Wednesday, November 19, 2008

இந்திய ரியல் எஸ்டேட் துறை சந்திக்கும் சவால்கள்அமெரிக்கா பொருளாதாரத்தின் வீழ்ச்சிக்கு அவர்களின் ரியல் எஸ்டேட் துறையின் சரிவே முக்கிய காரணமாகும். அதன் தாக்கம் இந்தியாவிலும் வெளிப்பட ஆரம்பித்துள்ளது. தற்போது, இந்திய ரியல் எஸ்டேட் துறையில் தேவைகள் குறைந்து போனதற்கு முக்கிய காரணங்கள் கீழே.

1. பொருளாதார தேக்கத்தின் காரணமாக புதிய தொழில்களும் வியாபாரங்களும் தொடங்கப் படுவது இந்தியாவிலும் இப்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப் பட்டுள்ளன. இதன் காரணமாக புதிய அலுவலங்களுக்கான கட்டிடங்களின் தேவை மிகவும் குறைந்து காணப் படுகிறது.

2. மேலும், சொந்த வீடு வாங்க விரும்புவோரில் சிலர் , வருங்காலத்தில் விலை குறையும் என்ற நம்பிக்கையால் தமது வீடு வாங்கும் முடிவை தள்ளிப் போடுகின்றனர். வேறு சிலர், தனது பணி, தொழில் மற்றும் வியாபாரங்களின் வருங்காலம் தெளிவாக கணிக்க முடியாத காரணத்தினால், இது போன்ற முதலீட்டு முடிவுகளை எடுக்க தயங்குகின்றனர். ரியல் எஸ்டேட் வாங்கி விற்கும் வியாபாரிகள் இத்துறை சந்திக்க இருக்கும் கடும் நெருக்கடிகளை முன்கூட்டியே அறிந்திருப்பதால், இதில் பணம் போட முன் வருவதில்லை.

வெளிநாட்டு நிறுவனங்கள் அவர்களது நாட்டில் ஏற்பட்ட நிதி நெருக்கடி சமயத்தில் வளரும் நாடுகளில் உள்ள அதிக அபாயம் கொண்ட இத்துறையில் முதலீடு செய்ய தயங்குகின்றன. இந்திய மற்றும் மேல் நாட்டு பங்குத் துறைகள் மிகப் பெரும் வீழ்ச்சி அடைத்திருப்பதால், ரியல் எஸ்டேட் துறையினர் புதிய (பங்கு) முதல் திரட்ட வழி இல்லாமல் போய் விட்டது.

இந்தியாவில் மனைவிலைகள் இதுவரை பெரிய அளவில் வீழ்ச்சி அடைய வில்லையென்றாலும் கூட, அந்த விலைகளை அதிக உயரத்திலேயே நிலை நிறுத்துவதற்காக ரியல் எஸ்டேட் துறையினர் கொடுத்திருக்கும் விலை (கடன்களுக்கான வட்டி) மிகப் பெரியது. அதுவும் ரியல் எஸ்டேட் துறைக்கு கடன் கொடுக்க வங்கிகள் பெருமளவு முன் வராத காரணத்தினால், தற்போது இந்த துறை கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றது. இவர்கள் இது வரை பெற்றுள்ள கடனுக்கான வட்டியினை திருப்பி செலுத்தவே தடுமாறும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த சூழலிருந்து இத்துறை மீள ஒரே வழி, மனைநிலம் மற்றும் கட்டிடங்களுக்கான விலைகளை மத்தியதர வர்க்கத்தினரும் வாங்கும் அளவிற்கு குறைப்பதுதான் ஆகும். ஒரு தடவை விலையை இறக்கி விட்டால் மேலும் மேலும் விலை குறைக்கப் படலாம் என்ற மக்கள் எதிர்பார்ப்பார்கள் என்ற தயக்கத்தின் காரணமாகவும் விலையை குறைத்தால் நஷ்டங்களை சந்திக்க வேண்டி இருக்கும் என்ற அச்சத்தின் ரியல் எஸ்டேட் துறையினர் விலைகளை குறைக்க மறுக்கின்றனர். இந்த அச்சம் தேவை அற்றது. மாறி வரும் வாழ்வியலின் (Demography) காரணமாக, மேற்சொன்ன வகை மக்களிடையே வீட்டுக்கான தேவைகள் அதிகமாகவும் தொடர்ச்சியாகவும் இருந்து வருகிறது மேலும் கட்டிடங்கள் கட்ட தேவையான மூலப் பொருட்களான இரும்பு மற்றும் சிமெண்ட் ஆகியவற்றின் விலைகளும் குறைய இப்போது வாய்ப்பு இருப்பதால், கட்டிடங்களின் விலையை குறைப்பது ஓரளவு சாத்தியமே.

சரியான விலை மற்றும் அளவான லாபம் என்பது நோக்கமாக இருக்கும் பட்சத்தில் எந்த நெருக்கடியான பொருளாதார சூழ்நிலையிலும் இந்திய ரியல் எஸ்டேட் துறையினரால் நிலைத்து நிற்க முடியும்.

7 comments:

வால்பையன் said...

அதெப்படிங்க
உங்களால மட்டும் எல்லா துறையிலும் பூந்து விளையாட முடியுது!

கலக்கலா இருக்கு பதிவு!
ரியலெஸ்டேட் விலை குறைந்தால் தான் மீண்டும் பணப்புழக்கம் ஏற்ப்படும் என்பது தான் என் கருத்தும்

நாமக்கல் சிபி said...

//சரியான விலை மற்றும் அளவான லாபம் என்பது நோக்கமாக இருக்கும் பட்சத்தில் எந்த நெருக்கடியான பொருளாதார சூழ்நிலையிலும் இந்திய ரியல் எஸ்டேட் துறையினரால் நிலைத்து நிற்க முடியும்//

இதைக் கடைபிடிச்சா எந்த சூழ்நிலையிலயும் சமாளிச்சிகிட்டு இருக்க முடியும்! தவிர வீழ்ச்சி என்பதே இருக்காதே!

டிமாண்ட் அதிகமா இருக்குதேன்னு ஒண்ணுக்கு பத்தா விலையை ஏத்தினா வாங்க ஆளில்லாத நிலைமைல தலைல துண்டு போட்டுக்க வேண்டியதுதான்!

இப்பவெல்லாம் பெரும்பாலான மக்கள் இப்ப இருக்குற விலை வாசில அளவுக்கு அதிகமா கடனை வாங்கி சொந்த வீடெல்லாம் எதுக்கு? அதுக்கு பதிலா கையில இருக்குற பணத்தை ஃபிக்செட் டெபாடிச்லே போட்டு வெச்சிருக்கலாம்னு முடிவுக்கு வந்துடறாங்க!

வடுவூர் குமார் said...

இங்கும் இந்த பிரச்சனை சில தலைக்காட்ட ஆரம்பித்துள்ளதை காணமுடிகிறது.ஒரு சில வேலைகள் தற்காலமாக நிறுத்தப்பட்டுள்ளது.

Maximum India said...

பின்னூட்டங்களுக்கு நன்றி

dg said...

கலக்கலா இருக்கு பதிவு!
ரியலெஸ்டேட் விலை குறைந்தால் தான் மீண்டும் பணப்புழக்கம் ஏற்ப்படும் என்பது தான் என் கருத்தும்

RAMASUBRAMANIA SHARMA said...

ATLEAST, IN TAMIL NADU WE ARE BETTER COMPARED TO BANGALORE AND OTHER COSMOPOLITAN CITIES, WHERE, LOT OF CONSTRUCTED HOUSES ARE STAND STILL....BECAUSE OF THIS INFLATION...CRUDE OIL PRICE REDUCTION...STOCK MARKET UNCERTAINITY...IT INDUSTRIES...EVEN INFRASTRUCTURE....BANKING...IT GOES ON...I THINK NO COMMENTS REQUIRED.

Maximum India said...

Dear Ramasubramania Sharma

You are correct. There are reasons for the "not falling much" in Tamil Nadu.

Thank you for the comments

Blog Widget by LinkWithin