சமீபத்தில் நடை பெற்ற G-20 மாநாட்டில் அனைவரின் கவனமும் சீனாவின் மீதுதான் இருந்தது. இந்த மாநாடு துவங்குவதிற்கு சற்று முன்னர்தான் சீனா 25 லட்ச கோடிகள் மதிப்புள்ள ஒரு மிக பெரிய பொருளாதார திட்டத்தை அறிவித்திருந்தது. அந்த திட்டம் மொத்த உலகினையே பொருளாதார தேக்கதிலிருந்து மீட்டெடுக்கும் வல்லமை படைத்ததாக இருக்கும் என்றும் பலர் நம்பினர்.
அதே சமயத்தில் அவ்வளவு பெரிய பண வலிமை இல்லாத நாடாக கருதப் படும் இந்தியாவிலிருந்து சென்ற மூவர் கூட்டணி, இந்தியாவின் நிலையை சிறப்பாக வெளிப்படுத்தியதுடன், உலகை பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீட்க இந்தியா தெரிவித்த யோசனைகளை அனைத்து நாடுகளும் ஏற்றுக் கொள்ளும்படியும் செய்துள்ளது குறிப்பிடத் தக்கது. விவரங்கள் கீழே.
G-20 என்பது உலகின் முன்னேறிய நாடுகள் மற்றும் (முக்கிய) முன்னேறி வரும் நாடுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய முக்கிய கூட்டமைப்பு ஆகும். இன்றைய உலக பொருளாதார சிக்கலை எப்படி சமாளிப்பது என்று ஆலோசிப்பதற்காக, இந்த G-20 நாடுகளின் உச்சி மாநாடு அமெரிக்காவில் சமீபத்தில் நடை பெற்றது. இந்த பொருளாதார சிக்கலை முதலில் உருவாக்கிய நாடாகிய அமெரிக்காவின் தலைமை பொறுப்பிலிருக்கும் திரு. புஷ் இன்னும் மிகக் குறைந்த காலமே பதவியில் இருப்பார் என்பதாலும், அடுத்து தலைமை பொறுப்புக்கு வரவிருக்கும் ஒபாமா அவர்கள் இந்த மாநாட்டில் பெயரளவுக்கு கூட கலந்து கொள்ளாததாலும், அமெரிக்கா இந்த மாநாட்டில் அதிக முக்கியத்துவம் பெறவில்லை.
முதல் பத்தியில் சொன்னது போல, சீனாவின் நிலை பெரும்பாலானவர்களால் ஆவலுடன் எதிர்பார்க்க பட்டது. அதே சமயம், இந்தியா பொதுவாக உலக அரங்கில் (சீனாவுடன் ஒப்பிடுகையில்) பொருளாதார வலிமை குறைந்த நாடாக கருதப் பட்டாலும், இந்திய பிரதமரை G-20 மாநாடு புறக்கணிக்க முடியாமல் போனதற்கு ஒரு முக்கிய காரணம் அந்த மாநாட்டின் தலைவர்களிலேயே (அடிப்படையில்) ஒரே பொருளாதார வல்லுநர் (Econmist) நம் பிரதமர் மட்டும்தான். மேலும், ஒரு நாட்டின் மத்திய வங்கியின் தலைமை பொறுப்பில் ஏற்கனவே இருந்தவர் என்பதால் நிதி சிக்கல்கள் பற்றி தெளிவாக அறிந்தவர் என்ற முறையிலும் நம் பிரதமரின் பேச்சுக்கு (திட்டங்களுக்கு) தனி மரியாதை இருந்தது. மேலும், இந்தியா ஒரு இறக்குமதி சார்ந்த நாடு என்பதாலும், முந்தைய பொருளாதார சிக்கல்களில் சிக்கிக் கொள்ளாத ஒரே பெரிய ஆசிய நாடு என்பதாலும் இந்திய நிலைப்பாட்டிற்கு ஓரளவிற்கு வரவேற்பு இருந்தது.
உலகத்தின் தற்போதைய பொருளாதார சிக்கலை தீர்த்து வைப்பதில் உலக நாடுகள் ஒருங்கிணைந்து எடுக்க வேண்டிய நிலைப் பாடுகள் குறித்து பெரும் கருத்து வேறுபாடுகள் மாநாட்டில் நிலவின. உதாரணமாக, அமெரிக்கா-ஐரோப்பா இடையே சந்தைகள் மீது கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து வேறுபாடு. வளரும் மற்றும் வளர்ந்த நாடுகளிடையே இறக்குமதி சார்ந்த கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்த வேறுபாடு. உலக நிதி நிறுவனங்கள் இந்த சிக்கலை தீர்த்து வைக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் அந்த நிறுவனங்களின் நிதி நிலைமையை வலு படுத்த வேண்டிய நடவடிக்கைகள் குறித்த நாடுகளுக்கிடையே வேறுபாடுகள் என மாறுபாடுகளுக்கு பஞ்சமே இல்லாத மாநாடாக இந்த G-20 மாநாடு இருந்தது.
இந்த கருத்து வேறுபாடுகளை தீர்த்து வைப்பதில் இந்தியா பெரும் பங்கு வைத்தது. சீனாவும் இந்த விஷயத்தில் இந்தியாவிற்கு துணை நின்றது குறிப்பிடத் தக்கது. மேலும் இது குறித்த இந்தியாவின் அனைத்து நிலைப்பாடுகளும், மாநாட்டின் இறுதி திட்ட வரைவில் இடம் பெற்றிருந்தது இந்தியாவின் மற்றொரு வெற்றியாகும். இவ்வாறான சிறப்பான செயல் பாட்டிற்கான காரணங்கள் என்ன என்று பார்ப்போம்.
இந்தியப் பிரதமர் இந்த மாநாட்டிற்கான இந்தியாவின் நிலைப் பாட்டினை சிறப்பாக வெளிப்படுத்துவதற்காக முன்கூட்டியே திட்டமிட்டிருந்தார். இதன்படி அவரது இடது மூளையான திரு. சிதம்பரம் அவர்களை இதர வளரும் நாடுகளின் பிரதிநிதிகளுடன் மாநாட்டிற்கு முன்னதாகவே பேச்சுவார்த்தை நடத்த செய்து பொருளாதார சிக்கலை எப்படி ஒருங்கிணைத்து எதிர்கொள்வது என்று ஒத்த கருத்து ஏற்பட வழி வகுத்தார். அவரது வலது மூளையான அலுவாலியாவும் மாநாட்டிற்கு இரு நாட்கள் முன்னதாகவே அமெரிக்கா சென்று அங்குள்ள பிரதிநிதிகளுடன் பொருளாதார சிக்கலை தீர்ப்பதற்கான திட்டங்களை தீட்டினார். இந்திய பிரதமரும் இந்த விஷயத்தில் தனிக் கவனம் செலுத்தி உலகப் பொருளாதார சிக்கலை தீர்பதற்காக இந்திய தீர்வை முன் வைத்தார். நம்மை பெருமிதம் கொள்ள செய்யும் இந்த செயல்பாட்டிற்கு மூவரின் (பிரதமர், நிதி அமைச்சர் மற்றும் திட்டக் குழு துணைத் தலைவர்) கூட்டணிக்கு வாழ்த்து கூறும் அதே வேளையில், என் மனதிற்குள்ளே ஒரு மிகப் பெரிய கேள்வி எழுகிறது.
உலகின் மிகச் சிறந்த பொருளாதார வல்லுனர்களின் கூட்டணியாக கருதப் படும் இவர்கள் இந்தியாவின் ஆட்சி பொறுப்பில் நான்கரை ஆண்டு காலம் இருந்த போதும் இவர்களால் ஏன் ஒரு மிகப் பெரிய மாற்றத்தை கொண்டு வர முடியவில்லை. காரணங்கள் என்னவாக இருக்க முடியும்?
பெரும்பாலும் மேலை நாகரிக சிந்தனைகள் கொண்ட இவர்களால், பொருளாதார சீர்திருத்தங்களை (நல்ல நோக்கில் இருந்தாலும் கூட) இந்திய கலாச்சாரத்திற்கு ஏற்ப சரியாக வடிவமைக்க முடியாமல் போனது காரணமா?
நாட்டுக்காக யோசிக்காமல் வோட்டுக்காக அரசியல் நடத்தும் அரசியல்வாதிகள் காரணமா? அல்லது அரசியல் வாதிகளை சரிவர வழி நடத்தாத (எப்போதுமே ஆட்சி பொறுப்பில் இருக்கும்) ஊழல் அரசு அதிகாரிகள் காரணமா?
முழுக்க முழுக்க பணத்தாசை பிடித்து இத்தகைய சீர்திருத்தங்களை எப்படி தமது சொந்த லாபத்திற்கு பயன்படுத்தி கொள்ளலாம் என்று மட்டும் சிந்திக்கும் தொழில் அதிபர்கள் காரணமா?
அல்லது எது நடந்தால் என்ன, தாம் நன்றாக இருந்தால் போதும் என்று குறுகிய வட்டத்தில் சிந்திக்கும் பொது மக்கள் காரணமா?
சிந்திப்போம்
24 comments:
//நாட்டுக்காக யோசிக்காமல் வோட்டுக்காக அரசியல் நடத்தும் அரசியல்வாதிகள் காரணமா?//
இவர்கள் தான் காரணம்
// உலகின் மிகச் சிறந்த பொருளாதார வல்லுனர்களின் கூட்டணியாக கருதப் படும் இவர்கள் இந்தியாவின் ஆட்சி பொறுப்பில் நான்கரை ஆண்டு காலம் இருந்த போதும் இவர்களால் ஏன் ஒரு மிகப் பெரிய மாற்றத்தை கொண்டு வர முடியவில்லை. காரணங்கள் என்னவாக இருக்க முடியும்? //
சரியான கேள்வி பதில் தான்....
ஐயா! மீண்டும் ஒரு நல்ல பதிவு.
இந்த மூன்று பொருளாதார மேதைகளும் சேர்ந்து பெரிய மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கலாம் ஆனால் கொண்டு வரவில்லை என்ற ஆதங்கத்தில் எழுதி இருக்கிறீர்கள். இவர்கள் கொண்டு வராததற்கு காரணங்கள் பல :
௧. பொருளாதார மாற்றங்கள் நடைமுறைப் படுத்துவது எளிதல்ல;
௨. இந்தியா பல்வேறு மாநிலங்களையும் பொருளாதார வேற்றுமை அம்சங்கள் உள்ள பகுதிகளையும் உடைத்தது. ஆகவே அனைத்து அல்லது பெரும்பாலான பகுதிகளுக்கு நன்மை தரக்கூடிய மாற்றங்களை தீர்மானிப்பது அவ்வளவு எளிதல்ல.
௩. கூட்டணி ஆட்சியிலே தடைகள் வந்து கொண்டே இருக்கும். ( காங்கிரஸ்-ஐ தனித்து பெரும்பான்மையுடன் தேர்ந்து எடுங்கள் என்று நான் சொல்லவில்லை.)
அன்புள்ள DG
பின்னூட்டத்திற்கு நன்றி.
//இவர்கள் தான் காரணம்//
இவர்கள் மட்டும்தான் காரணமா? இதுதான் என் கேள்வி.
அன்புள்ள கார்த்திக்
பின்னூட்டத்திற்கு நன்றி
//சரியான கேள்வி பதில் தான்....//
பதில் கஷ்டம்தான்... ஆனால் அதை கண்டு பிடித்தால்தான் நம் நாட்டிற்கு விமோசனம் பிறக்கும்
அன்புள்ள நெற்குப்பை தும்பி ஐயா
பின்னூட்டத்திற்கு நன்றி.
உங்கள் விளக்கங்கள் சிறப்பாக உள்ளன.
அதே சமயம், மேலாண்மை தத்தவம் "முழுமையாக செயல் படுத்த முடியாத திட்டம் சரியான திட்டம் அல்ல" என்கிறது. இது போன்ற மூவர் (பொருளாதார மேதைகளின்) கூட்டணி வருங்காலத்தில் அமைய வாய்ப்பிருக்கிறதா என்பது ஒரு பெரிய கேள்வி குறியாக இருக்கும் போது, இவர்கள் இன்னும் கொஞ்சம் சிறப்பாக இந்திய கலாச்சாரத்திற்கு ஏற்றால் போல் ஒரு திட்டம் தீட்டி இருக்கலாமே என்பது எனது ஆதங்கம்.
மக்களை குறை சொல்லி பயன் இல்லை அதிகாரத்தில் இருப்பவர்கள் முதலில் மாறவேண்டும் அதிகாரத்தில் இருப்பவர்கள் (அரசியல் வாதிகள் ) அதிகாரத்தை காப்பாற்றிக்கொள்ள எடுக்கும் முயற்சியை சிறிதாவது மக்கள் நலனில் காட்ட வேண்டும்
கொஞ்ச காலத்திற்கு முன்பு பாராளுமன்றத்தில் மாண்பு மிகு மக்கள் பிரதிநிதிகள் பண கட்டுகளோடு காட்சி அளித்ததை நினைது பார்க்க வேண்டும்
அன்புள்ள DG
பின்னூட்டத்திற்கு நன்றி.
//அதிகாரத்தில் இருப்பவர்கள் முதலில் மாறவேண்டும் அதிகாரத்தில் இருப்பவர்கள் (அரசியல் வாதிகள் ) அதிகாரத்தை காப்பாற்றிக்கொள்ள எடுக்கும் முயற்சியை சிறிதாவது மக்கள் நலனில் காட்ட வேண்டும் //
நீங்கள் சொல்வது ஒரு வகையில் சரிதான்
Dear Arun Kumar
I could not read it as it was not very clear. Can you tell me what's there?
//Dear Arun Kumar
I could not read it as it was not very clear. Can you tell me what's there?//
Sorry. It is related to another post i.e. regarding citibank
எனக்கு இன்று சிட்டி வங்கி இந்திய கிளையில் இருந்து ஒரு மடல் வந்து இருந்தது. அதை தான் நான் உங்களுக்கு சென்ற பின்னோட்டத்தில் இணைத்து இருந்தேன்
அந்த மடல் எனக்கு மட்டும் அல்ல அனைத்து சிட்டி வங்கி இந்திய வாடிக்கையாளர்களுக்கும் அனுப்பட்டு இருந்தது.
அந்த மடல் image formatல் இருந்ததால் அதை சென்ற பின்னோட்டத்தில் upload செய்து கொடுத்து இருந்தேன்..
முடிந்தால் இந்த பதிவில் சிட்டி வங்கியின் பதில் என்று சேர்த்தால் நன்றாக இருக்கும்
நன்றி
Very good post and analysis.
I think the problem is they start off with good idea and a cause, but do not see through the execution.
Remember it was Chidambaram and his officials, came up with a policy of IT declaration, and no questions asked policy. They got greedy and started opening the files to get the people's identity, people lost trust in them, and we lost revenue. Another scheme for small scale vendors of upto 5 lacs (I may be wrong here), and you just pay a fixed income tax, no details necessary, that was also backed out due to various reasons, including babudom not able to extract bribe. Everyone knows there is too much money deposited at Swiss banks by Indians, dont you think that these guys can come up with a scheme to tap into those funds for our infrastructure development, atleast make a request to such people for a sacrifice, and again no questions be asked. I think the basic problem is they dont have the bravery to make it happen, and the party is all the time after the votes.
Can we do it? Yes we can, with sacrifice from everyone from the common man, to the business leaders and mostly politicians.
அன்புள்ள itsdifferent
அருமையான அலசலுடலான பின்னூட்டத்திற்கு நன்றி. நீங்கள் சொல்வது நிஜமே. என்னுடைய பதிவை விட இன்றைக்கு வந்த சில பின்னூட்டங்களையே நான் அதிகம் விரும்பினேன். அவற்றில் உங்களுடையதும் ஒன்று.
நன்றி
எனக்கு தனிப்பட்ட முறையில் இந்த சிதம்பரத்தின் மேல் துளி கூட நம்பிக்கை இல்லை. இதே சிதம்பரத்தின் கடந்த முறை 1997 அப்பொழுதும் ஒரு உலகலாவிய நெருக்கடி, இப்பொழுதும். இவர் வேண்டுமானால் ஒரு நிறுவனத்திற்கு அறிவுறையாளராக இருக்கட்டும். நம் நாட்டுக்கல்ல.
//உலகின் மிகச் சிறந்த பொருளாதார வல்லுனர்களின் கூட்டணியாக கருதப் படும் இவர்கள் இந்தியாவின் ஆட்சி பொறுப்பில் நான்கரை ஆண்டு காலம் இருந்த போதும் இவர்களால் ஏன் ஒரு மிகப் பெரிய மாற்றத்தை கொண்டு வர முடியவில்லை. காரணங்கள் என்னவாக இருக்க முடியும்?//
...these loyal and subservient `leaders' and your Super Prime Minister Edvige Antonia Albina Maino...
I hate to elaborate on this.
- அ. நம்பி
அன்புள்ள ராஜா
பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.
//எனக்கு தனிப்பட்ட முறையில் இந்த சிதம்பரத்தின் மேல் துளி கூட நம்பிக்கை இல்லை.//
இது உங்களுடைய தனிப் பட்ட கருத்து. என்னைப் பொறுத்த வரை, திரு.சிதம்பரம் அவர்களை ஒரு அரசியல்வாதியாக உணர்ந்ததை விட ஒரு சிறந்த பொருளாதார நிபுணராகவும் சிறந்த வழக்கறிஞராகவுமே பெரும்பாலும் உணர்ந்திருக்கிறேன். என்னுடைய வருத்தமெல்லாம் சிறந்த நிபுணர்கள் கூட அரசியல் எனும் கூட்டுக்குள் சிக்கும் போது சிறப்பாக செயல் புரிய முடியாமல் போய் விடுகிறது என்பது மட்டுமே. இதற்கு காரணம் நமது சமூக மற்றும் அரசியல் அமைப்பே என்று நான் கருதுகிறேன்.
//இதே சிதம்பரத்தின் கடந்த முறை 1997 அப்பொழுதும் ஒரு உலகலாவிய நெருக்கடி,//
இது ஒரு coincidence மட்டுமே. இதில் அவருடைய தவறு இருப்பதாக தெரிய வில்லை. அவருடைய 1997 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கனவு பட்ஜெட் (Dream Budget) என இன்னமும் நிதி வட்டாரங்களில் வழங்க படுகிறது. அவருடைய பட்ஜெட் அறிக்கையின் நேரடி ஒளிபரப்பை ஒரு கிரிக்கெட் மாட்சினை போல தொலைகாட்சியில் ஆர்வத்துடன் பார்த்திருக்கிறேன்.
இடியாப்ப சிக்கலை மெதுவாகத் தான் தீர்க்க முடியும்.யார் முதல் நூலை எடுகிறார்கள் என்பதே கேள்வி .அமெரிக்கா மட்டும் செய்ய முடியாது.ஊர் கூடி இழுக்க வேண்டும் .என்னை போன்ற எல்லா அணில்களும் சேர்ந்து கல்லை எடுத்து பாலம் கட்ட உதவி செய்ய வேண்டும். முதுகில் பிரம்படி வாங்கினாலும் பரவாயில்லை என மண் சுமந்தே ஆக வேண்டும் . என்ன செய்ய ? பார் கடலை கடைய சில அரக்கர்களின் உதவியும் வேண்டும்
Dear Nambi
Thanks for the comments
//...these loyal and subservient `leaders' and your Super Prime Minister Edvige Antonia Albina Maino...
I hate to elaborate on this.//
என்னுடைய வருத்தமெல்லாம் சிறந்த நிபுணர்கள் கூட அரசியல் எனும் கூட்டுக்குள் சிக்கும் போது சிறப்பாக செயல் புரிய முடியாமல் போய் விடுகிறது என்பது மட்டுமே. இதற்கு காரணம் நமது சமூக மற்றும் அரசியல் அமைப்பே என்று நான் கருதுகிறேன்.
அன்புள்ள ராஜேஷ்
பின்னூட்டத்திற்கு நன்றி.
//இடியாப்ப சிக்கலை மெதுவாகத் தான் தீர்க்க முடியும்.யார் முதல் நூலை எடுகிறார்கள் என்பதே கேள்வி //
சரியான கேள்வி
//உலகின் மிகச் சிறந்த பொருளாதார வல்லுனர்களின் கூட்டணியாக கருதப் படும் இவர்கள் இந்தியாவின் ஆட்சி பொறுப்பில் நான்கரை ஆண்டு காலம் இருந்த போதும் இவர்களால் ஏன் ஒரு மிகப் பெரிய மாற்றத்தை கொண்டு வர முடியவில்லை.//
பொருளாதாரத்தில் கரை கண்ட உங்களுக்கே இந்த சந்தேக்ம் இருக்கும் போது என்னை சாமான்யங்களுக்கு என்ன தோன்றும்.
பலர் எதிர்ப்பு தெரிவித்தும் வெள்ளை அறிக்கை விடாமல் அமெரிக்காவின் கண்டிஷன்களை மறைத்து அணு மின்சார திட்டதிற்க்கு கையெழுத்து இடும் போதே இந்த ஆட்சியின் மேல் உள்ள நம்பிக்கை போய் விட்டது.
அன்புள்ள ராஜேஷ்
//என்னை போன்ற எல்லா அணில்களும் சேர்ந்து கல்லை எடுத்து பாலம் கட்ட உதவி செய்ய வேண்டும். முதுகில் பிரம்படி வாங்கினாலும் பரவாயில்லை என மண் சுமந்தே ஆக வேண்டும் . //
சிறந்த கருத்துகள். நானும் வழிமொழிகிறேன்
அன்புள்ள வால்பையன்
//பொருளாதாரத்தில் கரை கண்ட உங்களுக்கே இந்த சந்தேக்ம் இருக்கும் போது என்னை சாமான்யங்களுக்கு என்ன தோன்றும்.//
என்னை விடுங்கள். நானும் உங்களைப் போன்ற ஒரு சாமான்யன்தான். எனக்கு மட்டுமல்ல, ஹர்வர்ட் பல்கலைகழகத்தில் படித்தவருக்கும் , கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் படித்தவருக்கும், ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தில் படித்தவருக்கும் (அதாங்க மூவர் கூட்டணி) கூட இதே சந்தேகம் இருக்கும் என்று நம்புகிறேன். இவர்களது படிப்பின் வீச்சத்தை அறியும் போது, இவர்கள் மீது பெரும் மரியாதை வருவதை மறுக்க முடியாது. அதே சமயம், இவர்களால் கூட இந்திய பிரச்சினைகளை தீர்க்க முடிய வில்லை எனும் போது, ஒன்று படிப்பு வேறு வாழ்கை நடை முறை என எடுத்துக் கொள்ள வேண்டும். அல்லது இவ்வளவு சிறந்த நிபுணர்களால் கூட தீர்க்க முடியாத பிரச்சினைகளை யார் வந்து தீர்ப்பார் என்று பெருமூச்சு விட வேண்டும்.
நல்ல சிந்தனை.
அன்புள்ள ஜெயராஜன் ஐயா
பின்னூட்டத்திற்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி
Post a Comment