Wednesday, November 12, 2008

மறைந்து வாழ நேரிடும் போது?


தமிழகத்தின் உயர் பொறுப்பில் இருக்கும் ஒரு தமிழ் ஆர்வம் மிக்க ஒரு IAS அதிகாரியிடமிருந்து (சில நண்பர்கள் வழியாக) பெறப் பட்ட கருத்துகள் இவை.

ஒரு குறிப்பிட்ட முதல்வருக்கு நெருக்கமாக இருப்பதாக கருதப் பட்டதால், தேர்தலுக்கு பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் இவருக்கு மிகச் சிறிய அலுவலகத்தில் அதிக முக்கியத்துவம் இல்லாத ஒரு பதவி தரப் பட்டது. பொதுவாக இறையாண்மை தேர்வுகள் (Civil Services) எழுதுபவர்கள் இவரை ஒரு சிறந்த முன்னோடியாக கருதுவதால், எனது சில நண்பர்களும் இவரை தேர்வு நிமித்தமாக நேரில் சென்று சந்தித்தனர். அப்போது, மிக பிரபலமான ஒரு IAS அதிகாரியின் அலுவலகம் மிகச் சிறியதாகவும் சுறுசுறுப்பு குறைந்ததாகவும் இருப்பதைக் கண்டு ஆச்சர்யப் பட்டு அவரிடம் அது குறித்து வினவினர். மேலும் அரசியல் காரணங்களினால் அவருக்கு அநீதி இழைக்கப் பட்டிருப்பதாக வருந்தினர்.

அதற்கு அவர் அளித்த பதில்கள் கீழே.

தனக்கு இந்த பதவி கிடைத்திருப்பது தனக்கு இழைக்கப் பட்ட அநீதியாக தான் கருதவில்லை. பொதுவாக, இறையாண்மை பணிகள் (IAS) மிகுந்த மன அழுத்தமும் ஒரு நாளின் அனைத்து நேரத்தினையும் எடுத்துக் கொள்வதாகவும் இருப்பதால், ஒரு IAS அதிகாரியால் அவரது குடும்பத்துக்கும் உரிய நேரம் வழங்க முடிவதில்லை. ஆனால் இப்போதோ, அலுவலகம் எடுத்துக் கொள்ளும் நேரம் குறைவாக இருப்பதினால், குடும்பத்திற்கு அதிக நேரம் கொடுக்க முடிகிறது. மேலும் சிறந்த புத்தகங்கள் படிப்பது மற்றும் உடல் நலம் பேணுவது போன்ற நல்ல பழக்கங்களுக்கும் நேரம் ஒதுக்க முடிகிறது. எனவே வருங்காலத்தை சிறப்பபாக அமைத்து கொள்ள தனக்கு கிடைத்த வாய்ப்பாகவே இதை கருதுகிறேன் என்று கூறினார்.

ஒவ்வொரு மனிதர்க்கும் இது போன்று தொழில் மற்றும் வியாபாரத்தில் தேக்க நிலை ஏற்படும் போது ஒரு குறிப்பிட்ட காலம் வரை (தேக்கதிலிருந்து மீளும் வரை) உலக பார்வையிலிருந்து மறைந்து வாழ வேண்டிய விராட பருவத்தை சந்திக்கும் வாய்ப்பு உள்ளது.

அந்தக் கால கட்டங்களில் மனது சோர்வு அடைந்து விடாமல், கிடைக்கும் தருணத்தை மேற்சொன்னது போல (வருங்காலங்களுக்கு தயார் படுத்திக் கொள்வது) சிறப்பாக பயன்படுத்திக் கொள்ளும் போது பாண்டவர்கள் வனவாசத்திற்கு (குறிப்பாக விராட பருவத்திற்கு) பிறகு பெரிய வெற்றிகளை அடைந்தது போல போன்ற நம்மாலும் வெற்றிகளைப் பெற முடியும்.

நன்றி.

6 comments:

வால்பையன் said...

அதிகாரிகள் ம்றைந்து வாழ்வதில் ஒரு அர்த்தம் இருக்கிறது.

ஆனால் ரெஸ்ட் எடுத்து ரெஸ்டெடுத்து டயர்டாகி ஏரியா பக்கமே வராம இருக்குற அரசியல்வாதிகளை என்ன லிஸ்டில் சேர்க்கலாம்.

ஒருவேளை மறைந்து வாழ்ந்தால் தான் அடுத்த தேர்தலில் வெற்றி பெறமுடியும் என்று இருக்கிறார்களோ?

Maximum India said...

அன்புள்ள வால்பையன்

பின்னூட்டதிற்கு நன்றி

//ஆனால் ரெஸ்ட் எடுத்து ரெஸ்டெடுத்து டயர்டாகி ஏரியா பக்கமே வராம இருக்குற அரசியல்வாதிகளை என்ன லிஸ்டில் சேர்க்கலாம்.//

பர்மெனண்டா ரிட்டையர்மெண்ட் கொடுத்து வீட்டுக்கு அனுப்பி விடலாம்.

Senthil said...

thalaiva,
Have read your last two posts..
interesting,very different from other normal blog posts.

I think I should follow ur blogs
to read quality articles..!!

Senthil

Maximum India said...

அன்புள்ள சென் என்கிற செந்தில்

Thank you for the comments

முதலில் உங்கள் பெயர் (சென்) பார்த்தும் அட, ஒரு பெங்காலி கூட நம் ப்லோகை பார்கிறாரா என்று ஒரு நிமிடம் யோசித்தேன்.

//thalaiva //

தயவு செய்து என்னை தலைவனாக்கி விடாதீர்கள். ஏனென்றால் இன்றைய தேதியில் Leaders are the followers of the Followers. எனவே ஒரு சுதந்திர சாமான்ய மனிதனாய் இருப்பது பெட்டெர். ஏன்னா அப்பதான் உலகை என்ஜாய் பண்ண முடியும். Biase இல்லாம இருக்க முடியும்.

//Have read your last two posts..

interesting,very different from other normal blog posts.
I think I should follow ur blogs
to read quality articles..!!
Senthil //

It is my pleasure

KARTHIK said...

இங்க ஈரோட்டுல இதுக்கு முன்னாடி ஒரு ஆட்ச்சியர் இருந்தாரு.சும்மா சினிமால வர்ரமாதிரி என்னா ஆக்டிவா இருந்தாரு தெரியுங்ல.பாவிங்க அனியாயம மாத்திட்டாங்க.

இபோ இருக்கரவரு இருக்கார இல்லையான்னே தெரிஞ்சிக்க முடியாதலவுக்கு இருக்காரு.

நம்மால ஒன்னும் செய்யமுடியாது.

இப்படி பொலம்பிட்டு போக வேண்டியதுதான் :-((

// very different from other normal blog posts.//

இதுக்கு நான் கன்னாபின்னானு ரிப்பீட்டு போட்டுக்கரேன்.

Maximum India said...

அன்புள்ள கார்த்திக்

பின்னூட்டத்திற்கு நன்றி.

//நம்மால ஒன்னும் செய்யமுடியாது.

இப்படி பொலம்பிட்டு போக வேண்டியதுதான் :-((//

நம்மால நெறைய செய்ய முடியும். எப்படின்னு வருங்காலத்துல வேற ஒரு ப்ளோக்ல சொல்றேன்.

Blog Widget by LinkWithin