Saturday, December 18, 2010

ஒரு அரசியல்வாதியின் புலம்பல் !


இது கலிகாலம். பலரும் பார்த்து பெருமூச்சு விடும் அரசியல்வாதிகளையும் இந்த கலிகாலம் விட்டு வைப்பதில்லை.

கர்நாடகத்தில் இப்போது உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த தேர்தலில், ஒரு பெரிய கட்சியின் சார்பில் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் போட்டியிட முனைந்து, பின்னர் போட்டியில் இருந்து விலகி கொண்ட ஒரு உள்ளூர் அரசியல் தலையுடன் பேச இன்று ஒரு வாய்ப்பு கிடைத்தது. வெற்றி பெற அதிக வாய்ப்புள்ள வலிமையான கட்சியில் கிடைத்த வாய்ப்பிலிருந்து ஏன் விலகி கொண்டீர்கள் என்று நான் அவரிடம் வினவினேன். அதற்கு அவர் ஒரு பெரிய புலம்பலை பதிலாக தந்தார்.

"எங்கே சார்! நாற்பது நாற்பத்தைந்து லட்சங்களை இந்த தேர்தலுக்காக விட வேண்டியிருக்கும். ஆனால் போட்ட முதலை திருப்பி எடுப்பது இப்போதெல்லாம் ரொம்பவே கஷ்டமாகி விட்டது. நூறு நாள் வேலை திட்டத்தில் இப்போதெல்லாம் ஆன்லைன் கிரெடிட் செய்து விடுகிறார்கள். மாவட்ட அளவிலான சிறிய பணிகளுக்காக இப்போதெல்லாம் அதிக பணத்தை ஒதுக்குவதில்லை. பெரிய தொழிலதிபர்கள் பெரிய இடத்தில் நேரடியாக காண்டக்ட் வைத்துக் கொண்டு மொத்த காண்டிராக்ட்களை பெற்றுக் கொள்கிறார்கள். இப்போதெல்லாம் அரசியல் செய்வது ரொம்ப கஷ்டம் ஆகி விட்டது சார். "

சிறிது நேர மௌனத்திற்கு பின்னர், அந்த ஒரு லட்சம் கோடியை எப்படித்தான் அடித்திருப்பார்கள் சார் என்று ஒருவித ஏக்கத்துடன் கேட்ட அவரை பார்க்க கொஞ்சம் பரிதாபமாகவே இருந்தது.

முதல் பத்தியிலேயே சொன்னபடி பலரையும் புலம்ப விடும் அரசியல்வாதிகளையும் கூட புலம்ப வைக்கும் அளவுக்கு இப்போது காலம் கெட்டுப் போய் விட்டது.

நன்றி!

10 comments:

MCX Gold Silver said...

thala romba nala kanom what happen?
indha araciyal vathi tholla thanga mudiyala narayana

Unknown said...

என்ன அரசியல் வியாதிங்களுக்கே கண்ணு கட்ட்ரிச்சா!?

Maximum India said...

இங்க வேலை கொஞ்சம் அதிகமாகி விட்டது.

நீங்க எப்படி இருக்கீங்க DG?

Maximum India said...

நன்றி விக்கி உலகம்!

இந்த விக்கியால அமெரிக்காவுக்கே கண்ணு கட்டிடுச்சு இல்லே?

:)

periyannan said...

"எங்கே சார்! நாற்பது நாற்பத்தைந்து லட்சங்களை இந்த தேர்தலுக்காக விட வேண்டியிருக்கும். ஆனால் போட்ட முதலை திருப்பி எடுப்பது இப்போதெல்லாம் ரொம்பவே கஷ்டமாகி விட்டது. நூறு நாள் வேலை திட்டத்தில் இப்போதெல்லாம் ஆன்லைன் கிரெடிட் செய்து விடுகிறார்கள்.

என்ன‌ கொடுமை சார் இது. மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் ப‌த‌விக்காக‌ நாற்பது நாற்பத்தைந்து லட்சங்களை செல‌வு செய்ய‌வேண்டுமா? MLA,MP இன்னும் எவ்வளவோ உய‌ர்ந்த‌ பத‌விக‌ள் இருக்கு அத‌ற்க்காக‌ எவ்வ‌ளவு செல‌வு செய்ய‌வேண்டும். என‌க்கு அவ‌ர்க‌ளின் செலவை ப‌ற்றி க‌வ‌லை இல்லை.ஆனால் போட்ட முதலை திருப்பி எடுப்ப‌த‌ற்க்காக‌ என்ன‌ செய்வார்க‌ளோ? இப்பவே கண்ண கட்டுது சார். த‌க‌வ‌ல்தொழில்நுட்ப‌வ‌ளர்ச்சி மிக‌வும் ப‌ய‌னுள்ளதாக‌ இருக்கிற‌து.ப‌திவுக்கு ந‌ன்றி சார்.

Ravi kumar Karunanithi said...

kolaiveriyudan ravikumar

Maximum India said...

// த‌க‌வ‌ல்தொழில்நுட்ப‌வ‌ளர்ச்சி மிக‌வும் ப‌ய‌னுள்ளதாக‌ இருக்கிற‌து//

உண்மைதான் பெரியண்ணன்!

நன்றி!

Maximum India said...

நன்றி ரவி குமார்!

MCX Gold Silver said...

sir,i m fine thanks

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

உங்களை வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தி உள்ளேன். வருகை தரவும்.

http://blogintamil.blogspot.com/2010/12/1.html

Blog Widget by LinkWithin