Saturday, December 18, 2010

இந்தியாவின் வண்ணங்களும் ராகுல் காந்தியின் எண்ணங்களும்!


முகரம் பண்டிகையை முன்னிட்டு கர்நாடகத்தின் வடபகுதியில் உள்ள எனது அலுவலகத்தில் இந்த வாரம் பலரும் விடுப்பு எடுத்துக் கொண்டனர். அங்குள்ள ஒரு தமிழ் நண்பரிடம் இது பற்றி விவாதிக்கும் போது, அவருடைய தொழிற்சாலையில் கூட பலரும் விடுப்பு எடுத்துக் கொண்டதாகவும், இந்த பகுதியில் முகரம் வெகு விசேஷமாக கொண்டாடப் படுவதாகவும் கூறினார். முகரத்தை ஒரு இஸ்லாமிய திருநாளாக மட்டுமே அறிந்திருந்த நான், "முஸ்லிம்கள் மட்டும் விடுப்பு எடுத்திருந்தால் கூட பரவாயில்லை, பல இந்து ஊழியர்களும் கூட முகரத்தை முன்னிட்டு விடுப்பு எடுத்துக் கொண்டது ஆச்சரியமாக உள்ளது" என்று அவரிடம் வினவினேன். அதிலும் ஒரு இந்து பெண் ஊழியர், தீபாவளிக்கு ஊருக்கு போவதை விட முகரத்திற்கு சொந்த ஊருக்கு போவது மிகவும் முக்கியம் என்று என்னிடம் விடுமுறைக்காக மன்றாடியது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்ததாக கூறினேன். அதற்கு அவர், இந்த பகுதியில் முகரம் இந்துக்களால் மிக விசேஷமாக கொண்டாடப் படுகிறதாக கூறினார். முகரத்தின் போது தீமிதிப்பது, பூ தேங்காய் பழங்களுடன் மசூதிக்கு சென்று வழி படுவது போன்ற பழக்கங்கள் உண்டு என்று வேறு சில உள்ளூர் நண்பர்களும் கூறினர். வரும் ஞாயிற்றுக் கிழமையன்று தவறாமல் தர்காவிற்கு வந்து சிறப்பு பூஜைகளில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். இன்று தினமலர் வலைதளத்தில் வந்த ஒரு செய்தி, இது ஏதோ இந்தியாவின் ஒரு பகுதியில் மட்டும் நடக்கும் அபூர்வமான நிகழ்வு அல்ல என்பதை சுட்டிக் காட்டியது. மேலும் இது போன்ற மத இணக்க நிகழ்வுகள் இந்தியாவில் ஏராளம் என்பதை ஒவ்வொரு இந்தியனும் தனது வாழ்வில் ஏதாவது ஒரு வகையில் உணர்ந்திருப்பான். உடல் நிலை பாதிப்புகளின் போது மசூதிக்கு சென்று தாயத்து கட்டுவதும் மாரியம்மன் கோயிலில் கூழ் ஊற்றுவதும் இந்தியாவில் தினந்தோறும் பார்க்கக் கூடிய மிகவும் சகஜமான நிகழ்வுகள் ஆகும்.

இந்த நிலையில் இந்தியாவின் வருங்கால பிரதமராக வர்ணிக்கப்படும் ராகுல் காந்தி இந்தியாவில் உள்ள நிற தீவிரவாதத்தை பற்றிய அமெரிக்க தூதரிடம் அடித்த கமன்ட்டுக்களை விகிலீக்ஸ் வழியாக அறிய நேரிட்டது.

அவரிடம் சொல்ல விரும்புவது இதுதான்.

"பலதரப்பட்ட வண்ணங்களை விரும்புவர்கள் இந்தியர்கள்.

அவர்களின் விருப்பத்திற்குரிய பலதரப்பட்ட வண்ணங்களிலும், எதை தின்றால் பித்தம் தீரும் என்று அன்றாட சமூக பொருளாதார சிக்கல்களில் அவதிப்படும் சாதாரண இந்தியர்களின் எண்ணங்களிலும் ஒருபோதும் தீவிரவாதத்திற்கு இடம் இருந்தததில்லை.

தீவிரவாதம் வாழ்வதும் வளர்வதும், எப்போதும் ஒட்டுக் கணக்கு போடும், நிமிடத்திற்கு நிமிடம் பல வண்ணங்களை மாற்றும் பச்சோந்தி அரசியல்வாதிகளின் எண்ணங்களில்தான்!

தீவிரவாதத்தின் வீரியம் ஒருபோதும் குறையாமல் பார்த்துக் கொள்வது, நீங்கள் கமன்ட் அடித்த அமெரிக்கா போன்ற மேலாண்மைவாதிகள்தான்.

முதலில் சாதாரண இந்தியர்களை போல எல்லா வண்ணங்களையும் இயல்பாக நேசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்!

உங்கள் எண்ணங்கள் தானாக மாறிப்போகும்."

நன்றி!

9 comments:

கக்கு - மாணிக்கம் said...

//தீவிரவாதம் வாழ்வதும் வளர்வதும், எப்போதும் ஒட்டுக் கணக்கு போடும், நிமிடத்திற்கு நிமிடம் பல வண்ணங்களை மாற்றும் பச்சோந்தி அரசியல்வாதிகளின் எண்ணங்களில்தான்!

தீவிரவாதத்தின் வீரியம் ஒருபோதும் குறையாமல் பார்த்துக் கொள்வது, நீங்கள் கமன்ட் அடித்த அமெரிக்கா போன்ற மேலாண்மைவாதிகள்தான். //

I Salute!

middleclassmadhavi said...

ராகுல் காந்தி சாதாரண மனிதன் போல 2-ம் வகுப்பில் ரயிலில் போனார் என்று பெரிய ந்யூஸ் போடும் அளவிற்கு அல்லவா அவர் இருக்கிறார்!

kudakku said...

ராகுல் சரியான அரைவேக்காடு அடிமுண்டம் என்று மீண்டும் ஒரு முறை தன்னை வெளிபடுத்தியிருக்கிறார். சரி லூசுல விடுங்க அரைக்கால் இந்தியனான அவருக்கு வேறு எப்படி யோசிக்க தோணும்.

Maximum India said...

நன்றி கக்கு-மாணிக்கம்!

Maximum India said...

நன்றி மிடில் கிளாஸ் மாதவி!

சாதாரண மக்களை புரிந்து கொள்ள முடியாதவர்கள் அல்லது புரிந்து கொள்ள விரும்பாதவர்களே இந்தியாவை அதிக காலம் ஆட்சி செய்ததன் காரணமாகவே சுதந்திரம் கிடைத்து அறுபது ஆண்டுகளுக்கு பின்னரும் ஒரு பின்தங்கிய நாடாகவே உள்ளது.

நன்றி!

Maximum India said...

நன்றி குடக்கு!

ராகுல் காந்தி போன்ற உருவாக்கப் பட்ட, தானாக உருவாகாத, தலைவர்களின் சிந்தனைகள் பெரும்பாலும் இப்படித்தான் இருக்கும்.

நன்றி!

periyannan said...

"தீவிரவாதம் வாழ்வதும் வளர்வதும், எப்போதும் ஒட்டுக் கணக்கு போடும், நிமிடத்திற்கு நிமிடம் பல வண்ணங்களை மாற்றும் பச்சோந்தி அரசியல்வாதிகளின் எண்ணங்களில்தான்"

நூறு ச‌த‌விகித‌ உண்மை.
ஒற்றுமையாக‌ வாழும் ந‌ண்ப‌ர்க‌ளுக்கிடையில் தான் இந்த‌ ம‌த‌த்தை சார்ந்த‌வன் என்று நினைவுட்டுவ‌து இந்த‌ பச்சோந்தி அரசியல்வாதிகள்தான்."தீவிரவாதத்தின் வீரியம் ஒருபோதும் குறையாமல் பார்த்துக் கொள்வது, நீங்கள் கமன்ட் அடித்த அமெரிக்கா போன்ற மேலாண்மைவாதிகள்தான்".

அதே மேலாண்மைவாதி நீங்கள் அடித்த கமன்ட்டை, இன்னொருவ‌ரிட‌ம் (தீவிரவாதியிட‌ம்) கமன்ட் அடிக்க‌ எவ்வ‌ள‌வு நேர‌ம் ஆகிருக்கும்."முதலில் சாதாரண இந்தியர்களை போல எல்லா வண்ணங்களையும் இயல்பாக நேசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்!"

சாதாரண ம‌னித‌ன் என்ற உய‌ர் ப‌த‌வில் இருந்து அரசியல்வாதி என்ற‌ ப‌த‌விக்கு ப‌த‌விற‌க்கம் ஆகிவிட்டார். இவ‌ர் எப்பொழுது உய‌ர் ப‌த‌விக்கு வ‌ருவ‌து. தானும் ஒரு அரசியல்வாதி என்ப‌தை நிருபித்துவிட்டார்.ப‌திவுக்கு மிக‌வும் ந‌ன்றி சார்.

Itsdifferent said...

I think Raul Vinci is an idiot. The Surname "Gandhi" has been wrongly used for so long. Its a clear public exploitation.
After Gujarat and Bihar defeats, "Con"gress has taken the Hindu terrorism and Saffron terrorism in their hands, to stoke the clear and absolute friendships between Hindu and Muslim common men and women of this great nation.
I sincerely pray to God, that this idiot does not get a chance to become PM by some crooked means. The next defeat in line is TN and Karnataka (local elections).
Lets all hope that "Con"gress gets wiped out of this country for good.

Naresh Kumar said...

அவர் உருப்படியா செய்திருந்தாலோ, சொல்லியிருந்தாலோதான் ஆச்சரியமே...

எதையாவது செய்து அடுத்த தேர்தலுக்குள் அவர் ஒரு பெரும் தலைவர் என்ற கட்டாயம் வேறு அவருக்கு இருக்கிறது...

கவலை வேண்டாம், வலுக்கட்டாயமாக ஜீப்பில் ஏறியாவது, அவரும் ரவுடிதான் என நிரூபித்து விடுவார்...

Blog Widget by LinkWithin