Thursday, May 14, 2009

வாதாடாமல் வழக்கை முடித்தவர்! போரிடாமல் வென்றவர்!


சாலை சந்திப்பு ஒன்றில் சிக்னலுக்காக காத்திருந்த போது கவனித்த நிகழ்வு இது.

டாக்ஸி ஒன்று எந்த ஒரு சைகையும் காட்டாமல் ஒரு சாலைக்குள் முரட்டுத்தனமாக வளைந்து நுழைந்த போது, பின்னே ஒரு மோட்டார் சைக்கிளில் வந்தவர் திடீரென்று குறுக்கே வந்த டாக்ஸியால் நிலை தடுமாறி வண்டியுடன் கீழே விழுந்து விட்டார். அவரிடம் இருந்த மொபைல் போன்ற பொருட்கள் எல்லாம் சாலையில் சிதறி விழுந்தன. நல்ல வேளையாக அவருக்கு பெரிய அடி ஒன்றும் பட வில்லை.

சைகை அல்லது இண்டிகேட்டர் போட்டுக் கொண்டு சாலையில் திரும்பி இருக்கலாம் அல்லவா என்று மோட்டார் சைக்கிள் மனிதர் கேட்க, வண்டியை விட்டு வெளியில் வந்த டாக்ஸி டிரைவர் (தவறு அவர் மீதே இருந்த போதும்) சத்தம் போட ஆரம்பித்தார். ஒழுங்காக முன்னே பார்த்து வண்டியை ஒட்டி வர வேண்டியதுதானே என்று மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் மீதே குற்றத்தை சுமத்தினார். இத்தனைக்கும் அவர் வண்டியில் (டாக்ஸி) எந்த ஒரு பாதிப்பும் இல்லை. குற்ற மனப்பான்மையை மறைக்கவே அப்படி சத்தம் போடுகிறார் என்று உணர முடிந்தது.

அப்போது மோட்டார் சைக்கிள் நண்பரின் நடவடிக்கை என்னை கவர்ந்தது. அமைதியாக சென்று கீழே விழுந்த பொருட்களை சேகரித்தார். எந்த ஒரு வார்த்தையும் பேசாமல், நிறுத்தாமல் தொடர்ந்து இரைந்து கொண்டே இருந்த டாக்ஸி ஓட்டுனரைப் பார்த்து புன்னகைத்தார். பின்னர் அவருக்கு ஒரு பெரிய சல்யூட் வைத்து "சென்று வாருங்கள்" என்று சைகை செய்தார். இப்போது டாக்ஸி டிரைவர் மூச்சடைத்துப் போய் ஒன்றுமே பேசாமல் அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.

அந்த மோட்டார் சைக்கிள் நண்பர் எனக்கும் கூட பேசாமலேயே ஏதோ உணர்த்தியது போல இருந்தது,

"குற்ற மனப்பான்மை இல்லாதவருக்குத்தான் சமாதானம் பேச முன்வரும் தைரியம் இருக்கும். விட்டுக் கொடுப்பவர்தான் வெற்றி பெற்றவராகிறார் ."

இந்த உண்மை அனைவருக்கும் புரிந்தால் இன்று எத்தனை பிரச்சினைகள் எளிதாக தீர்ந்து போய் இருக்கக் கூடும்?

அப்போது அவருக்கு நான் கூட ஒரு பெரிய சல்யூட் அடிக்க வேண்டும் என்று தோன்றியது.

நன்றி.

16 comments:

Raman Kutty said...

super... really super...

Maximum India said...

நன்றி ராமன்!

Suresh said...

சூப்பர் தலைவா

Maximum India said...

நன்றி சுரேஷ்!

வால்பையன் said...

மோட்டர் சைக்கிளில் வந்தவர் கண்டிப்பாக ஒரு ஞானியின் மனநிலையில் இருப்பவர் தான்!

Tech Shankar said...

gud yaar

//"குற்ற மனப்பான்மை இல்லாதவருக்குத்தான் சமாதானம் பேச முன்வரும் தைரியம் இருக்கும். விட்டுக் கொடுப்பவர்தான் வெற்றி பெற்றவராகிறார் ."

தீப்பெட்டி said...

நிஜமாவே நல்ல மனிதர் அவர்...

கலையரசன் said...

ஒட்டு போட்டாச்சு தல, ஒரு பதிவு போட்டு இருக்கேன் கொஞ்சம் நம்மளையும் கவனிங்க!
www.kalakalkalai.blogspot.com

udhaya said...

ஒரு சின்ன ஷார்ட் பிலீமா கூட எடுக்கலாம் , அழகு.

உதயா.

Maximum India said...

நன்றி வால்பையன்!

Maximum India said...

நன்றி தமிழ் நெஞ்சம்!

Maximum India said...

நன்றி தீப்பெட்டி!

Maximum India said...

நன்றி உதயா!

Maximum India said...

நன்றி கலையரசன்!

கண்டிப்பாக கவனிக்கிறேன்! கொஞ்சம் டைம் கொடுங்கள்!

நன்றி!

முனைவர் இரா.குணசீலன் said...

வித்தியாசமான அணுகுமுறை
என்னையும் கவர்ந்தது.
ஆம் விலங்குகளிடம் பேச மனிதர்களுக்கு என்ன இருக்கமுடியும்,,

Maximum India said...

நன்றி முனைவர். குணசீலன்!

Blog Widget by LinkWithin