Thursday, December 15, 2011

நேர்ந்து விடப் பட்டவர்கள் - இவர்களும் இந்தியர்களே!


எனது வங்கியில் புதியதாக கணக்கு துவக்க விண்ணப்பித்த ஒரு நடுத்தர வயது பெண்மணி, தனது விண்ணப்பத்தில் தந்தை/கணவர் பெயரை நிரப்ப வில்லை. ஏன் நிரப்ப வில்லை என்ற என் கேள்விக்கு அந்த பெண்ணிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. பொதுவாகவே கல்வியறிவு மிகவும் குறைந்த வட கர்நாடக பகுதி என்பதால், அவரது விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய உதவி செய்த நபரை அழைத்து, கணவர் பெயரை நிரப்பும் படி அறிவுறுத்தினேன், . அந்த பெண்ணிற்கு இன்னும் திருமணமாக வில்லை என்று அந்த நபர் கூறினார். அதனால் என்ன, அவரது தந்தை பெயரை நிரப்புங்கள் என்று சற்று எரிச்சலுடன் கூறினேன்.

அவருக்கு தந்தையும் இல்லை என்றார் அவர். மேலும் எரிச்சலான நான் தந்தையை கேட்க வில்லை, தந்தையின் பெயரைத்தான் கேட்கிறேன் என்று கூறினேன். அதற்கு அவர், அந்த பெண்மணியின் பட்டப் பெயரை கவனிக்க வில்லையா என்று கேட்டார். அதற்கென்ன என்று நான் திருப்பிக் கேட்ட போது, அந்த (தேவதாசி) இனத்தை சேர்ந்தவர்கள் கடவுளுக்கு நேர்ந்து விடப் பட்டவர்கள் என்றும் அவர்களுக்கு தந்தையோ கணவரோ கிடையாது என்று கூறினார்.

இந்த காலத்திலும் இப்படியா என்று ஒரு நிமிடம் திகைப்பின் உச்சிக்கு சென்ற நான் அந்த பெண்ணைப் பார்த்த போது, அந்த பெண்ணின் முகத்தில் எந்த உணர்ச்சியையும் காண முடியவில்லை.

இவர்களும் இந்தியர்கள்தானே?

இந்தியாவின் இன்னொரு பக்கம் உள்ள இருபத்து ஒன்றாம் நூற்றாண்டின் "ஒளிரும் இந்தியா" இவர்களுக்கு என்ன பதில் கூறப் போகிறது?

நன்றி!

15 comments:

தி.தமிழ் இளங்கோ said...

வணக்கம்! அதன் பிறகு அவர் பெயரில் கணக்கு தொடங்கப்பட்டதா இல்லையா என்பதனையும் தெரிவித்து இருந்தால் இவரைப் போன்ற மற்றவர்களுக்கும் உதவியாக இருக்கும்.

Thomas Ruban said...

இந்தியாவில் இதேபோல் பல அவலங்கள் இருக்கிறது பெருமூச்சு விடுவதை தவிர வேறு என்ன செய்ய முடியும்.

வலை பக்கத்தில் நீண்ட நாட்களாக காணவில்லையே என்று நினைத்தேன்.
பகிர்வுக்கு நன்றி சார்.

Maximum India said...

நன்றி இளங்கோ!

எளிமையான சட்ட விதிமுறைகளில் நம்பிக்கை கொண்டவன் நான். அந்த பெண்மணியின் தாயாரின் பெயரை நிரப்பிய பிறகு அவரது கணக்கை துவக்க அனுமதித்தேன்.

நன்றி!

Maximum India said...

நன்றி தாமஸ் ரூபன்!

இந்தியாவின் இன்னொரு பக்கத்தை நேரடியாக பார்த்துக் கொண்டிருக்கும் நான் அவற்றை பதிய எனக்கு விருப்பம்தான் என்றாலும், இந்த பகுதியில் இன்டர்நெட் வசதி தரம் குறைந்து காணப் படுவதால், வலை பக்கம் அடிக்கடி வர இயல வில்லை..

நன்றி!

வால்பையன் said...

என்ன கொடுமை.

:(

வால்பையன் said...

// இன்டர்நெட் வசதி தரம் குறைந்து காணப் படுவதால்//

we miss you lot.

KARTHIK said...

வேதனையான உண்மைணா :-(((


// இன்டர்நெட் வசதி தரம் குறைந்து காணப் படுவதால்//

we miss you lot.

ஆமாம்....

Maximum India said...

நன்றி வால்பையன்!

//we miss you lot.//

நான் கூட!

Maximum India said...

நன்றி கார்த்திக்!

Advocate P.R.Jayarajan said...

நீண்ட நாட்கள் கழித்து வந்துள்ள உங்கள் ஒரு நிறைவான பதிவை வரவேற்கின்றேன்.

Advocate P.R.Jayarajan said...

இன்டர்நெட் தரமும், வாழ்க்கை தரமும் இன்னமும் உயராத பகுதிகளைக் இந்த இந்தியாவிற்கு நாளை குடியரசு தினம். வாழ்க மக்களாட்சி.

Advocate P.R.Jayarajan said...

//எளிமையான சட்ட விதிமுறைகளில் நம்பிக்கை கொண்டவன் நான்.//

சட்டங்கள் மக்களுக்காக இயற்றப்பட்டவை. அவை நடைமுறைகள் என்ற பெயரில் மக்களின் நியாயமான செயல்பாட்டுக்கு தடை விதித்து விடக் கூடாது. சூழலுக்கேற்ற தங்கள் முடிவு உடன் பாராட்டுதலுக்கு உரியது.

Advocate P.R.Jayarajan said...

//அந்த பெண்ணின் முகத்தில் எந்த உணர்ச்சியையும் காண முடியவில்லை.//

வேதனை..

Naresh Kumar said...

நல்ல பதிவு! சமூகத்தில் இன்னும் இந்தப் பழக்கங்கள் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றது!

dinesh said...

good post sir

Blog Widget by LinkWithin