
அமெரிக்காவின் சப்ப்ரைம் பிரச்சினை (Subprime Crisis) இந்த வங்கியினையும் விட்டு வைக்க வில்லை. கடந்த வருடம் இந்த வங்கி சுமார் 20 பில்லியன் டாலர் (சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய்) இழப்பை சந்தித்துள்ளது. இந்த வங்கி திவால் ஆகும் சூழ்நிலை இப்போது ஏற்பட்டுள்ளது. மேலும் 52,000 பணியாளர்கள் (இந்தியாவில் மட்டும் 1,000 பேர்) வீட்டிற்கு அனுப்பப் படுவார்கள் என இந்த வங்கியின் நிர்வாகம் தெரிவித்துள்ளது . ஏற்கனவே 23,000 பேர் வீட்டுக்கு அனுப்ப பட்டனர் என்பது குறிப்பிடத் தக்கது. இதன் தலைவர் (விக்ரம் பண்டிட்) கூட வெளியேற்றப் படலாம் என பத்திரிக்கை தகவல்கள் தெரிவிக்கின்றன . இதன் பங்கு மதிப்பு இரண்டு மாதங்களிலேயே சுமார் 80 சதவீதம் (25 டாலரிலிருந்து 4 டாலர்) இழந்துள்ளது . பங்கு மதிப்பை காப்பாற்ற அமெரிக்க அரசு மற்றும் அரேபிய முதலீட்டாளர்கள் எடுத்த முயற்சி இது வரை பலிக்க வில்லை. மேலும், புஷ் அறிவித்த 700 பில்லியன் டாலர் மீட்பு திட்டத்தின் கீழ் இந்த வங்கியும் நிதி உதவி பெறக் கூடும் என்பது இன்னோர் தகவல். இப்போது அமெரிக்கா அரசு இதனை தேசியமயமாக்கும் யோசனையில் இருக்கிறது என்றும் ஒரு தகவல் தெரிவிக்கிறது.
இதுவரை சுமார் 22 வங்கிகள் அமெரிக்காவில் திவால் ஆகி உள்ளன. பத்தோடு இது பதினொன்று என்று நாம் சிட்டி பேங்க் பிரச்சினையை எடுத்துக் கொள்ள முடியாது. ஏனெனில் இதுவரை திவால் ஆன வங்கிகள் முதலீட்டு அல்லது வீட்டுக் கடன் வங்கிகள் (Investment Banks and Housing FInance Institutions). ஆனால் சிட்டி பேங்க் ஒரு வணிக வங்கி (Commercial Bank). இந்திய பாணியில் சொல்லப் போனால் , இது வரை திவால் ஆன வங்கிகள் ரிலையன்ஸ் காபிடல், திவான் ஹௌசிங் போன்றவை. ஆனால் சிட்டி பேங்கோ ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா போன்றது. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா திவால் ஆகும் சூழ்நிலை என்றால் இந்தியா எவ்வளவு மோசமான சிக்கலில் மாட்டி கொண்டிருக்க வேண்டும்?
இந்த வங்கி வீழும் பட்சத்தில் இதன் தாக்கம் உலக அளவில் மிகப் பெரியதாக இருக்கும் . வீழ்ச்சியின் பாதிப்பு இந்திய வங்கிகளை கூட பெருமளவு தாக்கும். காரணம் , இது வரை பன்னாட்டு முதலீட்டு வங்கிகளின் விழ்ச்சியின் பாதிப்பு நமது பங்கு சந்தையில் மட்டுமே உணரப் பட்டது. இந்திய தேசிய வங்கிகள் பெருமளவு பாதிக்கப் படவில்லை . ஆனால் சிட்டி பேங்கின் மீது நமது தேசிய வங்கிகள் பல வகையிலான வணிக (கடன்) தொடர்புகள் வைத்துள்ளன . உதாரணமாக லெட்டர் ஆப் கிரெடிட் என அழைக்கப் படும் ஏற்றுமதியாளர்களுக்கான கடன் உறுதி பத்திரம் வாராக் கடனாக மாறும் அபாயம் உண்டு. இந்திய ஏற்றுமதியாளர்கள் இதனால் பெரும் பாதிப்புக்கு உள்ளாவார்கள். அந்நிய செலவாணி (கடன்) வர்த்தகம் பெருமளவு பாதிக்கப் படும். எனவே சிட்டி பேங்க் பிரச்சினை இந்திய தேசிய வங்கிகளையும் நமது ஏற்றுமதியினையும் (ஓரளவுக்கேனும்) பாதிக்கும் .
CITI NEVER SLEEPS என்பார்கள் . அதாவது 100 நாடுகளில் கிளைகள் இருப்பதால் 24 மணி நேரமும் இந்த வங்கி பணி புரிகிறது என்று பொருள். ஆனால் நமது கவலை இப்போது இந்த வங்கி நிரந்தரமாக தூங்கி விடக் கூடாதே என்பதுதான். நன்றி
Comments
//வங்கிகள் திவால் ஆவது எப்பொழுது முடிவிற்கு வரும் ??????//
இதற்கு பதில் சொல்வது மிகவும் கடினம். காரணம், அமெரிக்காவின் பிரச்சினையின் நீள அகலம் அறிந்து கொள்வது மிகவும் சிரமமான காரியமே. பல ஆண்டுகள் கடன் பொருளாதாரத்தில் அமெரிக்கா வாழ்ந்ததும், பேசல் விதிகளை உருவாக்கியவர்களே அதன் சாராம்சத்தை காற்றில் பறக்க விட்டதுமே இந்த நிலைக்கு காரணம். அதே சமயத்தில் இந்திய வங்கிகள் எதுவும் இப்போதைக்கு திவால் ஆகாது என்று சொல்ல முடியும்.
எல்லா வங்கிகளும் திவால் ஆனதும்...(ஒரு ஸேடிச ஜோக்).
பின்னூட்டத்திற்கு நன்றி
//எல்லா வங்கிகளும் திவால் ஆனதும்...(ஒரு ஸேடிச ஜோக்)//
எனக்கு கூட முதலில் இதே பதில்தான் தோன்றியது ஆனால் கேள்வி சீரியஸ் ஆக இருந்ததால் அவ்வாறு ஜோக் அடிக்க மனம் வர வில்லை.
அருமையான விளக்கம்.
LC மூலியமா ஏற்றுமதியாளர்கள் அதற்கான தொகையை முன்னமே அவர்கள் நாட்டு வங்கியிடமிருந்து பெற்றுக்கொல்வதாகதானே அர்த்தம்.அப்படியிருக்கும் போது அது இவர்களை எப்படி பாதிக்கும்.
பின்னூட்டத்திற்கு நன்றி.
/LC மூலியமா ஏற்றுமதியாளர்கள் அதற்கான தொகையை முன்னமே அவர்கள் நாட்டு வங்கியிடமிருந்து பெற்றுக்கொல்வதாகதானே அர்த்தம்.அப்படியிருக்கும் போது அது இவர்களை எப்படி பாதிக்கும்.//
லெட்டர் ஆப் கிரெடிட் (LC), அதாவது கடன் உறுதி பத்திரம் என்பது ஒரு இறக்குமதியாளரின் நம்பகத்தன்மை குறித்து அவருடைய நாட்டு வங்கி அளிக்கும் உறுதிமொழி கடிதமாகும்.
உதாரணமாக, அமெரிக்காவை சேர்ந்த ஒரு ஆடை (Textiles) இறக்குமதியாளர் இந்தியாவிலிருந்து ஆடைகளை இறக்குமதி செய்கிறார். அவரை பற்றி இந்திய ஏற்றுமதியாளருக்கு விவரம் தெரியாது. அப்போது அந்த இறக்குமதியாளர் சிட்டி பேங்கில் ஒரு LC பெற்று வருகிறார். அந்த LC அடிப்படையில் இந்தியாவின் ஏற்றுமதியாளர், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் கடன் பெற்று அந்த கடனைக் கொண்டு ஆடைகளை நெய்து அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கிறார். இப்போது, ஒரு வேளை சிட்டி பேங்க் மூழ்கி விடுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். இறக்குமதியாளர் ஆடைக்கான விலையை இந்தியாவிற்கு அனுப்பாத பட்சத்தில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவால் சிட்டி பேங்கிடம் இருந்து பணம் பெற முடியாது. அதற்கு ஒரே வழி, இந்திய ஏற்றுமதியாளரிடம் அந்த பணத்தை கோருவதுதான். நமது ஏற்றுமதியாளரிடமும் பணம் இல்லையென்றால் அது வாராக் கடன் ஆகி விடும். எனவே ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மற்றும் இந்திய ஏற்றுமதியாளர் இருவரும் நஷ்டம் சந்திக்க வேண்டியிருக்கும்.
விளக்கம் சரியாக உள்ளதா?
today i got this mail from Citibank, of course all the citi bank customers in India would have received this mail from their Indian CEO.
perhaps its image file , i have uploaded in blogger portal..its possible to include this image as a addition to this post??
this is the link : http://1.bp.blogspot.com/_XLmEnJeL5Zg/SSrKbcX3v_I/AAAAAAAAAWk/esnv8kNA7YM/s320/v4-SanjayNayar-Mailer.gif
thanks
I could not read it as it was not very clear. Can you tell me what's there?
பின்னூட்டத்திற்கு நன்றி. வேட்டி போட்ட பெருசுகள் காப்பாத்த வேண்டிய சூழ்நிலைக்கு நம்மூரு வங்கிஎல்லாம் தள்ளப் படாது என்று நம்புவோம்.
Now citi never sleep because
Citi Lost sleep.
Now focus shift to fate citigroup's share holding in HDFC and polaris
Thank you for the comments. One personal question. Where from you got the name Chadhukka Bootham? It is very cute.
//Now citi never sleep because
Citi Lost sleep.//
Not only Citi lost sleep, it has taken away sleep from many investors.
Now focus shift to fate citigroup's share holding in HDFC and polaris
இந்திர விழா நடத்தாவிட்டால் அவை கோபம் கொள்ளும் என இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் புகார் படலத்தில் தெரிவிக்கிறார்.
அதே போல கற்பு நெறி தவறிய பெண்டிரையும் தண்டிக்கும் என அறியத் தருகிறார்.
ஆனால் கற்பு நெறி தவறிய ஆண்களை ஒன்றும் செய்யாது போலும். அப்படி செய்திருந்தால் கோவலன் புகாரிலேயே டரியல் ஆகியிருந்திருப்பான், மதுரையும் பிழைத்திருந்திருக்கும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
உங்களது பின்னூட்டத்திற்கும் அருமையான விளக்கத்திற்கும் நன்றி.