Skip to main content

Posts

Showing posts from February, 2010

மதமும் மனிதமும் - வாலுக்கு ஒரு கோரிக்கை!

அன்புள்ள வால்! மதம் முன்னர் வந்ததா அல்லது தீவிரவாதம் முன்னர் வந்ததா என்ற கேள்வி எழுந்தால், தீவிரவாதம் என்பதுதான் உண்மையாக இருக்க முடியும். ஏனென்றால் மனிதர்கள் இயல்பிலேயே வன்முறையாளர்கள்தான். மற்ற விலங்குகளை வேட்டையாடியே தனது வாழ்வைத் தொடங்கியவன்தான் ஆதி மனிதன். சற்று யோசிக்கத் தொடங்கியவுடன், மற்றவர்களை தனது ஆளுமைக்கு உட்படுத்த விளைந்த மனிதனின் ராஜதந்திரங்களில் ஒன்றுதான் மதம். எனவே மதத்திற்கு "ஆளுமை விரும்பி" மனிதனே வேராக இருக்கும் போது, மதத்தினை மட்டும் கடிந்து கொண்டு பிரயோஜனம் இல்லை என்றே நினைக்கிறேன். மதம் இல்லை என்று சொல்லிக் கொண்டு பதவிக்கு வந்தவர்களும் கூட மனிதர்கள் மீது வன்முறை மற்றும் அடக்கு முறையை பிரயோகித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். எனவே மதமே உலகத்தில் இல்லாமல் போய்விடினும் வன்முறைகள், தீவிரவாதங்கள் அழிந்து போய் விடும் என்ற நம்பிக்கை எனக்கில்லை. சட்டங்கள், சமுதாய அமைப்புக்கள், ஜாதிகள், ஒழுக்க முறைகள் (morals) அனைத்துமே ஒருவகையில் தனிப்பட்டவரின் அல்லது குழுக்களின் ஆளுமைக்கான வழிமுறைகள்தான். உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால், அந்நிய நாட்டுடனான போரில் கொலை செய்பவ...

சீனாவில் முதலீடு செய்ய வேண்டுமா?

இன்றைய பொருளாதார சூழ்நிலையில், உலகெங்கும் ஆச்சரியத்துடன் பார்க்கப்படும் ஒரு நாடு சீனா. பொருளாதார தளர்ச்சியில் பல மேற்கத்திய நாடுகள் தத்தளித்துக் கொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில், தனது அபரிமிதமான வளர்ச்சி வேகத்தை கட்டுப் படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் ஒரு நாடு சீனா. இந்த நாட்டின் வேகமான வளர்ச்சியின் பலனை அடைய விரும்புவர்களுக்கு இப்போது ஒரு நல்ல முதலீட்டு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதாவது இந்தியாவில் இருந்து கொண்டே சீனாவில் முதலீடு செய்யலாம் என்பது ஒரு வரவேற்கத் தக்க செய்திதானே? இந்தியாவின் பெஞ்ச்மார்க் முயுச்சுவல் பன்ட் (Benchmark Mutual Fund) இப்போது "ஹாங்செங் பங்கு குறியீட்டு நிதியினை (Hang Seng Benchmark Exchange Traded Scheme) " அறிமுகப் படுத்துகின்றது. இந்த நிதியில் தொண்ணூறு சதவீதம் ஹாங் செங் குறியீட்டில் உள்ள பங்குகளில் முதலீடு செய்யப் படும். மீதம் உள்ள பத்து சதவீதம் நிதி மற்ற முதலீடுகளுக்காக உபயோகிக்கப் படும். இந்த நிதியின் போக்கு கிட்டத்தட்ட ஹாங்செங் குறியீட்டின் போக்கினை சார்ந்தே இருக்கும். இந்த நிதியில் குறைந்த பட்சம் முதலீடு செய்ய வேண்டிய தொகை ரூபாய் - ப...

மீண்டும் ஒரு உலக பொருளாதார வீழ்ச்சி?

உலக நாடுகளின் அரசாங்கங்களின் கணக்கில்லாமல் வாங்கி வரும் கடன் தொகை அளவுக்கு மீறி உயர்ந்து வருவதால் மீண்டும் ஒரு உலக பொருளாதார வீழ்ச்சி ஏற்படலாம் என்று அஞ்சப் படுகிறது. குறிப்பாக EURO - PIGS என்று அழைக்கப் படும் போர்ச்சுக்கல், இத்தாலி & அயர்லாந்து, கிரீஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளின் அரசாங்கங்கள் கடனில் தத்தளித்து வருகின்றன. சமீபத்திய உலக பொருளாதார வீழ்ச்சியினால், பெருமளவுக்கு சுற்றுலாத்தொழிலை (ஹோட்டல், ரியல் எஸ்டேட் போன்றவை) நம்பியிருக்கும் இந்த நாடுகளின் பொருளாதாரங்கள் மிகப் பெரிய அளவில் பாதிக்கப் பட்டன. பொருளாதாரத்தை மீட்சி பாதைக்கு அழைத்துச் செல்வதற்காக, இந்த நாடுகளின் அரசாங்கங்கள் பெருமளவில் கடன் வாங்கின. ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு உலகப் பொருளாதாரம் வளர்ச்சி அடையாத இன்றைய சூழ்நிலையில், இந்த அரசாங்கங்களால் பெரிய வருமானம் பெற முடியவில்லை. எனவே, இன்னமும் கூட நிறைய கடன் வாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள இந்த நாடுகளால் பழைய கடன்பாக்கியை ஒழுங்காக திருப்பி செலுத்த முடியுமா என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்த நாடுகளுக்கு தற்காலிகமாக உதவி செய்ய ஐரோப்பிய யூனியன் முடிவு செய்துள்ளது சற்று நிம...

மை நேம் இஸ் பிசினெஸ்கான்!

இந்திய திரையுலகைப் பொறுத்த வரை, "துறை-திறமைசாலிகளை" விட கலையை காசாக்கத் தெரிந்தவர்கள்தான் சூப்பர் ஸ்டார் என போற்றப் பட்டு வந்திருக்கின்றனர். தம்மை தாமே ஒரு வணிகப் பொருளாக்கிக் கொண்டு அதை திறம்பட வியாபாரம் செய்ய இவர்கள் காலத்துக்கேற்றாற்போல பலப் பல புதிய உத்திகளை கையாண்டு வந்திருக்கின்றனர். இந்த வகையில் கோலிவுட்டுக்கு ஒரு ரஜினிகாந்த் என்றால் பாலிவுட்டுக்கு ஒரு ஷாருக்கான்! கர்நாடகத்தில் பிறந்து தமிழ் திரையுலகில் நுழைந்த ரஜினிகாந்த் சற்று பிரபலமானவுடன் ஒவ்வொரு திரைப்படத்திலும் தன்னை தமிழ்-பால் குடித்தவன் என்று ஒருபக்கம் விளம்பரப் படுத்திக் கொண்டு வந்த அதே சமயத்தில் தனது பிறந்த மண்ணின் பாசத்தினையும் தவிர்க்க முடியாமல், கர்நாடகத்தில் திரைப்பட ஷூட்டிங் அமைப்பது, கன்னட நடிகர்களுக்கு தமிழ் திரைப்பட வாய்ப்புக்களை பெற்றுத்தருவது, கர்நாடகத்தில் நிறைய முதலீடு செய்வது போன்றவற்றையும் தொடர்ந்து வந்துள்ளார். தமிழகத்தில் "கன்னடர்களை உதைப்போம்" என்பது போல முழக்கமிடுவது, பின்னர் கர்நாடகா சென்று கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு தன படத்தை பெங்களூரில் வெ...

இந்தமுறையும் கணிப்பு பலிக்குமா?

ஏற்கனவே பலமுறை இந்த பதிவுவலையில் குறிப்பிட்டிருந்தபடி, பங்குசந்தை வணிகர்கள் பொருளாதாரத்தினை முன்கூட்டியே கணித்து அதற்கேற்றார் போலவே வர்த்தகம் செய்து வருகின்றனர். குறிப்பாக பன்னாட்டு முதலீட்டு நிறுவனங்கள் "பொருளாதார கணிப்பில்" சிறப்பாக செயல்படுகின்றன. அவற்றின் "பல நாட்டு அனுபவம்" மற்றும் "சிறப்பான தொழிற்நுட்ப கட்டமைப்பு வசதி" இந்த விஷயத்தில் துணை நிற்கின்றன என்றே சொல்ல வேண்டும். பொதுவாகவே இந்திய உள்நாட்டு நிறுவனங்கள் மற்றும் சிறுமுதலீட்டாளர்கள் இந்த விஷயத்தில் சற்று பின்தங்கியே உள்ளனர். நம் நாட்டினர் அவ்வப்போதுக்கான பொருளாதாரப் போக்கின்படியே அதிகம் முதலீடு செய்கின்றனர். பெரும்பாலான உள்ளூர்காரர்கள் வருங்காலத்தை கணிப்பதில், நம்மூர் வானிலை நிபுணர்கள் போலவே பலமுறை கோட்டை விட்டிருக்கின்றனர். உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால், கடந்த 2007 ஆம் ஆண்டு இறுதி வாக்கிலேயே அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் இந்திய சந்தையில் பங்குகளை விற்க ஆரம்பித்து விட்டனர். ஆனால் 2008 ஆம் ஆண்டு முற்பகுதி முடியும்வரை இந்திய பொருளாதார புள்ளிவிபரங்கள் சிறப்பாகவே அமைந்திருந்தன. அப்போது பல இந்...

இதுவும் போலிதான்!

இந்தியாவில் மற்ற பலவற்றையும் போலவே "தேசிய ஒருமைப்பாட்டு கூக்குரல்களும்" போலியானவையே என்று தோன்றுகிறது. தேசிய கட்சிகள் என்றும் தம்மைத் தானே கருதிக்கொள்ளும் கட்சிகளும் அவற்றின் தலைவர்களும் மாநிலத்திற்கு மாநிலம், ஒவ்வொரு வேடமிடும் பச்சோந்திகளாகவே இருக்கின்றனர். சமீபத்திய உதாரணம், ராகுல் காந்தியின் சமீபத்திய பீகார் பிரச்சாரங்கள். அந்த மாநிலத்தில் சில தொகுதிகள் கூடுதலாக பெறவேண்டும் என்ற ஒரே காரணத்திற்க்காக அவர் கையாள விரும்புகின்ற உத்தி "பிரிவினை கருத்துக்கள் அதிகம் இல்லாத தேசிய பாதுகாப்பு படையிலும் மாநில அடையாளங்களை புகுத்துதல்". "மும்பையை காப்பாற்றியது உத்திர பிரதேச மற்றும் பீகார் மாநிலங்களை சேர்ந்த வீரர்களே" என்று கூறி ஒரு புதியவகை பிரிவினை வாதத்தை தொடங்கி வைத்திருக்கிறார். அவருடைய இந்த பேச்சுக்கு தேசிய அளவில் எதிர்ப்பு கிளம்பாதது வருத்தத்துக்குரிய ஒன்றாகும். இனிமேல் ஒருமாநிலத்தில் கலவரங்கள் நடக்கும் போது அதை அடக்க எந்த மாநிலத்தில் பிறந்த "தேசிய படைவீரர்கள்" வருகின்றனர்" என்பதும் கூர்மையாக கவனிக்கப் பட்டால் பிரிவினைவாதங்கள் மேலும் வலுபெற வாய்ப...