பெரிதாக வெடிக்கப் போகிறது அல்லது வண்ண மயமான ஒளிச்சிதறல்கள் பூக்கப் போகின்றன என்றெல்லாம் பெரிதாக நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் போது, சில பட்டாசுகள் புஸ்வாணமாக போவதுமுண்டு. தீபாவளி தினத்தன்று நமக்கெல்லாம் சில சமயங்களில் ஏற்பட்டு விடும் இது போன்ற ஒரு அனுபவம் சென்ற வாரம் பங்குசந்தையிலும் ஏற்பட்டது. சென்ற வாரம் நம்மை ஏமாற்றிய புஸ்வாணங்களைப் பற்றி முதலில் பார்ப்போம். முதல் புஸ்வானம் - பாரதி ஏர்டெல் தென் ஆப்பிரிக்க தொலைபேசி நிறுவனமான எம்டிஎன்-னுடான இணைப்பு இல்லையென்றவுடன் முதலில் துள்ளிக் குதித்த பாரதி பங்கு, வெகு சீக்கிரத்திலேயே ஆடி அடங்கி விட்டது. எம்டிஎன்னுடன் இணையாததால் சில அபாயங்கள் நீங்குகின்றன என்று அந்த பங்கினை அதிக விலையில் வாங்கி வைத்து ஆசையுடன் காத்திருந்த பலருக்கு பாரதி ஒரு பெரிய புஸ்வாணமாகவே அமைந்தது. இரண்டாவது புஸ்வானம் - ரிலையன்ஸ் பத்து ஆண்டுகளுக்கு பின்னர் ரிலையன்ஸ் நிறுவனம் தனது பங்குதாரர்களுக்கு போனஸ் பங்கு கொடுப்பதாக அறிவித்தது. இந்தியாவின் 'நம்பர்-ஒன்' வணிகத் தாளான எகோநோமிக் டைம்ஸ் பத்திரிக்கை, தீபாவளி வாணவேடிக்கை ஆரம்பித்து விட்டதாக முதல் பக்கத்தில் தலைப்ப...
கொஞ்சம் மாத்தி யோசி!
Comments
நன்றி பெரியண்ணன்!
நன்றி சிவா!
மீண்டும் தொடர்ந்து எழுத முயற்சி செய்கிறேன்!
நன்றி!
உலக சந்தைகளின் இறக்கத்திற்கு அமெரிக்காவின் கடன் கொள்கை ஏற்பட்ட இழுபறியும் முக்கிய காரணம் தானே? +
RBI hikes repo and revise repo rates by 50BPS இதுவும் சேர்ந்து சந்தை இறக்கத்திற்கு வலு சேர்த்தது.
//மீண்டும் தொடர்ந்து எழுத முயற்சி செய்கிறேன்!//
மிக்கநன்றி.
RBI hikes repo and revise repo rates by 50BPS இதுவும் சேர்ந்து சந்தை இறக்கத்திற்கு வலு சேர்த்தது.//
நீங்கள் சொல்வது சரிதான் தாமஸ் ரூபன்!
நன்றி!