
அந்த சம்பவம் இங்கே.
சென்ற நூற்றாண்டின் தொண்ணுறுகளில் பொதுத் துறை வங்கி ஊழியர்கள், கணினி மயமாக்குதலை கடுமையாக எதிர்த்து வந்தது அனைவரும் அறிந்ததே. அந்த காலகட்டத்தில், கணினி மயமாக்குதல் வங்கித் துறைக்கு எந்த அளவுக்கு பயனளிக்கும் என்பதை விளக்கும் பணி நந்தன் அவர்களிடம் ஒருமுறை கொடுக்கப் பட்டிருந்தது.
ஏ.டி.எம் சேவை, இணைய தள சேவை மற்றும் கிரெடிட் கார்டு சேவை போன்றவை வங்கித் துறையை இன்னும் மேலே எடுத்துச் செல்லும் என்று விளக்குவதற்காக, தன்னுடைய திறமை அனைத்தையும் செலவழித்து முன்கூட்டியே தயார் படுத்திக் கொண்ட நந்தன் அவர்களுக்கு ஆச்சரியமே காத்திருந்தது.
வங்கி ஊழியர்கள் முன்னே அவரளித்த விளக்க உரைக்கு, ஊழியர்களின் தலைவர்களிடம் இருந்து கடுமையான எதிர்ப்பு இருந்தது. கணினிமயமாக்கம், வங்கித் துறைக்கு எவ்வளவு அவசியம் அல்லது லாபகரமானது என்பதை வலியுறுத்த முயன்ற அவரது ஒவ்வொரு கருத்துக்கும், வலுவான மாற்றுக் கருத்துக்களை ஊழியர் தலைவர்கள் முன்வைத்தனர். சொல்லப் போனால், நந்தனின் கருத்துக்கள் தவறு என்று பலரையும் நம்ப வைக்கும் அளவுக்கு தலைவர்களின் வாதங்கள் மிக வலுவாகவே இருந்தன. எத்தனையோ நாடுகளுக்கு சென்று எவ்வளவோ நிறுவனங்களை கணினிமயமாக்க ஒப்புக் கொள்ள செய்த, நந்தனின் தொழிற் திறமை இங்கு பலிக்க வில்லை.
முற்றுப் பெறாமலேயே முடிவடைந்த அந்த விவாதங்களுக்குப் பிறகு அனைவரும் தேநீர் அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது நந்தன் அருகே வந்த ஒரு யூனியன் தலைவர் கூறினாராம். "எனக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர்.ஒரு பிள்ளை பாஸ்டனிலும் இன்னொரு பிள்ளை சியாட்டிலிலும் மென்பொருட் துறையில் பணி புரிகின்றனர். (கணினிமயமாக்கம் பற்றி) நீங்கள் சொல்லும் அனைத்துக் கருத்துக்களையும் நானும் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் அவற்றை நான் வெளிப்படையாக சொல்ல முடியாது. காரணம் நான் ஒரு தலைவன் என்ற முறையில் என்னுடைய தொகுதியை (ஊழியர் சங்கம்) காப்பாற்றிக் கொள்ள வேண்டும்."
இந்த சம்பவம் நடந்த பல வருடங்களுக்குப் பின்னரே பொதுத் துறை வங்கிகளில் கணினிமயமாக்கம் நடைபெற்றது. இடையில் நுழைந்த தனியார் வங்கிகள் எவ்வளவோ முன்னேறி விட, பொது துறை வங்கிகள் (தொழிற் நுட்பத் துறையில்) வெகுகாலம் வரை பின் தங்கியே காணப் பட்டன. இது மட்டுமல்ல. ஒரு காலத்தில் அரசு சார்பு நிறுவனங்களில் மிக அதிக ஊதியம் பெற்று வந்தவர்களான அரசு வங்கி ஊழியர்கள், (தங்களது தலைவர்களை கண்மூடித் தனமாக பின்பற்றியதால்) இன்றைக்கு பொதுத் துறை நிறுவனங்களிலேயே மிகக் குறைந்த சம்பளம் வாங்குபவர்களாக இருக்கின்றனர்.
தன பிள்ளைகளின் நலனில் அக்கறை கொண்டு, அவர்களை கணினிப் படிப்பு படிக்க வைத்த அந்த வங்கி ஊழியர் சங்கத் தலைவர், தன்னையே நம்பி இருந்த லட்சக்கணக்கான ஊழியர்களின் நலன் பற்றி அக்கறை கொள்ள வில்லை. ஒருவேளை அப்படி அக்கறை இருந்திருந்தாலும், தன்னுடைய பதவி பறிபோய் விடுமோ என்ற அச்சத்தில் அறிவை வளர்ப்பதை விட உணர்வுகளை கொழுந்து விட்டெரிய செய்யவே விரும்பியிருக்கிறார்.
இது போன்ற நிகழ்வு வங்கித் துறையில் மட்டுமல்ல. நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும், துறையிலும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது. இது போன்று மோசடி செய்பவர்கள், பெரிய அரசியல் தலைவர்களாக மட்டும் இருக்க வேண்டிய அவசியமில்லை. நாம் அன்றாடம் பழகும், மூத்தவர்கள் என்று நம்பும் பல குட்டித் தலைவர்களும் இப்படித்தான் இருக்கிறார்கள். எனக்கும் கூட தனிப்பட்ட முறையில் இது போன்ற பல தலைவர்களிடமிருந்து ஏராளமான அனுபவ பாடங்கள் கிடைத்துள்ளன.
இதற்கு என்னதான் முடிவு?
ரொம்ப சிம்பிள்.
வாய் சவடால்களை நம்புவதை விட முகமூடியற்ற முகங்களை புரிந்து கொள்ள முயற்சிப்போம். ஊருக்கு மட்டுமென வரும் உபதேசங்களை ஒதுக்கித் தள்ளுவோம். தலைவர்களை நம்புவதை விட தன்னையே அதிகம் நம்புவோம்.
நன்றி!
17 comments:
நல்ல பதிவு..நிஜம் சுடுகிறது..
//தன பிள்ளைகளின் நலனில் அக்கறை கொண்டு, அவர்களை கணினிப் படிப்பு படிக்க வைத்த அந்த வங்கி ஊழியர் சங்கத் தலைவர், தன்னையே நம்பி இருந்த லட்சக்கணக்கான ஊழியர்களின் நலன் பற்றி அக்கறை கொள்ள வில்லை.//
இது அதிகமான மனிதர்களின் இயற்க்கை குணமாக இருக்கிறது,
//வாய் சவடால்களை நம்புவதை விட முகமூடியற்ற முகங்களை புரிந்து கொள்ள முயற்சிப்போம். ஊருக்கு மட்டுமென வரும் உபதேசங்களை ஒதுக்கித் தள்ளுவோம். தலைவர்களை நம்புவதை விட தன்னையே அதிகம் நம்புவோம்.//
மிக அருமையான வரிகள்.
நன்றி சார்.
மிக நல்ல தகவல்.
உண்மையான தகவலும், நன்றி.
இப்பவாவது கணினி வந்துச்சே!
இல்லைனா இன்னும் வரிசையில நின்னு பணம் எடுக்கனும்!
இப்ப இருக்கூர மக்கள் தொகைக்கு இன்னைக்கு பேங்கு போனா அடுத்த வாரம் பணம் எடுத்துட்டு வந்துரலாம்!
//NSE Nifty Stock Ticker//
இது மாதிரி கமாடிடி கிடைக்குமா தல!?
Somebody said rightly " Fighting against changes is fighting against progress"
//வாய் சவடால்களை நம்புவதை விட முகமூடியற்ற முகங்களை புரிந்து கொள்ள முயற்சிப்போம். ஊருக்கு மட்டுமென வரும் உபதேசங்களை ஒதுக்கித் தள்ளுவோம். தலைவர்களை நம்புவதை விட தன்னையே அதிகம் நம்புவோம்.//
சரியாக சொன்னீர்கள் சார்.
//இடையில் நுழைந்த தனியார் வங்கிகள் எவ்வளவோ முன்னேறி விட, பொது துறை வங்கிகள் (தொழிற் நுட்பத் துறையில்) வெகுகாலம் வரை பின் தங்கியே காணப் பட்டன.//
அரசு சார்பு நிறுவனங்களில் இங்கு திறமைக்கு மூன்றாம் இடம் தான். முதலில் அன்பளிப்பு, இரண்டாவது அரசியல்வாதிகளின் சிபார்சு (தலையீடு). பணியில் அமர்ந்தாலும் திறமை வளர்த்துக் கொள்ளாதது. அரசு சார்பு நிறுவனங்களில் முன்னேற்றம் அடையதர்க்கு இதுவும் ஒரு காரணம்.
//தன்னுடைய திறமை அனைத்தையும் செலவழித்து முன்கூட்டியே தயார் படுத்திக் கொண்ட நந்தன் அவர்களுக்கு ஆச்சரியமே காத்திருந்தது. எத்தனையோ நாடுகளுக்கு சென்று எவ்வளவோ நிறுவனங்களை கணினிமயமாக்க ஒப்புக் கொள்ள செய்த, நந்தனின் தொழிற் திறமை இங்கு பலிக்க வில்லை.//
இதாவது பரவாயில்லை. அடையாள அட்டை வழங்கும் திட்டத்தில் அரசியல்வாதிகளிடம் எவ்வளவு கஷ்டப்பட போகிறரோ!!.
உலக வங்கி இந்திய வங்கிகளுக்கு ரூ 10,000கோடி கடன் வழங்க முடிவு செய்துள்ளது (30ஆண்டு தவணையில் )மத்திய அரசும் ஒப்புக்கொண்டுள்ளது. இதை பற்றி உங்கள் கருத்து என்ன சார் ?
பதிவுக்கு நன்றி சார் .
முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அமுதா கிருஷ்ணா!
//இது அதிகமான மனிதர்களின் இயற்க்கை குணமாக இருக்கிறது,//
உண்மைதான் ரஹ்மான்! இந்த குணத்தை அடையாளம் கண்டு கொள்ள வேண்டியது நம் கடமை.
நன்றி.
முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி மஸ்தான்!
//இப்பவாவது கணினி வந்துச்சே!
இல்லைனா இன்னும் வரிசையில நின்னு பணம் எடுக்கனும்!
இப்ப இருக்கூர மக்கள் தொகைக்கு இன்னைக்கு பேங்கு போனா அடுத்த வாரம் பணம் எடுத்துட்டு வந்துரலாம்!//
கணினிகள் பொதுத்துறை வங்கிகளுக்குள் எப்படி நுழைந்தன என்பது ஒரு பெரிய கதை. அதையும் நந்தன் விளக்கி இருக்கிறார்.
நன்றி வால்பையன்!
//NSE Nifty Stock Ticker//
//இது மாதிரி கமாடிடி கிடைக்குமா தல!?//
தெரியல வால்! கிடைச்சா உங்களுக்கு தகவல் கொடுக்கிறேன்!
நன்றி.
நன்றி கௌதமன் சார்!
//" Fighting against changes is fighting against progress"//
உண்மைதான் சார்! மாற்றம் என்பது பலருக்கு "அதிகாரத்தை பிடுங்கும்" மணி ஓசையாக கேட்கிறது. அதிக தொழிற்நுட்பம் அல்லது கல்வி பலரையும் ஒரே தட்டில் அமரவைத்து வித்தியாசங்களை நீக்கி விடுகின்றன. அதானாலேயே பலரும் மாற்றங்களை எதிர்க்கின்றனர். அவர்களுடைய "அதிகாரம்" (Power) பறிபோகாது என்பதை அவர்களுக்கு உரிய முறையில் உணர்த்தும் மாற்றத்தை முன்வைப்பவரின் கடமையாகும்.
நன்றி.
//அரசு சார்பு நிறுவனங்களில் இங்கு திறமைக்கு மூன்றாம் இடம் தான். முதலில் அன்பளிப்பு, இரண்டாவது அரசியல்வாதிகளின் சிபார்சு (தலையீடு). பணியில் அமர்ந்தாலும் திறமை வளர்த்துக் கொள்ளாதது. அரசு சார்பு நிறுவனங்களில் முன்னேற்றம் அடையதர்க்கு இதுவும் ஒரு காரணம். //
சரியாக சொன்னீர்கள் தாமஸ் ரூபன்!
மாற்றங்களும் புரட்சிகளும் முதலில் சந்திப்பது எதிர்ப்பைத்தான்.ஆனால் காலத்தின் கட்டாயம் அவை நிகழ்ந்தே தீரும். கையெழுத்து போட தெரியாத கந்தசாமி செல் போனில் எல்லா வித்தையும் தெரிந்து வைத்து இருக்கிறார். ஆக புதிய முயற்சிகளுக்கு மக்கள் எப்போதுமே தயார். நடுவில் உள்ள நந்திகள் தான் தடை. அனால் நந்தன் போன்ற கலங்கரை விலக்கங்கள் உதவியால் கரை சேருவோம் என்ற நம்பிக்கை உள்ளது.
//உலக வங்கி இந்திய வங்கிகளுக்கு ரூ 10,000கோடி கடன் வழங்க முடிவு செய்துள்ளது (30ஆண்டு தவணையில் )மத்திய அரசும் ஒப்புக்கொண்டுள்ளது. இதை பற்றி உங்கள் கருத்து என்ன சார் ? //
இதை பற்றி நான் ஏதும் இதுவரை அறிய வில்லை. பின்னர் ஒருமுறை விரிவாக கூறுகிறேன். நன்றி.
நன்றி பொதுஜனம்!
// கையெழுத்து போட தெரியாத கந்தசாமி செல் போனில் எல்லா வித்தையும் தெரிந்து வைத்து இருக்கிறார். ஆக புதிய முயற்சிகளுக்கு மக்கள் எப்போதுமே தயார். //
மிகச்சரியாக சொன்னீர்கள். ஏடிஎம் சேவைகள் ஆரம்பிக்க முடிவு செய்த போது, எளிய மக்களால் ஏடிஎம்களை புரிந்து கொள்ள முடியாது என்று சிலர் தடை செய்ய முயன்றனர். வோட்டு இயந்திரத்திற்கும் இதே போன்ற எதிர்ப்பு இருந்தது.
ஆனால் சராசரி எளிய இந்தியன் தொழிற்நுட்பத்தை ஏற்றுக் கொள்கிறான், மாற்றத்தை வரவேற்கிறான் என்பது பல முறை நிருபணமாகி உள்ளது.
கபில் சிபல் போன்று மக்களின் மாற்றத்தை, உயர்வை விரும்பாதவர்கள்தான் மக்களை குண்டுசட்டியில் குதிரை ஓட்ட வைக்க ஆசைப் படுகிறார்கள். அதற்கு முக்கிய காரணம் அவர்களுடைய மேலாதிக்க வெறி ஆகும் .
நன்றி.
வரலாறு நமக்கு கத்துக்கொடுத்தது ஒன்னே ஒன்னு தான்
நாம ஒன்னுமே கத்துகலைங்கிறது மட்டும் தான்
இதுக்கு அப்புறமாவது திறுந்துனாங்கலான்னா அதுவும் இல்ல.
எல்லா அரசு வங்கிகளும் ஸ்டேட் பேங்குகீழ வந்து செயல்பட்டா எவ்வளவு நல்லா இருக்கும்.
ஒரு சில தலைவர்களோட பேச்சத்தன இவங்க இன்னும் நம்புராங்க.
// நந்தன் போன்ற கலங்கரை விலக்கங்கள் உதவியால் கரை சேருவோம் என்ற நம்பிக்கை உள்ளது.//
நிச்சையம் :-))
Post a Comment