Saturday, November 29, 2008

மும்பையை உலுக்கிய தீவிரவாதியின் வாக்குமூலம்


மும்பையை தாக்கிய தீவிரவாதிகளில் ஒருவனைத் தவிர அனைவரும் கொல்லப் பட்டு விட்டனர். ஒருவன் மட்டும் போலீஸ் கையில் அகப்பட்டுக் கொண்டான். அவனது பெயர் ஆஜாம் அமீர் கசாவ். வயது 21. பிறப்பிடம் பரிட்கொத், பாகிஸ்தான். மும்பை தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளில் இவனுடைய புகைப்படம்தான் முதலில் எடுக்கப் பட்டது என்பது குறிப்பிடத் தக்கது. அவனை மும்பை போலீசார் பிடித்த விவரம் மற்றும் அவனுடைய அவன் தந்த தகவல்கள் இங்கே.

புதன் கிழமை இரவு , மும்பை சி.எஸ்.டி ரயில் நிலையத்தை தாக்கிய இவனும் இவன் கூட்டாளியும் காமா மருத்துவமனைக்கு சென்றனர். அங்கே வந்த மும்பை தீவிரவாதி தடுப்பு தலைவர் மற்றும் இதர போலீஸ் அதிகாரிகளை சுட்டுக் கொன்ற இவர்கள், அந்த காரை கடத்தி கொண்டு மெட்ரோ பகுதிக்கு சென்றனர். அங்கேயும் துப்பாக்கி சூடு இவர்கள் நடத்த பதிலுக்கு போலீசும் திருப்பிச் சுட்டனர். காரின் டயர் பஞ்சர் ஆகி விட, அந்த வழியே வந்த ஒரு காரை வழி மறித்து அதில் ஏறிக் கொண்ட இவர்கள் மும்பையின் மிகப் பெரிய பணக்காரர்கள், அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் மற்றும் மகாராஷ்டிரா கவர்னர் வாழும் பகுதியை நோக்கி காரை செலுத்தினர். கிரகாம் பீச் அருகே வழி மறித்த போலீஸார் இவர்களை நோக்கி சுட்டனர். அதில் கூட்டாளி மரணமடைந்து விட, ஆஜாமோ இறந்தவன் போல நடித்தான். இவனை மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் வழியில் கூட சென்ற போலீசார் இவனுக்கு மூச்சு இருப்பதை கண்டு பிடித்து விட அந்த மருத்துவமனை விசாரணைக் களமாக மாறிவிட்டது.

முதலில் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்த இவன், தனது கூட்டாளியின் சிதைந்த உடலைப் பார்த்தவுடன் பயந்து விட்டான். "நான் வாழ விரும்புகிறேன்" என்று கதற ஆரம்பித்தான் (இது கவனிக்க வேண்டிய விஷயம்). என்னை குணப் படுத்துங்கள் என்று அங்குள்ள மருத்துவமனை அதிகாரிகளிடம் கெஞ்ச ஆரம்பித்தான். இது போதாதா? விடுவார்களா நம் போலீஸ்? அவனிடமிருந்து முழு விவரத்தையும் கறக்க ஆரம்பித்தனர்.

ஏற்கனவே சொன்னது போல இவன் பெயர் ஆஜாம். வயது 21 மற்றும் பாகிஸ்தானின் பாரிகொட் பகுதியைச் சேர்ந்தவன் இவன். இவனிடமிருந்து ஏ.கே.57 ரக துப்பாக்கி, ஏராளமான வெடி மருந்து, மும்பை சி எஸ் டி ரயில் நிலையத்தின் வரை படம் மற்றும் சாட்டலைட் போன் ஆகியவை கைப்பற்றப் பட்டன. இவனுக்கு கொடுக்கப் பட்ட உத்தரவு "கடைசி மூச்சு வரை கொல்லுங்கள்".

இவனது பத்து பேர் கொண்ட குழு கராச்சியிலிருந்து ஒரு படகில் கிளம்பினர். இவர்கள் குஜராத் அருகே வழி மறித்த கடலோரக் காவல் படை அதிகாரிகளிடம் வெள்ளைக் கொடி காட்டினர். இவர்கள் படகிற்கு உள்ளே வந்து விசாரணை நடத்திய ஒரு அதிகாரியை அங்கேயே கொன்று கடலில் வீசி விட்டனர். மற்றவரை கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி மும்பை செல்ல உதவும் படி வலியுறுத்தினர். மும்பை அருகில் வந்ததும் அவரையும் கொன்று கடலில் வீசி விட்டனர். மும்பை அருகே மூன்று அதிவேக படகுகள் இவர்களுக்காக நிறுத்தப் பட்டிருந்தன. அவற்றில் வந்த இவர்கள் சிறிய குழுக்களாக பிரிந்து கொண்டனர். நான்கு பேர் கொண்ட ஒரு குழு தாஜ் ஹோட்டல் சென்றது. இருவர் குழு ஒபேராய் ஹோட்டல் சென்றது. மற்றும் இருவர் யூதர்கள் வாழும் குடியிருப்புப் பகுதியான நரிமன் ஹௌஸ் பகுதிக்கு சென்றது. மேலும் இருவர் சி.எஸ்.டி ரயில் நிலையத்திற்கு சென்றது. இந்த திட்டத்தை தீட்டிய இவனது தலைமை தீவிரவாதி ஒரு மாதத்திற்கு முன்னரே இந்தியா வந்து அனைத்து முக்கிய தகவல்கள் மற்றும் வரைபடங்கள் திரட்டி கொண்டு பாகிஸ்தான் திரும்பிச் சென்று இவர்களை தயார் படுத்தியுள்ளான்.

இந்த விசாரணை முடிந்து வெளியே சொல்லப் படாத ஒரு இடத்திற்கு கொண்டு செல்ல போலீஸ் புறப் பட்ட போது (போலீஸ் விசாரணை தாங்க முடியாமல்) இவன் கதறியது "இப்போது நான் வாழ விரும்ப வில்லை" ஆனால் இவனுக்கு அளிக்கப் படும் மரண தண்டனை இவனைப் போன்ற தீவிரவாதிகள் இனியொருமுறை இந்தியா வர பல முறை யோசிக்க வேண்டுமாய் இருக்க வேண்டும். செய்வார்களா நமது சட்டக் காவலர்கள்?

மேலும், ஆயுதமில்லாத அப்பாவி பொதுமக்களை (குழந்தைகளைக் கூட விட்டு வைக்காமல்) ஈவு இரக்கமில்லாமல் கொன்று வெளிப் பார்வைக்கு பயங்கரவாதிகளைப் போன்று காட்சியளிக்கும் இவர்கள் உண்மையில் மிகப் பெரிய கோழைகளே என்பதை நாம் அனைவரும் உணரச் செய்தது இந்த கதை. (சிறப்பாக செய்திகளை முந்தித் தரும் (இந்த செய்தி உட்பட) மும்பை மிர்ரோர் பத்திரிகைக்கு நன்றி)

14 comments:

கபீஷ் said...

செய்திக்கு மிக்க நன்றி, மேக்ஸிமம் இந்தியா.

//
நாம் அனைவரும் உணரச் செய்தது இந்த கதை.

//
இந்த நிகழ்ச்சி இன்னும் பொருத்தமாக இருக்குமோ?

SK said...

ச்ச இந்த தியாகிக்கு மரண தண்டனை எல்லாம் தர கூடாது அண்ணே. அவர் போற்றுதலுக்கு உரியவர். அவர் திருந்த ஒரு வாய்ப்பு கொடுக்கணும். அவரு சின்ன பையன், மூளை சலவை செய்ததால் இவ்வாறு செஞ்சுட்டாரு.

இவருக்கு தண்டனை எதுவும் கொடுக்காமல் மறுவாழ்வு கொடுக்கணும். அப்படி கொடுத்தாதான் இந்தியாவில் மனித நேயம் வாழும் அண்ணே.

தோத்தேரி..

இவருக்கு எல்லாம் மரண தண்டனை இல்லை அண்ணே.. மிடில் ஈஸ்ட் தண்டனை. அம்மணமா அவுத்து நகத்துல ஆரம்பிச்சு ஒன்னு ஒன்ன புடுங்கி, கதற கதற அதை எல்லாம் படம் புடிச்சு எல்லா தொலைக்காட்சிலையும் ஒளிபரப்பு செய்யணும். இதை இதே தாஜ் ஹோட்டல் மக்கள் முன்னாடி செய்யணும்.. அதை பாத்து இனி ஒருவனும் இது மாதிரி செய்ய பயப்படனும் :( :(

$)/%="/$&=/!$§=&($?(&$(&´!$(´!§$(%´?!$(&´!?(%&´!(

உங்களுக்கு தோன்ற எல்லாம் கெட்ட வார்த்தையும் சொல்லி திட்டிகோங்க :(

Maximum India said...

அன்புள்ள கபீஷ்

பின்னூட்டத்திற்கு நன்றி.

Maximum India said...

அன்புள்ள SK

பின்னூட்டத்திற்கு நன்றி.

உங்கள் உணர்வு புரிகிறது. மேலும் இந்த உணர்வு இன்றைக்கு பல இந்தியர்களுக்கு முதல் முறையாக வந்திருக்கிறது. நம் தேசிய உணர்வு இந்த தீவிரவாத பிரச்சினை முடியும் வரை தொடர வேண்டும் என்பதே என் ஆசை.

இவனுக்கு மட்டுமல்ல, இந்த திட்டம் தீட்டியவன், உதவி செய்தவன் அனைவருக்கும் கடும் தண்டனை தரவேண்டும்.

அப்பாவி முரு said...

விசாரணை முடிந்து வெளியே சொல்லப் படாத ஒரு இடத்திற்கு கொண்டு செல்ல போலீஸ் புறப் பட்ட போது (போலீஸ் விசாரணை தாங்க முடியாமல்) இவன் கதறியது "இப்போது நான் வாழ விரும்ப வில்லை" ஆனால் இவனுக்கு அளிக்கப் படும் மரண தண்டனை இவனைப் போன்ற தீவிரவாதிகள் இனியொருமுறை இந்தியா வர பல முறை யோசிக்க வேண்டுமாய் இருக்க வேண்டும். செய்வார்களா நமது சட்டக் காவலர்கள்?/// இவனுக்கு மரண தண்டனை வாங்கிதர காவல் துறை ரெடி? அதை நிறைவேற்ற முடியுமா? விடுவார்களா இந்த சுயநல அரசியல்வாதிகள்?

Itsdifferent said...

Will you spend your energy, time and effort to avoid such terrorist incidents in the future?

Will you forget your differences, unite under a formidable force to overcome any hurdles, to realise Kalam's vision of 2020?

If you could answer, yes to both, lets unite under one banner. One village/town at a time....

Itsdifferent said...

Will you spend your energy, time and effort to avoid such terrorist incidents in the future?

Will you forget your differences, unite under a formidable force to overcome any hurdles, to realise Kalam's vision of 2020?

If you could answer, yes to both, lets unite under one banner. One village/town at a time....

பழமைபேசி said...

செய்திக்கு மிக்க நன்றி!!!

Maximum India said...

abcd commented on your story 'மும்பையை உலுக்கிய தீவிரவாதியின் வாக்குமூலம்'

'சேனல்களில் இது பற்றி செய்திகள் வருவதற்கு முன்பு நீங்கள் பதிவிட்டு விட்டேர்கள். இந்த தீவிரவாதிக்கு மிக விரைவில் கடுமையான தண்டனை வழங்க பட வேண்டும். இல்லை என்றால் பொது மன்னிப்புக்கு விண்ணப்பித்தாலும் வின்னப்பிப்பான். அதற்கு ஜால்ரா அடிக்கும் கூட்டமும் இங்குண்டு. :( '

Here is the link to the story: http://www.tamilish.com/story/15714

Thank your for using Tamilish!

- The Tamilish Team

Maximum India said...

அன்புள்ள முரு

பின்னூட்டத்திற்கு நன்றி

இவன் கடுமையாக தண்டிக்கப் படவேண்டியவன். இவன் செய்தவற்றிக்கு வலுவான (ஊடகங்களின் வீடியோ) ஆதாரம் உள்ளது. இவனை எந்த பெயர் சொல்லியும் விடுவிக்க அல்லது மன்னிக்க கோருபவர்கள் நாட்டு நலனுக்கு விரோதிகள்.

Maximum India said...

Dear ItsDifferent

The Answer will always be yes. We, all, have to spend at least some energy to avoid such terror attacks in future. This blog is also out of the Indian national interest only.

Maximum India said...

பின்னூட்டத்திற்கு நன்றி பழமை பேசி

ILA (a) இளா said...

$)/%="/$&=/!$§=&($?(&$(&´!$(´!§$(%´?!$(&´!?(%&´!(

Maximum India said...

Dear ILA

!@#$%^&*()(!@#$%^&*()_!@

:)

Blog Widget by LinkWithin