Thursday, January 13, 2011

தந்தியடிக்கும் கலைஞர்!


விலைவாசி ஏற்றம் முதல் ஈழத்தமிழர் இனப்படுகொலை வரை பிரச்சனைகளை கடிதங்கள் மூலமாக கையாண்டு கொண்டிருந்த கலைஞர் ஐயா, இன்று இந்திய மீனவர்கள் இலங்கை படையினரால் படுகொலை செய்யப் படுவதை தடுக்க "தந்தியை " ஆயுதமாக கையில் எடுத்துக் கொண்டிருக்கிறார்.

எதிரி நாடாக கருதப் படும் பாகிஸ்தான் கூட எல்லை தாண்டி மீன் பிடிக்கும் இந்திய மீனவர்களை சுட்டுத் தள்ளுவதில்லை. நேச நாடாக நேசிக்கப் படும் இலங்கையோ எல்லைக்கு அருகே வரும் இந்திய மீனவர்களைக் கூட விட்டு வைப்பதில்லை. சிறிது காலம் முன்னர் வரை விடுதலை புலிகளுக்கு உதவ வரும் மீனவர்களைத்தான் சுடுகிறார்கள் என்று சப்பைக் கட்டு கட்டியவர்கள் இப்போது என்ன சொல்லப் போகிராரர்கள் என்று தெரிய வில்லை.

கலைஞர் ஐயாவிற்கு வருவோம். மொபைல், ஈ மெயில், பாக்ஸ் போன்ற பல நவீன தகவல் தொடர்பு சாதனங்களின் வருகைக்குப் பின்னர், நலிவடைந்து போன தந்தித் துறைக்கு மறு வாழ்வளிக்க இப்போது கலைஞர் ஐயா முடிவு செய்திருக்கிறார் போல தெரிகிறது.

மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதி எழுதியே மன்மோகன் சிங் விலைவாசியை கட்டுப் படுத்துவதை போல, கலைஞரும் இனிமேல் தந்தி அடித்தே தமிழினத்தை வாழ வைக்கப் போகிறார் போல.

நாமும் கலைஞர் (இலவச) டிவியில் சினிமா சிறப்பு நிகழ்ச்சிகளுடன் இந்த பொங்கலையும் வழக்கம் போல கண்களை கட்டிக் கொண்டு கனவுலகில் கொண்டாடுவோம்.

அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

நன்றி!

7 comments:

MCX Gold Silver said...

ilavasathal tamizhaka ilaigargal somperi akirarkal:(

nerkuppai thumbi said...

அம்மையார் முதல்வராக காலத்திலேயே, இன்னின்ன தேதிகளில் இவ்வாறு நடந்தது, அவற்றை சட்டை செய்யாமல், சுடப்படும் மீனவர் குடும்பங்களுக்கு எந்த வித உதவியும் செய்யாமல், கொடநாடு மாளிகையில் ஒய்வு எடுக்க சென்றார் என்ற விவரம் எல்லாம் கூறி உடன்பிறப்புக்கு கடிதம் எழுதாமல், இந்தமுறை நேரடியாக தந்தி அனுப்பியது பாராட்டுக்குரியது. ஜகத்ரக்ஷகன் போன்றோர் இன்னொரு விழா எடுக்கலாம்

periyannan said...

"விலைவாசி ஏற்றம் முதல் ஈழத்தமிழர் இனப்படுகொலை வரை பிரச்சனைகளை கடிதங்கள் மூலமாக கையாண்டு கொண்டிருந்த கலைஞர் ஐயா, இன்று இந்திய மீனவர்கள் இலங்கை படையினரால் படுகொலை செய்யப் படுவதை தடுக்க "தந்தியை " ஆயுதமாக கையில் எடுத்துக் கொண்டிருக்கிறார்."

த‌ன் சுய‌(க‌ட்சி)தேவைக்கு த‌ன் குடும்ப‌த்துட‌ன் டெல்லிக்கு ப‌டையெடுப்பார். ம‌க்க‌ளின் தேவைக்கு தந்தியை ப‌ய‌ன்ப‌டுத்துவார். நேராக‌ ச‌ந்தித்து முறையிட்டாலே ஒன்றும் ந‌ட‌க்காது (குறிப்பாக‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு).

"கலைஞர் ஐயாவிற்கு வருவோம். மொபைல், ஈ மெயில், பாக்ஸ் போன்ற பல நவீன தகவல் தொடர்பு சாதனங்களின் வருகைக்குப் பின்னர், நலிவடைந்து போன தந்தித் துறைக்கு மறு வாழ்வளிக்க இப்போது கலைஞர் ஐயா முடிவு செய்திருக்கிறார் போல தெரிகிறது."

த‌க‌வ‌ல்தொழில்நுட்ப‌ துறை ப‌றிபோன‌தால் அந்த‌ துறைசார்ந்த‌ ந‌ப‌ர்க‌ள் மீதுதான் வெறுப்பு என்றால், அந்த‌ துறையின் மீதே வெறுப்போ?

"நாமும் கலைஞர் (இலவச) டிவியில் சினிமா சிறப்பு நிகழ்ச்சிகளுடன் இந்த பொங்கலையும் வழக்கம் போல கண்களை கட்டிக் கொண்டு கனவுலகில் கொண்டாடுவோம்."

நாமும் க‌லைஞ‌ர் (இலவச) டிவியில், க‌லைஞ‌ர் சேன‌லில், க‌லைஞ‌ர் வாரிசு தயாரித்த‌ த‌மிழ்சினிமாவை (விலைவாசி ஏற்றம் முதல் ஈழத்தமிழர் இனப்படுகொலை ம‌ற்றும் ஸ்பெக்ட்ரம் ஊழ‌ல் வரை பிரச்சனைகளை ம‌ற‌ந்து) இல‌வ‌ச‌மாக க‌ண்டுக‌ளிப்போம்.

இல‌வ‌ச‌ம் அய்யா இல‌வ‌ச‌ம், எங்கும் இல‌வ‌ச‌ம்.

குரு அவ‌ர்க‌ளுக்கு என் இனிய‌ பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

பதிவுக்கு ந‌ன்றி குரு.

Maximum India said...

இலவசம் என்பது ஒருவனை மொட்டை அடித்து விட்டு சீப்பை இனாமாக தருவது போலத்தான்.!

நன்றி DG !

Maximum India said...

நன்றி நெற்குப்பை தும்பி ஐயா!

நீங்கள் சொல்வது போல கலைஞரிடம் ஒரு முன்னேற்றம் தெரிந்தாலும், ஆயிரம் தந்தி அடித்து அருஞ்சாதனை படைத்தவர் என்று ஒரு புதிய பட்டம் கொடுத்து பாராட்டு விழாவும் நடத்தி விடுவார்கள் நமது உடன் பிறப்புக்கள்!

நன்றி!

Maximum India said...

பின்னூட்டத்திற்கு நன்றி பெரியண்ணன்!

கற்றவர்களால் ஆபத்து என்று மக்களை மாக்களாகவே வைத்திருந்தது ORU காலம் என்று (சுய) உணர்வு பெற்றவர்களால் ஆபத்து என்று அவர்களை கையேந்துபவர்களாகவே வைத்திருப்பது இந்த காலம்.

சுய மரியாதை பெயர் சொல்லி பதவிக்கு வந்த இவர்களிடம் இருந்து தப்பிக்க இன்னொரு சுய மரியாதை இயக்கம் உருவாக வேண்டிய கட்டாயம் இப்போது ஏற்பட்டுள்ளது.

நன்றி!

Naresh Kumar said...

முன்னலாம், தந்தினாலே எங்கியாவுது எழவு உழுந்திடுச்சோன்னு மக்கள் ஒரு மூட நம்பிக்கையை கொண்டிருந்தார்கள்...

கலைஞரை நம்புவது கூட அப்படி ஒரு மூட நம்பிக்கைதான்னு சிம்பாலிக்கா சொல்றாரோ என்னமோ???

காலை வருடும் உடன்பிறப்புகள் இருக்கும் வரை மாநிலம் வெளங்குவதற்கு வாய்ப்பில்லை...

Blog Widget by LinkWithin