
நீங்கள் கொஞ்சம் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ரிலாக்ஸ் செய்து கொண்டது, உங்கள் மூளையை (உடலை) சுறுசுறுப்பாக்கி, மென்பொருள் பிரச்சினையை எளிதில் தீர்க்க உதவி இருக்கிறது அல்லவா? இதே போன்ற ஒரு ரிலாக்சான மனநிலை வாழ்நாள் முழுக்க தொடரும் பட்சத்தில், வாழ்கையின் பல பிரச்சினைகளுக்கும் நம்மால் எளிதில் தீர்வு காண முடியும் இல்லையா?
மனதை எப்போதும் ரிலாக்சான நிலையில் வைத்துக் கொள்வதற்கு சில யோசனைகள் இங்கே.
உடற்பயிற்சி; உடலுக்கும் மனதுக்கும் நெருங்கிய தொடர்பு எப்போதுமே உண்டு. வலுவான உடல் அமைப்பு மன வலிமைக்கு மிகவும் அவசியம். அது மட்டுமல்லாமல், தொடர்ச்சியான சீரான உடற்பயிற்சி மனதை இலகுவாக்குகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். ஒரு வாரத்தில் ஐந்து நாட்கள், ஒரு நாளுக்கு முப்பது நிமிடங்கள் வீதம் உடலுக்கு மிதமான பயிற்சி கொடுப்பது நல்லது என்றும் கூறப் படுகிறது. மெல்லிய ஓட்டம், நடைபயிற்சி, எளிய உடற்பயிற்சி ஆகியவற்றை நாம் செய்யலாம்.
மனப் பயிற்சி: பலவிதமான தியான முறைகள் பல பெரியவர்களால் பரிந்துரைக்கப் படுகிறது. இவற்றால் மனதுக்கும் உடலுக்கும் பல நன்மைகள் உண்டு என்றும் கூறப் படுகிறது. ஆனாலும், எனக்கு தியானத்தில் தனிப்பட்ட முறையில் அதிக பரிச்சயமில்லை. எனக்குத் தெரிந்த வகையில், மனதை ஒரு நாளைக்கு குறைந்தது முப்பது நிமிடங்கள் மனதை அமைதியாக மற்றும் லேசாக வைத்துக் கொள்ள பயிற்சி எடுத்துக் கொள்வது நல்லது.
அலுவலக நேரத்தில் சிறிய இடைவெளிகள்: தொடர்ந்து வேலையிலேயே முழுகி கிடைக்காமல், அவ்வப்போது இருக்கையை விட்டு எழுந்து சில நிமிடங்கள் நடந்து வருவது நல்லது. அலுவலக நண்பர்களுடன், சிறிய அரட்டை, நகைச்சுவை பரிமாற்றம் ஆகியவை உதவும். சிலர் மூச்சுப் பயிற்சி (Deep Breathing), சோம்பல் முறிப்பது போன்றவற்றைக் கூட செய்வார்கள்.
இதர பழக்கங்கள்: அலுவலகம், வீடு, இரண்டுக்குமிடையே பயணம் என்றே இருக்காமல், ஒருநாளில், சில சில இதர நல்ல பழக்கங்கள் இருப்பது மனநிலையை லேசாக்க உதவும். அதாவது, விளையாட்டுக்கள், புத்தகம் படிப்பது, மியூசிக் கேட்பது, ஓவியங்கள் வரைதல் போன்றவை.
ஒரு நேரத்தில் ஒரே கவனம்: எல்லாவற்றுக்கும் கடைசியாக ஆனால் மிக முக்கியமாக, எந்த ஒரு வேலை செய்தாலும், அதிலேயே முழு மனதையும் செலுத்துவது நல்லது. சாப்பிடுவது, மியூசிக் கேட்பது, அலுவலக பணிகள், படிப்பது, முக்கியமாக வாகனம் ஓட்டுவது போன்ற சமயங்களில் தனது முழுக் கவனம் செலுத்த பயிற்சி மேற்கொள்வது நல்லது.
மேற்சொன்ன பயிற்சிகள் மனதை ரிலாக்ஸ் ஆகா வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.
வெளியே எவ்வளவு பிஸியாக இருந்தாலும், உள்ளுக்குள் மனதை அமைதியாக வைத்துக் கொள்வதிலேயே ஒருவரின் வெற்றியின் ரகசியம் அடங்கியிருக்கிறது.
நன்றி.
12 comments:
வேலைகளுக்கு மத்தியில் ப்ளாக் படிப்பதும் ஒரு ரிலாக்ஸ் தான், ஆனாலும் கொஞ்சம் நடந்து பக்கத்து டேபிளுக்கு போய் அரட்டை அடிப்பது ஒரே இடத்தில் அம்ர்ந்திருக்கும் சலிப்பை போக்கும்.
(நம்ம சீட்டு சூடாகுதுன்னு பார்த்தா டோட்டலா சீட்டு கிழிஞ்ச்சிரும் போலருக்கே)
அன்புள்ள வால்பையன்
//வேலைகளுக்கு மத்தியில் ப்ளாக் படிப்பதும் ஒரு ரிலாக்ஸ் தான், //
கண்டிப்பாக. பதிவுலகம் நல்ல பயனுள்ள பொழுதுபோக்காகவே இருக்கிறது. .
//(நம்ம சீட்டு சூடாகுதுன்னு பார்த்தா டோட்டலா சீட்டு கிழிஞ்ச்சிரும் போலருக்கே)//
ஆமாம் இந்த காலத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். கொஞ்ச நேரம் சீட்டு காலியா இருந்தா, யாரவது வந்து பிடிச்சுக்குவாங்க. :)
நன்றி
//வேலைகளுக்கு மத்தியில் ப்ளாக் படிப்பதும் ஒரு ரிலாக்ஸ் தான், //
கண்டிப்பாக. பதிவுலகம் நல்ல பயனுள்ள பொழுதுபோக்காகவே இருக்கிறது. .
கருத்துரைக்கு நன்றி ஷாஜி
//கண்டிப்பாக. பதிவுலகம் நல்ல பயனுள்ள பொழுதுபோக்காகவே இருக்கிறது. .//
உண்மைதான் ஷாஜி.
நன்றி
மனதை பாசிடிவ் ஆக வைக்க இயல்வது நம் ஜீன்களில் புதைந்து உள்ளது என ஆய்வுகள் கூறுகின்றன. (உபயம் கார்டியன் பத்திரிக்கை. ). இருப்பினும் நம் பணி செய்யும் இடம், வீட்டு உறவுகள், நண்பர்கள் போன்ற விஷயங்கள் நம் மன நிலையை பாதிக்கின்றன. இதில் நண்பர் சொன்ன மன பயிற்சிகள் அவசியம். மனசை இரும்பாகவும் இலவம் பஞ்சாகவும் வைப்பது நம் மனதில் உள்ளது. ஒவ்வொரு வாழ்வும் ஒரு வரலாறு. அதில் சம்பவங்கள் முக்கியம் இல்லை. சம்பவம் நடந்தது தான் முக்கியம். சம்பவமே இல்லாத வாழ்க்கை வாழ்க்கையா ? மனசு கொஞ்சம் துவண்டால் உலகம் பிறந்தது எனக்காக என்று பாடுங்கள். ரஹ்மான் மியூசிக் நான் கேட்டதால்தான் அவர் பிரபலம் ஆயி ஆஸ்கர் வாங்கினார். நான் ஒட்டு போட்டதால்தான் மன் மோகன் பிரதமர் ஆனார். நன் டிவி பார்த்தால்தான் டெண்டுல்கர் இன்னும் வெளயடுரர். சூன பானா போ போ போய்டே இரு...
அன்புள்ள பொதுஜனம்
கருத்துரைக்கு நன்றி.
//மனதை பாசிடிவ் ஆக வைக்க இயல்வது நம் ஜீன்களில் புதைந்து உள்ளது என ஆய்வுகள் கூறுகின்றன. (உபயம் கார்டியன் பத்திரிக்கை. ). இருப்பினும் நம் பணி செய்யும் இடம், வீட்டு உறவுகள், நண்பர்கள் போன்ற விஷயங்கள் நம் மன நிலையை பாதிக்கின்றன. இதில் நண்பர் சொன்ன மன பயிற்சிகள் அவசியம். மனசை இரும்பாகவும் இலவம் பஞ்சாகவும் வைப்பது நம் மனதில் உள்ளது.//
உண்மைதான். பயிற்சி பல விஷயங்களை எளிமையாக்குதிறது. நாம் இது பற்றி பல முறை விவாதித்து இருக்கிறோம். தனிப் பட்ட முறையில், நான் இப்போது மனதை இலகுவாக்குவது பற்றிய (சுய வழி) பயிற்சியில்தான் ஈடுபட்டிருக்கிறேன். பார்க்கலாம், எந்த அளவுக்கு வெற்றி பெற முடியும் என்று.
//ஒவ்வொரு வாழ்வும் ஒரு வரலாறு. அதில் சம்பவங்கள் முக்கியம் இல்லை. சம்பவம் நடந்தது தான் முக்கியம். சம்பவமே இல்லாத வாழ்க்கை வாழ்க்கையா ? மனசு கொஞ்சம் துவண்டால் உலகம் பிறந்தது எனக்காக என்று பாடுங்கள். ரஹ்மான் மியூசிக் நான் கேட்டதால்தான் அவர் பிரபலம் ஆயி ஆஸ்கர் வாங்கினார். நான் ஒட்டு போட்டதால்தான் மன் மோகன் பிரதமர் ஆனார். நன் டிவி பார்த்தால்தான் டெண்டுல்கர் இன்னும் வெளயடுரர். சூன பானா போ போ போய்டே இரு...//
அருமையான சிந்தனை. நாம் வாழும் வரைதான் இந்த உலகம். எனவே, இந்த உலகம் நமக்கு ஒரு படி கீழேதான். இல்லையா?
நன்றி.
//ரஹ்மான் மியூசிக் நான் கேட்டதால்தான் அவர் பிரபலம் ஆயி ஆஸ்கர் வாங்கினார். நான் ஒட்டு போட்டதால்தான் மன் மோகன் பிரதமர் ஆனார். நன் டிவி பார்த்தால்தான் டெண்டுல்கர் இன்னும் வெளயடுரர்.//
எவ்வளவு அசால்ட்டாக எவ்வளவு பெரிய தத்துவத்தை அள்ளி தெளித்து விட்டு போய் கொண்டே இருகிறார் பொதுஜனம்.
தயவுசெய்து அவரை அடிக்கடி எழுத சொல்லுங்கள்.
அந்த வரிகளை படிக்கும் போது எனக்குள் புது ரத்தம் ஓடுவது போல் ஒரு உணர்வு
//எவ்வளவு அசால்ட்டாக எவ்வளவு பெரிய தத்துவத்தை அள்ளி தெளித்து விட்டு போய் கொண்டே இருகிறார் பொதுஜனம்.//
பேருலதான் பொதுஜனம். ஆளு கில்லாடில்ல.
//தயவுசெய்து அவரை அடிக்கடி எழுத சொல்லுங்கள்.//
எனக்குக் கூட ஆசைதான். நானே சொல்லி இருக்கிறேன். ஆனா, ஐயா ரொம்ப 'பிசி'ல்லே?
நல்ல பதிவு நண்பரே...நிச்சியமாக இந்த பயிற்சிகள்...நமது மன அழுத்தத்தை குறைக்க உதவும் என்று நம்புகிறேன்...பயிற்சிக்கு பிறகு எனது கருத்துக்களை தெரிவிக்கிறேன்....நன்றி...
அன்புள்ள ராமசுப்ரமணிய ஷர்மா
கருத்துரைக்கு நன்றி.
//நல்ல பதிவு நண்பரே...நிச்சியமாக இந்த பயிற்சிகள்...நமது மன அழுத்தத்தை குறைக்க உதவும் என்று நம்புகிறேன்...பயிற்சிக்கு பிறகு எனது கருத்துக்களை தெரிவிக்கிறேன்....நன்றி...//
கண்டிப்பாக முயற்சி செய்யுங்கள். இன்றைய இளைஞரின் (என்னையும் சேர்த்து) மிக முக்கிய பிரச்சினை இந்த மன அழுத்தம். பல முறை நான் யோசித்திருக்கிறேன், பழங்கால மனிதர்களெல்லாம் பாக்கியவான்கள் என்று. அவர்கள் கண்டிப்பாக நம் அளவுக்கு மன உளைச்சலில் அவதிப் பட்டிருக்க மாட்டார்கள் என்றே நினைக்கிறேன். நானும் கூட பதிவில் குறிப்பிடப் பட்டுள்ள சில பயிற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். நம்புவோம் இதில் நாம் வெல்வோம் என்று.
நன்றி.
மீண்டும் ஒரு உபயோகமுள்ள பதிவு. உங்கள் topic selection கண்டு பொறாமைப்படுகிறேன். தொடர்க உங்கள் பணி
அன்புள்ள நெற்குப்பை தும்பி ஐயா
//மீண்டும் ஒரு உபயோகமுள்ள பதிவு. உங்கள் topic selection கண்டு பொறாமைப்படுகிறேன். தொடர்க உங்கள் பணி//
நன்றி ஐயா! உங்கள் ஆசீர்வாதம் மற்றும் ஆதரவு தொடர வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி.
Post a Comment