Monday, November 3, 2008

மின்மினி பூச்சிகள் தரும் வெளிச்சத்தில் வாழ்க்கை நடத்த முடியுமா?


சில நாட்களுக்கு முன்னர், இலங்கை தமிழருக்கு ஆதரவாக உண்ணாவிரதம் என்ற பெயரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி வேடிக்கையாகவும் வேதனையை அளிக்கக் கூடியதாகவும் இருந்தது.


முதலில் உண்ணாவிரத நேரத்தைப் பார்போம். காலை 8.00 மணியிலிருந்து பிற்பகல் 4.00 மணி வரை சாப்பிடாமல் இருப்பதின் பெயர் உண்ணாவிரதமா? குறைந்த பட்சம் மாலை 6.00 மணி வரை அதாவது 10 மணி நேரம் கூட ஒரு நல்ல நோக்கத்திற்காக உணவருந்தாமல் இருக்க முடியாதா?

மற்றொரு மிகப் பெரிய வேடிக்கை. சட்டங்களின் கட்டுப்பாடு இருப்பதால், தங்களால் உண்மையான உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடிய வில்லை என்று சிலர் கூறியது. சட்டத்தின் கட்டுப்பாடு என்பது ஒருவரது பேச்சுகள் நாட்டின் பிரிவினை வாதத்தைத் தூண்டும் வகையிலும் பொது அமைதிக்கு விரோதமாகவும் இருக்கக் கூடாது என்பது மட்டுமே.

தமிழன் பணத்தில் தனித்தனியாக பலகோடி சம்பாதிக்கும் இவர்கள் அனைவரும் சேர்ந்து கொடுத்து சில லட்சங்கள் மட்டுமே. அதுவும் நம்மூர் குப்பன் சுப்பன் திருமண விழாவில் நடப்பது போல அண்ணார் 500 ரூபாய் இன்னார் 1000 ரூபாய் என்பது போன்ற விளம்பர அறிவிப்புகள் வேறு.

மேடையில் இருந்த எத்தனை பேருக்கு முதலில் இந்தியத் தமிழனைப் பற்றி (சிலருக்கு தமிழே தடுமாட்டம்) ஓரளவிற்காவது தெரியும்? இந்தியத் தமிழனைப் பற்றியே ஓரளவு கூட தெரியாதவர்களால் எப்படி இலங்கைத் தமிழன் படும் பாடு பற்றி புரிந்து கொள்ள முடியும்?

பொது விஷயங்களில் ஈடுபாடு காட்டவும் கருத்து தெரிவிக்கவும் அனைவர்க்கும் உரிமை உண்டு. அதை யாரும் குறை கூற முடியாது. அதே சமயம், பெருமளவு அரசியல் அறிவோ அல்லது அனுபவ அறிவோ (ஒரு சிலரே இதற்கு விதிவிலக்கு) இல்லாத இவர்களின் கருத்துள்ள (?) சொற்பொழிவுகள் விளம்பரங்களுடன் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு. அந்த பேச்சுகள் பற்றி அடுத்த நாள் தினத்தாள்களில் பக்கம் பக்கமாக செய்திகள். இது மட்டுமல்ல, ஓரளவுக்கு கல்வி கற்ற மற்றும் இலக்கிய ஆர்வமுள்ளதாக கருதப் படும் பதிவர் வட்டத்தில் கூட இந்த உரைகளுக்கு நேரடி வர்ணனை. மேலும் அரசியல்வாதிகள் இவர்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம். உண்மையில் என்மனம் நொந்து நூலாகி பாரதியையே "நெஞ்சு பொறுக்குதில்லையே" என்று துணைக்கு அழைத்தது.

எங்கே போய் கொண்டிருக்கிறது என் தமிழகம்? மின்மினி பூச்சிகள் தரும் மயக்கத்தில் நாம் சூரிய சந்திரரையும் மின்சார விளக்குகளையும் புறம் தள்ளுகின்றோமோ? மின்மினி பூச்சிகள் தரும் வெளிச்சத்தில் நம்மால் வாழ்க்கை நடத்த முடியுமா?


சிந்திப்போம்.

மீண்டும் சந்திப்போம்

7 comments:

Anonymous said...

//மின்மினி பூச்சிகள் தரும் மயக்கத்தில் நாம் சூரிய சந்திரரையும் மின்சார விளக்குகளையும் புறம் தள்ளுகின்றோமோ?//

மின்மினிப்பூச்சிகளையே ஒளிச்சுடர்கள் என்று எண்ணிக்கொன்டிருப்பவர்கள் சூரியன், சந்திரன்,மின்விளக்குகள் முதலியவற்றை அறியார்.

//மின்மினி பூச்சிகள் தரும் வெளிச்சத்தில் நம்மால் வாழ்க்கை நடத்த முடியுமா?//

முடியும்; இருள்நிறைந்த குகைகளிலும் உயிரினங்கள் வாழ்வதில்லையா?

நீங்கள் சொல்வது தமிழகத்துக்கு மட்டுமன்று, பிற நாடுகளில் வாழும் தமிழர்களுக்கும் பொருந்தும்.

திரைப்பட மயக்கத்தால் கண்களுக்கும் கருத்துக்கும் திரைபோட்டுக்கொண்டு வாழ்வதே நமக்குப் பழக்கமாகிவிட்டது.

Maximum India said...

//மின்மினிப்பூச்சிகளையே ஒளிச்சுடர்கள் என்று எண்ணிக்கொன்டிருப்பவர்கள் சூரியன், சந்திரன்,மின்விளக்குகள் முதலியவற்றை அறியார்//

சரியாக சொன்னீர்கள்

வால்பையன் said...

//ஓரளவுக்கு கல்வி கற்ற மற்றும் இலக்கிய ஆர்வமுள்ளதாக கருதப் படும் பதிவர் வட்டத்தில் கூட இந்த உரைகளுக்கு நேரடி வர்ணனை.//

நண்பரே ஏன் இந்த உள்குத்து.
எதோ பொழுதுபோகலை வெளினாடு வாழ் நண்பர்களுக்கு எதாவது உதவி செய்யலாம் என்று செய்தேன். அதற்க்காக இப்படியா?

எனக்கு இலக்கியம் சுத்தமாக தெரியாது.
ஒன்பதாவது வரை தான் படித்திருக்கிறேன்

Maximum India said...

அன்புள்ள வால்பையன்

//நண்பரே ஏன் இந்த உள்குத்து. எதோ பொழுதுபோகலை வெளினாடு வாழ் நண்பர்களுக்கு எதாவது உதவி செய்யலாம் என்று செய்தேன். அதற்க்காக இப்படியா?
//

நீங்கள் தனிப்பட்ட முறையில் எனக்கு என்றுமே நண்பர்தான். எதிர்கருத்துகள் எதிரியின் கருத்துகள் அல்ல என்று நானே சொல்லி விட்டு உள்குத்து விட முடியுமா?

சாதரணமாக எதற்கும் கோபப்படக் கூடாது என்று நினைக்கின்றவன் நான். ஆனால்,
உண்மையில் இந்த விஷயத்தில் பல தமிழர்கள் மீது கூட எனக்கு கோபம்தான். நம் போன்றவர்கள் (முக்கியமாக தொழிற்நுட்ப துறைகளில் உள்ளவர்கள்) சினிமா தவிர்த்து எவ்வளவோ நல்ல விஷயங்களை பற்றி கருத்துகள் பரிமாறி கொள்ள முடியும்.

சினிமா ஒரு பொழுது போக்கு சாதனம் மட்டுமே. அந்த துறையில் உள்ளவர்கள் சிறந்த படைப்பு திறனுள்ள திறமைசாலிகள். திறமைகள் எங்கிருந்தாலும் மதிப்போம். அதற்கு மேல் அவர்களை பற்றிய சிந்தனைகள் தேவை இல்லை. இதுதான் என் தாழ்மையான கருத்து.

//எனக்கு இலக்கியம் சுத்தமாக தெரியாது//

தமிழ், ஆங்கிலம் பிரெஞ்சு ஜெர்மனிய மற்றும் ரஷ்ய இலக்கியங்கள் படித்து விட்டுதான் பதிவுகள் இட வேண்டும் என்றால் நான் கூட எதுவும் எழுத முடியாது. என்னை பொறுத்த வரை உங்களது சிறப்பான (கண்டிப்பா ஐஸ் இல்ல) பதிவுகள் கூட (உதாரணம் Irreversible Technique) ஒரு நல்ல இலக்கியம்தான்.

.//ஒன்பதாவது வரை தான் படித்திருக்கிறேன்//

உங்கள் பதிவுகளை படித்துள்ள என்னால் நம்ப முடியவில்லை. இது உண்மையாக இருந்தால் நீங்க ஒரு படிக்காத மேதை.

எவ்வளவு பிஸியாக இருந்தாலும் தொடர்ந்து என் பதிவுகளுக்கு பின்னூட்டம் இடுவதற்கு மிக்க நன்றி.

Maximum India said...

//முடியும்; இருள்நிறைந்த குகைகளிலும் உயிரினங்கள் வாழ்வதில்லையா?//

ஒருவேளை தமிழகத்தில் மின்வெட்டு அதிகமாக இருப்பதை கூறுகிறீரா?

Itsdifferent said...

Especially in Tamil Nadu, it is unfortunate that we look up to the filmdom for any solutions.
It is very important that a wide variety of professionals express their opinion. Like the entrepreneurs, professors, common man, social service organizations etc.
The way to improve squarely lies with the Radio and TV stations, who should reach out to this variety of folks to seek their opinion on any issue.
The TV and radio is mostly run only based off of Cinema programs, so no wonder they go to them for any opinions. Thats got to change. I think the english lang media (ELM) is doing a pretty good job of reaching out and seeking their opinions, but the common man's new s and entertainment sources are only the local language radio and tv, which are poisoned by Cinema.

Maximum India said...

Dear Gopinath

Rightly said.

Thanks for the comments.

I also agree with your views

Blog Widget by LinkWithin