
ஒரு மனிதனின் உடலில் தேவையில்லாத அதிகப்படியான கொழுப்பு வயிற்றை சுற்றி படிவதன் காரணமாகவே தொப்பை உருவாகுகிறது. இவ்வாறு அதிக கொழுப்பு உருவாகுவதற்கு காரணங்கள்.
1. அதிகப் படியான கலோரி உணவு.
2. ஜீரண சக்தி பாதிக்கப் படுதல்
3. தேவைக்கு குறைந்த உடல் பயிற்சி
4. அளவு குறைந்த தூக்கம் மற்றும் ஓய்வு
5. அதிகப் படியான மன அழுத்தம்.
இந்த லிஸ்டை படித்தாலே புரிந்து விடும் ஏன் போலீஸ்காரர்களுக்கு அதுவும் கீழ்நிலையில் பணிபுரிபவர்களுக்கு அதிக தொப்பை ஏற்படுகிறது என்று.
சரிவர முறைப் படுத்தப் படாத பணி நேரங்களின் காரணமாக தூக்கமின்மை மற்றும் சரியான உடல் பயிற்சி மேற்கொள்ள முடியாதது, வீட்டு சாப்பாடு சரியான நேரத்தில் உண்ண முடியாமல், வீட்டிற்கு வெளியே ஜங் உணவு எனச் சொல்லப் படும் சத்தில்லாத அதே சமயம் அதிக கலோரி உள்ள உணவுகளை நேரம் தவறிய நேரத்தில் சாப்பிடுவது, மன அழுத்தம் மிக்க பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது போன்றவையே இவர்களுக்கு தொப்பை வர காரணமாக இருக்கிறது.
பொதுவாக பலராலும் கேலிச் செய்யப்படுவது போல அதிக உணவு மற்றும் சோம்பேறித்தனம் இந்த நிலைக்கு முக்கிய காரணம் அல்ல. நல்ல தூக்கம், ஓய்வு எடுத்துக் கொள்ளல் மற்றும் உடற் பயிற்சி செய்ய தேவையான நேர வசதி இருப்பதாலேயே போலீஸ் மேலதிகாரிகளில் பலர் நல்ல உடற்கட்டுடன் இருக்க முடிகிறது என்பது கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.
இந்த தொப்பையினால் ஒருவருக்கு ஏற்படும் தொந்தரவுகள் உயர் ரத்த அழுத்தம், இதய நோய் மற்றும் சாக்கரை வியாதி போன்ற உயிர்கொல்லி வியாதிகள். எனவே, அடுத்த முறை தொப்பையுடன் ஒரு போலீஸ்காரரைப் பார்த்தால், அவருக்காக பரிதாபப் படுவோம்.
நம் நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள இந்த நிலையில், காவலர்களின் உடல்நலனை கருத்தில் கொள்வது அரசின் முக்கிய கடமை ஆகும். காவல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புதல், அதிகப் பணியிடங்களை உருவாக்குதல், பணிகளின் நேரத்தை முறைப் படுத்தல், போதுமான உடல் மற்றும் மனப் பயிற்சி அளித்தல் என காவல்துறையை சீரமைக்கும் பணியை அரசு செய்ய வேண்டும் என்பது என் கருத்து.
நன்றி.
பின்குறிப்பு: மும்பையில் கடந்த இரு மாதங்களாக, பொது மக்களின் பாதுகாப்புக்காக, இரவு பகல் பாராமல், பல மணி நேரம் தொடர்ந்து சாலையில் வாகனத் தணிக்கை மற்றும் இதர பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் நாட்டின் காவலர்களுக்கு ஒரு பணிவான சல்யூட் .
9 comments:
good post !!!
// சரியான உடல் பயிற்சி மேற்கொள்ள முடியாதது,//
இவங்கள விட அதிகமா ரானுவத்துக்காரங்க உழைக்கறாங்க அவங்களுக்கு ஏன் தொப்ஸ் வரதில்ல .அடுத்தவங்கள சொல்லுறதுக்கு முந்தி நானும் குறைக்கணும்.குறசிட்டு வந்து மீட் பண்ணுறேன்
அன்புள்ள செந்தழல் ரவி
பின்னூட்டத்திற்கு நன்றி
அன்புள்ள கார்த்திக்
பின்னூட்டத்திற்கு நன்றி
//இவங்கள விட அதிகமா ரானுவத்துக்காரங்க உழைக்கறாங்க அவங்களுக்கு ஏன் தொப்ஸ் வரதில்ல .//
ராணுவத்தினர் நேரவிதி முறைகளை கடுமையாக பின்பற்றுகிறார்கள். மேலும் சிறந்த உடற்பயிற்சி முறைகளை தொடர்ந்து பின்பற்றுகிறார்கள். அதனால்தான் அவர்களுக்கு தொப்பை வருவதில்லை. அவர்களைப் போலவே போலீசாருக்கும் உடல் பயிற்சி வழங்கிட வேண்டும்.
//அடுத்தவங்கள சொல்லுறதுக்கு முந்தி நானும் குறைக்கணும்.குறசிட்டு வந்து மீட் பண்ணுறேன்//
உங்களுக்கு தொப்பையா? கண்ணாலம் கூட இன்னும் ஆகலேயே? பாத்து சீக்கிரம் குறைங்க.:)
தொப்பைக்கு சரியான காரணம் சொல்லி உள்ளீர்கள். அவர்களாக குறைத்தால் தான் உண்டு. இல்லை பிரியாணி பொட்லம் வாங்கி வரும்போது நாய் குரைத்தால் ஓடும் போது குறைக்க சாரி குறைய வைப்பு உண்டு.
அன்புள்ள பொதுஜனம்
பின்னூட்டத்திற்கு நன்றி. காவலர்களின் உடல் நலன் அவர்களுக்கு மட்டுமல்ல நாட்டின் பாதுகாப்புக்கும் அவசியம். உடனடியாக காவல் துறை சீர்திருத்தங்களை அமல் படுத்த வேண்டும்.
நன்றி
சரிதான். ஒ.சி. காபி, டீ, கையேந்தி பவன் டிபன் என்று கண்டபடி சாப்பிடும் பல பேரை சென்னையில் பார்க்கலாம். காசு கொடுத்து சாப்பிட்டால் நிறைய சாப்பிட மாட்டார்கள்.
எந்த கூச்சமும் இல்லாமல் சில பேர் பார்சல் கூட வாங்கி செல்வார்கள்.
அன்புள்ள வண்ணத்துப்பூச்சியார்
கருத்துரைக்கு நன்றி. (உங்கள் பெயர் அழகாக உள்ளது)
நீங்கள் சொல்வது போல, ஓசியில் கிடைத்தால் எதை வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்ற மனப் போக்கு மாறவேண்டும்.
நன்றி.
Hi,
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை www.ntamil.com ல் சேர்த்துள்ளோம்.
இதுவரை இந்த www.ntamil.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.
நட்புடன்
nTamil குழுவிநர்
Post a Comment