Sunday, August 7, 2011

டாலர் செல்லா காசாகுமா?


நாகரிக வளர்ச்சியின் காரணமாக பண்டமாற்று வணிக முறை வழக்கொழிந்த பின்னர், பல நூறாண்டு காலமாக தங்கம்தான் பன்னாட்டு வணிகத்தின் அதிமுக்கிய நாணயமாக திகழ்ந்து வந்தது. ஆனால், கடந்த நூற்றாண்டில் தனிப்பெரும் பொருளாதார வல்லரசாக அமெரிக்கா உருவெடுத்த பின்னர், டாலர் பன்னாட்டு வணிகத்தின் முக்கிய நாணயமாக தலையெடுத்தது.

நிக்சன் அதிர்ச்சிக்குப் பின்னரும், டாலருக்கு மாற்றான உலக நாணயமாக யூரோ நாணயம் முன்னிறுத்தப் பட்ட பின்னரும் கூட டாலர் தனது முக்கியத்துவத்தை தக்க வைத்துக் கொண்டதுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். ரஷ்யாவின் அரசியல் செல்வாக்கு குறைந்த பின்னர், தனிப்பெரும் ஏகாதிபத்தியமாக அமெரிக்கா உருவெடுத்ததும், இந்தியா, சீனா போன்ற உற்பத்தி நாடுகள் அமெரிக்காவின் நுகர்வோர் கலாச்சாரத்தை பெருமளவில் சார்ந்திருந்ததும், டாலரின் மதிப்பு பெருமளவில் வீழாமல் காப்பாற்றின.

சமீபத்திய பொருளாதார வீழ்ச்சிக்கு அதிமுக்கிய காரணம், அளவுக்கதிகமான கடன் பொருளாதாரத்தின் வளர்ச்சி என்றாலும், பொருளாதார மீட்சிக்கு உலக நாடுகள் தேர்ந்தெடுத்த பாதை அதே வீழ்ச்சி பாதையானது துரதிர்ஷ்டவசமான ஒன்றாகும். அரசின் செலவினங்களை குறைத்து கடன் அளவை குறைப்பதற்கு மாற்றாக, பல நாடுகளின் அரசாங்கங்கள் இன்னும் அதிக கடனை வாங்கின. குறிப்பாக அமெரிக்க அரசாங்கத்தின் கடன் அளவு, பொருளாதார வீழ்ச்சிக்கு பின்னர், நான்கு மடங்காக உயர்ந்ததுள்ளது.

கடனை திருப்புவதிலான அமெரிக்க அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை இப்போது பெருமளவு சரிந்திருப்பதற்கான அடையாளமாக, உலக தர நிர்ணய நிறுவனம், அமெரிக்க அரசாங்க கடன் பத்திரங்களின் மீதான தர வரிசையை குறைத்துள்ளது. இதன் தாக்கம் ஏற்கனவே உலக சந்தைகளில் கடந்த வாரம் எதிரொலித்துள்ளது. அமெரிக்க கடன் பத்திரங்களை பெருமளவில் வாங்கிக் குவித்துள்ள உலக வங்கிகளும், பல நாடுகளின் மத்திய வங்கிகளும் இந்த தர இழப்பால் அதிக அளவில் பாதிக்கப் படும் வாய்ப்புக்கள் உள்ளன.

பொருளாதார மீட்சி என்பது பொய்யாகிப் போய், ஒரு இரட்டை பொருளாதார வீழ்ச்சியாக உருப்பெறக் கூடிய வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளதாக பல பொருளாதார வல்லுனர்களும் கருதும் இன்றைய சூழ்நிலையில், அமெரிக்கா இந்த கடன் இக்கட்டில் இருந்து எவ்வளவு சீக்கிரம் வெளிவர போகிறது என்பதைப் பொறுத்தே டாலரின் வருங்காலம் அமையும்.



வரும் வாரம் மிகவும் சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள்!

நன்றி!

5 comments:

Thomas Ruban said...

// அமெரிக்க கடன் பத்திரங்களை பெருமளவில் வாங்கிக் குவித்துள்ள உலக வங்கிகளும், பல நாடுகளின் மத்திய வங்கிகளும் இந்த தர இழப்பால் அதிக அளவில் பாதிக்கப் படும் வாய்ப்புக்கள் உள்ளன.//

அப்ப, சீனா தான் அதிகம் பதிப்பு அடையுமா சார்?

உங்களுக்கு நண்பர்கள் தின வாழ்த்துகள்.

பகிர்வுக்கு நன்றி சார்.

Thomas Ruban said...

இதை பற்றி உங்கள் கருத்து என்ன சார்?

http://2.bp.blogspot.com/-TuKTbaE2yUM/Tj6eOlEJBNI/AAAAAAAADt0/XFYfxLs1QFM/s1600/11.jpg

நன்றி.

aotspr said...

உங்கள் முயற்சிக்கு நன்றி.
Thanks,
Priya
http://www.ezdrivingtest.com

இந்திரா said...

நேற்றைய வலைச்சரத்தில் உங்கள் தளத்தினை பகிர்ந்துள்ளேன்.

தாமதமான தகவலுக்கு மன்னிக்கவும். நேரமிருப்பின் வருகை தரவும்.

http://blogintamil.blogspot.com/2011/08/7.html

bhoomi said...

Nice Post..and Valuable Information about Beginner's of Commodity.. You can also see Best NCDEX Tips. Thanks

Blog Widget by LinkWithin