Monday, October 11, 2010

இது ஒரு அறுவடைக் காலம்!


பங்குசந்தையில் தீபாவளி முன்கூட்டியே ஆரம்பித்து விட்டது. அதிரடியான அந்நிய முதலீடுகளும் இந்திய பொருளாதாரத்தின் வெகு வேகமான மீட்சியும் இந்த முன்னேற்றத்திற்கு முக்கிய காரணங்களாகும். விதை முளையாகி, விருட்சமாக வளர்ந்திருப்பது சரியான சமயத்தில் விதைத்தவர்களுக்கு பெருத்த மகிழ்ச்சியைத் தரும்.

அதே சமயத்தில் சரியான சமயத்தில் அறுவடை செய்ய வில்லை என்றால் உழைப்பு எல்லாம் வீணாகிப் போய்விடும் அல்லவா?

ஒரு முதலீடு எவ்வளவு முக்கியமோ, சரியான தருணத்தில் லாப விற்பனை செய்வதும் அவ்வளவு முக்கியமானது. எனவே நண்பர்களே, உங்களிடம் உள்ள முதலீடுகளை ஓரளவிற்கு விற்று விடுங்கள்! எந்த எந்த பங்கை எவ்வளவு விற்பனை செய்ய வேண்டும் என்பதற்கு ஒரு சிறிய உதாரணம்.

நெல் கோதுமை போன்ற ஒரு சில ஆயுள் குறைந்த பயிர்கள் முழுமையாக அறுவடை செய்யப் படுகின்றன. காய்கறி, காப்பி போன்ற செடிகளின் உற்பத்திப் பொருட்கள் மாத்திரம் அறுவடை செய்யப் படுகின்றன. அதே சமயம் தென்னை, மாங்கனி போன்றவை விருட்சமாக வளரும் வரை பொறுத்திருக்கிறோம்.

இந்த பதிவு வலையிலேயே பரிந்துரைக்கப் பட்ட மைத்தாஸ் போன்ற பங்குகள் முதல் வகையை சேர்ந்தவை. முழுமையாக விற்று லாபம் பார்க்கலாம். அதே போல இன்னொரு பதிவில் பரிந்துரைக்கப் பட்ட எஸ் பேங்க் போன்ற பங்குகள் இரண்டாம் மூன்றாம் வகையை சேர்ந்தவை. பகுதியை விற்று விட்டு சற்று விலைகுறையும் வரை பொறுமையாக இருக்கலாம்.

மொத்தத்தில் இந்த அறுவடைக் காலத்தை திறமையாக உபயோகிப்பவர்கள் அடுத்த பருவத்தில் இன்னும் பெரிய வெற்றிகளைப் பெறலாம்.

மீண்டும் சந்திப்போம்.

நன்றி!

4 comments:

periyannan said...

த‌ங்களின் அனைத்து ப‌திவுக‌ளும் என்னை போன்ற‌ புது முத‌லிட்டாள‌ருக்கு ச‌ரியான‌ வழிகாட்டியாக‌ இருக்கிற‌து. த‌ங்களின் ப‌திவை ஆர்வ‌முட‌ன் எதிர்பார்க்கும் சிறு(புது) முத‌லிட்டாள‌ன். ப‌திவுக்கு ந‌ன்றி.

Maximum India said...

அன்புள்ள பெரியண்ணன்!

உங்கள் பங்கு சந்தை பயணம் வெற்றிகரமாக அமைய நல்வாழ்த்துகள்!

நன்றி!

பொதுஜனம் said...

அண்ணன் சொல்றத கேளுங்க. ஏணி ஒசரம் ஏறியாச்சு . புத்தி இருந்தா பொழச்சுக்குங்க.

Maximum India said...

//அண்ணன் சொல்றத கேளுங்க. ஏணி ஒசரம் ஏறியாச்சு . புத்தி இருந்தா பொழச்சுக்குங்க//

உயரத்தில் இருந்து கீழே விழுந்தால் அதிகமாக வலிக்கும்!

நன்றி பொதுஜனம்!

Blog Widget by LinkWithin