
பங்கு சந்தை தொடர்புகள் குறைந்து போனதால் பங்கு சந்தையின் உடனடி ரியாக்ஷன் பற்றிய நேரடி-புரிதல் வாய்ப்புக்கள் எனக்கு குறைவாக இருந்த நிலையிலும் கூட, இவர்களின் பேச்சுக்கள் எனக்கு அபத்தமாகவே பட்டது. இன்போசிஸ் பங்கின் வருடாந்திர வருவாய் (EPS) சுமார் 110 ரூபாயாக இருக்கும் நிலையில் (அப்போதைய) பங்கின் விலை சற்று அதிகமாகவே தோன்றியது. அதிலும், இன்போசிஸ் நிறுவனத்தின் வருங்கால வளர்ச்சி விகிதத்தைப் பற்றி அதன் தலைவரே கவலை தெரிவித்த நிலையில், பங்கு சந்தை வல்லுனர்களின் (?) கணிப்புக்கள் வழக்கம் போலவே தவறுதான் என்பதை அன்றைய பங்குசந்தை முடிவுகள் மீண்டும் ஒருமுறை உறுதி செய்தன.
இன்போசிஸ் நிறுவனம் என்னதான் நல்ல நிறுவனமாக இருந்தாலும், அதன் செயல்பாடுகள் சிறப்பாகவே இருந்தாலும், விலை-வருவாய் விகிதம் (P/E Ratio) முப்பதுக்கு அருகே இருப்பது ஒரு வித நெருடலையே ஏற்படுத்துகிறது. இன்போசிஸ் மட்டுமல்ல ஒட்டு மொத்த சந்தையும் இப்போது அதிக விலை-வருவாய் விகிதத்திலேயே (கிட்டத்தட்ட 20௦) வர்த்தகமாகி வருகிறது என்பது இங்கே கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம். இந்திய பொருளாதார வளர்ச்சி எட்டு சதவீதம் மற்றும் பணவீக்கம் எட்டு சதவீதம் என மொத்தத்தில் பதினாறு சதவீத வளர்ச்சி இருக்கும் பட்சத்தில் பங்கு சந்தையின் விலை வருவாய் விகிதம் இருபதுக்கு அருகே இருப்பது, இது மலிவு விலை மார்க்கெட் அல்ல என்பதையே சுட்டிக்காட்டுகிறது.
இந்திய பங்குசந்தை வரலாற்றின் மிகப்பெரிய வெளியீட்டான இந்தியா நிலக்கரி நிறுவனத்தின் (Coal India Ltd) கதையும் கிட்டத்தட்ட ஒன்றேதான். இந்த நிறுவனத்தின் லாப வளர்ச்சி விகிதம் பதினைந்து சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்படும் நிலையில், பங்கின் விலை-வருவாய் விகிதம் 15 .4 ஆக நிர்ணயித்திருப்பது ஏமாற்றத்தையே வரவழைக்கிறது. பொதுவாக கனிம பொருட்களின் விலையில் ஏற்றத்தாழ்வுகள் ஏராளமாக இருப்பதால், கனிம நிறுவனங்களின் விலை-வருவாய் விகிதம் குறைவாகவே இருப்பது வழக்கம். "கோல் இந்தியா" நிறுவனம் அடிப்படையில் சிறப்பான ஒன்று என்பதால், நீண்ட கால நோக்கில் முதலீடு செய்யலாம் என்றாலும், குறுகிய கால கண்ணோட்டத்தில், அரசின் விலை நிர்ணயம் மகிழ்ச்சியை தரவில்லை.
மொத்தத்தில் இந்திய பங்கு சந்தை இன்னும் ஏற்றத்தை காண வாய்ப்புக்கள் உண்டு என்றாலும், இது அறுவடை காலத்தின் ஆரம்பம் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்வது நல்லது. சென்ற வாரத்தில் வெளியிடப்பட்ட இந்திய தொழிற் வளர்ச்சி விகிதம் மற்றும் பணவீக்க புள்ளி விவரங்கள் சந்தைக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தினாலும், மந்தமான உலக பொருளாதார நிலை காரணமாக, இந்தியாவிற்குள் தொடரும் அந்நிய முதலீடுகள் நமது சந்தை வீழ்ச்சியை தடுத்து நிறுத்தியுள்ளன.
குறுகிய கால நோக்கில், முந்தைய சந்தை எதிர்ப்பு நிலையான 5930 என்பது நல்ல அரணாக இருக்கும். குறுகிய கால வர்த்தகர்கள் இந்த நிலையை ஸ்டாப் லாஸ் ஆக வைத்துக் கொண்டு 6400 என்ற இலக்கை நோக்கி வர்த்தகம் செய்யலாம்.
குறுகிய கால நோக்கில், முந்தைய சந்தை எதிர்ப்பு நிலையான 5930 என்பது நல்ல அரணாக இருக்கும். குறுகிய கால வர்த்தகர்கள் இந்த நிலையை ஸ்டாப் லாஸ் ஆக வைத்துக் கொண்டு 6400 என்ற இலக்கை நோக்கி வர்த்தகம் செய்யலாம்.

நீண்ட கால முதலீட்டாளர்கள் ஒவ்வொரு பங்கினையும் தனித்தனியாக மறு மதிப்பீடு செய்து கொள்வது நல்லது.
வரும் வாரம் சிறப்பாக அமைய அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்!
மேலும் அனைவருக்கும் தசரா , ஆயுத பூஜை , சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துக்கள் !
நன்றி!
Comments
உங்கள் அறிவுரைக்கும்,எச்சரிக்கைக்கும் நன்றி சார்....
மறக்காம உங்களுக்கு தெரிஞ்சவங்களை அழைத்து ஜீஜிக்ஸ்.காம் படிக்க சொல்லுங்க. பரிசு கிடக்கும் வாய்ப்பு அதிகம். வாரா வாரம் பரிசு மழை !!
ஒரு பங்கை தேர்வுசெய்யும்முன் அதன் தற்போதைய விலை(தகுந்ததா), EPS, P/E Ratio, Industry P/E Ratio, ஒட்டுமொத்த சந்தையின் PE Ratio, இவற்றை கவனித்து, (பங்குசந்தை விற்பன்னர் சொன்னதற்காக வாங்காமல்) ஒரு மதிப்பீடு செய்து தேர்வுசெய்வேன். அன்று பங்குசந்தை விற்பன்னர் சொன்னதற்காக எவறேனும் இன்போசிஸில் வர்த்தகம்(buy) செய்திருந்தால்? நன்றி சார்.
ஒரு பங்கை தேர்வுசெய்யும்முன் அதன் தற்போதைய விலை(தகுந்ததா), EPS, P/E Ratio, Industry P/E Ratio, ஒட்டுமொத்த சந்தையின் PE Ratio, இவற்றை கவனித்து, (பங்குசந்தை விற்பன்னர் சொன்னதற்காக வாங்காமல்) ஒரு மதிப்பீடு செய்து தேர்வுசெய்வேன். அன்று பங்குசந்தை விற்பன்னர் சொன்னதற்காக எவறேனும் இன்போசிஸில் வர்த்தகம்(buy) செய்திருந்தால்? நன்றி சார்.
//ஒரு பங்கை தேர்வுசெய்யும்முன் அதன் தற்போதைய விலை(தகுந்ததா), EPS, P/E Ratio, Industry P/E Ratio, ஒட்டுமொத்த சந்தையின் PE Ratio, இவற்றை கவனித்து, (பங்குசந்தை விற்பன்னர் சொன்னதற்காக வாங்காமல்) ஒரு மதிப்பீடு செய்து தேர்வுசெய்வேன்.//
உங்கள் பாணி சிறப்பானது. வாழ்த்துக்கள்!
//அன்று பங்குசந்தை விற்பன்னர் சொன்னதற்காக எவறேனும் இன்போசிஸில் வர்த்தகம்(buy) செய்திருந்தால்?//
அதுவும் எதிர்கால சந்தையில் வாங்கும்படி அறிவுரைத்தனர் அந்த விற்பன்னர்கள்(?).
நன்றி!
thanks