரை கவனிக்க மற்றொருவர். இந்த உலகில் நேர்மை என்ற வார்த்தை அர்த்தம் தொலைத்து விட்டதா?
அன்புள்ள வால்பையன்
கருத்துரைக்கு நன்றி
//எனக்கு ஒண்ணு மட்டும் புரியல
ஒருவர் வேலை செய்கிறாரா என்று கவனிக்க இன்னொருவர், அவரை கவனிக்க மற்றொருவர். இந்த உலகில் நேர்மை என்ற வார்த்தை அர்த்தம் தொலைத்து விட்டதா?//
கடந்த இரண்டு மூன்று வருடங்களில் வணிக நிறுவனங்கள் அடித்த கூத்து சொல்லி மாளாது. ஒரு கிரிக்கெட் மாட்ச்சை ஒரு நடிகை பார்க்க வேண்டுமென்பதற்காக, ஒரு கம்பெனி (அந்த கம்பெனி தலைவர்) தனி விமானம் அனுப்பி அவரை வரவழைத்தது. இந்த பணம் யாரோடது? அப்பாவி பங்குதாரர்களின் பணம் தண்ணீராய் செலவழிக்கப் பட்டதும் இப்போதைய பொருளாதார வீழ்ச்சிக்கு ஒரு முக்கிய காரணம்.
நன்றி
Dear Observer
It will be done
Super
Dear Siva
Thanks for the compliments :)
Post a Comment