இந்த வாரம் பங்கு சந்தையில் ஒரு சிறப்பான முன்னேற்றத்தை காண முடிந்தது. பணவீக்கம் முன்னெப்போதும் இல்லாத அளவில் வீழ்ந்ததும், உற்பத்தி குறியீட்டில் ஏற்பட்ட தாழ்ச்சியும் இந்திய மைய வங்கி வட்டி வீதத்தை மேலும் குறைக்கலாம் என்ற நம்பிக்கையை சந்தையில் ஏற்படுத்தியது இந்த முன்னேற்றத்திற்கான முக்கிய காரணமாகும். மேலும் நம்பிக்கை தரும் விதத்திலான அமெரிக்க பொருளாதார தகவல் வெளியீடுகளும் அதன் தொடர்ச்சியாக சர்வதேச சந்தைகளில் காணப்பட்ட ஏற்றமும் இந்திய பங்கு சந்தைகளை புதிய உச்சத்திற்கு இட்டு சென்றன.
பங்கு வணிகர்களின் தற்போதைய மனநிலையின் அடிப்படையில் சந்தையில் காளையின் ஆதிக்கமே தொடர அதிக வாய்ப்பு இருந்தாலும், கடைசி வெள்ளிக்கிழமை நிப்டி வரைபடத்தில் உருவான "தொங்கும் மனிதன்" (HANGING MAN) அமைப்பு ஒரு எச்சரிக்கை மணியை அடித்துள்ளது. வரும் வாரத்தில் நிப்டி ஒரு புதிய உச்சத்தை அடைய முடியாத பட்சத்தில் பங்கு சந்தை அதிக விற்பனையை சந்திக்க வாய்ப்புள்ளது.
நன்றி.
No comments:
Post a Comment