Sunday, November 30, 2008

தீவிரவாதிகளை வென்ற கதை - இந்திய கமாண்டோவின் விளக்கம்


நேற்று ஒரு தீவிரவாதி பிடிப் பட்ட கதை பார்த்தோம். இன்று தாஜ் ஹோட்டலில் எவ்வாறு நான்கு தீவிரவாதிகள் ஒழிக்கப் பட்டனர் என்று விளக்கும் இந்திய கமாண்டோவின் விளக்கத்தை பார்ப்போம்.

முதலில் இந்தியா கமாண்டோக்கள் தாஜ் ஹோட்டல் வந்த கதை

புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் மும்பையை பயங்கரவாதம் தாக்கியது. அப்போது கேரளாவில் இருந்த மகாராஷ்டிர முதல்வர் மும்பை வரவும் இந்த சூழ்நிலையின் பயங்கரத்தையும் முழுமையாக உணர்ந்துக் கொள்ளவும் 90 நிமிடம் பிடித்தது .பின்னர் 11.00 அளவில் மத்திய அரசிற்கு போன் பேசிய முதல்வர் கோரியது 200 கமாண்டோக்களை. உடனே அந்நேரத்தில் தூங்கி கொண்டிருந்த இந்திய கமாண்டோக்கள் எழுப்பப் பட்டனர். அவர்கள் மும்பை வரத் தயாரான போதுதான் புரிந்தது, அவ்வளவு பேரை மும்பை கொண்டுவர தேவையான சிறப்பு விமானம் சண்டிகரில் உள்ளது என்று. உடனே அந்த விமானியையும் தூக்கத்தில் இருந்து எழுப்பி தயார் படுத்தி டெல்லியிலிருந்து கமாண்டோக்கள் மும்பை வந்த போது நேரம் காலை 5.25 மணி. அவர்கள் தாஜ் ஹோட்டலுக்கு கொண்டு வரப்பட்டு திட்டம் தயாரிக்கப் பட்டு அவர்கள் தாஜ் ஹோட்டலுக்குள் நுழைந்த போது நேரம் காலை 7.00 மணி. அதாவது மும்பை தாக்கப் பட்டு சுமார் ஒன்பதரை மணி நேரம் பின்னர். பாதுகாப்புத் துறை நிபுணர்கள் கூறுவது "தாக்குதல் நடைபெற்ற 30 நிம்டங்களுக்குள் பதில் தாக்குதல் நடத்தா விட்டால், எதிரிகளை அளிப்பது கடினமான காரியம் ஆகிவிடும்". (நன்றி:டைம்ஸ் ஒப் இந்தியா)

இப்படி வியாழன் காலை 7.00 மணிக்கு உள்ளே சென்ற இந்திய கமாண்டோக்கள் தீவிரவாதிகளை அழிக்க மேற்கொண்ட முயற்சிகளைப் பற்றி இங்கே பார்போம். (நன்றி: மும்பை மிர்றோர்)

தாஜ் ஹோட்டல் ஒரு மிகப் பெரிய கட்டிடம். இதில் பல நூறு சொகுசு அறைகள் உண்டு. இவை ஒவ்வொன்றும் அளவில் மிகப் பெரியவை. மேலும் பல "கூட்டம் நடத்துவற்கான" அரங்குகளும், உணவகங்களும் உண்டு. ஒவ்வொன்றும் அளவில் மிகப் பெரியவை. இந்த ஹோட்டல் இரு பிரிவுகளாக உள்ளது. அதாவது பழைய தாஜ் அரண்மனை கட்டிடம் மற்றும் புதிய தாஜ் டவர். மேலும் நூற்றுக்கணக்கான அப்பாவிகள் உள்ளே மாட்டிக் கொண்டு இருக்க, தீவிரவாதிகளை அழிக்கும் பணி மிக கடினமாகவே இருந்தது. தூரதிர்ஷ்டவசமாக, தாஜ் ஹோட்டலின் வரைபடம் கமாண்டோக்களுக்கு வழங்கப் படவில்லை. கண்காணிப்பு கேமரா அறையினையும் தீவிரவாதிகள் சேதப் படுத்தி விட்டனர். ஹோட்டலுக்குள்ளே பல இடங்களில் இவர்கள் தீ வைத்ததால், உள்ளே புகை மண்டலமாகவும் கடும் இருட்டாகவும் வேறு இருந்தது. இந்த கடினமான சூழலிலும் கூட வெற்றிகரமாக எதிரிகளை வென்ற நமது படைவீரர்களின் சாகசம் பாராட்டுக்குரியது.

இந்திய வீரர்களின் திட்டத்தின் அடிப்படை, முதலில் தீவிரவாதிகளை ஒரு குறிப்பிட்ட இடத்துக்குள் நெருக்குவது, அங்கே அவர்களுடன் சண்டை நடத்துவது, அதற்குள் உள்ளே இருப்பவர்களை காப்பாற்றி வெளியேற்றுவது. இதன் அடிப்படையில் ஒரு குழு தீவிரவாதிகளை தேடி முதல் தளத்திற்கு சென்றது. மற்றொரு குழு மேல் தளத்தில் இருந்து உள்ளே நுழைந்தது. இன்னொரு குழு உள்ளே மாட்டி கொண்டவர்களை மீட்க சென்றது. இது சொல்வதற்கு எளிதாக இருந்தாலும், உண்மையில் ஒரு மிகப் பெரிய போராட்டமாக இருந்தது. அந்த தீவிரவாதிகள் மிகுந்த போர் தேர்ச்சி பெற்றிருந்ததுடன் கட்டிடத்தின் உள்ளமைப்பு பற்றி நன்கு தெரிந்து கொண்டிருந்தனர். இதனால், அவர்களால் எளிதாக தளம் மற்றும் கட்டிடம் மாற முடிந்தது.

பலமணி நேரம், கட்டிடத்தின் அடித்தளத்தில் கழித்த இந்திய வீரர்கள் மிக நிதானமாக முதல் மாடியை நோக்கி முன்னேறினர். தீவிரவாதிகள் வீசும் குண்டுகள் மற்றும் துப்பாக்கிகளால் சுடும் சத்தம் இவற்றின் அடிப்படையிலேயே நம் வீரர்களால் அவர்கள் பதுங்கி இருக்கும் இடத்தை கணிக்க முடிந்தது. இவர்கள் முன்னேறும் போது, பின்னே வந்த மற்றொரு குழுவினர் பாதுகாப்பு தந்தனர். முதல் மாடியில் ஒவ்வொரு அறையாக இவர்கள் சோதனை இட்டனர். அப்போது, அந்த தளத்தின் முழு விவரத்தையும் அறிந்திருந்த தீவிரவாதிகள் இவர்களுடன் கண்ணாமூச்சி விளையாட்டு காட்டினர். கையெறி குண்டுகளை நம் வீரர்கள் மீது எறிந்தனர். மேலும் பல இடங்களில் தீ வைத்தனர். கிட்டத்தட்ட ஒரு நாள் முழுக்க நடை பெற்ற சண்டைக்கு பின்னர், நம் வீரர்களால், அந்த தளத்தின் முழு விவரத்தையும் அறிந்து கொள்ள முடிந்ததுடன், தீவிரவாதிகளை ஒரு குறிப்பிட்ட இடத்திற்குள் நெருக்க முடிந்தது.

தீவிரவாதிகளை நேரில் பார்த்த ஒரு கமாண்டோவின் கூற்றுப் படி, அந்த தீவிரவாதிகள் மிகவும் இளைய வயதினராய் இருந்தனர். ஒரு குறிப்பிட்ட நேர சண்டைக்கு பிறகு களைத்துப் போய் விட்டனர். மிகவும் பயந்து போய் கூட இருந்தனர். கைகளை தூக்கி சரணடைவது போல நடித்த ஒருவன் தப்பி ஓட முயல நம் வீரர்கள் அவனை சுட்டுக் கொன்றனர். அவன் முகத்தை கூட பார்க்க விரும்பாமல் தப்பி சென்ற மற்றொருவனை தேடும் பணியை தொடர்ந்தனர்.

இதே சமயம், உள்ளே மாட்டி கொண்டிருந்தவர்களில் (அறைகளில் தங்கி இருந்த )பலருடன் தொலை பேசி மூலம் தொடர்பு கொண்ட போலீஸார், அவர்களை அங்கேயே இருக்கும் படி அறிவுறுத்தினர். பின்னர் உள்ளே சென்ற மற்றொரு குழுவினரால் அவர்கள் பத்திரமாக காப்பாற்றப் பட்டனர்.

மேல்தளத்தின் வழியாக , உள்ளே நுழைந்த கமாண்டோக்களின் பணி இன்னும் சிரமாக இருந்தது. தீயை அணைக்க பாய்ச்சப் பட்ட நீர் ஆறாவது மாடியில் கழுத்து வரை நிரம்பி இருந்தது. கொல்லப் பட்டவர்களின் உடல்கள் நீரில் மிதந்து கொண்டிருந்தன. அவர்கள் கொல்லப் பட்டு 24 மணி நேரத்திற்கு மேல் ஆகி விட்டதால், அந்த உடல்கள் அழுகி கடும் நாற்றம் கிளம்பி இருந்தது. ஒரு கமாண்டோ கூறுகிறார். " என்னால் அந்த சூழல் எப்படி இருந்தது என்று சொல்லவே முடிய வில்லை"

இவ்வாறு ஒரு குறிப்பிட்ட இடத்திற்குள் தீவிரவாதிகளை நெருக்குவது அதே சமயத்தில் உள்ளே மாட்டிக் கொண்டவர்களை பத்திரமாக மீட்பது என்ற "ஆபரேஷன் சைக்ளோன்" என்ற திட்டத்தை முதல் பாதியை சிறப்பாக செயல் படுத்திய நம் வீரர்கள், ஹோட்டலுக்குள் உயிரோடு இருந்த அனைவரும் பத்திரமாக மீட்கப் பட்டனர் என்று தெரிய வந்தவுடன், தமது தாக்குதலை தீவிரப் படுத்தினர்.

அதே சமயம் பல மணி தூங்காமல் தீவிரவாதிகள் மிகுந்த களைப்படைந்திருந்தனர். அவர்களை ஒரு நிமிடம் கூட ஓய்வெடுக்காமல் சண்டையிடச் செய்ததும் நமது வீரர்களின் போர்த்தந்திரம். ஒரு தீவிரவாதி "ரப்பா! ரெஹம் கர்!", அதாவது கடவுளே என்னைக் காப்பாற்று என்று ஒலமிட்டதாகவும் நம் கமாண்டோ தெரிவித்தார். மற்றொருவன், தாக்குதலை நிறுத்துங்கள், வெளியே வந்து விடுகிறேன் என்று கதறியதாகவும் தெரிவித்தார்.

இறுதியாக, அனைத்து அப்பாவிகளும் தப்பித்தனர் என்று உறுதி செய்து கொண்ட நம் வீரர்கள், அவர்களை நெருக்கி அறைகளுக்குள் ஒளிந்து கொள்ள செய்தனர். பின்னர், தீவிரவாதிகள் ஒளிந்து இருந்ததாக சந்தேகிக்கப் படும் அறைகளின் கதவினை குண்டுகள் கொண்டு தகர்த்தனர். உள்ளே சென்று சில குண்டுகளை மீண்டும் எறிந்தனர்.

சுமார் 50 மணி நேர போராட்டத்திற்கு பின்னர், அனைத்து தீவிரவாதிகளும் ஒழித்துக் கட்டப் பட்டனர். பின்னர் அவர்கள் உடல்களை முற்றிலும் சிதைந்த நிலையில் இவர்கள் கண்டுபிடித்தனர். அதைப் பற்றி ஒரு கமாண்டோ கூறியது. "அவர்கள் ஒரு கொடூரமான சாவை அதற்கான வலியை மெல்ல மெல்ல உணர்ந்தவாறே அடைந்தனர். அவர்கள் உடல்கள் சின்னா பின்னமாகின நிலையில் கண்டெடுக்கப் பட்டன.. ஒருவனது கண்களுக்குள்ளே கூட குண்டுகள் பாய்திருந்தன".

50 மணி நேரம் சாப்பிடாமல், தூங்காமல் போராடி தீவிரவாதிகளை ஒழித்து கட்டியது மட்டுமல்லாமல் பலரின் உயிரை காப்பாற்றிய நம் வீரர்களுக்கு வாழ்த்தும் நன்றியும் சொல்லும் அதே நேரத்தில் இந்தியாவை தாக்க நினைக்கும் தீவிரவாதிகளுக்கு ஒரு செய்தி.

"ஆயுதம் இல்லாத அப்பாவிகளை கொல்லும் பேடிகளே! ஒன்றை புரிந்துக் கொள்ளுங்கள், உங்களால் எங்கள் படை வீரர்களை ஒருநாளும் நேருக்கு நேர் சந்திக்கவே முடியாது. அதற்கு வேண்டிய ஆண்மையும் வீரமும் உங்களிடம் இல்லை. மேலும், இந்தியா எனும் வல்லரசுடன் மோதினால் உங்கள் சாவு மிகக் கொடூரமாக இருக்கும். அந்த சாவு கூட, பல ஆண்டுகள் பெருவியாதியால் வேதனைப் பட்டு இறக்கும் ஒருவனது வேதனை முழுவதும் முழுமையாக உணர்ந்த பின்னரே நிகழும். அது மட்டுமல்ல, தாய் நாட்டிற்காக உயிர்நீத்த எங்கள் அருமை வீரர் உடல்கள் முழு மரியாதையுடன் அடக்கம் செய்யப் படும் அதே வேளையில் உங்களது உடலுக்கு தெருவில் அடிப்பட்ட சொறி நாய்க்கு கிடைக்கும் மரியாதை கூட கிடைக்காது. இறப்பிலும் நாறும் கேவலமான நிலை உங்களுக்கு தேவையா என்பதை இந்தியா வருவதற்கு முன்னரே (உங்களுக்கு மூளை என்று ஒன்று இருந்தால்) முடிவு செய்து கொள்ளுங்கள்"

"மேலும், உங்களுக்கு கடவுள் நம்பிக்கை என்று ஒன்று இருந்தால் மற்றும் சொர்க்கம் நரகம் என்றவற்றின் மீதும் நம்பிக்கை இருந்தால் ஒரு செய்தி. அப்பாவிகளை கொல்லுபவனுக்கு கடவுள் இறந்த பிறகும் நரகத்தில் கடும் தண்டனை அளிப்பார் என்று எல்லா மதங்களின் புனித வேத நூல்களும் கூறுகின்றன. எனவே, இறக்கும் முன்னரும், இறந்த பின்னரும் இவ்வவளவு கடும் தண்டனை தேவையா என்று ஒரு நிமிடம் யோசியுங்கள்"

32 comments:

நட்புடன் ஜமால் said...

\\"மேலும், உங்களுக்கு கடவுள் நம்பிக்கை என்று ஒன்று இருந்தால் மற்றும் சொர்க்கம் நரகம் என்றவற்றின் மீதும் நம்பிக்கை இருந்தால் ஒரு செய்தி. அப்பாவிகளை கொல்லுபவனுக்கு கடவுள் இறந்த பிறகும் நரகத்தில் கடும் தண்டனை அளிப்பார்\\

முற்றிலும் உண்மை

Maximum India said...

அன்புள்ள அதிரைஜமால்

பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி

கபீஷ் said...

நல்லா எழுதியிருக்கீங்க!

//இந்தியா எனும் வல்லரசு//

முதல்ல இந்தியா ஒரு நல்லரசா இருக்கட்டும், அடிப்படை உரிமைகள்ல
உயிர் வாழும் உரிமையையும் சேர்க்க வேண்டிய நிலைமையில இருக்கோம்.

ரொம்ப நெகடிவ்வா பேசறேன்னு நினைக்காதீங்க, இருக்கற நிலைமைய சொன்னேன். இனிமேலாவது இந்தியாவுக்கு விடிவு கிடைக்காதா என்ற ஆசையுடன்

கபீஷ் said...

\\"மேலும், உங்களுக்கு கடவுள் நம்பிக்கை என்று ஒன்று இருந்தால் மற்றும் சொர்க்கம் நரகம் என்றவற்றின் மீதும் நம்பிக்கை இருந்தால் ஒரு செய்தி. அப்பாவிகளை கொல்லுபவனுக்கு கடவுள் இறந்த பிறகும் நரகத்தில் கடும் தண்டனை அளிப்பார்\\

இதுல தான் பிரச்சனையே, இதை தப்பா புரிஞ்சுக்கறதால தான் இவ்ளோ கொடுமையும்

MCX Gold Silver said...

//ஆயுதம் இல்லாத அப்பாவிகளை கொல்லும் பேடிகளே! ஒன்றை புரிந்துக் கொள்ளுங்கள், உங்களால் எங்கள் படை வீரர்களை ஒருநாளும் நேருக்கு நேர் சந்திக்கவே முடியாது. அதற்கு வேண்டிய ஆண்மையும் வீரமும் உங்களிடம் இல்லை. மேலும், இந்தியா எனும் வல்லரசுடன் மோதினால் உங்கள் சாவு மிகக் கொடூரமாக இருக்கும். அந்த சாவு கூட, பல ஆண்டுகள் பெருவியாதியால் வேதனைப் பட்டு இறக்கும் ஒருவனது வேதனை முழுவதும் முழுமையாக உணர்ந்த பின்னரே நிகழும். அது மட்டுமல்ல, தாய் நாட்டிற்காக உயிர்நீத்த எங்கள் அருமை வீரர் உடல்கள் முழு மரியாதையுடன் அடக்கம் செய்யப் படும் அதே வேளையில் உங்களது உடலுக்கு தெருவில் அடிப்பட்ட சொறி நாய்க்கு கிடைக்கும் மரியாதை கூட கிடைக்காது. இறப்பிலும் நாறும் கேவலமான நிலை உங்களுக்கு தேவையா என்பதை இந்தியா வருவதற்கு முன்னரே (உங்களுக்கு மூளை என்று ஒன்று இருந்தால்) முடிவு செய்து கொள்ளுங்கள்"//
ஒவ்வொரு இந்தியனிடமும் இந்த நாட்டுப்பற்று இருந்தால் இந்தியாவை எவனாலும் ஒன்றும் செய்ய முடியாது

அஜீம்பாஷா said...

They dont know we are indians, in the name of religion they cannot divide us , we are united. we will be united against aggression by foreigners to wipe out the enemies of india. Jai Hind

Maximum India said...

அன்புள்ள கபீஷ்

"வல்லரசு" எனும் சொல் மிகுந்த யோசனைக்கு பின்னரே எழுதப் பட்டது. இந்தியா வல்லரசு என்பதிலும் நல்லரசு என்பதிலும் தயவு செய்து எந்த சந்தேகமும் எழுப்ப வேண்டாம். நாம் ஒற்றுமையானவர்கள் என்றும் வல்லவர்கள் என்றும் உலகிற்கு காட்ட வேண்டிய தருணம் இது.

Maximum India said...

பின்னூட்டத்திற்கு நன்றி

//இதுல தான் பிரச்சனையே, இதை தப்பா புரிஞ்சுக்கறதால தான் இவ்ளோ கொடுமையும்//

"மேலும், உங்களுக்கு கடவுள் நம்பிக்கை என்று ஒன்று இருந்தால் மற்றும் சொர்க்கம் நரகம் என்றவற்றின் மீதும் நம்பிக்கை இருந்தால் ஒரு செய்தி. அப்பாவிகளை கொல்லுபவனுக்கு கடவுள் இறந்த பிறகும் நரகத்தில் கடும் தண்டனை அளிப்பார்"

என்று நான் குறிப்பிட்டவை என்னுடைய சொந்த சிந்தனை அல்ல. நேற்று, கேட் வே ஆப் இந்தியாவிற்கு அனைவருடன் சேர்ந்து மெழுகு வர்த்தி ஏற்றி இந்தியாவின் ஒற்றுமையை போற்றிய என் சகோதர மதத்தை சார்ந்தவர் கூறியது.

Maximum India said...

அன்புள்ள dg

பின்னூட்டத்திற்கு நன்றி

//ஒவ்வொரு இந்தியனிடமும் இந்த நாட்டுப்பற்று இருந்தால் இந்தியாவை எவனாலும் ஒன்றும் செய்ய முடியாது//

நாட்டு பற்று ஒவ்வொரு இந்தியனிடமும் உள்ளது. வெளிப்பட இது போன்ற தருணங்களிலேயே வெளிப்படுகிறது. இவ்வாறு வெளிப்படும் நாட்டுப் பற்றை ஆக்கப் பூர்வமாக பயனுறச் செய்வது நம் தலைவர்களின் கடமை.

Maximum India said...

Dear Azeem Basha

//They dont know we are indians, in the name of religion they cannot divide us , we are united. we will be united against aggression by foreigners to wipe out the enemies of india. Jai Hind//

I would like to repeat every word of you many times.

Thank you for teh comments.

Jai Hind

MCX Gold Silver said...

சில கைகூலிகளும் நம் நாட்டில் உள்ளனரே

கபீஷ் said...

Mr.Azeem Basha's comment is highly apprciated and I second him

MUTHU said...

இது போல் கொடுமை எதிர் காலத்தில் நடக்காமல் பார்த்துக்கொள்வது நமது கடமை

Maximum India said...

அன்புள்ள கபீஷ்

//Mr.Azeem Basha's comment is highly apprciated and I second him//

நன்றி. நானும் உங்களின் இந்த கருத்தை வழி மொழிகிறேன்

Maximum India said...

அன்புள்ள dg

//சில கைகூலிகளும் நம் நாட்டில் உள்ளனரே//

இருக்கலாம். அந்த சிலரை களையெடுப்பது நமது கடமை.

அதே சமயம், பல நல்லவர்களும் இந்தியாவில் இருக்கிறார்கள் என்பதை நாம் மறக்கக் கூடாது. அந்த நல்ல சக்திகளை ஒன்று சேர்ப்பது நமது கடமை. மக்களால் என்ன செய்ய முடியும் என்று நினைக்காதீர்கள்? மக்கள் சக்தி மகத்தானது. அவர்களது உணர்வுகளை வெகுகாலம் அரசால் புறந்தள்ள முடியாது. உதாரணம் இன்றைய ராஜினாமாக்கள்.

Maximum India said...

அன்புள்ள முத்து

//இது போல் கொடுமை எதிர் காலத்தில் நடக்காமல் பார்த்துக்கொள்வது நமது கடமை//

நிச்சயமாக. நம்மைப் போன்றவர்கள் கூட இது விஷயத்தில் சிந்தித்து அரசுக்கும் நாட்டுக்கும் சில யோசைனைகள் கூறலாம்.

SRI said...

இப்படிப்பட்ட ராணுவ வீரர்களுக்கு ஏன் குறைவாக உதிய உயர்வு கொடுக்க I A S அதிகாரிகள் 6th Pay கமிஷன் ல் முடிவு எடுத்தனர் ? இந்த போர் நடக்கும் பொது எங்கே போனார்கள் அதிக சம்பளம் வாங்கிய I A S Officers. ?

Indy said...

அய்யா ,
நாம் எங்க தீவிரவாதிகளை வெற்றி கொண்டோம்?
நமது ராணுவ வீரர்கள் சம்பளத்துக்கு வேலை பார்கிறார்கள்., தீவிரவாதிகள் சம்பளத்துக்கு கடமைக்கு / உரிமைக்கு வேலை செய்கிறார்கள்.
ராணுவ வீரர்கள் "liquor ரேஷன் க்கு கியூ வில் நிற்கிறார்கள். தீவிரவாதிகள் அவ்வாறு செய்வதில்லை.
சுபாஷ் சந்திரபோஸ் ஐ நாம் நேதாஜி என்று கூறுகிறோம். ஆனால் மாற்ற வேடுதலை போராட்ட வீரர்களை தீவிரவாதிகள் என்று சொல்கிறோம்.
I லவ் my country and so this message. அரசியல்வாதிகளும் ஊடகங்களும் நமக்கு போலியான நாட்டுபற்றை போதிக்கிறார்கள். மனித நேயத்தை மறந்து விட்டோம்.

Maximum India said...

அன்புள்ள ஸ்ரீ

பின்னூட்டத்திற்கு நன்றி

//இப்படிப்பட்ட ராணுவ வீரர்களுக்கு ஏன் குறைவாக உதிய உயர்வு கொடுக்க I A S அதிகாரிகள் 6th Pay கமிஷன் ல் முடிவு எடுத்தனர் ? இந்த போர் நடக்கும் போது எங்கே போனார்கள் அதிக சம்பளம் வாங்கிய I A S Officers. ?//

சரியாகச் சொன்னீர்கள். நாட்டை காக்கும் வீரர்களுக்கு அதிக சம்பளம் வழங்க வேண்டும். மேலும் மும்பை தாக்குதலின் போது உயிரிழந்த போலீசாருடைய மற்றும் ராணுவ வீரர்களுடைய குடும்பத்தாருக்கு மிக அதிக இழப்பீடு வழங்கப் பட வேண்டும்.

Maximum India said...

அன்புள்ள indy

பின்னூட்டத்திற்கு நன்றி

//நாம் எங்க தீவிரவாதிகளை வெற்றி கொண்டோம்? //

உங்களுக்கு இது வெற்றியாக தெரியவில்லையென்றால் அது உங்கள் தனிப்பட்ட கருத்து.

//நமது ராணுவ வீரர்கள் சம்பளத்துக்கு வேலை பார்கிறார்கள்., தீவிரவாதிகள் சம்பளத்துக்கு கடமைக்கு / உரிமைக்கு வேலை செய்கிறார்கள்.
ராணுவ வீரர்கள் "liquor ரேஷன் க்கு கியூ வில் நிற்கிறார்கள். தீவிரவாதிகள் அவ்வாறு செய்வதில்லை.
சுபாஷ் சந்திரபோஸ் ஐ நாம் நேதாஜி என்று கூறுகிறோம். ஆனால் மாற்ற வேடுதலை போராட்ட வீரர்களை தீவிரவாதிகள் என்று சொல்கிறோம். //

இது மிகத் தவறான கருத்து. நீங்களும் நானும் வசதியாக பாதுகாப்பாக வேலை செய்து கொண்டு வாங்கும் சம்பளத்தை விட மிகக் குறைவான சம்பளத்தில் வேலை செய்பவர்கள் நம்மை பாதுகாக்கும் ராணுவ வீரர்கள். தியாக உணர்வும் நாட்டு பற்று இல்லாதவர்கள் ராணுவ வீரர்கள் ஆக முடியாது.

மேலும் நேதாஜி தொடுத்தது பிரிட்டிஷ் அரசின் மீதான நேரடிப் போர். அவருடைய முழுச் சரித்திரத்தை படித்திருந்தால் இவ்வாறு பின்னூட்டம் இட்டிருக்க மாட்டேர்கள். அவரோடு இந்த ஆயுதமற்ற அப்பாவிகளைக் கூட கொன்று குவித்த கோழைகளை தயவு செய்து ஒப்பிடாதீர்கள்.

//I லவ் my country and so this message. அரசியல்வாதிகளும் ஊடகங்களும் நமக்கு போலியான நாட்டுபற்றை போதிக்கிறார்கள். மனித நேயத்தை மறந்து விட்டோம். //

இது மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் இடையே நடை பெரும் யுத்தம். குழந்தைகள் சுட்டுக் கொல்லப் பட்ட போது எங்கே சென்றது உங்கள் மனித நேயம்? இதில் மனித நேயம் என்ற வார்த்தையை கொச்சை படுத்தவேண்டாம். மேலும் மற்றவர்கள் சொல்லி நமக்கு நாட்டு பற்று வர வேண்டாம்.இது நம் வீடு. இந்த நம் வீட்டில் வேற்றான் அனுமதியின்றி நுழைந்து விட்டான் என்று தன்னால் வரும் கோப உணர்வு.

Maximum India said...

அன்புள்ள indy

//I லவ் my country and so this message//.

இந்த வரி உங்கள் மீது எனக்கு நம்பிக்கையும் மதிப்பையும் அன்பையும் கொடுத்தது.

SurveySan said...

கடைசி இரண்டு பத்திகள், நெத்தி அடி!

ஜெய்ஹிந்த்!

Maximum India said...

Dear SurveySan

Thank you very much for the comments

Indy said...

அன்புள்ள அய்யா,
உங்கள் கருத்து சுதந்திரத்திற்கு நன்றி.
இது நம் வீடு என்று சொன்னிர்கள். எனக்கும் நம் ராணுவ வீரர்களை பற்றி தவறாக சொல்வதற்கு வெட்கமாக தான் இருக்கிறது. ஆனாலும் அவர்கள் மனித உரிமைகளை பற்றி எதுவும் தெரியாமல் சில (பல) குற்றங்களை புரிந்து இருக்கிறார்கள். காஷ்மீர் இல் தினமும் பல அப்பாவிகளை கொள்கிறார்கள்.
என் வீட்டில் உள்ளவர்கள் செய்தாலும் குற்றம் குற்றமே.
Human rights watch மற்றும் Amnesty international போன்றவர்கள் பலமுறை சொல்லி விட்டார்கள்.

அருண் said...

அருமையான கட்டுரை.

ambi said...

அருமையாக எழுதியுள்ளீர்கள். என்னை அறியாமல் கண்கள் பனித்தன.

கடைசி பாரா நெத்தியடி.

Maximum India said...

அன்புள்ள அம்பி

பின்னூட்டத்திற்கு நன்றி. உங்களது உணர்வு புரிகிறது.

பின்னூட்டத்திற்கு நன்றி. சாதாரணமாக, உணர்ச்சி வசப் படக் கூடாதென்று நினைக்கின்ற என்னாலேயே, இது போன்று அப்பாவி மக்களை (குழந்தைகள் உட்பட) ஈவு இரக்கமின்றி கொடூரமாக கொன்று குவித்ததை பார்க்கும் போது கோபத்தை கட்டு படுத்த முடிய வில்லை.

Maximum India said...

அன்புள்ள அருண்

பின்னூட்டத்திற்கு நன்றி

Maximum India said...

Dear Chutti Arun

I will do it once I could see your website. Please bear with me.

Maximum India said...

அன்புள்ள indy

//உங்கள் கருத்து சுதந்திரத்திற்கு நன்றி//

உங்களுக்கு தெரியுமா? இந்தியாவில் எனக்கு மிகவும் பிடித்தது இந்த கருத்து சுதந்திரம்தான். இந்த கருத்துச் சுதந்திரம் நமக்கு வந்தது இன்று நேற்றோ வந்ததல்ல. நமது அரசியல் சட்டமோ அல்லது பிரிட்டிஷ் பாரம்பரியமோ தந்ததுமல்ல. மிகப் பழங்காலத்திலிருந்தே நமது பண்பாட்டில் இந்த முழு கருத்துச் சுதந்திரம் இருந்து வந்துள்ளது.

இந்தியாவில் மட்டும்தான், வேதம் பேசிக் கொண்டே வேதாந்தமும் பேச முடியும். ஒரு மதத்தை சார்ந்தவராய் இருந்து கொண்டே நாத்திகம் பேச முடியும். நமக்கு உலகை கற்றுக் கொடுத்த மொழியையும் வாழ வைக்கும் நாட்டையும் இழிவு படுத்த முடியும். நம்மை ஆளும் அரசாங்கத்தையும் பாதுகாக்கும் ராணுவத்தையும் பழித்து பேச முடியும். பிரிவினைவாதிகளையும் எதிரி நாடுகளையும் போற்ற முடியும். இது போன்ற சுதந்திரம் உலக நாடுகளிலேயே சுதந்திரம் உச்சக் கட்டத்தில் வழங்கப் பட்டிருப்பதாக கருதப் படும் அமெரிக்காவில் கூட கிடையாது. மீண்டும் சொல்கிறேன். இந்த சுதந்திரம் நமக்குக் கொடுத்தது சட்டமோ அரசோ அல்ல. இந்த மண்ணின் பாரம்பரியம். எனவேதான், உங்களது தனிப் பட்ட கருத்துகளை என்னால் மதிக்க முடிகிறது.

//இது நம் வீடு என்று சொன்னிர்கள். எனக்கும் நம் ராணுவ வீரர்களை பற்றி தவறாக சொல்வதற்கு வெட்கமாக தான் இருக்கிறது. ஆனாலும் அவர்கள் மனித உரிமைகளை பற்றி எதுவும் தெரியாமல் சில (பல) குற்றங்களை புரிந்து இருக்கிறார்கள். காஷ்மீர் இல் தினமும் பல அப்பாவிகளை கொள்கிறார்கள்.
என் வீட்டில் உள்ளவர்கள் செய்தாலும் குற்றம் குற்றமே.//

நான் நம் வீடு என்று சொன்னது காஷ்மீரையும் சேர்த்துத்தான். இந்த நம்பிக்கையை காஷ்மீர் மக்களே மாநில தேர்தலில் பிரினைவாதிகளின் அச்சுறுத்தலையும் பணியின் கொடுமையையும் மீறி இந்திய ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்ததின் மூலம் நிருபித்து விட்டனர்.

மேலும், நம் வீட்டினர் (இரு தரப்பிலும்) சில தவறுகள் செய்திருக்கலாம். அவற்றை நமக்குள்ளே பேசித் தீர்த்துக் கொள்வதுதான் முறையே தவிர அண்டை வீட்டார் முன் அம்பலம் செய்யக் கூடாது. ஒரு முக்கிய விஷயத்தை நீங்கள் கவனிக்க தவறி விட்டீர்கள். இந்த பதிவிலும் சரி, அரசு தரப்பிலும் சரி காஷ்மீர் பிரிவினை வாதிகள் மீது இத்தாக்குதலுக்கான குற்றச் சாட்டு தெரிவிக்கப் படவில்லை. இதை செய்தவர்கள் அந்நியர் என்றே கருதப் படுகிறது.


//Human rights watch மற்றும் Amnesty international போன்றவர்கள் பலமுறை சொல்லி விட்டார்கள்.//

பல சமயங்களில் இவர்களது மதிப்பீடுகள் ஒருதலைபட்சமாகவே இருந்திருக்கிறது என்பதை நாம் மறக்கக் கூடாது. கொலைகாரர்களுக்கு மனித நேயம் காட்டச் சொல்லும் இவர்கள் குழந்தைகள் கொல்லப் பட்ட போது ஒரு வார்த்தை கூட சொல்லாததின் காரணம் என்ன?

KARTHIK said...

//Indy said...
அய்யா,நாம் எங்க தீவிரவாதிகளை வெற்றி கொண்டோம்?நமது ராணுவ வீரர்கள் சம்பளத்துக்கு வேலை பார்கிறார்கள்.,தீவிரவாதிகள் சம்பளத்துக்கு கடமைக்கு / உரிமைக்கு வேலை செய்கிறார்கள்.ராணுவ வீரர்கள் "liquor ரேஷன் க்கு கியூ வில் நிற்கிறார்கள். தீவிரவாதிகள் அவ்வாறு செய்வதில்லை. //

உங்கலோட இந்த கருத்த என்னானு சொல்ல.ஒரு வரில சருக்காக வேல பாக்குர மாதிரி இப்படி சொல்லிட்டீங்களெ.விடுப்புக்கு வர்ர வீரன்கிட்ட கேட்டுப்பாருங்க அவங்கிட்ட நம் மக்கள் முதல்ல கேக்குர கேள்வி எனக்கு சருக்கு குடு.
எப்படி இருக்க எப்போ வந்த இதெல்லாம் கேக்க மாட்டானுங்க.
ரேசன்ல டீவி வாங்கிக் குடு அதவாங்கு இத வாங்குங்பாங்க.

தீவிரவாதிகலுக்கு உயர் ரக ஹெராயின் சரக்கும் பெண்கலும் தரப்படுவதை உங்கலால் மறுக்க முடியுமா

// காஷ்மீர் இல் தினமும் பல அப்பாவிகளை கொள்கிறார்கள்.
என் வீட்டில் உள்ளவர்கள் செய்தாலும் குற்றம் குற்றமே.//

யாருங்க சொன்ன.ஒரு தீவிரவாத கும்பல் ஒரு வீடுக்கு போனா அந்த வீட்டுல இருக்க ரேசன் பொருட்கள்ல இருந்து பெண்கள் வரை ஒன்னையும் விட்டுவைக்க மாட்டானுங்க.

இந்த மனித உரிமை பத்தி பேசியே நாம் இழந்தது அதிகம் இப்போ பூன்ச்ல பாதி ஆசாத் காஸ்மீர் புடிச்சுட்டாங்க தெரியுமில்ல.இப்போ வந்த தீவிரவாதிகள் கூட அங்க பயிற்சி எடுத்துகிட்டவங்கதான்.

யாரோ குடுக்குர பணத்துக்காக இங்க வந்து நம் மக்கள கொள்லுராங்க அவங்க கிட்ட இருந்து நம்மல காக்கர நம்ம வீரர்கல இந்த மாதிரி சமயத்துல இப்படி சொல்லாதிங்க.

அருமையான பதிவுங்க.

Maximum India said...

அன்புள்ள கார்த்திக்

உணர்ச்சிபூர்வமான பின்னூட்டத்திற்கு நன்றி.

என்னுடைய இரண்டாவது பின்னூட்டத்தையும் பாருங்கள்

நன்றி

Blog Widget by LinkWithin