Skip to main content

எப்போதும் சந்தோசமாக இருக்க எளிமையான ஏழு வழிகள்!

எப்போதும் சந்தோசமாக இருக்க வேண்டுமா?

இதோ பிடியுங்கள் ஏழு டிப்சுகளை!

1. யாரையும் வெறுக்காதீர்கள்.

2. எதற்கும் கவலைப் படாதீர்கள்!

3. எளிமையாக இருங்கள்!

4. குறைவாக எதிர்பாருங்கள்!

5. நிறைவாக கொடுங்கள்!

6. நிறைய புன்னகையுங்கள்!

7. அப்புறம், அடிக்கடி இந்த பதிவு வலை பக்கம் வாருங்கள்!

நன்றி!

Comments

8.நினைத்ததை எல்லாம் பேசாதீர்கள்
9.பார்ப்பதை எல்லாம் வாங்காதீர்கள்
10.கேட்பதை எல்லாம் நம்பாதீர்கள்
உங்கள் வாழ்கையில் எப்பவும் சந்தோஷமே !!!!!
:)))))))))
Admin said…
உண்மையான வரிகள்... நிறைய புன்னகைப்பது அனைவருக்கும் நலம் ஏன் உடல் ஆரோக்கியத்துஜக்கும் கூட
Maximum India said…
கூடுதலான டிப்சுகளுக்கு நன்றி சுக்கு மாணிக்கம்!
Maximum India said…
நன்றி சர்ஹூன்!
அடிக்கடி இந்த பதிவு வலை பக்கம் வாருங்கள்

nangalam varom neenga thaan masathukoru time yeluthureenga !!!!!!!!!!!!
KARTHIK said…
அதுல எந்த வழி டில்லிக்கு போகும் :-))
:) நல்லா இருக்கு..

வழி ரொம்ப கரடு முரடானது . ஆனா முடிவு நல்லா இருக்கும்.
Maximum India said…
// nangalam varom neenga thaan masathukoru time yeluthureenga !!!!!!!!!!!!//

sssssssssssssssssssss என்ன பண்றது ரமேஷ்!

என்னோட ப்ளாக் பக்கம் ennaaleye adhigam vara mudiyaradhillai.

adhanaaldhaano ennavo konja naal naduvule sandhosam kaanaamal poyirundhadhu.

nandri!
Maximum India said…
நன்றி DG

நன்றி கார்த்திக்

நன்றி முத்துலெட்சுமி
என்னோட ஏழு.
காலையில் சீக்ரம் எந்திரிங்க.
கொஞ்சம் உடற்பயிற்சி செய்ங்க.
பத்து நிமிஷம் முன்னால ஆபீஸ் போங்க.
அவசர முக்கிய வேலைகளை மொதல்ல முடிங்க.
சாயந்தரம் காலார நடங்க.
குடும்பத்தோட சேந்து சாப்டுங்க.
நல்ல புத்தகம் படிச்சு கண்ண மூடுங்க.
Maximum India said…
உங்களுடைய ஏழு வழிகளுக்கு நன்றி பொதுஜனம்!

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

தீவிரவாதிகளை வென்ற கதை - இந்திய கமாண்டோவின் விளக்கம்

நேற்று ஒரு தீவிரவாதி பிடிப் பட்ட கதை பார்த்தோம். இன்று தாஜ் ஹோட்டலில் எவ்வாறு நான்கு தீவிரவாதிகள் ஒழிக்கப் பட்டனர் என்று விளக்கும் இந்திய கமாண்டோவின் விளக்கத்தை பார்ப்போம். முதலில் இந்தியா கமாண்டோக்கள் தாஜ் ஹோட்டல் வந்த கதை புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் மும்பையை பயங்கரவாதம் தாக்கியது. அப்போது கேரளாவில் இருந்த மகாராஷ்டிர முதல்வர் மும்பை வரவும் இந்த சூழ்நிலையின் பயங்கரத்தையும் முழுமையாக உணர்ந்துக் கொள்ளவும் 90 நிமிடம் பிடித்தது .பின்னர் 11.00 அளவில் மத்திய அரசிற்கு போன் பேசிய முதல்வர் கோரியது 200 கமாண்டோக்களை. உடனே அந்நேரத்தில் தூங்கி கொண்டிருந்த இந்திய கமாண்டோக்கள் எழுப்பப் பட்டனர். அவர்கள் மும்பை வரத் தயாரான போதுதான் புரிந்தது, அவ்வளவு பேரை மும்பை கொண்டுவர தேவையான சிறப்பு விமானம் சண்டிகரில் உள்ளது என்று. உடனே அந்த விமானியையும் தூக்கத்தில் இருந்து எழுப்பி தயார் படுத்தி டெல்லியிலிருந்து கமாண்டோக்கள் மும்பை வந்த போது நேரம் காலை 5.25 மணி. அவர்கள் தாஜ் ஹோட்டலுக்கு கொண்டு வரப்பட்டு திட்டம் தயாரிக்கப் பட்டு அவர்கள் தாஜ் ஹோட்டலுக்குள் நுழைந்த போது நேரம் காலை 7.00 மணி. அதாவது மும்பை தாக்கப் ப...

கம்ப்யூட்டர் கட்சியும் கால்குலேட்டர் கட்சியும்!

மத்திய கல்வி அமைச்சர் கபில் சிபல் இந்தியா முழுவதும் அனைவரும் தாய்மொழியுடன் ஹிந்தியும் படிக்க வேண்டும் என்ற கருத்தை தெரிவித்துள்ளார். இவ்வாறு அனைவரும் ஹிந்தி படிப்பதன் மூலம் நாட்டில் ஒருமைப்பாடு ஏற்படுவதுடன் ஹிந்தியை ஆங்கிலம் போன்று ஒரு "அறிவு மொழியாக (lingua franca)" மாற்ற முடியும் என்றும் கூறியுள்ளார். இந்த கருத்தின் மீது பதிவுலகில் ஏராளமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆங்கிலம் மட்டுமே போதும் என்று ஒரு கட்சியும், ஆங்கிலம் வாசலாக இருக்கும் போது ஹிந்தி ஒரு சன்னலாக இருந்து விட்டு போகட்டுமே என்று இன்னொரு கட்சியும் விவாதித்து வருகின்றன. ஹிந்தி எதிர்ப்பு என்பது எப்போதுமே ஒரு உணர்வு பூர்வமான விஷயமாகவே பலராலும் கருதப் பட்டாலும், அதற்கு அறிவு பூர்வமான, சரித்திர பூர்வமான சில அடிப்படைகள் உண்டு. ஹிந்தி திணிப்பு மற்றும் ஹிந்தி எதிர்ப்பு பற்றி எனக்கு தெரிந்த சில கருத்துக்களை இங்கு ஒரு புனைவு வடிவில் அளிக்க முயற்சிக்கிறேன். இப்போது புனைவு ! ஒரு காலத்தில் பரதம்பட்டி என்ற ஒரு கிராமம் இருந்ததாம். அங்கு பல ஆண்டுகள் வரை ஆட்சி செய்து வந்த துரை மகாராஜா ஒரு காலத்தில், அந்த கிராமத்தை ஜனநாயக ...