Saturday, November 29, 2008

ஜெய பேரிகை கொட்டடா!


மும்பையை உலுக்கிய தீவிரவாதிகளின் தாக்குதல் சுமார் 59 மணி நேரங்களுக்கு பின்னர் ஒரு முடிவுக்கு கொண்டு வரப் பட்டுள்ளது. ஒபேராய் ஹோட்டல் மற்றும் நரிமன் ஹௌஸ் ஆகிய இடங்களில் தீவிரவாதிகள் நேற்றே கொல்லப் பட்டனர். தாஜ் ஹோட்டலில் மற்றும் நீடித்து வந்த சண்டை இன்று காலை முடிவுக்கு வந்துள்ளது. ஒரு தீவிரவாதி மட்டும் உயிருடன் பிடிக்கப் பட்டதாக சில தகவல்கள் சொல்லுகின்றன.

இந்த வெற்றிக்கு காரணமாக இருந்த இந்திய ராணுவத்தினருக்கும் கமாண்டோ படையினருக்கும் வாழ்த்துகளும் நன்றிகளும் தெரிவித்து கொள்வோம். இதற்காக இன்னுயிர் நீத்த வீரர்களுக்கு அஞ்சலியும் அவர்கள் குடும்பத்துக்கு நன்றியும் ஆறுதலும் சொல்வோம். அரசு அவர்களுக்கு சிறந்த வாழ்வு அமைத்து தர வேண்டிக் கேட்டுக் கொள்வோம்.

இந்திய மக்கள் தற்போதைக்கு நிம்மதி பெருமூச்சு விட்டாலும், ஏராளமான கேள்விகள் மனதில் எழுகின்றன.

எத்தனை நாளைக்கு இந்த நிம்மதி? எவ்வளவு நாட்கள் ராணுவத்தினரும் கமாண்டோ படையினரும் மும்பையில் நிலை கொண்டிருப்பார்கள்? அரசியல் வாதிகளை பாதுகாக்க அவர்கள் மீண்டும் டெல்லிக்கே திரும்ப வேண்டுமல்லவா?

இது போன்ற தாக்குதல்களின் போது ஒவ்வொரு முறையும் கமாண்டோக்கள் டெல்லியிலிருந்து வர வேண்டுமானால் அவர்கள் வரும் வரை இழக்கின்ற இந்திய உயிர்கள் எத்தனை இருக்கும்?

இந்திய அரசியல் வாதிகள் அதிசயத் தக்க வகையில் இந்த முறை ஒற்றுமை காத்து உள்ளனர். அவர்கள் ஒருவர் மீது ஒருவர் சேற்றை வீசி தாக்கி கொள்வது எப்போது தொடங்கும்?

நம் மக்களின் மத்தியில் மிக அதிகமான கோபம் மற்றும் நாட்டுப் பற்று தற்போதைக்கு வெளிப்பட்டு வருகிறது. இவற்றை எவ்வளவு நாட்கள் தக்க வைத்துக் கொள்ள போகிறோம்? அடுத்த புது சினிமா படம் அல்லது இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றி என்று வந்தவுடன் இவற்றை மறந்து விடப் போகிறோமோ?

இந்த தீவிரவாதிகளுடன் மோதும் போது தாம் உணர்ந்ததை ஒரு இந்தியா கமாண்டோ கூறினார். "அவர்கள் சாதாரண பியதீன்களை போல இல்லை. தேர்ச்சி பெற்ற அந்நியநாட்டு படை வீரர்கள் போலவும் சிறந்த பயிற்சி பெற்ற கமாண்டோக்கள் போலவும் திறமையாக செயல் பட்டனர்." மறைவில் செயல்படும் தடை செய்யப் பட்ட இயக்கங்களால் இவ்வளவு அதிக தீவிரவாதிகளுக்கு கமாண்டோ பயிற்சி அளிக்க முடியும் போது இந்தியா எவ்வளவு பெரிய நாடு. இதனுடைய பொருளாதாரம் PPP அடிப்படையில் உலகின் முதல் மூன்று நான்கு அளவில் அல்லவா இருக்கிறது? ஏன் நம்மால் அதிக கமாண்டோ க்களை உருவாக்கி அரசியல்வாதிகளுக்கு மட்டுமில்லாமல் அனைவருக்கும் பாதுகாப்பு அளிக்க முயற்சி செய்ய கூடாது.

மேலும் சாதாரண இந்தியன் ஒவ்வொருவனும் ஏன் குறைந்த பட்ச தற்காப்பு கலையை கற்றுக் கொள்ள வாய்ப்பு தரக் கூடாது? இந்த தற்காப்பு கலையைக் கொண்டு கமாண்டோ பயிற்சி கொண்ட தீவிர வாதிகளை சாதாரண மக்களால் வெல்வது கடினம் என்றாலும் இந்த பயிற்சிகள் மூலம் மன உறுதியை பெறும் மக்கள் குறைந்த பட்ச எதிர்ப்பை காட்ட முடியும் அல்லவா?

கடைசியாக உள்ளே எரிமலையின் கோபம் கொண்ட ஒரு இந்தியனின் கேள்வி இது.

இந்த தீவிரவாதிகளின் உடல்களை ஏன் கேட் வே இந்தியாவில் தலைகீழாக கட்டி தொங்க விடக் கூடாது? அங்கு செல்லும் ஒவ்வொரு இந்தியனும் அவர்கள் மீது ஏன் காறி உமிழ கூடாது? அவர்களுடைய சாவு எவ்வளவு அசிங்கமாக உள்ளது என்று இந்தியா வரும் ஒவ்வொரு அந்நிய தீவிரவாதியும் உணரும் படி செய்யக் கூடாது? இதற்கு நம்முடைய மனித உரிமை குழுக்கள் எதிர்ப்பு தெரிவிக்க முடியாது என்று நினைக்கிறேன். ஏனென்றால் குழந்தைகளைக் கூட விட்டு வைக்காமல் கொன்ற இந்த தீவிர வாதிகள் மனிதர்களே அல்ல. வெறி பிடித்த மிருகங்களே.

நண்பர்களே! இந்த கேள்விகளுக்கு உங்களுக்கு தெரிந்த பதில்களைச் சொல்லுங்கள்

"பயமெனும் பேய்தனை யடித்தோம் - பொய்ம்மை
பாம்பை பிளந்துயிர் குடித்தோம். "

நன்றி

13 comments:

வால்பையன் said...

வழிமொழிகிறேன்,
காறி துப்ப ரயில் ஏறி வரத்தயார்

dg said...

//இந்த தீவிரவாதிகளின் உடல்களை ஏன் கேட் வே இந்தியாவில் தலைகீழாக கட்டி தொங்க விடக் கூடாது? அங்கு செல்லும் ஒவ்வொரு இந்தியனும் அவர்கள் மீது ஏன் காறி உமிழ கூடாது? அவர்களுடைய சாவு எவ்வளவு அசிங்கமாக உள்ளது என்று இந்தியா வரும் ஒவ்வொரு அந்நிய தீவிரவாதியும் உணரும் படி செய்யக் கூடாது? இதற்கு நம்முடைய மனித உரிமை குழுக்கள் எதிர்ப்பு தெரிவிக்க முடியாது என்று நினைக்கிறேன். ஏனென்றால் குழந்தைகளைக் கூட விட்டு வைக்காமல் கொன்ற இந்த தீவிர வாதிகள் மனிதர்களே அல்ல. வெறி பிடித்த மிருகங்களே.//
வழிமொழிகிறேன்

E.Parthiban said...

//மறைவில் செயல்படும் தடை செய்யப் பட்ட இயக்கங்களால் இவ்வளவு அதிக தீவிரவாதிகளுக்கு கமாண்டோ பயிற்சி அளிக்க முடியும் போது இந்தியா எவ்வளவு பெரிய நாடு. இதனுடைய பொருளாதாரம் PPP அடிப்படையில் உலகின் முதல் மூன்று நான்கு அளவில் அல்லவா இருக்கிறது? ஏன் நம்மால் அதிக கமாண்டோ க்களை உருவாக்கி அரசியல்வாதிகளுக்கு மட்டுமில்லாமல் அனைவருக்கும் பாதுகாப்பு அளிக்க முயற்சி செய்ய கூடாது. //
arumai ...Good one -- keep it my friend...

Maximum India said...

அன்புள்ள வால்பையன்!

பின்னூட்டத்திற்கும் வழி மொழிந்ததற்கும் நன்றி.

Maximum India said...

அன்புள்ள dg!

பின்னூட்டத்திற்கும் வழி மொழிந்ததற்கும் நன்றி.

Maximum India said...

அன்புள்ள பார்த்திபன்!

பின்னூட்டத்திற்கும் வாழ்த்துக்கும் நன்றி.

nerkuppai thumbi said...

மிக ஆவேசமான பதிவு
கொஞ்சம் அமைதி கொள்ளுங்கள்
நமது உள்துறை அமைச்சர் இது போன்று ஏதாவது ஒரு நிகழ்வுக்குப்பின் ஒவ்வொரு இடத்தையும் போய் பார்க்கும் போதும் சூட் மாற்றிக்கொண்டு போவார் என்று செய்தி வந்திருந்தது நினைவு இருக்கலாம். அவர் மேலும் புதிய கோட்டுக்கள் தைக்க வேண்டி இருக்கும் போலிருக்கிறது. இது போன்று ஆட்சி இருந்தால் நிறைய நடந்து கொண்டே இருக்கும்; அவர் தையற்காரருக்கு கொண்டாட்டம் தான்.
நாடு வேதனையோடு இன்னும் எத்ததனை எத்தனை பயங்கரவாதிகளின் அட்டூழியங்களை காண வேண்டி இருக்குமோ?

Maximum India said...

அன்புள்ள நெற்குப்பை தும்பி ஐயா

பின்னூட்டத்திற்கும் கருத்துக்கும் நன்றி.

அரசியல்வாதிகளிடம் நம் உயிரை பணயம் வைத்து வாழ்வதை, நம்மை நாமே பாதுகாத்து கொள்ள என்ன செய்வது என்று யோசிக்கும் காலம் வந்து விட்டது என்று நினைக்கிறேன்.

கபீஷ் said...

உங்கள் பதிவை அப்படியே வழிமொழிகிறேன், ஒரு வரியைத் தவிர.
நன்றி நண்பா நல்லதொரு பதிவு! நல்ல தலைப்பு!
நட்புடன்
கபீஷ்

Maximum India said...

அன்புள்ள கபீஷ்

பின்னூட்டத்திற்கும் வாழ்த்துக்கும் நன்றி.

நட்புக்கு அன்பான வந்தனங்கள்

அந்த வரி எந்த வரி என்று சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

Itsdifferent said...

Will you spend your energy, time and effort to avoid such terrorist incidents in the future?

Will you forget your differences, unite under a formidable force to overcome any hurdles, to realise Kalam's vision of 2020?

If you could answer, yes to both, lets unite under one banner. One village/town at a time....

கார்த்திக் said...

// இந்த வெற்றிக்கு காரணமாக இருந்த இந்திய ராணுவத்தினருக்கும் கமாண்டோ படையினருக்கும் வாழ்த்துகளும் நன்றிகளும் தெரிவித்து கொள்வோம். இதற்காக இன்னுயிர் நீத்த வீரர்களுக்கு அஞ்சலியும் அவர்கள் குடும்பத்துக்கு நன்றியும் ஆறுதலும் சொல்வோம். அரசு அவர்களுக்கு சிறந்த வாழ்வு அமைத்து தர வேண்டிக் கேட்டுக் கொள்வோம்.//

மாவீரர்கலுக்கு எனது அஞ்சலியையும்
பல மக்களின் உயிர்காத்த வீரர்கலுக்கு எனது வாழ்துக்கள்.

SurveySan said...

////மேலும் சாதாரண இந்தியன் ஒவ்வொருவனும் ஏன் குறைந்த பட்ச தற்காப்பு கலையை கற்றுக் கொள்ள வாய்ப்பு தரக் கூடாது?////

இது சூப்பர் யோசனை.
தொப்பையை வளர்த்து (நான் உள்பட) டி.வியில் நேரம் செலவழிப்பதை தவிர்த்து, உடற்பயிற்சி, தற்காப்பு கலையெல்லாம் கத்துக்கிட்டா, இந்த மாதிரி தருணங்களில், அட்லீஸ்ட், போலீஸ்காரர் துக்காராம் மாதிரி எதையாச்சும் செய்ய தைரியமாவது வரும்.

Blog Widget by LinkWithin