Skip to main content

அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்!

என்னைப் போன்ற அனைத்திந்திய பணியில் உள்ள வங்கி அதிகாரிகளின் வாழ்க்கை முறை ஒரு பணி மாறுதல் உத்தரவில் தலைகீழாக மாறிப் போய் விடுகிறது. அதுவும் பணி உயர்வுடன் கூடிய பணி மாறுதல் என்றால் கேட்கவே வேண்டாம். கிராமப் புற/ சிறு நகர சேவைகள் கட்டாயமாக்கப் பட வேண்டும் என்ற அரசின் கொள்கையின் படி, கர்நாடக மாநிலத்தின் வட பகுதியில் உள்ள ஒரு சிறு நகரத்திற்கு நான் இப்போது மாறுதலாகி உள்ளேன். இதுவரை பெரிய நகரங்களில் மட்டுமே வாழ்ந்து வந்த நான், அதுவும் பெங்களூர், மும்பை போன்ற நகரங்களில் பல வருடங்கள் வாழ்ந்து வந்த எனக்கு இங்கே முற்றிலும் புதிய அனுபவங்கள்.

குடி நீர், சாலை வசதி, மின்சாரம், தொலைத்தொடர்பு, போக்குவரத்து போன்ற வாழ்வியல் ஆதார வசதிகள் மிகவும் குறைந்த இது போன்ற பகுதிகள் இந்தியாவின் மறுபக்கமா அல்லது இதுதான் இந்தியாவின் உண்மையான பக்கமா என்ற கேள்வி என்னுள்ளே இப்போது எழுகின்றது.

அதே சமயம் இந்தியாவின் இந்த பக்கத்தை (அல்லது உண்மையான பக்கத்தை) அறிந்து கொள்ள /புரிந்து கொள்ள கிடைத்த ஒரு அற்புதமான வாய்ப்பாக இந்த பணிக்காலத்தைக் கருதுகின்றேன். எனக்கு இங்கே கிடைக்கும் முற்றிலும் புதிய அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவும் விரும்புகிறேன்.

பங்கு சந்தை மற்றும் பொருளாதார பதிவுகளையும் தொடரவும் முயற்சி செய்வேன்.

மீண்டும் சந்திப்போம்.

நன்றி!

Comments

நிஜமாகவே இது ஒரு அற்புதம் தான்,, நாங்களும் வாசிக்கக் காத்திருக்கிறோம்.. நல்லவிசயம் கஷ்டமான விசயம் இரண்டையும் சுட்டிக்காட்டுங்கள்..
ஆரவாரமில்லாமல்,அமைதியான சூழல் புது அனுபவமாக நிச்சயம் இருக்கும்.வாழ்த்துக்கள்.
வாங்க சார்.
Thomas Ruban said…
இந்தியாவின் முதுகெலும்பான கிராமங்களிலும் உங்கள் பணிகள் மேலும் சிறக்க வாழ்த்துகள்.

//எனக்கு இங்கே கிடைக்கும் முற்றிலும் புதிய அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவும் விரும்புகிறேன்.
பங்கு சந்தை மற்றும் பொருளாதார பதிவுகளையும் தொடரவும் முயற்சி செய்வேன்.//

காத்திருக்கிறோம்..பகிர்வுக்கு நன்றி சார் .
Maximum India said…
//நிஜமாகவே இது ஒரு அற்புதம் தான்,, நாங்களும் வாசிக்கக் காத்திருக்கிறோம்.. நல்லவிசயம் கஷ்டமான விசயம் இரண்டையும் சுட்டிக்காட்டுங்கள்..//

நன்றி முத்துலெட்சுமி!

நல்ல விஷயம் என்பது என்னைப் போன்ற ஒருவர் இது போன்ற ஒரு சிறிய நகரத்திற்கு வருவது. நிச்சயமாக தற்பெருமைக்காக அல்ல. என்னை ஒரு "Change Agent" ஆகவே கருதிக் கொள்கிறேன்.
கஷ்டமான விஷயம் என்பது மாற்றங்களுக்கு நம்மை நாமே தயார் படுத்திக் கொண்டு மற்றவர்களையும் மாற்றிக் காட்டுவது. இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டின் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு கலாசாரத்தை கொண்டிருக்கும். அந்த கலாச்சாரத்தைப் புரிந்து கொண்டு அதனுடன் ஒத்துப் போய், அதே சமயத்தில் தனது தனி பண்புகளையும் இழக்காமல் இருப்பதுதான் கஷ்டமான ஆனால் சுவாரசியமான விஷயம்.

நன்றி!
Maximum India said…
//நிஜமாகவே இது ஒரு அற்புதம் தான்,, நாங்களும் வாசிக்கக் காத்திருக்கிறோம்.. நல்லவிசயம் கஷ்டமான விசயம் இரண்டையும் சுட்டிக்காட்டுங்கள்..//

நன்றி முத்துலெட்சுமி!

நல்ல விஷயம் என்பது என்னைப் போன்ற ஒருவர் இது போன்ற ஒரு சிறிய நகரத்திற்கு வருவது. நிச்சயமாக தற்பெருமைக்காக அல்ல. என்னை ஒரு "Change Agent" ஆகவே கருதிக் கொள்கிறேன்.
கஷ்டமான விஷயம் என்பது மாற்றங்களுக்கு நம்மை நாமே தயார் படுத்திக் கொண்டு மற்றவர்களையும் மாற்றிக் காட்டுவது. இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டின் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு கலாசாரத்தை கொண்டிருக்கும். அந்த கலாச்சாரத்தைப் புரிந்து கொண்டு அதனுடன் ஒத்துப் போய், அதே சமயத்தில் தனது தனி பண்புகளையும் இழக்காமல் இருப்பதுதான் கஷ்டமான ஆனால் சுவாரசியமான விஷயம்.

நன்றி!
Maximum India said…
நன்றி ராஜநடராஜன்!

//ஆரவாரமில்லாமல்,அமைதியான சூழல் புது அனுபவமாக நிச்சயம் இருக்கும்.வாழ்த்துக்கள்.//

நிச்சயமாக ஆச்சரியப் படுவீர்கள்!

ஊடகங்களின் வளர்ச்சி மற்றும் இந்தியாவில் சமீபத்தில் ஏற்பட்ட பூதாகரமான பொருளாதார மாற்றம் கிராமங்களில் பெருத்த மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளன. ஆனால் மக்களின் அலட்சியம் மற்றும் அரசாங்கத்தின் புறக்கணிப்பினால் தற்கால இந்திய உள்நாட்டு பகுதிகள் பெரும்பாலும் அழுக்கான, சுகாதார குறைவான, வாழ்வியல் வசதிகள் குறைந்த நகர்புறப் பகுதிகளாகத்தான் இருக்கின்றன. சினிமாவில் காட்டப் படும் அழகான கிராமங்கள் அபூர்வமானவையே.

நன்றி!
Maximum India said…
//வாங்க சார்.//

வந்துட்டேன் பீர்!
Maximum India said…
//இந்தியாவின் முதுகெலும்பான கிராமங்களிலும் உங்கள் பணிகள் மேலும் சிறக்க வாழ்த்துகள்.//

நன்றி தாமஸ் ரூபன்!

அடிக்கடி சந்திப்போம்!
ரொம்ப நாட்களுக்கு பிறகு ... புதிய இடத்தில் சிறப்பாக பணி புரிய வாழ்த்துக்கள்.
Maximum India said…
வாழ்த்துக்களுக்கு நன்றி அகில்!
sasi said…
we are waiting for your markets commens
வங்கி பறவையே வருக வருக. கோட் சூட் கோமான்களை பார்த்த நீங்கள் கோமண கனவான்களை பார்க்க ஒரு வாய்ப்பு. என்ஜாய் மாமே. எங்கிருந்தாலும் வாழ்க உங்கள் எழுத்து பணி. (உங்களுக்கு உடனடியாக இணைய தள இணைப்பு கொடுக்காத இன்டர்நெட் கம்பனிகள் கட்டையிலே போக.)
Maximum India said…
நன்றி சசி! கண்டிப்பாக சந்தை பற்றிய பதிவுகளும் இங்கு இடம் பெறும்.
Maximum India said…
//வங்கி பறவையே வருக வருக. கோட் சூட் கோமான்களை பார்த்த நீங்கள் கோமண கனவான்களை பார்க்க ஒரு வாய்ப்பு. என்ஜாய் மாமே. எங்கிருந்தாலும் வாழ்க உங்கள் எழுத்து பணி. (உங்களுக்கு உடனடியாக இணைய தள இணைப்பு கொடுக்காத இன்டர்நெட் கம்பனிகள் கட்டையிலே போக.)//

நன்றி பொதுஜனம்!

கோட் சூட் கனவான்களை ஒருவழியாக சமாளிக்க முடியும் ஆனால் கோமண கோமான்களை சமாளிப்ப ரொம்பவே கஷ்டம் என்பதை இங்கு வந்த பின்தான் புரிந்து கொண்டேன். அதுவும் சுரங்க வளம் நிறைந்த இந்த பகுதியில் நிறைய "படையப்பாக்கள்" இருக்கின்றனர். இவர்கள் எல்லாரும் பாதி அங்கே - பாதி இங்கே.

மொத்தத்தில் சுவாரசியமாகவே பொழுது கழிகின்றது.

நன்றி!
KARTHIK said…
// கிடைக்கும் முற்றிலும் புதிய அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவும் விரும்புகிறேன்.//

welcome back na :-))
Maximum India said…
நன்றி கார்த்திக்!
வாங்க Maximum India. நீங்கள் உங்கள் பணியை கிராம புற வளர்ச்சிக்குண்டான சேவையாக செய்து உண்மையான மைக்ரோ லெவெல் புரட்சிக்கு வித்திட வாழ்த்துக்கள்
Maximum India said…
நன்றி சதுக்க பூதம் !

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

தீவிரவாதிகளை வென்ற கதை - இந்திய கமாண்டோவின் விளக்கம்

நேற்று ஒரு தீவிரவாதி பிடிப் பட்ட கதை பார்த்தோம். இன்று தாஜ் ஹோட்டலில் எவ்வாறு நான்கு தீவிரவாதிகள் ஒழிக்கப் பட்டனர் என்று விளக்கும் இந்திய கமாண்டோவின் விளக்கத்தை பார்ப்போம். முதலில் இந்தியா கமாண்டோக்கள் தாஜ் ஹோட்டல் வந்த கதை புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் மும்பையை பயங்கரவாதம் தாக்கியது. அப்போது கேரளாவில் இருந்த மகாராஷ்டிர முதல்வர் மும்பை வரவும் இந்த சூழ்நிலையின் பயங்கரத்தையும் முழுமையாக உணர்ந்துக் கொள்ளவும் 90 நிமிடம் பிடித்தது .பின்னர் 11.00 அளவில் மத்திய அரசிற்கு போன் பேசிய முதல்வர் கோரியது 200 கமாண்டோக்களை. உடனே அந்நேரத்தில் தூங்கி கொண்டிருந்த இந்திய கமாண்டோக்கள் எழுப்பப் பட்டனர். அவர்கள் மும்பை வரத் தயாரான போதுதான் புரிந்தது, அவ்வளவு பேரை மும்பை கொண்டுவர தேவையான சிறப்பு விமானம் சண்டிகரில் உள்ளது என்று. உடனே அந்த விமானியையும் தூக்கத்தில் இருந்து எழுப்பி தயார் படுத்தி டெல்லியிலிருந்து கமாண்டோக்கள் மும்பை வந்த போது நேரம் காலை 5.25 மணி. அவர்கள் தாஜ் ஹோட்டலுக்கு கொண்டு வரப்பட்டு திட்டம் தயாரிக்கப் பட்டு அவர்கள் தாஜ் ஹோட்டலுக்குள் நுழைந்த போது நேரம் காலை 7.00 மணி. அதாவது மும்பை தாக்கப் ப...

கம்ப்யூட்டர் கட்சியும் கால்குலேட்டர் கட்சியும்!

மத்திய கல்வி அமைச்சர் கபில் சிபல் இந்தியா முழுவதும் அனைவரும் தாய்மொழியுடன் ஹிந்தியும் படிக்க வேண்டும் என்ற கருத்தை தெரிவித்துள்ளார். இவ்வாறு அனைவரும் ஹிந்தி படிப்பதன் மூலம் நாட்டில் ஒருமைப்பாடு ஏற்படுவதுடன் ஹிந்தியை ஆங்கிலம் போன்று ஒரு "அறிவு மொழியாக (lingua franca)" மாற்ற முடியும் என்றும் கூறியுள்ளார். இந்த கருத்தின் மீது பதிவுலகில் ஏராளமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆங்கிலம் மட்டுமே போதும் என்று ஒரு கட்சியும், ஆங்கிலம் வாசலாக இருக்கும் போது ஹிந்தி ஒரு சன்னலாக இருந்து விட்டு போகட்டுமே என்று இன்னொரு கட்சியும் விவாதித்து வருகின்றன. ஹிந்தி எதிர்ப்பு என்பது எப்போதுமே ஒரு உணர்வு பூர்வமான விஷயமாகவே பலராலும் கருதப் பட்டாலும், அதற்கு அறிவு பூர்வமான, சரித்திர பூர்வமான சில அடிப்படைகள் உண்டு. ஹிந்தி திணிப்பு மற்றும் ஹிந்தி எதிர்ப்பு பற்றி எனக்கு தெரிந்த சில கருத்துக்களை இங்கு ஒரு புனைவு வடிவில் அளிக்க முயற்சிக்கிறேன். இப்போது புனைவு ! ஒரு காலத்தில் பரதம்பட்டி என்ற ஒரு கிராமம் இருந்ததாம். அங்கு பல ஆண்டுகள் வரை ஆட்சி செய்து வந்த துரை மகாராஜா ஒரு காலத்தில், அந்த கிராமத்தை ஜனநாயக ...