The Art of Appraisal
-
Big Boss: This year your performance was good, excellent and outstanding.
So, your rating is "average".
Kumar: What? How come 'average'?
Big Boss: Becau...
பிரிவுகள்
- சமூகம் (121)
- செய்தியும் கோணமும் (104)
- பொருளாதாரம் (101)
- பங்கு சந்தை (98)
- அரசியல் (74)
- பயணங்கள்/அனுபவங்கள் (40)
- மனவியல் (40)
- பங்கு சந்தை வெற்றி பயணம் - ஒரு வழித் துணை (15)
- கதை (9)
- நகைச்சுவை (7)
- அறிவியல் (5)
- திரைவிமர்சனம் (4)
- சட்டம் (3)
- நூலகம் (3)
- கிறுக்கல்கள் (1)
Friday, November 21, 2008
நிஜ வாழ்வின் உண்மையான ஒரு ஹீரோ
என்னுடைய விவரம் புரியாத வயதில் பழைய படங்கள் பார்க்க செல்லும் போதேல்லாம் தூங்கி விடும் வழக்கம் கொண்ட நான், நம்பியார் வரும் காடசிகளில் மட்டும் (அப்போதுதானே சண்டை காட்சிகளை பார்க்க முடியும்) எழுப்பி விடுமாறு கேட்பேன் என்று என் அம்மா கூறுவார். மேலும் பிடித்த நடிகர் யார் என்று கேட்கும் போதெல்லாம் என் வயதொத்தவர்கள் கமல் ரஜினி என்று சொல்லும் போது நான் மட்டும் நம்பியார் என்று சொல்வேன் என்றும் கேலி செய்வார்.
எனக்கு ஓரளவு விவரம் தெரிந்த போது நம்பியார் அவர்கள் வயது முதிர்ந்த நகைச்சுவை மற்றும் குணசித்திர பாத்திரங்களிலேயே நடித்து வந்தார். அவருடைய நகைச்சுவை நடிப்பை மிகவும் விரும்பிய நான், அவர் (சினிமாவில்) கலங்கும் போது பாதிப்பும் அடைந்திருக்கிறேன்.
சினிமா என்ற நிழல் உலகம் வேறு நிஜ உலகம் வேறு என்று அறிந்த வயதிலும் கூட, மன சலனம் எளிதில் ஏற்படக் கூடிய ஒரு துறையில் அவர் பணியாற்றி வந்தாலும் தனி மனித வாழ்வில் ஒழுக்கம் பாராட்டியவர் என்று அறிந்த பின்னர் அவர் நான் விரும்பக் கூடிய ஒரு மனிதராகவே தொடர்ந்து இருந்திருக்கிறார் . மேலும் மனம் மற்றும் உடல் நலத்திற்கு தீங்கான பழக்க வழக்கங்களில் ஈடுபடாதவர் என்ற முறையிலும் இறை நம்பிக்கையில் சிறந்து விளங்கி தொடர்ந்து பல வருடங்கள் சபரி மலைக்கு சென்றவர் என்ற முறையிலும் பெரும் மதிப்புக்கும் உரியவராகவும் இருந்திருக்கிறார். தன்னுடைய சக திரை நட்சத்திரங்களையும் கூட சபரி மலைக்கு அழைத்து சென்று அவர்களையும் ஒழுக்கமான வாழ்வின் சிறப்புகளை உணர செய்த ஒரு சிறந்த குருவுமாக இருந்திருக்கிறார்.
தனது 89 ஆவது வயதில் கூட தனது இதயம், சிறுநீரகம் போன்ற முக்கிய உள்ளுறுப்புகளில் எந்த பாதிப்பும் ஏற்படாத நிலையில் மிக இயல்பான முறையில் இயற்கை எய்தினார் என்றும் இந்த வயதிலும் அவர் முகம் வயது மூப்பை காட்ட வில்லை என்றும் பத்திரிகைகளில் படித்த போது அவர் உடல் மற்றும் மனம் ஆகியவற்றை வாழ்நாள் முழுதும் எவ்வளவு சிறப்பாக பேணி இருக்கிறார் என்று ஆச்சர்யப் பட்டேன்.
இப்படி ஒரு போட்டி மிக்க துறையில் சுமார் 60-70 ஆண்டுகள் தொடர்ந்து வெற்றியுடன் நிலைத்து நின்றது, தொழில் தனது தனிப்பட்ட வாழ்வை பாதிக்காமல் பார்த்து கொண்டது, நண்பர்களையும் வாழ்வில் உயர்விற்கு அழைத்து செல்ல முயன்றது, மனம் உடல் இரண்டையும் வாழ்நாள் இறுதி வரை சிறப்பாக பேணியது என எல்லா வகையிலும் என் பார்வையில் நிஜ வாழ்வின் ஒரு உண்மையான ஹீரோவாகவே இருந்த மற்றும் இருக்கும் நம்பியார் அவர்களின் மறைவுக்கு அஞ்சலி செலுத்துவதுடன் அவருடைய ஆத்மா சாந்தி அடைய அவருடைய இஷ்ட தெய்வமான சபரி மலை ஐயப்பனை வேண்டிக் கொள்கிறேன்.
நன்றி
Labels:
செய்தியும் கோணமும்,
பயணங்கள்/அனுபவங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
அண்ணாரது மறைவுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
இன்னொரு விசயம் ஒழுக்கமாக இருக்குறதுக்கு சபரிமலை போனாத்தான் முடியும்னு ஒண்ணும் இல்லை. அவருக்கு பிடிச்சிருந்தது போய்கிட்டு இருந்தார்.
வில்லனாக நடித்த நிஜமான ஹீரோ.
அன்புள்ள வால்பையன்
அன்புள்ள கார்த்திக்
பின்னூட்டங்களுக்கு நன்றி
அன்புள்ள வால்பையன்
அன்புள்ள கார்த்திக்
பின்னூட்டங்களுக்கு நன்றி
வில்லனாக நடித்த நிஜமான ஹீரோ.
பக்தர்கள் மாலை போட்டு விரதம் கடைபிடிக்கும் புனித தினங்களில் இறைவனுடன் ஐக்கியம் ஆன புனிதரை பிரார்த்திக்கிறேன்.
அன்புள்ள வீரன்
உங்களுடன் சேர்ந்து நானும் பிரார்த்திக்கிறேன்
பின்னூட்டத்திற்கு நன்றி
Dear Dg
Thank you for the comments
Post a Comment