The Art of Appraisal
-
Big Boss: This year your performance was good, excellent and outstanding.
So, your rating is "average".
Kumar: What? How come 'average'?
Big Boss: Becau...
பிரிவுகள்
- சமூகம் (121)
- செய்தியும் கோணமும் (104)
- பொருளாதாரம் (101)
- பங்கு சந்தை (98)
- அரசியல் (74)
- பயணங்கள்/அனுபவங்கள் (40)
- மனவியல் (40)
- பங்கு சந்தை வெற்றி பயணம் - ஒரு வழித் துணை (15)
- கதை (9)
- நகைச்சுவை (7)
- அறிவியல் (5)
- திரைவிமர்சனம் (4)
- சட்டம் (3)
- நூலகம் (3)
- கிறுக்கல்கள் (1)
Saturday, October 31, 2009
வழியில் மேடு பள்ளம்!
பங்கு சந்தையில் பல வாரங்களுக்குப் பிறகு ஒரு பெரியதொரு வீழ்ச்சி ஏற்பட்டு உள்ளது. சந்தைகளில் ஏராளமான கரன்சிகளை வாரி இறைத்து உலக நாடுகளின் அரசாங்கங்கள் கொண்டு வர விரும்பும் பொருளாதார மீட்சிப் பாதையில் ஏராளமான மேடுபள்ளங்களை சந்திக்க வேண்டியும் இருக்கலாம் என்ற கசப்பான உண்மையை சந்தைகள் புரிந்து கொண்டதே இந்த வீழ்ச்சிக்கான முக்கிய காரணம் என்று நினைக்கிறேன். இன்னும் சற்று விரிவாக இங்கே பார்ப்போம்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவில் தொடங்கிய "நிதிச் சிக்கல்" பூகம்பம் பொருளாதார சுனாமியாக மாறி உலகெங்கும் ஆட்டிப் படைத்தது. இந்த சிக்கலில் இருந்து மீள "Keynes" முறையை பின்பற்றலாம் உலக நாடுகளின் அரசாங்கங்கள் முடிவெடுத்தன. அதாவது தனிநபர்கள் செலவு செய்ய தயங்கும் போது, அரசாங்கம் அதிகமாக செலவு செய்து பொருளாதாரத்தில் ஒரு கிளர்ச்சியை உருவாக்குவது. அரசாங்கம் செலவு செய்ய வேண்டுமென்றால், ஒன்று கடன் வாங்க வேண்டும் அல்லது புதியதாக நோட்டுக்களை அச்சடிக்க வேண்டும். இரண்டு வேலைகளையும் அழகாக செய்த அரசாங்கங்கள் அந்த பணத்தை கொண்டு ஏராளமான வரி மற்றும் மான்ய சலூகைகளை வழங்கின. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால், அமெரிக்காவில் கார் வாங்கினால், கார் செலவில் ஒரு பங்கை அரசாங்கமே வழங்கும். வீடு வாங்கினாலும் இதே போன்ற நிலைதான். மேலும் நலிவடைந்த வங்கிகள் முறையில்லாமல் செய்த முதலீடுகளை அரசாங்கமே ஒரு விலைக்கு வாங்கிக் கொள்ளும். இது போன்ற அரசாங்க முயற்சிகள் பொருளாதாரத்தில் "உபயோகமற்ற பணத்தை" உருவாக்கின. இந்த பணம் உலக சந்தைகளில் அதாவது, பங்கு, ரியல் எஸ்டேட், உணவு பொருட்கள், ஆயில் மற்றும் இதர உலோக சந்தைகளில் பாய்ந்து பரவி, அனைத்து உலக சந்தைகளையும் உயர செய்தன.
சந்தைகளில் விலை ஏராளமாக உயர்ந்தது, பொருளாதாரத்தில் ஒரு செயற்கையான வளர்ச்சியை உருவாக்கியது. பல புள்ளி விபரங்கள், ஒரு பொருளாதார மீட்சி ஏற்படுகின்ற புறத்தோற்றத்தை ஏற்படுத்தியது. இதனால் மகிழ்ச்சி அடைந்த அரசாங்கங்கள் மேலும் பணத்தை வெளியிட்டன.
இப்படி ஏற்பட்டுள்ள பொருளாதார மீட்சி நிரந்தமானதுதானா என்ற சந்தேகம் இப்போது சந்தை நிபுணர்களிடையே ஏற்பட்டுள்ளது. காரணம், பல அரசாங்க திட்டங்கள் நிரந்தமானவை அல்ல. அப்படி நிரந்தமாக சலுகைகள் வழங்குமளவுக்கு அரசாங்கங்களின் நிதி நிலை சிறப்பாக இல்லை. மேலும் இந்த சலுகைகள் பணவீக்கத்தை உருவாக்குகின்றனவே தவிர வளர்ச்சிக்கு உதவவில்லை என்பதும் வருந்துதற்குரிய உண்மையாகும்.
அமெரிக்காவின் பொருளாதார தளர்ச்சி முடிவுக்கு வந்து விட்டது என்று சில புள்ளி விபரங்கள் தெரிவித்தாலும், அமெரிக்கா மீண்டும் பொருளாதார தளர்ச்சி பாதைக்கே செல்லும் என்று வேறு சில புள்ளி விபரங்கள் வெளிக்காட்டுகின்றன.
இந்த சந்தேகமே சென்ற வாரம் சந்தைகளில் ஏற்பட்ட பெரியதொரு தடுமாற்றத்திற்கு காரணம் என்று நினைக்கிறேன்.
அமெரிக்காவில் மட்டுமல்ல, இந்தியாவில் கூட இந்த நிலைதான் தொடர்கிறது. இந்தியாவின் சில பகுதிகள் (துறைகள் அல்லது மக்கள்) மட்டும் பொருளாதார வளர்ச்சியின் லாபத்தை அனுபவிக்க மற்ற பகுதிகள் இன்னமும் தடுமாறிக் கொண்டே இருக்கின்றன. அமெரிக்காவில் இத்தனை பேருக்கு வேலை போய் விட்டது என்று உச்சுக் கொட்டும் நம் பெரியவர்கள் இந்தியாவில் எத்தனை பேர் வேலையில்லாமல் இருக்கின்றார்கள் என்பதை கணக்கெடுக்கக் கூட முயற்சி செய்வதில்லை. உண்மையான வளர்ச்சி அடிமட்டத்தில் இருந்தே வர வேண்டும். மேலே பெருத்து கீழே சிறுத்திருக்கும் தலைகீழ் பிரமிட் தனது சொந்த எடையின் காரணமாகவே உதிர்ந்து போய் விடும்.
பங்கு சந்தையில் பல வாரங்களுக்குப் பிறகு பெரியதொரு வீழ்ச்சி ஏற்பட்டு உள்ளது. சந்தைகளில் ஏராளமான கரன்சிகளை வாரி இறைத்து உலக நாடுகளின் அரசாங்கங்கள் கொண்டு வர விரும்பும் பொருளாதார மீட்சிப் பாதையில் ஏராளமான மேடுபள்ளங்களை சந்திக்க வேண்டியும் இருக்கலாம் என்ற கசப்பான உண்மையை சந்தைகள் புரிந்து கொண்டதே இந்த வீழ்ச்சிக்கான முக்கிய காரணம் என்று நினைக்கிறேன். இன்னும் சற்று விரிவாக இங்கே பார்ப்போம்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவில் தொடங்கிய "நிதிச் சிக்கல்" பூகம்பம், பொருளாதார சுனாமியாக மாறி உலகெங்கும் ஆட்டிப் படைத்தது. இந்த சிக்கலில் இருந்து மீள "Keynes" முறையை பின்பற்றலாம் என்று உலக நாடுகளின் அரசாங்கங்கள் முடிவெடுத்தன. அதாவது தனிநபர்கள் செலவு செய்ய தயங்கும் பொருளாதார தளர்ச்சி காலக் கட்டத்தின் போது, அரசாங்கம் அதிகமாக செலவு செய்து, பொருளாதாரத்தில் ஒரு கிளர்ச்சியை உருவாக்குவது.
அரசாங்கம் செலவு செய்ய வேண்டுமென்றால், ஒன்று கடன் வாங்க வேண்டும் அல்லது புதியதாக நோட்டுக்களை அச்சடிக்க வேண்டும். இரண்டு வேலைகளையுமே அழகாக செய்த அரசாங்கங்கள், அச்சடித்த மற்றும் கடன் வாங்கிய பணத்தை கொண்டு ஏராளமான வரி மற்றும் மான்ய சலூகைகளை வழங்கின. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால், அமெரிக்காவில் கார் வாங்கினால், கார் செலவில் ஒரு பங்கை அரசாங்கமே வழங்கும். வீடு வாங்கினாலும் இதே போன்ற நிலைதான். மேலும், முறையற்ற முறையில் முதலீடுகள் செய்து நலிவடைந்த வங்கிகளின் முதலீடுகளை அரசாங்கமே ஒரு நல்ல விலைக்கு வாங்கிக் கொள்ளும்.
இது போன்ற அரசாங்க முயற்சிகள் பொருளாதாரத்தில் "உபயோகமற்ற பணத்தை" (Unproductive Money) உருவாக்கின. இந்த பணம், உலக சந்தைகளில் அதாவது, பங்கு, ரியல் எஸ்டேட், உணவு பொருட்கள், ஆயில் மற்றும் இதர உலோக சந்தைகளில் பாய்ந்து பரவி, அனைத்து உலக சந்தைகளையும் உயர செய்தன.
இவ்வாறு சந்தைகள் ஏராளமாக உயர்ந்தது, பொருளாதாரத்தில் ஒரு செயற்கையான வளர்ச்சியை உருவாக்கியது. இதற்கிடையே பல அரசு புள்ளி விபரங்கள், ஒரு பொருளாதார மீட்சி ஏற்படுகின்ற புறத்தோற்றத்தை ஏற்படுத்தின. இதனால் மகிழ்ச்சி அடைந்த அரசாங்கங்கள், மேலும் மேலும் பணத்தை வெளியிட்டன.
இப்படி ஏற்பட்டுள்ள பொருளாதார மீட்சி நிரந்தமானதுதானா என்ற பலமான சந்தேகம் இப்போது சந்தை நிபுணர்களிடையே ஏற்பட்டுள்ளது. காரணம், பல அரசாங்க திட்டங்கள் எப்போதுமே நிரந்தமானவை அல்ல. அப்படி நிரந்தமாக சலுகைகள் வழங்குமளவுக்கு அரசாங்கங்களின் நிதி நிலை சிறப்பாகவும் இல்லை. மேலும் இந்த சலுகைகள் ஒருவித பணவீக்கத்தை உருவாக்குகின்றனவே தவிர தொழிற் வளர்ச்சிக்கு உதவவில்லை என்பதும் வருந்துதற்குரிய உண்மையாகும்.
அமெரிக்காவின் பொருளாதார தளர்ச்சி முடிவுக்கு வந்து விட்டது என்று சில புள்ளி விபரங்கள் இப்போதைக்கு தெரிவித்தாலும், அமெரிக்கா மீண்டும் பொருளாதார தளர்ச்சி பாதைக்கே செல்லும் என்று வேறு சில புள்ளி விபரங்கள் வெளிக்காட்டுகின்றன.
இந்த சந்தேகமே, சென்ற வாரம் சந்தைகளில் ஏற்பட்ட பெரியதொரு தடுமாற்றத்திற்கு காரணம் என்று நினைக்கிறேன்.
அமெரிக்காவில் மட்டுமல்ல, இந்தியாவில் கூட இந்த நிலைதான் தொடர்கிறது. இந்தியாவின் சில பகுதிகள் (துறைகள் அல்லது மக்கள்) மட்டும் பொருளாதார வளர்ச்சியின் லாபத்தை அனுபவிக்க மற்ற பகுதிகள் இன்னமும் தடுமாறிக் கொண்டே இருக்கின்றன. அமெரிக்காவில் இத்தனை பேருக்கு வேலை போய் விட்டது என்று உச்சுக் கொட்டும் நம் பெரியவர்கள் இந்தியாவில் எத்தனை பேர் வேலையில்லாமல் இருக்கின்றார்கள் என்பதை கணக்கெடுக்கக் கூட முயற்சி செய்வதில்லை. உண்மையான வளர்ச்சி அடிமட்டத்தில் இருந்தே வர வேண்டும். மேலே பெருத்து கீழே சிறுத்திருக்கும் தலைகீழ் பிரமிட் (Reverse Pyramid) தனது சொந்த எடையின் காரணமாகவே உதிர்ந்து போய் விடும்.
உண்மையான பொருளாதார வளர்ச்சி தொழிற் துறையிலும், பொது மக்களின் வேலை வாய்ப்பு மற்றும் அவர்களின் செலவிடும் திறன் உயர்வதிலேயே அடங்கி இருக்கின்றது. என்னடா இது, முதலாளித்துவ பங்கு சந்தையை பற்றி எழுதும் போது, கம்யூனிசம் பேசுகிறான் என்று எண்ண வேண்டாம். என்னைப் பொறுத்த வரை பங்கு சந்தைகளின் நிரந்தர வளர்ச்சி தொழிற் துறையின், பொருளாதாரத்தின் முறையான வளர்ச்சியில்தான் அடங்கி இருக்கின்றதே, இப்போது நடப்பது போன்ற அதிகப்படியான பணப்போக்குவரத்தில் இல்லை.
இப்போது பங்கு சந்தையைப் பற்றி பார்ப்போம்.
வரும் வாரத்திலும் பங்கு சந்தை தடுமாற வாய்ப்புள்ளது என்றாலும், கடந்த முறை பங்குகளை வாங்க தவறி விட்டோம் என்று எண்ணுபவர்கள் புதிதாக வாங்கவும் வாய்ப்புள்ளது. ஏற்கனவே சொன்ன படி நிபிட்டி 4600-4700 அளவுகளில் நல்லதொரு அரண் கொண்டிருக்கும்.
கடந்த எட்டு மாதங்களாக இந்தியாவில் ஏராளமாக முதலீடு செய்து அந்நிய நிறுவனங்கள் தங்கள் பணத்தை வெளியேற்ற நினைத்தால் சந்தை வீழ்ச்சி இன்னும் கூட பெரிதாக இருக்க வாய்ப்புள்ளது. அமெரிக்க மத்திய வங்கி, அமெரிக்க பொருளாதார மீட்சியைப் பற்றி எண்ண கூறவுள்ளது என்பதை வர்த்தகர்கள் கூர்மையாக கவனிப்பார்கள். இந்தியாவில் பொறுத்த வரை, பல பெரிய நிறுவனங்களின் காலாண்டு நிதி அறிக்கைகள் சிறப்பாக இல்லாத நிலையில், இனி வெளிவரவுள்ள நிதி அறிக்கைகளும் கவனிக்கப் படும்.
நீண்ட கால நோக்கில் முதலீடு செய்ய விரும்புவர்கள் சற்று பொறுத்திருக்கலாம். அல்லது அடிப்படை சிறப்பாக உள்ள பங்குகளில் (உதாரணத்திற்கு எஸ்பிஐ, மாருதி, இன்போசிஸ் மற்றும் ஐடிசி போன்ற நிறுவனங்களில்) சிறிது சிறிதாக முதலீடு செய்யலாம். எந்த பங்கை வாங்குவது என்று தடுமாறுபவர்கள், நிபிட்டி பீஸ் போன்ற நிதிகளை (Nifty BEES) சேகரிக்கலாம். குறுகிய கால நோக்கில் முதலீடு செய்ய விரும்புவர்கள் 4600-4650 அளவுகளில் பங்குகளை வாங்கலாம். அதே சமயம் குறைந்த கால நோக்கில் முதலீடு செய்பவர்கள் தகுந்த ஸ்டாப் லாஸ் அளவுடன் செயல்படுவது நல்லது.
வரும் வாரம் சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள்!
நன்றி.
Labels:
பங்கு சந்தை
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
நீண்ட கால முதலீட்டிற்கு தற்பொழுது குறைந்து கொண்டிருக்கும் பாரதி ஏர்டெல் பங்கை தெரிவு செய்யலாமா. பாரதியின் அடிப்படை வலுவானாதாகவே உள்ளது என்று கருதுகிறேன்.
நன்றி பூங்குன்றன்!
//நீண்ட கால முதலீட்டிற்கு தற்பொழுது குறைந்து கொண்டிருக்கும் பாரதி ஏர்டெல் பங்கை தெரிவு செய்யலாமா. பாரதியின் அடிப்படை வலுவானாதாகவே உள்ளது என்று கருதுகிறேன்//
என்னை பொருத்த வரை இந்திய தொலை தொடர்பு துறை மேலும் வளர்ச்சியடைய வாய்ப்புள்ளது. இந்த துறையில் பாரதி ஏர்டெல் நிறுவனம் ஒரு முன்னோடி நிறுவனமாகவே உள்ளது. எனவே இந்த பங்கில் நிச்சயமாக கவனம் செலுத்தலாம். அதே சமயத்தில், இந்த பங்கு மிக அதிக அளவில் வேகமாக விற்பனை செய்யப் படுவது சற்று கவலைப் பட வேண்டிய விஷயம். பொதுவாக, கீழே வரும் பங்குகளை வாங்க முயற்சி செய்வது கீழே விழும் கத்தியை வெறுங்கையால் பிடிக்க முயற்சிப்பதற்கு ஒப்பானது. மேலும், கீழே விழும் வேகம் சற்று தணிந்த பிறகு வாங்குவதே புத்திசாலித்தனம்.
எனவே இப்போதைக்கு பங்குகளை மெல்ல மெல்ல சேகரியுங்கள். முதலில் குறைவாகவும் பிறகு கீழே விழும் வேகம் தணிந்தவுடன் சற்று அதிகமாகவும், மீண்டும் முன்னேற ஆரம்பிக்கும் போது இன்னும் அதிகமாகவும் வாங்குங்கள்.
வாழ்த்துக்கள்!
//கடந்த எட்டு மாதங்களாக இந்தியாவில் ஏராளமாக முதலீடு செய்து அந்நிய நிறுவனங்கள் தங்கள் பணத்தை வெளியேற்ற நினைத்தால் சந்தை வீழ்ச்சி இன்னும் கூட பெரிதாக இருக்க வாய்ப்புள்ளது. அமெரிக்க மத்திய வங்கி, அமெரிக்க பொருளாதார மீட்சியைப் பற்றி எண்ண கூறவுள்ளது என்பதை வர்த்தகர்கள் கூர்மையாக கவனிப்பார்கள். இந்தியாவில் பொறுத்த வரை, பல பெரிய நிறுவனங்களின் காலாண்டு நிதி அறிக்கைகள் சிறப்பாக இல்லாத நிலையில், இனி வெளிவரவுள்ள நிதி அறிக்கைகளும் கவனிக்கப் படும்//
வரும் வாரமும் ஆப்புதான்.,
நன்றி சார்.
பதிவுக்கு நன்றி சார்.
திங்கள்கிழமை (02-11-09)குருநானக் பிறந்த நாளை முன்னிட்டு பங்குசந்தைக்கு விடுமுறை.
நன்றி சார்.
கரைக்ஷன் எது வரைக்கும்!?
நன்றி ரஹ்மான்!
//வரும் வாரமும் ஆப்புதான்.,//
இருக்கலாம். இல்லாமலும் போகலாம். கடந்த எட்டு மாதங்களாக நமது சந்தையில் அந்நிய முதலீட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் மிக அதிகமாக உள்ளது. அந்நிய முதலீடு சுமார் 75,000 கோடியாக இருக்க உள்நாட்டு நிறுவனங்களின் முதலீடு வெறும் 12,000 கோடி மட்டுமே. எனவே, நம் சந்தையின் போக்கு, உலக சந்தைகளில் நிகழும் ஏற்றத்தாழ்வு மற்றும் இந்தியா மீதான அந்நிய முதலீட்டாளர்களின் கணிப்பு ஆகியவற்றைப் பொறுத்தே அமையும் என்று நினைக்கிறேன்.
நன்றி.
//திங்கள்கிழமை (02-11-09)குருநானக் பிறந்த நாளை முன்னிட்டு பங்குசந்தைக்கு விடுமுறை//
தகவலுக்கு நன்றி தாமஸ் ரூபன்!
அன்புள்ள வால்பையன்!
//கரைக்ஷன் எது வரைக்கும்!?//
ஏற்கனவே சொன்னபடி இந்திய சந்தையின் போக்கு உலக நடப்புக்களையும் அந்நிய முதலீட்டாளர்களின் கணிப்பையுமே அதிகம் சார்ந்து இருப்பதால், வீழ்ச்சியின் வீச்சு எதுவரை இருக்கும் என்பதை அறுதியிட்டு சொல்வது கடினம். அதே சமயம், இந்திய பொருளாதாரத்தில் ஒரு மிதமான வளர்ச்சி இருக்கிறது என்பதும் பல இந்திய நிறுவனங்கள் கடந்த பொருளாதார தளர்ச்சியை சிறப்பாகவே எதிர்கொண்டிருக்கிறார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மைகள். ஆனால், பங்குகளின் மதிப்பீடு ஏற்கனவே மிக அதிகமாக உள்ளது என்பதனால், முதலீட்டாளர்கள் நிதானமாக செயல்படுவது நல்லது என்பதை பதிவிலேயே கூறி உள்ளேன்.
தொழிற்நுட்ப வரைபட கணிப்புக்களின் படி நிபிட்டி 4600 -4700 என்ற அளவுகளில் நல்ல அரண் நிலையை கொண்டிருக்கும் என்று நம்புகிறேன்.
நன்றி.
உங்களுக்கு என் பதிவில் என் நன்றி
http://tamilbazaar.blogspot.com/2009/11/blog-post_4578.html
பதிவுக்கு நன்றி சார்.
Post a Comment