Skip to main content

தமிழக வாக்காளர்களுக்கு வாழ்த்துக்கள்!

காசுக்கும் இலவசத்துக்கும் தமிtழக வாக்காளர்கள் விலை போவார்கள் என்ற பரவலான ஊடக கணிப்புக்களுக்கு முற்று புள்ளி வைத்து, தமது கண்ணியத்துக்கு முக்கியத்துவம் குடுத்த தமிழக வாக்காளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!

ஜாதி கணக்குகளையும் கூட்டணி கணக்குகளையும் மனதில் நிறுத்தி தேர்தலை சந்தித்தவர்களின் கணக்குகளை முடித்து வைத்ததற்கு இன்னுமொரு வாழ்த்துக்கள்!

குடும்ப ஆட்சியை முடித்து வைத்ததற்கும் குறுநில மன்னர்களை வீட்டிற்கு அனுப்பியதற்கும் மீண்டுமொரு வாழ்த்துக்கள்!

ஒரு தேர்தலுக்கு ஒரு கூட்டணி என ஜாதி பெயரை சொல்லி வோட்டு கேட்டவர்களுக்கும், தமிழீழ பிரச்சனையில் பஞ்சோந்தியாக நாட்கமாடியவர்களையும் சரியாக இனம் கண்டதற்கும் நல்வாழ்த்துக்கள்!

அறுபது சீட்டு கேட்டு அடம் பிடித்தவர்களை ஐந்து சீட்டுடன் அடக்கி வைத்ததற்கும் வாழ்த்துக்கள்!

கவர்ச்சியும் காமெடியும் திரையில் (சில சமயங்களில் நேரில்) ரசிப்பதற்கு மட்டுமே. திரை மயக்கம் தேர்தலில் செல்லாது என்று மீண்டுமொரு முறை நிருபித்ததற்கும் வாழ்த்துக்கள்!

பண பலம், அதிகார பலம், ரௌடி பலம் அனைத்தையும் அடக்கி அஞ்சா நெஞ்சர்களை அஞ்சா நோஞ்சான்களாக ஆக்கிய தேர்தல் கமிஷன் குறிப்பாக சகாயம் போன்ற சிறந்த அரசு அதிகாரிகளுக்கும் ஸ்பெஷல் வாழ்த்துக்கள்!

தமிழ் நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுதும் உண்மையான ஜனநாயகம் மலர இந்த தேர்தல் ஒரு சிறந்த துவக்கமாக அமையவும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி!

Comments

Jayadev Das said…
நானும் நன்றியைச் சொல்லிக் கொள்கிறேன், உங்க பதிவிற்கும், தமிழக வாக்காளர்களுக்கும்!!
Maximum India said…
நன்றி ஜெயதேவ் தாஸ்!

உங்களுக்கும் என் நல் வாழ்த்துக்கள் !
periyannan said…
த‌மிழ‌க‌ வாக்காள‌ர்க‌ளுக்கு என் இனிய‌ ந‌ல்வாழ்த்துக்க‌ள்.

உங்க‌ள் ப‌திவிற்கு ந‌ன்றி.
Maximum India said…
நன்றி periyannan!

Popular posts from this blog

வாண வேடிக்கையா? வெறும் புஸ்வாணமா?

பெரிதாக வெடிக்கப் போகிறது அல்லது வண்ண மயமான ஒளிச்சிதறல்கள் பூக்கப் போகின்றன என்றெல்லாம் பெரிதாக நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் போது, சில பட்டாசுகள் புஸ்வாணமாக போவதுமுண்டு. தீபாவளி தினத்தன்று நமக்கெல்லாம் சில சமயங்களில் ஏற்பட்டு விடும் இது போன்ற ஒரு அனுபவம் சென்ற வாரம் பங்குசந்தையிலும் ஏற்பட்டது. சென்ற வாரம் நம்மை ஏமாற்றிய புஸ்வாணங்களைப் பற்றி முதலில் பார்ப்போம். முதல் புஸ்வானம் - பாரதி ஏர்டெல் தென் ஆப்பிரிக்க தொலைபேசி நிறுவனமான எம்டிஎன்-னுடான இணைப்பு இல்லையென்றவுடன் முதலில் துள்ளிக் குதித்த பாரதி பங்கு, வெகு சீக்கிரத்திலேயே ஆடி அடங்கி விட்டது. எம்டிஎன்னுடன் இணையாததால் சில அபாயங்கள் நீங்குகின்றன என்று அந்த பங்கினை அதிக விலையில் வாங்கி வைத்து ஆசையுடன் காத்திருந்த பலருக்கு பாரதி ஒரு பெரிய புஸ்வாணமாகவே அமைந்தது. இரண்டாவது புஸ்வானம் - ரிலையன்ஸ் பத்து ஆண்டுகளுக்கு பின்னர் ரிலையன்ஸ் நிறுவனம் தனது பங்குதாரர்களுக்கு போனஸ் பங்கு கொடுப்பதாக அறிவித்தது. இந்தியாவின் 'நம்பர்-ஒன்' வணிகத் தாளான எகோநோமிக் டைம்ஸ் பத்திரிக்கை, தீபாவளி வாணவேடிக்கை ஆரம்பித்து விட்டதாக முதல் பக்கத்தில் தலைப்ப...

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

இந்தியா தாக்குப் பிடிக்குமா?

இன்றைய உலகப் பொருளாதாரத் தேக்க நிலையில், இந்தியாவால் தாக்குப் பிடிக்க முடியுமா என்பது பற்றி பார்ப்போம். சமீபத்தில் வெளியிடப் பட்ட மத்திய புள்ளியல் (மத்திய அரசு) நிறுவனத்தின் மதிப்பீட்டின் படி இந்தியப் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் 7.1 சதவீதம் வளர்ச்சியுறும் என்று தெரிகிறது. இது சரியாக இருக்கும் பட்சத்தில் உலகிலேயே இரண்டாவதாக வேகமாக வளர்ச்சியுறும் நாடு இந்தியாவாகத்தான் இருக்கும் (சீனா முதலாவது). சென்ற ஆண்டில் ஒன்பது சதவீதம் வளர்ச்சி பெற்றிருந்த இந்தியப் பொருளாதாரம் செப்டம்பர் 2008 வரையிலான முதல் அரையாண்டில் 7.80% வளர்ச்சிப் பெற்றிருந்தது. பொதுவாகவே பண்டிகைக் காலமாக கருதப் படுகிற இரண்டாவது அரையாண்டே தொழிற் துறையில் அதிக வளர்ச்சியைக் காட்டும் என்றாலும் இந்த முறை இந்தியத் தொழில் துறை பெரும் தேக்க நிலையில் இருந்து வந்திருக்கிறது என்பது கவனிக்கத் தக்கது. இந்திய தொழிற் வளர்ச்சி கடந்த இரு மாதங்களாக மிகவும் குறைந்து காணப் படுவதாலும் ஏற்றுமதியோ இறங்குமுகத்தில் இருப்பதாலும் இந்திய அரசாங்கம், மார்ச் 2009 வரையிலான நிதி ஆண்டின் இரண்டாவது அரையாண்டில் நமது பொருளாதாரம் குறைந்த வளர்ச்சியே (6.30%) இரு...