Sunday, October 31, 2010

தீப ஒளி பரவட்டும்!


நிச்சயமற்ற உலக பொருளாதார சூழல் மற்றும் லாப விற்பனை நம்மூர் சந்தையை சென்ற வாரமும் தளர்ச்சியாகவே வைத்திருந்தன. ரியாலிடி மற்றும் எரிசக்தி துறை பங்குகள் பெரும் வீழ்ச்சியை சந்தித்தன. பண்டிகை கால எதிர்பார்ப்புக்கள் வாகன மற்றும் நுகர் பொருட் துறை பங்குகளை உயரச் செய்தன.

அமெரிக்க அரசு மற்றும் அதன் மத்திய வங்கி எதிர்பார்த்த அளவுக்கு அமெரிக்க பொருளாதாரத்தின் மீட்சி கடந்த ஒரு வருடத்தில் சிறப்பாக இல்லாமல் போனது பொருளாதார ரீதியாக ஒரு பாதகமான அம்சமாக இருந்தாலும், அமேரிக்கா மீண்டும் ஒருமுறை பெரிய அளவில் மீட்சி திட்டங்களை அறிவிக்கலாம் என்ற புதிய எதிர்பார்ப்பு சந்தையை வார இறுதியில் சற்று நிமிர செய்துள்ளது. நாம் முன்னரே எதிர்பார்த்தது போலவே நிபிட்டி 5930 அளவில் ஒரு சிறப்பான அரணை அமைத்துக் கொண்டு வலுவாக மீண்டுள்ளது.

குறுகிய கால நோக்கில், நிபிட்டி 6130 எனும் இடைக்கால தடையை உடைத்தால், தீபாவளி உற்சாகம் மற்றும் அமெரிக்க புதிய திட்ட எதிர்பார்ப்புக்கள் நிபிட்டியை 6350 வரை கொண்டு செல்ல வாய்ப்புக்கள் உள்ளன. அதே சமயம் சிறிய மற்றும் இடை நிலை பங்குகளை வாங்கும் போது கவனம் அவசியம். ஏற்கனவே சொன்னபடி வர்த்தகர்கள் 5930 அளவை ஸ்டாப் லாஸ் லிமிட்டாக வைத்துக் கொள்ளலாம்.

இப்போது தீபாவளிக்கு வருவோம்.

எப்போதுமே தீபாவளிக்கு முந்தைய வாரம் ஒரு உற்சாகமான வாரம்.

தேடி தேடி செய்யும் தீபாவளி பர்ச்சேஸ் நமது பர்சை காலி செய்தாலும், அது மனதை நிரப்பும் ஒரு டானிக். எனவே இந்த தீபாவளி வாரத்தை மகிழ்ச்சியோடு வரவேற்ப்போம்.

இந்த தீபாவளியை தலை தீபாவளியாக கொண்டாடும் அன்பு நண்பர்கள் கார்த்திக், மஞ்சள் ராஜன் அவர்களுக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்.

மற்றும் அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் அட்வான்ஸ் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

நன்றி!

2 comments:

periyannan said...

உங்க‌ளுக்கும்,தலை தீபாவளியாக கொண்டாடும் நண்பர்களுக்கும் என் இனிய‌ தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
"குறுகிய கால நோக்கில், நிபிட்டி 6130 எனும் இடைக்கால தடையை உடைத்தால், தீபாவளி உற்சாகம் மற்றும் அமெரிக்க புதிய திட்ட எதிர்பார்ப்புக்கள் நிபிட்டியை 6350 வரை கொண்டு செல்ல வாய்ப்புக்கள் உள்ளன."

இன்று(01/11/2010) நிபிட்டி (த‌டை)High-6,132.40, நன்றி ஸார்.
இந்த‌ த‌டையை நிபிட்டி நிச்ச‌ய‌மாக‌ க‌டக்கும் என எதிர்பார்க்கிறேன்.
நீண்டகால‌ முத‌லீடு செய்ய‌வேண்டிய‌ துறைகளில் ஒன்றாக‌ எரிச‌க்தி துறையை தேர்வு செய்ய‌லாமா?

Thomas Ruban said...

உங்களுக்கும், உங்களது குடும்பத்தினருக்கும், நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த இனிய தீப திருநாள் நல்வாழ்த்துகள் சார்.

Blog Widget by LinkWithin