Skip to main content

தோனியும் திருக்குறளும்

மும்பை பெங்களூரு போன்ற போன்ற பெரு நகரங்களிலிருந்து வரும் மேல் தட்டு மக்கள் மட்டுமே இந்திய கிரிக்கட்டில் கோலோச்ச முடியும் என்பதை சமீப காலங்களில் தகர்த்துக் காட்டியவர் (சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாநிலமாக கருதப் படும் ஜார்கண்டில் இருந்து வந்த) தோனி. இதன் மூலம், ஒருவரது வெற்றிக்கு பிறக்கும் சூழ்நிலையை விட செயல் திறனே முக்கியம் எனும் பொருள் படும்
"பிறப்புஒக்கும் எல்லா உயிர்க்கும்; சிறப்புஒவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்"
எனும் குறளை மெய்ப்பித்து காட்டியவர் தோனி.

இப்போது இந்திய கிரிக்கட்டின் மூன்று வடிவங்களிலும் கேப்டன் பொறுப்பு ஏற்றுள்ள தோனி, அதன் ஒவ்வொரு வடிவத்திலும் தனது அணியினரிடமிருந்து சிறப்பான செயல்பாட்டை வெளி கொண்டு வர மேலாண்மை கல்வி படிக்காமலேயே மேற்கொண்ட (வள்ளுவம் கண்ட) மேலாண்மை தத்துவம் இது.
"இதனை இதனால் இவன்முடிக்கும் என்றுஆய்ந்து
அதனை அவன் கண்விடல்"
அதாவது யாரால் எதை சரியாக செய்ய முடியும் என்று சரியாக முடிவு செய்து அவரிடம் அந்த பொறுப்பை விட்டு விட்டால் தலைவரின் பொறுப்பு முடிந்தது என்று பொருள்.

கிரிக்கெட்டுக்கும் மற்ற விளையாட்டுகளுக்கும் உள்ள முக்கிய வேற்றுமை கிரிக்கெட்டில் சில சமயங்களில் காத்திருக்கும் விளையாட்டு (Waiting Game) விளையாட வேண்டி இருப்பதாகும். அதை நன்கு தெரிந்து வைத்திருக்கும் தோனி
"கொக்குஒக்க கூம்பும் பருவத்து; மற்றுஅதன்
குத்துஒக்க சீர்த்த இடத்து."
எனும் குறளின் படி பொறுமையாக இருக்க வேண்டிய இடத்தில் கொக்கு போல் பொறுமை காத்து குத்த வேண்டிய தருணத்தில் கொக்கை போலவே வேகமாக குத்தி உலக சாம்பியன்களாக கருதப்படும் ஆஸ்திரேலியா அணியினை வென்றுள்ளார்.

மற்ற நாடுகளை (அதிக மன அழுத்தம் கொடுத்து) வெல்ல ஆஸ்திரேலியா இதுவரை உபயோகப்படுத்திய வெள்ளையரின் தத்துவம் இது "Cricket is played more on minds rather on the ground". இந்த வெள்ளையரின் தத்துவத்திற்கு தோனியின் பதிலான இந்திய தத்துவம் இது.
"இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர்"
அதாவது மற்றவர் துன்பம் (மன அழுத்தம்) தரும் போது, அதை (சிறப்பாக) தாங்கி கொள்பவர், அந்த துன்பம் தருபவருக்கே துன்பம் (மன அழுத்தம்) தந்து வென்று விடுகிறார்.

இவற்றிக்கெல்லாம் மேலாக (முக்கியமாக) எனக்கு பிடித்த விஷயம் இது. பொதுவாக ஒருவர் ஓய்வு பெறும் போது அவரது மன நிலையை பற்றி மற்றவர்கள் அதிகம் கவலைப் படுவதில்லை. பலர் "Setting Sun" என்று அவர்களை கருதி எந்த மரியாதையும் கொடுப்பதில்லை. ஆனால், கும்ப்ளேவை அவரது இறுதி போட்டியின் முடிவில் தோனி தோளில் தாங்கினார். இந்தியாவின் கேப்டனாகவே பெரும்பாலும் அறியப் பட்ட கங்குலிக்கு ஓய்வு பெறும் போது கேப்டனாகவே இருந்து ஓய்வு பெறும் வாய்ப்பாக கடைசி சில ஓவர்களில் அணியின் தலைமை பொறுப்பு ஏற்கச் செய்த தோனியின் கண்ணியம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
"பெருமை பெருமிதம் இன்மை; சிறுமை
பெருமிதம் ஊர்ந்து விடல்"
எனும் குறளுக்கு ஏற்ப தோனியின் பெருமை அவரின் அகந்தை இல்லாத தன்மையே ஆகும்.

இந்தியாவிற்கு மேலும் பல வெற்றிகள் பெற்றுத் தர தோனியை வாழ்த்தும் அதே வேளையில், உலகின் எந்த விஷயத்தினையும் தெளிவாக பார்க்க (புரிந்து கொள்ள) உதவும் மூக்கு (மன) கண்ணாடியாம் திருக்குறளை தமிழர்க்கு ஈந்த அய்யன் திருவள்ளுவருக்கு எனது பணிவான நன்றிகள் சமர்ப்பணம்.

நன்றி .

Comments

Unknown said…
Amazing sir....keep rocking :)
new way of thinking :)
forgive me or my comment in english...
Senthil said…
eppadi sir, ippadi ellam yosikkireenga!!
kalakal..interesting..!!
Maximum India said…
நன்றி கமல்.
Maximum India said…
நன்றி சென்.

தமிழ் ஆர்வத்திற்கும் திருக்குறள் ஆர்வத்திற்கும் நான் நன்றி சொல்ல வேண்டியது பதிவுலக நண்பர்களுக்குத்தான்
பின்னிட்டீங்க போங்க...
வள்ளுவனுக்கும் உங்களுக்கும் சலாம்.
Maximum India said…
பின்னூட்டதிற்கு நன்றி
ஆக்குங்கள்

ஒரு விதை
முளைக்கும் போது
சப்தம் ஏதும் செய்வதில்லை;ஆனால்
ஒரு மரம்
விழும் போது
பெரும் சப்தம் எழுப்புகிறது.
அழிவு எப்போதும் சப்தமிடும்; ஆனால்
ஆக்கம் என்றும் அமைதியாக நடக்கும்.
எனவே நாம் ஆக்குபவர்களாக இருப்போம்.
அனாலஜி நன்றாக உள்ளது.
தொடர்ந்து கலக்குங்க............
Anonymous said…
//...திருக்குறளை தமிழர்க்கு ஈந்த அய்யன் திருவள்ளுவருக்கு...//

உங்கள் கவனத்துக்கு:

....... ‘ஐயன் திருவள்ளுவர்’ என்பதில் உள்ள பிழையைமட்டுமே எடுத்துக்காட்டினேன். குமரிக்கடற்கரையில் சிலை அமைத்தபோது கலைஞர், திருவள்ளுவரை ‘ஐயன் திருவள்ளுவர்’என்று குறிப்பிட்டதாக ஏடுகள்வழி அறிந்தேன். உடனே, பெயர் பன்மை ஈறு பெற்றும், அடை ஒருமை ஈறு பெற்றும் வருதல் வழு. ஐயன் என்ற அடைமொழி வேண்டுமென்றால் ‘ஐயன் திருவள்ளுவன்’என்றும், திருவள்ளுவர் என்றே குறிப்பிட விரும்பினால் ‘ஐயர் திருவள்ளுவர்’ என்றும் சொல்வதே மரபுக்கு ஒத்தது என்று 15-1-2000 அன்று, புதுவைத் தமிழ் வளர்ச்சி நடவடிக்கைக் குழுவின் சிறப்புத் தலைவர் என்ற முறையில் கலைஞர்க்கு ஒரு மடல் எழுதினேன். அதனது படி தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர்க்கும் அனுப்பப்பட்டது. (ஆனாலும் ‘ஐயன் திருவள்ளுவர்’ இன்னும் அப்படியேதான் இருக்கிறார்)...... – முனைவர் இரா. திருமுருகன் (தமிழ்க்காவல் – 17.9.2008)

- அ. நம்பி
Maximum India said…
அன்புள்ள அய்யா (அட்வகேட் ஜெயராஜன்)

உங்களது பின்னூட்டதிற்கு நன்றி.

உங்கள் கவிதையும் கருத்தும் சூப்பர்

நன்றி
Maximum India said…
அன்புள்ள நம்பி

தகவலுக்கு நன்றி
மனித வாழ்வின் அனைத்து பகுதிகளுக்கும் பொருளை புதைந்து வைத்திருக்கிறது குறள்.இந்தியர்களுக்கு பொதுவான வாழ்க்கை புத்தகமாக கீதை என்றால் தமிழர்களின் அடையாளமாக அறியப்பட்டது குறள் .உண்மையில் உலக மக்களின் வாழ்வின் நெறியாக படைக்கபட்டுள்ளது குறள்.. தோனியும் குறளின் கருத்துக்கள் அடிப்படையில் தன்னை நெறிப்படுத்தி கொண்டுள்ளார். குறளில் சொல்லப்பட்டுள்ள தலைமை பண்புகள் அவரிடம் உள்ளன.எதிரியை கையாளும் முறை தெரிகிறது.பொறுமை, அடக்கம் உள்ளது. ஜாலியாக ஒரு கேள்வி திருவள்ளுவர் அய்யரா?சொல்லவே இல்ல
KARTHIK said…
// Sen said...

eppadi sir, ippadi ellam yosikkireenga!!
kalakal..interesting..!!//

:-))

நல்ல ஒப்பீடு.
Maximum India said…
அன்புள்ள ராஜேஷ்

பின்னூட்டதிற்கு நன்றி.

திருவள்ளுவர் அய்யரா இல்ல நாயக்கரான்னு தெரியாது ஆனா சிறந்த மனிதர் என்று தெரியும். அது மட்டுமல்ல அவரை தமிழர் என்ற கூட்டுக்குள் கூட வைக்க கூடாது. அவர் மொத்த மனித குலத்துக்கே சொந்தம்.
Maximum India said…
அன்புள்ள கார்த்திக்

பின்னூட்டதிற்கு நன்றி

Popular posts from this blog

வாண வேடிக்கையா? வெறும் புஸ்வாணமா?

பெரிதாக வெடிக்கப் போகிறது அல்லது வண்ண மயமான ஒளிச்சிதறல்கள் பூக்கப் போகின்றன என்றெல்லாம் பெரிதாக நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் போது, சில பட்டாசுகள் புஸ்வாணமாக போவதுமுண்டு. தீபாவளி தினத்தன்று நமக்கெல்லாம் சில சமயங்களில் ஏற்பட்டு விடும் இது போன்ற ஒரு அனுபவம் சென்ற வாரம் பங்குசந்தையிலும் ஏற்பட்டது. சென்ற வாரம் நம்மை ஏமாற்றிய புஸ்வாணங்களைப் பற்றி முதலில் பார்ப்போம். முதல் புஸ்வானம் - பாரதி ஏர்டெல் தென் ஆப்பிரிக்க தொலைபேசி நிறுவனமான எம்டிஎன்-னுடான இணைப்பு இல்லையென்றவுடன் முதலில் துள்ளிக் குதித்த பாரதி பங்கு, வெகு சீக்கிரத்திலேயே ஆடி அடங்கி விட்டது. எம்டிஎன்னுடன் இணையாததால் சில அபாயங்கள் நீங்குகின்றன என்று அந்த பங்கினை அதிக விலையில் வாங்கி வைத்து ஆசையுடன் காத்திருந்த பலருக்கு பாரதி ஒரு பெரிய புஸ்வாணமாகவே அமைந்தது. இரண்டாவது புஸ்வானம் - ரிலையன்ஸ் பத்து ஆண்டுகளுக்கு பின்னர் ரிலையன்ஸ் நிறுவனம் தனது பங்குதாரர்களுக்கு போனஸ் பங்கு கொடுப்பதாக அறிவித்தது. இந்தியாவின் 'நம்பர்-ஒன்' வணிகத் தாளான எகோநோமிக் டைம்ஸ் பத்திரிக்கை, தீபாவளி வாணவேடிக்கை ஆரம்பித்து விட்டதாக முதல் பக்கத்தில் தலைப்ப...

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

இந்தியா தாக்குப் பிடிக்குமா?

இன்றைய உலகப் பொருளாதாரத் தேக்க நிலையில், இந்தியாவால் தாக்குப் பிடிக்க முடியுமா என்பது பற்றி பார்ப்போம். சமீபத்தில் வெளியிடப் பட்ட மத்திய புள்ளியல் (மத்திய அரசு) நிறுவனத்தின் மதிப்பீட்டின் படி இந்தியப் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் 7.1 சதவீதம் வளர்ச்சியுறும் என்று தெரிகிறது. இது சரியாக இருக்கும் பட்சத்தில் உலகிலேயே இரண்டாவதாக வேகமாக வளர்ச்சியுறும் நாடு இந்தியாவாகத்தான் இருக்கும் (சீனா முதலாவது). சென்ற ஆண்டில் ஒன்பது சதவீதம் வளர்ச்சி பெற்றிருந்த இந்தியப் பொருளாதாரம் செப்டம்பர் 2008 வரையிலான முதல் அரையாண்டில் 7.80% வளர்ச்சிப் பெற்றிருந்தது. பொதுவாகவே பண்டிகைக் காலமாக கருதப் படுகிற இரண்டாவது அரையாண்டே தொழிற் துறையில் அதிக வளர்ச்சியைக் காட்டும் என்றாலும் இந்த முறை இந்தியத் தொழில் துறை பெரும் தேக்க நிலையில் இருந்து வந்திருக்கிறது என்பது கவனிக்கத் தக்கது. இந்திய தொழிற் வளர்ச்சி கடந்த இரு மாதங்களாக மிகவும் குறைந்து காணப் படுவதாலும் ஏற்றுமதியோ இறங்குமுகத்தில் இருப்பதாலும் இந்திய அரசாங்கம், மார்ச் 2009 வரையிலான நிதி ஆண்டின் இரண்டாவது அரையாண்டில் நமது பொருளாதாரம் குறைந்த வளர்ச்சியே (6.30%) இரு...