சட்டிஸ்கர் மாநிலத்தில் மாவட்ட ஆட்சியர் கடத்தப் பட்டதை பற்றிய சில தகவல்களை பத்திரிக்கைகளில் படித்தேன். தகுந்த பாதுகாப்பின்றி மாவட்டத்தின் கிராமப் பகுதிகளுக்கு செல்வது ஆபத்தானது என்று காவல் துறை அறிவுறுத்திய பின்னரும், மாவட்ட ஆட்சியர் மாவோயிஸ்ட் பகுதிகளுக்கு முறையான பாதுகாப்பின்றி சென்றததால்தான் இந்த விபரிதம் ஏற்பட்டதாக குறிப்பிடப் பட்டிருந்தது. இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் உண்மையாக இருக்கும் பட்சத்தில், அந்த மாவட்ட ஆட்சியர் கண்டனத்திற்கு உரியவரே. அவர் துணிச்சல் மிகுந்தவராக இருக்கலாம் மேலும் அவருக்கு அவரது உயிர் பெரியதாக இல்லாமல் இருக்கலாம். அரசாங்கம் மாவோயிஸ்ட்டுகளின் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில், அவர் எந்த பாதிப்புமின்றி வெளியே வந்து ஒரு ஹீரோவைப் போல பேட்டியும் கொடுக்கலாம்.
ஆனால் அவர் கடத்தப் பட்டதன் விலையை அரசாங்கமும் அதன் மூலம் நாடும்தான் கொடுக்க வேண்டும். சட்டத்தின் பிடியில் இருக்கும் மாவோயிஸ்டுகள் விடுதலை மற்றும் திரைக்கு பின்னே கொடுக்கப் படும் பணத்திற்கு யார் பொறுப்பேற்றுக் கொள்ளப் போகிறார்கள்?
இதற்கு முந்தைய எல்லா கடத்தல் மற்றும் பிந்தைய விடுதலைகள் போலில்லாமல், இந்த முறையாவது, பாதுகாப்பு குறைவுக்கு யார் காரணம் என்பதை முறையாக விசாரித்து, ஒரு வேளை ஆட்சியரே பொறுப்பாக இருந்தால், அரசின் நஷ்டத்திற்கு அவரை பொறுப்பாக்கி அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அந்த நடவடிக்கை வருங்காலத்தில் பொறுப்பற்ற இதர அரசு அதிகாரிகளுக்கும் ஒரு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
நன்றி!
3 comments:
மாறுபட்ட கோணம்! யோசிக்க வைக்கிறது!
நரேஷ்
நன்றி நரேஷ்!
பொதுவாகவே இந்தியாவில் தனி மனித வழிபாடே முன்னிறுத்தப் படுகிறது. ஆட்சியருக்காக உயிரை நீத்த காவலரைப் பற்றியோ, அனாதையான அவரது குடும்பத்தை பற்றியோ யாரும் கவலைப் பட்டதாக தெரிய வில்லை. அந்த உயிரிழப்புக்கு யார் பொறுப்பு என்பதைப் பற்றியும் யாரும் அக்கறை காட்டவில்லை.
நன்றி!
s sir.thanks
Post a Comment