
மிகப் பழங்காலத்திலேயே அரேபியா கடல் பகுதியில் மிகப் பெரும் கொள்ளைகள் நடை பெற்றதாக சரித்திரக் குறிப்புகள் உள்ளன. பண்டைய சரித்திரத்தின் அடிப்படையில் எழுதப் பட்ட புகழ் பெற்ற நவீனமான கல்கியின் "பொன்னியின் செல்வன்" படித்திருக்கிறீர்களா? அதில் கூட இவர்களைப் பற்றி சில குறிப்புகள் (மூர்க்கமான புதிய வகை அரேபியா கடல் கொள்ளைக்காரர்கள்) உள்ளன. அருள்மொழி செல்வன் உத்தம சோழரை பதவியில் அமர்த்தி விட்டு இந்த கொள்ளை கும்பலை அடக்க செல்ல விரும்புவதாக ஒரு குறிப்பு கூட இருக்கும். இந்தியாவின் மேற்கு கடலோரம் இருக்கும் "வெல்ல முடியாத கடற் கோட்டையை" கட்டியவர்கள் கூட இந்த சொமாலியரே. கொள்ளை அடிக்கும் தொழில் இவர்கள் ஜீன்களிலேயே இருக்கும் போலிருக்கிறது.
சோமாலியா வடகிழக்கு ஆப்ரிக்காவில் உள்ள ஒரு ஏழை நாடு. இங்கு சரியான ஆட்சிமுறை அமையாததும் தொடரும் உள்நாட்டு குழப்பங்களும், எதிஒபியா- சோமாலியா சண்டையும், சோமாலியாவின் பூகோள ரீதியான நிலவமைப்பும் (பார்க்க வரைபடம்) கடற் கொள்ளைகாரர்கள் உருவாகவு

இந்த கொள்ளைகாரர்கள் பெரும்பாலும் 20 முதல் 35 வயதுக்குள் உள்ளவர்கள். இவர்கள் மூன்று வகையாக உள்ளனர். கடல் பற்றி நன்கு தெரிந்து கொண்டு கடற் கொள்ளையர்களின் கண்களாக இயங்கும் உள்ளூர் மீனவர்கள், உடல் பலத்தை காட்டும் முன்னாள் படை வீரர்கள் மற்றும் இவர்களை இயக்கும் மூளைகளான அதி நவீன தொழிற் நுட்ப வல்லுனர்கள். ஒரு முக்கிய விஷயம். இவர்கள் பல குழுக்களாக பிரிந்து கொள்ளையடித்தாலும் தமக்குள்ளே சண்டைகள் இட்டு கொள்ளுவதில்லை. என்ன ஒரு ஒற்றுமை பாருங்கள். Pirates of Caribbean படம் பார்த்துள்ளீர்களா? (பார்க்க வில்லையென்றால் நிச்சயம் பாருங்கள். ஜாலியான படம் ) அதில் உள்ளது போல் தமக்குள்ளே சில சட்டதிட்டங்கள் எல்லாம் கூட வைத்திருப்பார்கள் போல.
மேலும் ஒரு வேடிக்கையான தகவல். இவர்கள் வறுமை நாடான சோமாலியாவில் மிக ஆடம்பர வாழ்கை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு சமூகத்தில் மிகப் பெரிய அந்தஸ்து கூட உண்டு. சமூகத்தின் பெரிய மனிதர்களாக இவர்கள் கருதப் படுகின்றனர். (நம் நாட்டில் கூட சில சமூக கொள்ளையர்களுக்கு மிக பெரிய அந்தஸ்து உண்டுதானே?) இந்த கொள்ளையில் கிடைக்கும் பணத்தை கொண்டு அங்குள்ள தொழில் அதிபர்களுக்கு இவர்கள் கடன் கூட கொடுக்கிறார்கள். (இது மட்டுமே திவால் ஆகாத வெளி நாட்டு வங்கி).
இவர்களை அடக்க உலக நாடுகள் (குறிப்பாக நேடோ நாடுகள்) எவ்வளவோ முயற்சி செய்தும் பலிக்கவில்லை. உலக நாடுகளின் கடற்படைகள் இவர்களை துரத்தும் போதெல்லாம், தப்பி சென்று சோமாலியா கடல் எல்லைக்குள் இவர்கள் நுழைந்து விடுவதால் இவர்களை முழுமையாக அடக்க முடிய வில்லை. இதற்காக, ஜுன் 2008 இல் ஐ.நாவில் ஒரு உடன்படிக்கை ஏற்பட்டது. இதன் அடிப்படையில் சோமாலிய கடல் எல்லைக்குள்ளும் உலக நாடுகளின் கடற்படைகள் இவர்களை துரத்தி செல்ல முடியும். ஆனால் இதற்கு பிறகும் கூட, இவர்களை முழுமையாக ஒழித்துக் கட்டுவது சிரமமான காரியமாகவே இருக்கிறது. 2008 இல் மட்டுமே 92 முறை கடல் தாக்குதல்கள் ந

இந்தியா கூட ஒன்பதாவது நாடாக ஒரு போர்க்கப்பலை இங்கே நிலை நிறுத்தி உள்ளது. காரணம், இந்த கடல் பாதை வழியே தினமும் ஏராளமான இந்திய சரக்குக் கப்பல்கள் பயணம் செய்கின்றன. மேலும் வெளி நாட்டுக் கப்பல்களில் கூட ஏரளாமான இந்திய மாலுமிகள் பணியாற்றுகின்றனர். நமது கடற் படை இந்த கடல் பகுதியில் மிகச் சிறப்பாக செயல் புரிந்து வருகிறது. இந்தியக் கப்பல்களுக்கு மட்டுமன்றி வேறு நாட்டு கப்பல்களுக்கும் சிறந்த பாதுகாப்பு அளிக்கப் படுகிறது. இந்தியக் கடற்படைக்கும் இந்த கொள்ளையருக்கும் சமீபத்தில் கூட ஒரு மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு சிறு படகை கப்பலின் மீது வேகமாக மோதி விட்டு பின்னர் கப்பலிலிருந்து தாக்குதல் நடத்துவது இவர்களது பாணி. இதை திறம்பட முறியடித்த நமது கடற்படை கொள்ளையர்களின் கப்பலை மூழ்கடித்ததாக தகவல்கள் கூறுகின்றன.
இவர்களை முழுமையாக அடக்க ஒரு "பொன்னியின் செல்வன்" வருவானா என்பதை காலம்தான் சொல்ல வேண்டும்.
நன்றி
21 comments:
//கொள்ளை அடிக்கும் தொழில் இவர்கள் ஜீன்களிலேயே இருக்கும் போலிருக்கிறது.//
மறுதலிக்கிறேன்.
சிறுபான்மையினர் வேறுவழியில்லாமல் திருடி தின்னும் நிலை வந்திருக்கும். சில சோம்பேறி நாய்கள் அதை தொடர்ந்திருக்கலாம்.
தமிழகத்திலும் தேவர் என்ற இனம் பல வருடங்களாக கள்ளர் என்று தான் அழைக்கப்பட்டது. பின்னாளில் தான் அது மாற்றப்பட்டது.
// Pirates of Caribbean படம் பார்த்துள்ளீர்களா? (பார்க்க வில்லையென்றால் நிச்சயம் பாருங்கள். ஜாலியான படம் //
ஜானிதீப் நடித்த ”எட்வார்ட் சிசர் ஹேண்ட்ஸ்” படம் பார்த்திருக்கிறீர்களா, அது அவரது ஆரம்ப்ப கால படம் அருமையான நடிப்பு.
//(நம் நாட்டில் கூட சில சமூக கொள்ளையர்களுக்கு மிக பெரிய அந்தஸ்து உண்டுதானே?)//
அவர்களின் பொது பெயர் அ-வில் தொடங்கும்
//இதை திறம்பட முறியடித்த நமது கடற்படை கொள்ளையர்களின் கப்பலை மூழ்கடித்ததாக தகவல்கள் கூறுகின்றன.//
தற்போது அனைத்து கப்பல் நிறுவனர்களையும் கதி கலங்க வைக்கும் செய்தி இதுதான்.அதில் இந்திய சாகசம் கொஞ்சம் ஆறுதலைத் தருகிறது.
அன்புள்ள வால்பையன்
//கொள்ளை அடிக்கும் தொழில் இவர்கள் ஜீன்களிலேயே இருக்கும் போலிருக்கிறது.//
//மறுதலிக்கிறேன்.//
இந்த கருத்து வேடிக்கைக்காக மட்டுமே. ஒரு இனத்தை பொதுவாக குற்றம் சாட்டுவது தவறு என்பதை நானும் ஒப்புக் கொள்கிறேன்.
//இந்த கொள்ளையில் கிடைக்கும் பணத்தை கொண்டு அங்குள்ள தொழில் அதிபர்களுக்கு இவர்கள் கடன் கூட கொடுக்கிறார்கள். (இது மட்டுமே திவால் ஆகாத வெளி நாட்டு வங்கி).//
நம் நாட்டிலும் தான் பெரிய தலைகள்,இங்கே கொள்ளையடித்ததை சுவிஸ் பேங்கில் போடுகிறார்கள்,
அந்த வங்கி திவாலாகி விட்டதா என்ன?
அன்புள்ள வால்பையன்
நான் அந்த படம் பார்க்க வில்லை. வாய்ப்பு கிடைத்தால் பார்க்கிறேன்.
நன்றி
அன்புள்ள ராஜ நடராஜன்
பின்னூட்டத்திற்கு நன்றி
//. நமது கடற் படை இந்த கடல் பகுதியில் மிகச் சிறப்பாக செயல் புரிந்து வருகிறது.//
அங்கே சிறப்பாக செயல்படுவது சரி,
உள்நாட்டில் கொள்ளை அடிக்கும் சமூக விரோதிகளை அழிக்க எப்போ பென்னியின் செல்வன் வருவார்.
அருமையான பதிவு,
உலகநிகழ்வுகளையும்,
பொருளாதார சிந்தனைகளையும்
அறிந்து கொள்ள உங்கள் வலை உபயோகமாக இருக்கிறது.
இன்று இந்து சமுத்திரத்தில் வெற்றிகரமாக கப்பல்களை கடத்திச் சென்று, பணயம் வைத்துக் கொண்டு பணம் கேட்கும் சோமாலிய கடற்கொள்ளையரும், நாளை கம்பெனி முதலாளிகளாக வரக்கூடிய சாத்தியக்கூறுகள் நிறைய உள்ளன.
கரீபியன் கடற்கொள்ளைக்காரர்களின் உண்மைக்கதையும் இதுதான். "பைரேட்ஸ் ஒப் கரீபியன்" திரைப்படம் சொல்லமுடியாத சேதி அது. அப்போது வடக்கு அமெரிக்க மாநிலங்களில் மட்டுமே சட்டபூர்வ அரசு ஏற்பட்டிருந்த காலமது. தென்பகுதி மாநிலங்கள், இன்று நாம் காணும் சோமாலியாவின் நிலையை ஒத்ததாக இருந்தது. அதனால் அவை கடற்கொள்ளையரின் புகலிடமாக இருந்தன. கடற்கொள்ளையருக்கு பொது மன்னிப்பு மன்னிப்பு வழங்கப்பட்டு, அவர்கள் கொள்ளையடித்த பணத்தை முதலீடு செய்ய வைத்து, அமெரிக்க அரசும் அடித்த கொள்ளையில் லாபம் பார்த்தது. இப்படி எல்லாம் செய்திருக்கா விட்டால், அமெரிக்கா பணக்கார நாடாக வந்திருக்க முடியுமா?
http://kalaiy.blogspot.com/2008/11/blog-post_19.html
மிகவும் நல்ல பதிவு. தகவலுக்கு நன்றிகள் :)
அன்புள்ள வால்பையன்
//அவர்களின் பொது பெயர் அ-வில் தொடங்கும்//
சரியா சொன்னீங்க
//நம் நாட்டிலும் தான் பெரிய தலைகள்,இங்கே கொள்ளையடித்ததை சுவிஸ் பேங்கில் போடுகிறார்கள்,
அந்த வங்கி திவாலாகி விட்டதா என்ன?//
கரெக்ட் .
//அருமையான பதிவு,
உலகநிகழ்வுகளையும்,
பொருளாதார சிந்தனைகளையும்
அறிந்து கொள்ள உங்கள் வலை உபயோகமாக இருக்கிறது.//
நன்றி. ::))
அன்புள்ள கலையரசன்
பின்னூட்டதிற்கு நன்றி
உங்கள் பதிவினையும் பார்த்தேன். மிகச் சிறப்பாக உள்ளது. வாழ்த்துகள்
அன்புள்ள அருண்குமார்
பின்னூட்டத்திற்கு நன்றி
இதுல இவ்வளவு விசையம் இருக்க.
நான் என்னமோ கடற்க்கொல்லைஎல்லாம் முடிஞ்சு போச்சுன்னு இல்ல நேசுக்கிட்டு இருக்கேன்.
படிக்கவே நல்லா சுவாரசியமா இருக்கு
அருமையான பதிவு தொடருங்கள்
அன்புள்ள கார்த்திக்
உலகம் மிகவும் பெரியது. சுவாரஸ்யமான விஷயங்கள் மிக அதிகம். நாமோ வேடிக்கை பார்க்க வந்தவர்கள்.
வேடிக்கை பார்போம்.
பின்னூட்டத்திற்கு நன்றி
நல்ல தகவல்கள்
தண்ணி காட்டுறதுனா இது தானா! :-)))))
அன்புள்ள நன்றி
பின்னூட்டத்திற்கு நன்றி
கள்ளர் என்பது தப்பான விளக்கத்தில் நோக்கப் படுகிறது.
முன்னைய காலத்திலும் வியாபாரிகள் வரி செலுத்தாமல் ஏய்த்துக் கொண்டு இருந்திருக்கிறார்கள். அவர்களை இடையில் மறித்து திருடி அரசனிடம் ஒப்படைக்க அரசனால் நியமிக்கப் பட்டவர்கள் தான் கள்ளர் எனப்படும் தொழிலாளிகள்.அதை மீட்க வரும் வியாபாரிகள் சரியான் கணக்குக் காட்ட வேண்டி வரும். கள்ளர்-அவர்கள் அரச பணியில் இருந்தவர்கள். இப்பொழுது மாற்றிவிட்டார்கள். இப்பொழுதும் அரசுகள் திருடுகின்றன. ஆனால் மீள் ஒப்படைப்பதில்லை.
அன்புள்ள ஆட்காட்டி
தகவலுக்கு நன்றி
Post a Comment