The Art of Appraisal
-
Big Boss: This year your performance was good, excellent and outstanding.
So, your rating is "average".
Kumar: What? How come 'average'?
Big Boss: Becau...
பிரிவுகள்
- சமூகம் (121)
- செய்தியும் கோணமும் (104)
- பொருளாதாரம் (101)
- பங்கு சந்தை (98)
- அரசியல் (74)
- பயணங்கள்/அனுபவங்கள் (40)
- மனவியல் (40)
- பங்கு சந்தை வெற்றி பயணம் - ஒரு வழித் துணை (15)
- கதை (9)
- நகைச்சுவை (7)
- அறிவியல் (5)
- திரைவிமர்சனம் (4)
- சட்டம் (3)
- நூலகம் (3)
- கிறுக்கல்கள் (1)
Thursday, September 17, 2009
பங்குச்சந்தை வெற்றிப்பயணம் - என்னுடைய வழி எளிய வழி
இப்போது உச்ச வேகத்தில் பயணம் செய்யும் பங்குச்சந்தையில் எப்படி முதலீடு செய்வது, முதலீடு செய்த பிறகு, முன்போல அதல பாதாளத்தில் விழுந்து விட்டால் என்ன செய்வது, அதே சமயம் தாமதிக்கும் ஒவ்வொரு நாளும் சந்தை புதிய உயரத்திற்கு சென்று விடுகிறதே என்றெல்லாம் பலருக்கும் குழப்பங்கள் இருக்கும். இது போன்ற ஒரு சிக்கலான நிலையில் என்னுடய பாணி என்னவென்று இங்கு உரைப்பது சிலருக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.
சென்ற பதிவில் அருமை நண்பர்கள் கேட்ட கேள்விகளுக்கு நான் அளித்த பதிலையே இந்த பதிவாக வழங்குகிறேன். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் தயங்காமல் கேளுங்கள்.
நன்றி.
//எனவே பங்குகள் வாங்குபவர்கள் இன்னும் சிறிது காலம் தாழ்த்தலாம் என் நினைக்கின்றேன்,
தங்கள் பதில் என்ன குரு?// ( கேட்டவர் திரு.ரஹ்மான்)
இது போன்று, தவறினால் பறந்து விடும். ஆனால் மாட்டிக் கொண்டால் அதல பாதாளத்திற்கு வீழ்ந்து விடும் என்ற நிலையில் வர்த்தகம் செய்வது மிகவும் கடினமான காரியமே.
எனக்கு தெரிந்த வரை இப்போதைய காளை ஓட்டம் நிற்க வேண்டுமென்றால் ஒரு மிகப் பெரிய கெட்ட செய்தி வர வேண்டும். ஒருவேளை அப்படி ஒரு செய்தி வந்து விட்டால் எந்த ஒரு ஸ்டாப் லாஸும் நம்மைக் காப்பாற்றாது.
என்னுடய பாணியையும் இங்கே சொல்லி விடுகிறேன்.
ஒவ்வொரு நாளும் என்னிடம் உள்ள சிறப்பாக செயல் படும் பங்குகளை (மிக) கொஞ்சம் கொஞ்சமாக கூட்டிக் கொண்டே போகிறேன். செயல்படாத பங்குகளை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொண்டே போகிறேன். பங்குகள் விற்ற லாபத்தில் அவ்வப்போது தங்க நிதிகளையும் வாங்குகிறேன். மொத்த முதலீட்டு அளவு அதிகம் மாறாமல் பார்த்துக் கொள்கிறேன்.
சந்தையில் தொடர்ந்து மேலேறும், அடிப்படையில் சிறந்த பங்குகளை மட்டுமே கைவசம் வைத்திருக்க வேண்டும். அதாவது, எவ்வளவு வீழ்ந்தாலும், இன்னும் வாங்கவே விரும்புகிற பங்குகளை அடிப்படையில் சிறந்த பங்குகளை மட்டுமே கைவசம் வைத்திருக்க வேண்டும்.
காற்றில் கிடைக்கும் செய்திகளை நம்பி வாங்குவதை தவிர்க்கவும். சொந்த ஆராய்ச்சியை அதிகம் நம்பவும்.
தோல்வி பற்றிய பயமில்லாமல், அதே சமயம் தோல்வியை பற்றிய விழிப்புணர்வுடன் வர்த்தகம் செய்யவும்.
Be aware of the maximum possible losses. Trade within maximum risk limits. But trade without any fear.
//இது (Yes Bank Ltd) நல்ல சிறந்த நிறுவனம் தான் சார்.உங்களுடைய ஆலோசனைக்கு நன்றி சார் இதில் எந்த விலையில் உள்ளே போகலாம்.ஏன் என்றால்,
52 week low=41/-(9-3-09)
52 week high=202/-(17-9-09)
All time high=277/-(10-1-09)
இப்போது விலையில் 192/-உள்ளதே. // (கேட்டவர் திரு.தாமஸ் ரூபன்)
இங்கேயும் என்னுடைய பாணியை சொல்லி விடுகிறேன்.
ஒரு நிறுவனம் எனக்குப் பிடித்திருந்தால், நான் விலைகளை பற்றி அதிகம் கவலைப் படுவதில்லை. கவனம். எனக்கு பிடித்திருந்தால் மட்டுமே பங்குகளை வாங்குவேன். மற்றவர்களின் பரிந்துரையால் அல்ல.
சிறப்பாக செயல்படும் சில நிறுவனங்களை own செய்ய வேண்டும் என்று ஆசைப்படுவேன். அது போன்ற ஒரு நிறுவனம் இது (யெஸ் பேங்க்.
அதே சமயம், மிக அதிக விலையில் ஒரு நிறுவனத்தை வாங்கி விட்டு பின்னர் விலை வீழ்ச்சி ஏற்பட்டால், அது எவ்வளவு நல்ல நிறுவனமாக இருந்தாலும் சரி, மனதில் சில சஞ்சலங்கள் ஏற்படும். இதை தவிர்ப்பதற்காக நான் துவக்கத்தில் மிக குறைந்த அளவு பங்குகளை மட்டுமே வாங்குவேன். சில சமயங்களில் அது ஒன்றிரண்டாக கூட இருக்கும்.
ஒரு பங்கை நாம் வாங்கிய பிறகு அந்த நிறுவனத்தை மனதளவில் தொடர ஆரம்பிக்கிறோம். அதற்கு பின்னர் வரும் செய்திகள், சந்தையின் ஓட்டம் ஆகியவை சாதகமாக இருந்தால் பத்து பத்து சதவீதமாக வாங்குவேன். சந்தையின் மேலோட்டம் வேகமாக இருக்கும் போது, இந்த முறை குறைந்த லாபத்தையே கொடுக்கும் என்றாலும், சிக்கி கொள்வதில் இருந்து தப்பிக்க முடியும்.
ஒரு பெரிய பங்குச்சந்தை வித்தகர் கூறி இருக்கிறார்.
"It is very important to remain solvent in a market"
அதாவது, பங்குச்சந்தையில் லாபம் சம்பாதிக்கலாம் அல்லது நஷ்டமாகலாம். ஆனால் ஒருபோதும் ஓட்டாண்டியாகக் கூடாது. ஏனென்றால், அப்புறம் திரும்பி வர முடியாது.
//அரசாங்கம் வங்கியில் உள்ள விவசாயிகளின் கடனை சுமார் 65,oooகோடி ரூபாய் வரை தள்ளுபடி செய்தார்களே அதை அரசாங்கம் வங்கிகளுக்கு திரும்ப கொடுத்தா?
வங்கிகள் கூறும் வாராக்கடன்களின் புள்ளிவிவரங்கள் சரியானதா?
வங்கி பங்குகள் எல்லாம் அதிகம் உயர்ந்து உள்ளதால், அதிகம் உயராத,ஹோட்டல்(HOTELLEELA,INDHOTEL), டெக்ஸ்டைல்ஸ்(BOMDYEING,SKUMARSYNF), ஏர்வேஸ்(KFA ,JETAIRWAYS ) பங்குகள் வாங்கலாமா?(2010 ல் காமன்வெல்த் போட்டிகள் நடப்பதால் உயருமா?)//
இந்திய வங்கிகளின் அடிப்படை அம்சங்கள் ஓரளவுக்கு சிறப்பாகவே உள்ளன. அதே சமயம், பொருளாதாரம் வேகமான வளர்ச்சி காணாவிடில் பெரிய அளவு எதிர்பார்க்க முடியாது.
சந்தைகள் இப்போது ஒரு சுழற்சி முறையில் செல்வதைப் போல தோன்றினாலும், அடிப்படை சரியில்லாத நிறுவனங்களை அல்லது துறைகளை முதலீட்டாளர்கள் கூடுமானவரை தவிர்ப்பது நல்லது. அதாவது பில்டிங் ஸ்ட்ரோங் பேஸ்மென்ட் வீக் போன்ற நிறுவனங்கள் வேண்டவே வேண்டாம்.
அதே சமயத்தில் குறுகிய கால வர்த்தகம் செய்பவர்கள், சந்தையின் மனநிலையை சரியாக கணிக்க முடிந்தால் மட்டுமே இது போன்ற அடிப்படை வலுவில்லாத நிறுவனங்களை தொட விரும்பலாம் .
பங்குச்சந்தையில் வெற்றி பெற்றவர்களில் பலர் உயரும் பங்குகளையே வாங்குகிறார்கள். கீழே வரும் பங்குகளை வாங்குவது, விழுகின்ற கத்தியை கரம் நீட்டி வெறுங்கையில் பிடிப்பது போல என்று கூட சொல்லலாம்.
பங்குச்சந்தையில் வெற்றிபெற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
நன்றி.
Subscribe to:
Post Comments (Atom)
20 comments:
//ஏதேனும் சந்தேகம் இருந்தால் தயங்காமல் கேளுங்கள்.//
நீங்கள் தப்பாக எடுத்துக் கொள்ளாமல் எளிமையாக விளக்கம் அளிப்பதால்தான் தைரியமாக கேட்கிறோம். நன்றி சார்.
//பங்குச்சந்தையில் வெற்றி பெற்றவர்களில் பலர் உயரும் பங்குகளையே வாங்குகிறார்கள். கீழே வரும் பங்குகளை வாங்குவது, விழுகின்ற கத்தியை கரம் நீட்டி வெறுங்கையில் பிடிப்பது போல என்று கூட சொல்லலாம்//
பங்குச்சந்தையில் சில பெரும் முதலைகள் சில பங்குகளை வேண்டுமென்றே உயர்த்தி விடுகிறார்களே. சில நிறுவனங்கள்(ஐ.சி.ஐ.சி.ஐ) கூட அடிப்படையில் நன்றாக இல்லாவிட்டலும் நிறுவனத்தை பற்றி நல்ல செய்திகளை (சும்மா ) கொடுத்து விலை உயர்த்தி விடுகிறார்களே. அவர்களை எப்படி அடையாளம் காண்பது சார் ?
நன்றி சார்.
மீண்டும் சிறப்பான, உபயோகமான கருத்துக்கள்...
வெளிய இதைச் சொல்றதைதுதான் நிறைய பேருக்கு தொழில் சார்!!! அப்படியே சொன்னாலும், அவன் கையில கண்ட்ரோல் இருக்கனும்னு புரியற மாதிரியே சொல்ல மாட்டான்...
நீங்க என்னான்னா புட்டு புட்டு வெக்குறீங்க....
மனங்கனிந்த வாழ்த்துக்கள்.....
நரேஷ்
www.nareshin.wordpress.com
//பங்குச்சந்தையில் வெற்றி பெற்றவர்களில் பலர் உயரும் பங்குகளையே வாங்குகிறார்கள். கீழே வரும் பங்குகளை வாங்குவது, விழுகின்ற கத்தியை கரம் நீட்டி வெறுங்கையில் பிடிப்பது போல என்று கூட சொல்லலாம்.//
நான் பல முறை அனுபவித்திருக்கிறேன்.உதாரணம்...
maytasinfra சத்யம் விழுவதற்கு சில தினங்களுக்கு முன்பு
ranbaxy அமெரிக்காவில் இந்த கம்பெனியின் மருந்துகளை reject செய்த பொது
//சந்தைகள் இப்போது ஒரு சுழற்சி முறையில் செல்வதைப் போல தோன்றினாலும், அடிப்படை சரியில்லாத நிறுவனங்களை அல்லது துறைகளை முதலீட்டாளர்கள் கூடுமானவரை தவிர்ப்பது நல்லது. அதாவது பில்டிங் ஸ்ட்ரோங் பேஸ்மென்ட் வீக் போன்ற நிறுவனங்கள் வேண்டவே வேண்டாம்.//
மிகச் சரியாக சொன்னீர்கள்
உங்கள் பதிவு மிக இலகுவாக புதியவர்களுக்கும் எளிதில் விளங்க கூடிய வகையில் இருக்கின்றது.
நன்றி சார்.
//பங்குச்சந்தையில் லாபம் சம்பாதிக்கலாம் அல்லது நஷ்டமாகலாம். ஆனால் ஒருபோதும் ஓட்டாண்டியாகக் கூடாது. ஏனென்றால், அப்புறம் திரும்பி வர முடியாது.
//
அருமையான வார்த்தை!
ஆன்லைன் வர்த்தகத்தில் இருக்கும் அனைவருக்கும் பொருந்தும் தல!
நன்றி தாமஸ் ரூபன்!
//பங்குச்சந்தையில் சில பெரும் முதலைகள் சில பங்குகளை வேண்டுமென்றே உயர்த்தி விடுகிறார்களே. சில நிறுவனங்கள்(ஐ.சி.ஐ.சி.ஐ) கூட அடிப்படையில் நன்றாக இல்லாவிட்டலும் நிறுவனத்தை பற்றி நல்ல செய்திகளை (சும்மா ) கொடுத்து விலை உயர்த்தி விடுகிறார்களே. அவர்களை எப்படி அடையாளம் காண்பது சார் ?//
ஐசிஐசிஐ வங்கி போன்ற பெரிய நிறுவனத்தின் பங்குகளில் தகிடு தித்தம் செய்வது மிகவும் கடினம். மேலும், இந்த வங்கி பலரும் நினைப்பதைப் போல வலுவில்லாத வங்கி அல்ல. வேகமாக வளர்ச்சி பெற்றதனால் (அதிகம் பொருந்தாத வளர்ச்சி என்று கூட சொல்லலாம்) சற்று தடுமாற்றம் இருந்ததே தவிர, தொழிற்நுட்பம், தலைமை மற்றும் ஒருங்கிணைப்பு ஆகியவற்றில் ஒரு உலகத்தரம் வாய்ந்த நிறுவனமாகவே இருக்கிறது.
பன்னாட்டு வங்கிகள் வீழ்ச்சியின் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலித்ததால், இந்த பங்கை பலரும் விற்றுத் தீர்த்தனர். நிலைமை அவ்வளவு மோசமில்லை என்று தெரிந்ததும் வங்கி பங்குகளின் விலை கிட்டத்தட்ட பழைய இடத்துக்கே வந்து விட்டது.
பங்கு சந்தை முதலைகள் பெரும்பாலும் சிறிய பங்குகளிலேயே அதிக தகிடு தித்தம் செய்கிறார்கள். எனவேதான் அடிப்படை வலுவில்லாத சிறிய பங்குகளை வெறுமனே உயர்கின்றன என்று வாங்கக் கூடாது. முழுமையான ஆராய்ச்சிக்கு பிறகே சிறிய நிறுவனங்களின் பங்குகளை வாங்க வேண்டும்.
நன்றி.
நன்றி நரேஷ்குமார்!
//வெளிய இதைச் சொல்றதைதுதான் நிறைய பேருக்கு தொழில் சார்!!! அப்படியே சொன்னாலும், அவன் கையில கண்ட்ரோல் இருக்கனும்னு புரியற மாதிரியே சொல்ல மாட்டான்...
நீங்க என்னான்னா புட்டு புட்டு வெக்குறீங்க....//
இதற்கு முக்கிய காரணம். பங்குச்சந்தை எனது தொழில் அல்ல. மேலும், அடிப்படையில் நான் பொறியியல் படித்தவன். பொருளாதாரம் மற்றும் பங்குசந்தையை ஒரு வெளியாள் கண்ணுடன் பார்ப்பதால் சற்று எளிமையாக தெரிகிறது.
நன்றி!
//நான் பல முறை அனுபவித்திருக்கிறேன்.உதாரணம்...
maytasinfra சத்யம் விழுவதற்கு சில தினங்களுக்கு முன்பு
ranbaxy அமெரிக்காவில் இந்த கம்பெனியின் மருந்துகளை reject செய்த பொது//
நன்றி ரஹ்மான்!
எனக்கும் கூட பல அனுபவங்கள் உண்டு. பட்டு தெளிவதுதான் அறிவு. ஆனால் பட்டால் தெளிந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் பங்குச்சந்தையில் பொழப்பு நடத்த முடியாது.
நன்றி.
//அருமையான வார்த்தை!
ஆன்லைன் வர்த்தகத்தில் இருக்கும் அனைவருக்கும் பொருந்தும் தல!//
நன்றி தல. உங்களுக்கில்லாத அனுபவமா?
நன்றி
தற்போதய நிலையில் பூனையின் சாதூர்யம் தேவைபடுகிறது.பார்த்து கால் வைக்கும்.. ஆனால் நிற்காமல் போகும். தேவைப்பட்டால் ஒரு செகண்ட் யோசிக்கும். தவறி கீழே விழுந்தாலும் அதிகம் அடி படாது.தொடர்ந்து பயணம் செய்யுங்கள். ஆனால் கொஞ்சம் எச்சரிக்கை உணர்வோடு.
என்னைப் போன்ற புதியவர்களுக்கு மிகவும் உபயோகமான தகவல்.
இதுபோல் இன்னும் சிறப்பாக எழுத வாழ்த்துக்கள்.
//பங்குச்சந்தையில் வெற்றி பெற்றவர்களில் பலர் உயரும் பங்குகளையே வாங்குகிறார்கள். கீழே வரும் பங்குகளை வாங்குவது, விழுகின்ற கத்தியை கரம் நீட்டி வெறுங்கையில் பிடிப்பது போல என்று கூட சொல்லலாம். //
சிறந்த உதாரணம் நன்றி சார்
ஒரு சந்தேகம் சார்
ஆப்சனில் கால் ரைட்டிங், புட் ரைட்டிங்
அப்டினா என்ன சார்?
நன்றி
//பங்குச்சந்தையில் வெற்றி பெற்றவர்களில் பலர் உயரும் பங்குகளையே வாங்குகிறார்கள். கீழே வரும் பங்குகளை வாங்குவது, விழுகின்ற கத்தியை கரம் நீட்டி வெறுங்கையில் பிடிப்பது போல என்று கூட சொல்லலாம். //
சிறந்த உதாரணம் நன்றி சார்
ஒரு சந்தேகம் சார்
ஆப்சனில் கால் ரைட்டிங், புட் ரைட்டிங்
அப்டினா என்ன சார்?
நன்றி
1,00,000 ஹிட்ஸ் வாழ்த்துக்கள் சார்
//என்னைப் போன்ற புதியவர்களுக்கு மிகவும் உபயோகமான தகவல்.//
தொடர்ந்து வாருங்கள்! ஒரு நல்ல வழித்துணையாக இந்த தொடர்பதிவு இருக்கும்.
நன்றி.
//ஆப்சனில் கால் ரைட்டிங், புட் ரைட்டிங்
அப்டினா என்ன சார்?//
கால் ஆப்சன், புட் ஆப்சன் பற்றி கேள்விப் பட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இந்த ஆப்சன்களை விற்பதற்குத்தான் கால் ரைட்டிங், புட் ரைட்டிங் என்று பெயர். "பங்குச்சந்தையில் derivatives" பற்றி பின்னர் ஒருமுறை விரிவாக எழுதுகிறேன்.
நன்றி DG!
//1,00,000 ஹிட்ஸ் வாழ்த்துக்கள் சார்//
உங்களைப் போன்ற நண்பர்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும் DG!
//தற்போதய நிலையில் பூனையின் சாதூர்யம் தேவைபடுகிறது.பார்த்து கால் வைக்கும்.. ஆனால் நிற்காமல் போகும். தேவைப்பட்டால் ஒரு செகண்ட் யோசிக்கும். தவறி கீழே விழுந்தாலும் அதிகம் அடி படாது.//
அருமையான உதாரணம்!
நன்றி பொதுஜனம்!
//கால் ஆப்சன், புட் ஆப்சன் பற்றி கேள்விப் பட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இந்த ஆப்சன்களை விற்பதற்குத்தான் கால் ரைட்டிங், புட் ரைட்டிங் என்று பெயர். "பங்குச்சந்தையில் derivatives" பற்றி பின்னர் ஒருமுறை விரிவாக எழுதுகிறேன்.//
நன்றி சார்
வெள்ளிக்கிழமை நிப்டி 5100 புட் ஆப்சன்
ஓப்பன் இன்ரஸ்ட் 23% அதிகமாகி உள்ளது. இது புட் ரைட்டிங்கா சார் ?
அன்புள்ள DG!
நான் ஏற்கனவே சொன்னபடி புட் ரைட்டிங் என்பது விற்பனை செய்வது. பொதுவாக விலை உயர்வுடன் ஓபன் இண்டரஸ்ட் அதிகமாகி இருந்தால் நிறைய பேர் வாங்கி இருக்கிறார்கள் என்று அர்த்தம். விலை குறைவுடன் ஓபன் இண்டரஸ்ட் அதிகமாகி இருந்தால் புட் ரைட்டிங் அதாவது நிறைய விற்பனை ஆகி இருக்கிறது என்று அர்த்தம்.
பொதுவாக பலமானவர்கள் தொடர்ந்து ஒரே அளவில் ஆப்சன் வாங்கி கொண்டிருந்தால் சந்தையில் ஏதோ மாற்றம் நிகழப் போகிறது என்று அர்த்தம். நம்மைப் போன்ற சிறிய வர்த்தகர்கள் அதிகம் வாங்கினால் எதிர்மறை விளைவு நிகழும் என்று அர்த்தம்.
நன்றி.
நன்றி சார்
Post a Comment