இன்றைய தேதியில் அமெரிக்க ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்காக அந்நாட்டு மக்கள் வாக்களிக்க போகிறார்கள். இந்த தேர்தலில் உள்ள சில வினோத அம்சங்கள் பற்றியும் இந்தியாவின் நிலை பற்றியும் இங்கு அலசலாம்.
நாம் அனைவரும் பொதுவாக நினைப்பது போல, அமெரிக்க ஜனாதிபதி மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப் படுவதில்லை. அமெரிக்க மக்கள் இன்றைய தேதியில் வாக்களிப்பது ஒரு வகை தேர்வாளர்களை (Electoral College) தேர்ந்தெடுப்பதற்கு மட்டுமே . அந்த தேர்வாளர்களே (Electors) பின்னொரு நாளில் அமெரிக்க ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கிறார்கள்.
அமெரிக்காவில் உள்ள மொத்த தேர்வாளர்களின் எண்ணிக்கை அமெரிக்க மாநிலங்களவை (US Senate) மற்றும் மக்களவை (House of Representatives) உறுப்பினர்களின் கூட்டு தொகையாக இருக்கும். அமெரிக்க மக்களவையில் மாநிலங்களின் பங்கு அவற்றின் மக்கள் தொகையைப் பொறுத்து வேறுபடும். ஆனால் மாநிலங்களவையில் அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே அளவு (அதாவது 2 மட்டுமே) உறுப்பினர்கள் மட்டுமே. இந்திய பாணியில் சொல்ல வேண்டுமானால், மக்கள் தொகை மிகுந்த உத்திர பிரதேசத்திற்கும் ஒரே மதிப்பு, மக்கள் தொகை மிக குறைவான மணிப்புருக்கும் ஒரே மதிப்பு.
எனவே, ஒரு மாநிலத்திலிருந்து தேர்ந்தெடுக்கப் படும் அமெரிக்க தேர்வாளர்கள் எண்ணிக்கையை கண்டுபிடிக்க அந்த மாநிலத்தின் மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை உடன் இரண்டை கூட்டிக் கொள்ள வேண்டும்.
மேலும், அந்தந்த மாநிலத்தின் தேர்வாளர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தல் முறையினை தீர்மானித்துக் கொள்ள அந்தந்த மாநிலங்களுக்கே உரிமை வழங்கப் பட்டுள்ளது. சில மாநிலங்களில் இந்தியா போன்ற தனி தனியாக வெற்றி பெற்றவர்களை கணக்கிடும் தேர்தல் முறை இருக்க சில மாநிலங்களில் மொத்தமாக அதிக வாக்குகள் பெறுபவர்க்கே அம்மாநிலத்தின் அனைத்து தேர்வாளர்களும் சொந்தம் என்ற ஒரு வித்தியாசமான தேர்தல் முறையும் (Winner takes all) உண்டு. இந்திய பாணியில் சொல்ல வேண்டுமானால், தமிழ் நாட்டில் அதிக வோட்டு பெறும் (ஒரு) கட்சிக்கே தமிழ் நாட்டைச் சார்ந்த அனைத்து உறுப்பினர்களும் சொந்தம்.
இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் தேர்வாளர்கள் கட்சி வேறுபாடு இன்றி எந்த ஜனாதிபதி வேட்பாளருக்கும் தனது வாக்கினை அளிக்க சட்ட ரீதியாக தடை இல்லை. ஆனால் நடைமுறையில், அந்தந்த கட்சி வேட்பாளருக்கே அவர்கள் தமது வாக்கினை அளிக்கின்றனர். கொஞ்சம் யோசித்து பாருங்கள். இந்தியாவில் இத்தகைய முறை இருந்தால் இடைப்பட்ட வேளையில் என்னவெல்லாம் நடக்கும்?
இப்போது, குடியரசு கட்சி சார்பில் மேக் கைனும் ஜனநாயக கட்சி சார்பில் பாரக் ஒபாமாவும் போட்டி இடுகின்றனர். தற்போது உள்ள நிலவரப்படி, ஒபாமாவே வெற்றி பெறுவார் என்று பலராலும் கணிக்கப் படும் வேளையில் இந்தியாவிற்கு யார் வெற்றி பெற்றால் நல்லது என்று பார்ப்போம்.
பொதுவாக, குடியரசு கட்சி சர்வதேச விவகாரங்களில் இந்தியா பக்கமும் ஜனநாயக கட்சி பாகிஸ்தான் பக்கமும் இருக்கும் நிலை இருந்திருக்கிறது. (கிளின்டன் சமயத்தில் இதில் சற்று மாற்றம் ஏற்பட்டு உள்ளது.). இப்போது கூட, காஷ்மீர் விவகாரத்தில் ஒபாமா தெரிவித்த கருத்துகள் இந்தியாவிற்கு எதிராகவும் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் இருப்பதாக அரசியல் வல்லுனர்கள் கருதுகின்றனர். மேலும் அணு ஒப்பந்தம் புஷ் (குடியரசு கட்சி) ஆட்சியில் நிறைவேறி இருப்பதால், ஒபாமா அதை முழுமையாக நிறைவேற்றுவாரா என்பது குறித்தும் இந்தியாவில் சற்று கவலையுடன் தோய்ந்த சந்தேகம் இருக்கிறது. மேலும் BPO விவகாரத்தில் கூட ஜனநாயக கட்சி சற்று அதிக அளவு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் சிலர் கூறுகின்றனர். ஆனால் வேடிக்கையான விஷயம் என்னவெனில் , அமெரிக்காவில் உள்ள இந்தியர்களில் பெரும்பாலானோர் ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவர்கள் என்று கூட சில தகவல்கள் கூறுகின்றன.
யார் ஜெயித்தாலென்ன, வெற்றி பெற்ற கட்சியே நமது கட்சி என்று இந்திய வெளியுறவுத் துறையினர் புரிந்து கொண்டு செயல்பட்டால் நம் நாட்டிற்கு நல்லது.
நன்றி
8 comments:
எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பெட்டி பெட்டியாய் கொடுக்கும் கட்சி தானே நம் கட்சி
ஐயா! அமெரிக்கா தேர்தலைப் பற்றி மிக அழகாக எழுதியிருக்கிறீர்கள். ஒரே ஒரே பாயின்ட்: ஜனநாயகம் என்றால் என்ன குடியரசு என்றால் என்ன? இரண்டும் ஒன்று தானே ? இதில் எப்படி ஒன்று " Democratic " என்றும் ஒன்று "Republic" என்றும் பொருள் தரும்? கல்கி அல்லது ஆனந்த விகடன் போன்ற ஒரு பத்திரிக்கையில் யாரோ ஒரு ஆசிரியர் எழுத ஆரம்பித்திருப்பார்; அதையே பலப் பல ஆண்டுகளாக மீண்டும் மீண்டும் பயன் படுத்தி வருகிறார்கிறார்கள். டெமாக்ரடிக் என்றும் ரிபப்ளிக்
என்றும் எழுதி விட்டால் என்ன குறைந்தா போய்விடும்
ஐயா! அமெரிக்கா தேர்தலைப் பற்றி மிக அழகாக எழுதியிருக்கிறீர்கள். ஒரே ஒரே பாயின்ட்: ஜனநாயகம் என்றால் என்ன குடியரசு என்றால் என்ன? இரண்டும் ஒன்று தானே ? இதில் எப்படி ஒன்று " Democratic " என்றும் ஒன்று "Republic" என்றும் பொருள் தரும்? கல்கி அல்லது ஆனந்த விகடன் போன்ற ஒரு பத்திரிக்கையில் யாரோ ஒரு ஆசிரியர் எழுத ஆரம்பித்திருப்பார்; அதையே பலப் பல ஆண்டுகளாக மீண்டும் மீண்டும் பயன் படுத்தி வருகிறார்கிறார்கள். டெமாக்ரடிக் என்றும் ரிபப்ளிக்
என்றும் எழுதி விட்டால் என்ன குறைந்தா போய்விடும்
அன்புள்ள வால்பையன்
//எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பெட்டி பெட்டியாய் கொடுக்கும் கட்சி தானே நம் கட்சி//
ஏனென்றால் நாம் வாழ்வது பணநாயக மன்னிக்கவும் ஜனநாயக நாட்டில்
அன்புள்ள ஐயா
//ஒரே ஒரே பாயின்ட்: ஜனநாயகம் என்றால் என்ன குடியரசு என்றால் என்ன? இரண்டும் ஒன்று தானே ? இதில் எப்படி ஒன்று " Democratic " என்றும் ஒன்று "Republic" என்றும் பொருள் தரும்? கல்கி அல்லது ஆனந்த விகடன் போன்ற ஒரு பத்திரிக்கையில் யாரோ ஒரு ஆசிரியர் எழுத ஆரம்பித்திருப்பார்; அதையே பலப் பல ஆண்டுகளாக மீண்டும் மீண்டும் பயன் படுத்தி வருகிறார்கிறார்கள். டெமாக்ரடிக் என்றும் ரிபப்ளிக்
என்றும் எழுதி விட்டால் என்ன குறைந்தா போய்விடும்//
அன்புள்ள ஐயா
இரண்டும் ஒரே பொருள் தரும் வார்த்தைகள் என்றாலும் கூட வழக்கு முறையில் வேறு வேறு சொல்லாக வழங்கப் படுகிறதாகவே நான் அறிந்து வந்துள்ளேன். நான் படித்த அரசியல் சட்டம் (தமிழில்) புத்தகத்தில் கூட இந்தியா ஒரு ஜனநாயக குடியரசு (தேமொச்ரடிக் ரேபுப்ளிக்) என்று குறிப்பிட்டு இருந்ததாகவே ஞாபகம்.
democracy mean a govt selected by adult franchise by people.. republic mean the ruler is from the public and not from a monarchy."kuppai"ya sonna mavu onnunnalum idli vera dosai vera..
Thank You Desandhri
Welcome to the comments world.
I agree with views. "paal onnunnaalum thayir vera, mor vera"
Comments received from a friend in the e-mail
Good one. You can perhaps add the 'funny' thing in US elections that there could a 'bigger' fight among the candidates of the same party like what happened between
Hillary Clinton and Obama. Hillary perhaps told all the reasons why Obama is not suitable than what even McCain might have told !! And the party supported Obama now !! Were those issues not discussed at all, I don't know.. But looks really strange.. Imagine a similar thing happening in any of the parties here. May be, many 'truths' about each other may get uncovered here..
Post a Comment